Tamil Nadu updates
தூத்துக்குடி, ஜூன் 1:
திரு இருதய நண்பர்கள் இயக்கம், தூத்துக்குடியின் 274வது மாதாந்திர கூட்டம் கடந்த 31.05.2026 அன்று மாலை 4 மணி முதல் 6.15 மணி வரை நடைபெற்றது.
கூட்டத்திற்கு முன்னதாக திரு இருதய தொண்டரும், இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான திரு. பாஸ்கர் சில்வா தலைமையில் திரு இருதய ஜெபமாலை மற்றும் இறைபுகழ்ச்சி நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து நன்றியறிதல் நிகழ்வுகளுடன் கூட்டம் தொடங்கியது.
கூட்டத்தின் சிறப்பு செய்தியாளராக அண்ணாநகரைச் சேர்ந்த த சீலா சந்தியாகு கலந்து கொண்டு பல்வேறு சமூக, ஆன்மீக மற்றும் சமகால நிகழ்வுகள் குறித்த செய்திகளை வழங்கினார்.
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் சிறப்பாக பணியாற்றிடவும்,... உலகில் நிலவும் போர் சூழ்நிலைகள் முடிவுக்கு வந்து அமைதி நிலவவும், பூமியின் வெப்பநிலை குறைந்து நல்ல மழை பெய்யவும், திரு அவையின் வளர்ச்சிக்காகவும், திரு இருதய நண்பர்கள் குடும்பங்களின் நலன் மற்றும் வளர்ச்சிக்காகவும் சிறப்பு ஜெபங்கள் நடத்தப்பட்டன.
இந்நிகழ்வில் திருமதி மரியசீலி தி.இ.தொ. ஜெப வழிநடத்துதல்களை வழங்கினார். தொடர்ந்து கூட்டம் தொடர்பான அறிவிப்புகள் மற்றும் நன்றியுரையை ஜாக்குலின் தி.இ.தொ. வழங்கினார்.
தூய ஆவியானவரின் வழிநடத்துதலுடன் நடைபெற்ற இக்கூட்டம் ஆன்மிக எழுச்சியுடனும், சகோதரத்துவ உணர்வுடனும் நிறைவுற்றது.






