புதன், 18 ஜனவரி, 2023

தூத்துக்குடியில் 22 ஆயர்கள் பங்கேற்ற சிறப்பு கூட்டு திருப்பலி

 thoothukudi leaks 19-1-2023

Photo news by Ravi 

தூத்துக்குடியில் ஆயர்கள் பங்கேற்ற சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது .



இதுபற்றிய செய்தியாவது:-

                                            தூத்துக்குடியில் 22 ஆயர்கள் பங்கேற்ற சிறப்பு கூட்டு திருப்பலி நேற்று (18-1-2023)மாலையில் நடைபெற்றது.

தமிழக திருச்சபை ஆன்மீக வளர்ச்சி சமூக வளர்ச்சி குறித்து திட்டமிடுவதற்காக தமிழ்நாடு புதுச்சேரி கத்தோலிக்க ஆயர் பேரவை கூட்டம் நடைபெறும்.

இந்த 2023 ஆண்டு தூத்துக்குடி மதுரை மாவட்டம் தொடங்கப்பட்டு நூறாவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஆயர் பேரவை கூட்டம் தூத்துக்குடியில் இன்று 19-1-2023  ஆயர் இல்லத்தில் நடைபெறுகிறது.

தூத்துக்குடி திருஇருதயங்களில் பேராலய வளாகத்தில் சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது திருப்பலிக்கு சென்னை மயிலாப்பூர் ஆயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமை தாங்கினார் .



நிகழ்ச்சியில் ஆயர்கள் தாமஸ் அக்குவினாஸ் கோவை ராயப்பன் சேலம் தேவதாஸ் அம்ப்ரோஸ் தஞ்சை அந்தோணிசாமி கும்பகோணம் ஸ்டீபன் அந்தோணி தூத்துக்குடி அந்தோணிசாமி பாளையங்கோட்டை நசரன் கோட்டாறு உள்ளிட்ட 22 மறை மாவட்டங்களை சேர்ந்த ஆயர்கள் பங்கேற்று திருப்பலி நடத்தினர் .



இந்நிகழ்ச்சியில் திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக