தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி
photo news by Arunan journalist
தூத்துக்குடி : ஜனவரி 10
தமிழ்தேசிய போராளி சி. பசுபதிபாண்டியன் அவர்களின் 14ம் ஆண்டு வீர வணக்க தினம், ஜனவரி 10ஆம் தேதி தூத்துக்குடி அலங்காரதட்டை பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் பெரும் எழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நடைபெற்ற வீர வணக்கம் – குருபூஜை நிகழ்வில்,
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு எம்எல்ஏ, எஸ்.பி. சண்முகநாதன், ராஜேந்திர பாலாஜி, வி.எம். ராஜலட்சுமி, சித. செல்லபாண்டியன், கிருஷ்ணமூரளி, குட்டியப்பா எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்து கொண்டு, பசுபதிபாண்டியனின் நினைவிடத்தில் மலர்தூவி, தீபம் ஏற்றி வீர வணக்கம் செலுத்தினர்.
மேலும், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு, தமிழ்தேசிய போராளியின் தியாகத்தை நினைவுகூர்ந்தனர்.
இந்த நினைவு அஞ்சலி நிகழ்ச்சி தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு மற்றும் மருதம் மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய அமைப்புகளின் சார்பில் நடத்தப்பட்டது.
சந்தனபிரியா பசுபதி பாண்டியர் B.A., மாநில பொதுச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நினைவிடத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, தமிழ்தேசிய உணர்வை வலியுறுத்தும் உரைகள் இடம்பெற்றன.
நிகழ்ச்சி முழுவதும் உணர்ச்சிப்பூர்வமாக நடைபெற்றதுடன், பசுபதிபாண்டியனின் போராட்ட வாழ்க்கையும், தமிழ்தேசிய விடுதலைக்கான அவரது அர்ப்பணிப்பும் நினைவுகூறப்பட்டது.




