ஸ்டெர்லைட் News லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஸ்டெர்லைட் News லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 22 மே, 2024

தூத்துக்குடி பெரியார் மையத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு அரசியல் கட்சிகள் துப்பாக்கி சூடு இறந்தவர்களுக்கு ஆறாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தினர்

 ▂▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 23-5-2024

 news by arunan journalist 

தூத்துக்குடி பெரியார் மையத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு அரசியல் கட்சிகள் கூட்டமைப்பு ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கி சூடு படுகொலையான மண்ணுரிமை காத்த தியாகிகளுக்கு ஆறாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தினர்.






 இது பற்றிய செய்தியாவது:-

ஸ்டெர்லைட் எதிர்ப்பு அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பில், 

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட 15 மண்ணுரிமை போராளிகளுக்கு ஆறாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு  நேற்று 22-5-2024 மாலை 5 மணியளவில் தூத்துக்குடி பெரியார் மையத்தில் வைத்து நடைபெற்றது.




இந்நிகழ்ச்சியில்..

சு. காசி 

திராவிடர் கழகம் 

பெரியார் மையம் பொறுப்பாளர் 

சேமா. சந்தனராஜ் பாண்டியன் 

தமிழர் விடியல் கட்சி 

மாவட்ட பொறுப்பாளர் 

A.பிரசாத். 

தந்தை பெரியார் திராவிடர் கழகம் மாவட்ட செயலாளர் 

M. முகமது ஹசன்.

மனிதநேய ஜனநாயக கட்சி 

மாவட்ட செயலாளர். 

செ. தாஸ் 

பாராளுமன்ற தொகுதி செயலாளர். 

தமிழ் புலிகள் கட்சி 

ஆட்டோ சரவணன் 

தமிழ் புலிகள் கட்சி 

மாவட்ட செயலாளர்

ஜெகவீர கட்டபொம்மு

மாவட்ட அமைப்பாளர் 

தந்தை பெரியார் திராவிடர் கழகம் 

வேல்முருகன் 

மாவட்ட துணைச் செயலாளர் 

தமிழ் புலிகள் கட்சி 

கமலேஷ் மாடசாமி 

தமிழ் புலிகள் கட்சி 

மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளர் 

தமிழன் டேவிட் 

தமிழர் விடியல் கட்சி 

மாவட்ட மாணவரணி பொறுப்பாளர்

திரவியம் 

திராவிடர் கழகம் 

மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளர்


சி. பேரறிவாளன்  

பொதுச் செயலாளர் 

தமிழ் புலிகள் கட்சி. 

கிருஷ்ணமூர்த்தி 

ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு. 

மா. மாரிச்செல்வம்

புரட்சி பாரதம் கட்சி 

மாவட்ட செயலாளர் 

மைதீன் கனி 

எஸ்டிபிஐ கட்சி 

மாவட்ட செயலாளர் 

பிரபு

ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு 

கெபிஸ்டன்

நெய்தல் அமைப்பு 

வழக்கறிஞர் சு. ராமச்சந்திரன் 

இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் 

மாவட்ட பொறுப்பாளர் 

வழக்கறிஞர் சந்தன சேகர்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

AIYF மாவட்ட செயலாளர் 

வழக்கறிஞர் முனீஸ் குமார்

விடுதலை சிறுத்தைகள் கட்சி 

சமத்துவ வழக்கறிஞர்கள் அமைப்பு

வழக்கறிஞர் சார்லஸ் 

விடுதலை சிறுத்தைகள் கட்சி 

தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கம் 

Executive Member 

சமத்துவ வழக்கறிஞர்கள் அமைப்பு 

வழக்கறிஞர் மைக்கேல்





ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு

வழக்கறிஞர் மாரிச்செல்வம் 

சமத்துவ வழக்கறிஞர்கள் அமைப்பு 

வழக்கறிஞர் நோவா 

சமூக ஆர்வலர்

சுஜித் 

புரட்சிகர இளைஞர் முன்னணி 

மாவட்ட செயலாளர் 

செல்வம்

மக்கள் அதிகாரம் 

நெல்லை மண்டல செயலாளர் 

ஊர்காவலன்

ஆதித்தமிழர் கட்சி 

மாவட்ட செயலாளர் 

காந்தி மள்ளர்  

தமிழக மக்கள் கட்சி . தலைவர் 

ஜான் பி ராயன்

கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கம் 

K. ரவிச்சந்திரன்

 தமிழர் விடியல் கட்சி மாவட்ட துணை பொறுப்பாளர்

ஆகியோர் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கருத்துரையாற்றினார்கள். 


துப்பாக்கி சூடு இறந்தவர்களின் கல்லறைக்கே சென்று ஆறாம் ஆண்டு நினைவு அஞ்சலி

 thoothukudi leaks 

 22-5-2024


தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போலீஸ் துப்பாக்கி சூடு இறந்தவர்களின் கல்லறைக்கே சென்று ஆறாம் ஆண்டு நினைவு அஞ்சலி  செலுத்தினர் 




இது பற்றிய செய்தியாவது:-

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில்  குமரட்டியாபுரம், காயலூரணி,தெற்கு வீரபாண்டியபுரம், மீள விட்டான், பண்டாரம் பட்டி மடத்தூர், பெரியநாயகிபுரம் சிலுவைப்பட்டி, புதுத்தெரு, டூவிபுரம், தேவர் காலனி  உட்பட  பல பகுதிகள நினைவேந்தல் அனுசரிக்கப்பட்டது.



 மேலும் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் கல்லறைகளுக்கு சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

உருக்கமான இந்த நிகழ்வு கண்ணீர் வேதனை தருகிறது 



அடுத்து...

தூத்துக்குடி மக்களின் தலையாய கோரிக்கை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பே வந்தாச்சு

ஆலையை அகற்ற தாமதம் ஏன்? என்ற கேள்விதான். 




தமிழக அரசிடம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளின் 6ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படும் இந்த நேரத்தில் நமது மக்கள் கூட்டமைப்பின் சார்பிலும் இதே கேள்வியை நாமும் கேட்கிறோம்.


தூத்துக்குடி மக்களையும், மண்ணையும் காப்பதற்கு தன்னுயிரை ஈந்த  ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகள். காவல் துறையால் சுட்டுக்கொல்லப்பட்டு 6 வருடம் ஆகிறது.


உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசும் சிறப்பாக வாதாடி ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட உத்தரவு பெற்றது.


 ஆனால் ஆலை அகற்றப்படாமல் உள்ளதால் மீண்டும் சீராய்வு மனு என்று சட்டத்தில் உள்ள சந்து பொந்துகளில் ஆலை நிர்வாகம் நுழைந்து விடக்கூடாது. 


மக்களிடம் வாக்குறுதி அளித்தபடி தமிழக முதல்வர் அவர்கள் தூத்துக்குடியிலிருந்து நாசக்கார ஸ்டெர்லைட் ஆலையை  அகற்ற (DISMANTLE) உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


அருணா ஜெகதீசன் ஆணையம் குற்றவாளிகளை அடையாளம் காட்டி, குற்றவியல் நடவடிக்கை, நிர்வாக துறை நடவடிக்கை எடுக்க தமிழக அரசிடம் பரிந்துரைத்தும் இதுவரை தமிழக அரசு குற்றவாளிகள் மீது  இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.


 சென்னை உயர் நீதிமன்றத்திலும் பரிந்துரையை செயல்படுத்துவது அரசின் விருப்பம். கட்டாயம் கிடையாது என்று தமிழக அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார். 


மக்கள் மன்றத்தில் முதல்வர் உறுதி கூறியது போல உயர் காவல் அதிகாரிகள் உட்பட கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.


ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு  9443584049, 8122275718, 7305172352, 9940971599, 9751119005, 9789497542, 9965345695, 9894574817, 8870457518, 7548856166.l

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு உயிரிழந்தவர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் ஆறாம் ஆண்டு மலர் அஞ்சலி

▂▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

22-5-2024

photo news by 

sunmugasunthram Reporter 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 16 பேர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் இன்று ஆறாம் ஆண்டு நினைவு  அஞ்சலி செலுத்தினார்



இதுபற்றி செய்தியாவது:-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 16பேர்களின்  6ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் அரங்கில் வைக்கப்பட்டிருந்த 16 பேர் படத்திற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மலர் அஞ்சலி செலுத்தினார். 


     நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், துணைமேயர் ஜெனிட்டா,  மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணை செயலாளர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூாிதங்கம்,  மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின்,  மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அருணாதேவி,  மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், மாநகர தொழிலாளர் அணி அமைப்பாளர் முருகஇசக்கி, மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் ரவி, சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் மகேஸ்வரன்சிங், மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளா் பெல்லா, வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர்கள் ரூபராஜா, ரெக்ஸ், இலக்கிய அணி துணை அமைப்பாளர் பால்ராஜ், மாவட்ட பிரதிநிதிகள் செல்வக்குமார், நாராயணன், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன், ஜெயக்குமார், ரவீந்திரன், மாநகர துணைச்செயலாளர் பிரமிளா, கவுன்சிலர்கள் பொன்னப்பன்,  நாகேஸ்வரி, சரவணக்குமார், மகேஸ்வரி, மரியகீதா, கந்தசாமி, தெய்வேந்திரன், ஜான், பட்சிராஜ், மாியகீதா, அரசு வழக்கறிஞர் ஆனந்தகபாியேல்ராஜ், வட்ட செயலாளர்கள் கதிரேசன், டென்சிங், பொன்னுசாமி, சுப்பையா, பாலகுருசாமி, கங்காராஜேஷ், சுரேஷ், முன்னாள் கவுன்சிலர் ஜெயசிங்,  தூத்துக்குடி 14- வது வார்டு வட்ட செயலாளர் காளிதுரை,

வட்ட பிரதிநிதிகள் வேல்முருகன், பாஸ்கர், துரை, மகளிர் அணி சத்யா, ஜெபராணி, மற்றும் கருணா, மணி, அல்பட்,  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செத்த பாம்பு ஸ்டெர்லைட்டை அகற்றுங்கடா ? இன்னும் என்ன தாமதம் கொலைகார பாவிகளுக்கு தண்டனை என்னாச்சு ? ஓங்கி ஒலித்த தூத்துக்குடி யில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் ஆறாம் ஆண்டு துப்பாக்கி சூட்டில் உயிர் நீத்த போராளிகளுக்கு நினைவு அஞ்சலி நிகழ்வில் பரபரப்பு

▂▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

22-5-2024

photo news by 

arunan journalist 

ஸ்டெர்லைட் ஆலை செத்து போன பாம்பு தானா இல்லை உஸ் என மீண்டும் சீறுமா ? செத்த பாம்பு அகற்றுங்கள்??? இன்னும் என்ன தாமதம் செய்றீங்க?? 

கொலைகார பாவிகளுக்கு தண்டனை வழங்குங்கள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் இன்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு போலீஸ் துப்பாக்கி சூடு 16உயிர் நீத்த தியாகிகள் வீரவணக்கம் 6 ம ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தினார் கள்




இது பற்றிய செய்தியாவது;-


தூத்துக்குடி மாநகர் முழுவதும் முடப்பட்ட நாசகார ஆலையான ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கடந்த 2018- மே 22-ல் ஈவு யிறக்கமின்றி காவல்துறை துப்பாக்கி சூடு நிகழ்த்தப்பட்டது 

மேலும் போராட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களை குறிப்பாக இளைஞர்களை அடித்தார்கள் தொடர்ந்து நூற்றுக்கணக்கான பேர்களை தூக்கி சென்று சித்திரவதை செய்து துன்புறுத்தி வழக்குகளும் பதிவு செய்தது

அன்று போலிஸாரின் துப்பாக்கி சூடு

ஒட்டுமொத்த தமிழர்கள் மத்தியில் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்கு ஆதரவாக தமிழக காவல்துறை துப்பாக்கி சூடு நிகழ்த்துவதா ?என கொந்தளிப்பு ஏற்பட்டது 

உலக முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியிலும் பேசும் பொருளாகி வேதனை தந்தது.


இதில் தூத்துக்குடி மக்களுக்காக அன்று போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 


 தங்கள் இன்னுயிரை நீத்தார்கள் 

16 போராளிகள் 

 அந்த தியாகிகளுக்கு வீரவணக்கம் வீரவணக்கம் இன்று ஓங்கி ஒலிக்கப்பட்டது.


  இன்று 22-5-2024 ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் 6 ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தினர் 


இந்நிகழ்ச்சியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் தூத்துக்குடி அக்கா பேராசிரியர் பாத்திமா பாபு தலைமையில் திரேஸ்புரம் தாழை முத்து நகர் சவரியாபுரம், அம்பேத்கர் நகர், பண்டாரம் பட்டி கிளியோபாட்ரா தியேட்டர் சாலை என பல்வேறு இடங்களில் நினைவு அஞ்சலி செலுத்தினர் 


இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மத்திய சங்கம் தலைவர் விநாயகமூர்த்தி, சமத்துவக் மக்கள் கழகம் மாலை சூடி அற்புத ராஜ், நாடார் பேரவை மாவட்ட தலைவர் அருள் சுரேஷ் குமார் விசைப்படகு சங்கம் ரீகன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி கிதர்பிஸ்மி,சங்கு குளி தொழிலாளர் சங்க தலைவர் இசக்கி முத்து, வழக்கறிஞர்கள் அதிசய குமார், மாடசாமி, மற்றும் கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் நலச்சங்கம் மாநில துனை செயலாளர் அம்ஜத்,

திரு இருதய நண்பர்கள் இயக்க தலைவர் பிரின்ஸ், ஜெரால்ட், கனிஸ்டா, தமிழக வெற்றி கழகம் ஜெகதீஸ்வரன், மற்றும் துப்பாக்கி சூட்டில் இறந்த போன பாதிக்கப்பட்ட குடும்ப உறவுகளும் கண்ணீர் சிந்திய வாறு கலந்து கொண்டனர் 


நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் ஃபாத்திமா பாபு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் 

செத்த பாம்பு ஸ்டெர்லைட்டை அகற்றுங்கள் இன்னும் என்ன தாமதம் செய்து கொண்டு இருக்கிறீர்கள் 

துப்பாக்கியால் சுட்டு கொன்ற கொலைகாரர்களுக்கு தாமதிக்காமல் தண்டனை வழங்குங்கள் என 

பரபரப்பாக பேசினார்.

இன்று துப்பாக்கி சூடு ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் ஆறாம் ஆண்டு நினைவு அஞ்சலி அனுஷ்டிக்க படுவதை முன்னிட்டு காவல்துறை யினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன 

தூத்துக்குடி மாநகரில் முக்கிய சாலைகள் தெருக்கள் போலிசார் பாதுகாப்பு பணியில் நின்று கொண்டு இருந்தார்கள்.

செவ்வாய், 13 பிப்ரவரி, 2024

கனமழை வெள்ளத்திலும்... ஸ்டெர்லைட் வாழ்க கோஷம் !!! தூத்துக்குடி தகிப்பு!!!

thoothukudileaks 14-2-2024

photo news by arunan 

கனமழை வெள்ளத்திலும்... ஸ்டெர்லைட் வாழ்க கோஷமா ??? !!!

தூத்துக்குடி  தகிப்பு!!!

பொங்கல் அன்றும் விட்டு வைக்காத ஸ்டெர்லைட் ஆலை ஆதரவு மற்றும் அட்ராசிட்டிகள்.



இது பற்றிய செய்தியாவது:-

கடந்த 2023 டிசம்பர் மாதம் 17 மற்றும் 18 தேதிகளில் நெல்லை தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டத்தில் அசுரத்தனமான கனமழை பெய்து மழை வெள்ளத்தால் மிகவும் பொதுமக்கள் பாதிப்பு அடைந்தனர்


வீடுகளில் செல்ல முடியாது வெளியில் தான் பொது மக்கள் இருந்தனர் முன்னூறுக்கும் மேற்பட்ட வர்கள் தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பழைய பேருந்து நிலையத்திலும் ஆயிரக்கணக்கானோர் திருமண மண்டபம் என தங்கினர்

தண்ணீர் நிறைந்து இருந்ததால்..சிலர் அப் பகுதியில் வெளிவரா இயலாதநிலை அப்போது அவர்களுக்கு உள்ளூர் அமைச்சர்கள் மற்றும் அரசு தரப்பில் பசியோடு இருந்த மக்களுக்கு உணவு பொட்டலங்கள் எதுவும் செல்ல வில்லை.


தன்னார்வ ஆர்வலர்கள் மற்றும்  இந்து கோவில்கள் கிறித்தவக் ஆலயம் முஸ்லிம் பள்ளிவாசல்களிலும் மத அமைப்புக்கள் மற்றும் தமுமுக,பாஜக சேவா அமைப்புகள் அதிமுக வினர் என ஒருவருக்கு ஒருவர் முந்தியவாறு உணவுகள் வழங்கினார்கள்

 அவர்கள் பின்பு நிவாரண பொருட்கள் உதவி  செய்தனர் 




அதிமுக தரப்பில்.... அம்மா கிச்சன் என்று பத்து நாட்கள் உணவு வழங்கினார்கள் 


இதில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் வாகனங்கள் முலம் உணவு பொட்டலங்கள் முதலில் பல இடங்களில் முன்னூறு இருநூறு என உணவு வழங்கினார்கள் பின்பு நிவாரண பொருட்கள் வழங்கினார்கள்.


அப்போது  ஸ்டெர்லைட் ஆலை தரப்பு வாகனங்கள் வரும் போது ஸ்டெர்லைட் வாழ்க வாழ்க கோஷம் போடுமாறு சொன்னார்களாம்

ஒரு சோற்று பொட்டலம் பெறுவதற்கு ஸ்டெர்லைட் ஆலை வாழ்க  கோஷமா ? 

என்ன கொடுமை சார் இது

அரசு தங்கள் பகுதியில் செய்ய வேண்டும் இவர்களை யாரு செய்ய சொன்னது ? உள்ளுர் அமைச்சரா என ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் வெறுத்து  போனார்கள்

 என்கிறார்கள்.

தூத்துக்குடியில் திரேஸ்புரம் மற்றும் பல பகுதிகளில் ஸ்டெர்லைட் ஆலை தரப்பு வாகனங்கள் நுழைய முடியாமல் ஒட  துரத்தி விட்டனர்


தூத்துக்குடியில் இன்னும் அனைத்து பொதுமக்கள் இடம் ஸ்டெர்லைட் ஆலை எதிரான மன நிலை அப்படியே உள்ளது என்பதை காட்டுகிறது.

பார்வை யிட வந்த குழுவுடன் தூத்துக்குடி தேவர் புரம் நடுஞ்சாலையில் சேர் போட்டு அமர்ந்து டீ டைம் அமைச்சர்கள்!!!


தூத்துக்குடி மாவட்டத்தில் அமைச்சர்கள் தூத்துக்குடி கீதாஜீவன் திருச்செந்தூர் அனிதா ராதாகிருஷ்ணன் இவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு  நிவாரண பொருட்கள் வழங்கியதில் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி யாம் 

மட்டமான 5 கிலோஅரிசி அரைகிலோ துவரம் பருப்பு தான் டோக்கன் கொடுத்து பல பகுதிகளில் வழங்கியுள்ளார்கள்

பார்வை யிட வந்த நேரு முத்துசாமி மற்ற அமைச்சர்கள் மூட்டை மூட்டையாக சென்னையில் இருந்து வந்த அரிசி பால் பவுடர் ஆயில் எல்லாம் எங்கே போச்சு தெரியவில்லை என்கிறார்கள்.


நாடாளுமன்ற தேர்தல் தேர்தலில் ஒட்டு வங்கிக்கு வேட்டு வைத்து விட்டார்கள் 

பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஆறுதல் நிவாரண பொருட்கள் வழங்கினார்கள்.கனிமொழி

எம்.பி



 தூத்துக்குடி மாவட்டத்தில் முழுவதும் பல பகுதிகளில் கனிமொழி எம்பி நேரில் சென்றார் ஒருகட்டத்தில் மழை தண்ணீர் நிறைந்த பகுதிக்கு செல்ல சற்றும் யோசிக்காமல் உடன் பிறப்பு ஒருவர் டூவீலர்  பைக் ல  பின அமர்ந்து சென்றார் தூத்துக்குடி முன்றாம் மையில் பகுதியில் கனிமொழி எம்பி வந்தவுடன் பொதுமக்கள் பெண்கள் தீடீர் என்று கோபத்தில் அவர் கையை பிடித்து இழுத்து அமைச்சர் தரப்பு தந்த ஒரு பாகஸ்ல இரண்டு இட்லி மட்டும் தான் குழந்தைக்கு கூட  பத்தாதும்மா இப்படி செய்யறாங்க என அப் பகுதி பொதுமக்கள் கேள்வி கேட்டதும் அதிர்ச்சி யாகி விட்டார் பின்பு தனி டிராக்கில் உதவி நிவாரண பொருட்கள் அரிசி வழங்கினார்.

பொங்கல் அன்றும் ஸ்டெர்லைட் ஆலை ஆதரவு தரப்பும் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு மக்களும் தங்கள் வீட்டில் வாசலில் கோலம் போட்டு மோதி கொண்டார் கள்.

கடந்த 2024 தைப்பொங்கல் அன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என எதிர்ப்பு கோலம் !!!
அதற்காக எதிர்பார்த்து தைப்பொங்கல் அன்று போடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை ஆதரவு கோலங்கள்!!!!???

நன்றி
சட்டம் ஒழுங்கு
புலனாய்வு மாத இதழ் 

 கனமழையில் பொதுமக்கள் பகுதியில் ஸ்டெர்லைட் ஆலை ஸ்டிக்கர் ஒட்டி வழங்கிய நிவாரண பொருட்கள்!!!

இந்த சூழ்நிலையிலும்..ஒரு சில அரசியல் டூபாக்கூர் கட்சி கள் மறைமுகமாக புற வாசல் வழியாக மக்கள் எதிர்ப்பு ஆலை தரப்பில் மிரட்டியோ கெஞ்சி யோ வாங்கி நிவாரண பொருட்கள் வழங்கி தங்கள் கட்சி இருப்பதை காட்டி கொண்டார்கள் .

நாம் தமிழர் சீமான் தூத்துக்குடி முத்தையா புரத்தில் நிவாரண பொருட்கள் வழங்கினார்கள்
நெல்லை தூத்துக்குடியில் நடிகர் விஜய் நிவாரண பொருட்கள் வழங்கினார்
தூத்துக்குடியில் சிலர் தடுத்து பார்த்தனர்.
அதையே குறிப்பிடும் விதத்தில் மக்களுக்கு உதவி செய்யவும் அரசியல் தேவையாயுள்ளது என புதிய கட்சி அறிவிப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் நடிகர் பிரசாந்த் திமுக உடன் இணைந்தே வழங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.



முன்னாள் முதல்வர் எடப்பாடியார் தூத்துக்குடிக்கு நேரில் நிவாரண பொருட்கள் வழங்கினார்கள் 


கனமழையில்.. பாதிப்பு ஏற்பட்ட நிலையில் பத்து நாட்களுக்கு ஸ்மார்ட் சிட்டி பழைய பேருந்து நிலையம் மற்றும் தூத்துக்குடி உள்ள அனைத்து அம்மா உணவகங்கள் முலம் இலவச உணவு தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி ஏற்பாடுகள் செய்திருந்தால் அப்போது தினமும் ஆயிரக்கணக்கான னோர் பசியாற முடிந்தது என்கிறார்கள்
அதேபோல் தூத்துக்குடி மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரில் இறங்கி உதவி பல செய்தது மெச்சத்தக்கது.

மேற்படி இவர்கள் எல்லாம் தூத்துக்குடி மக்களின் ஆழ் இதயத்தில் இடம் பிடித்துள்ளார் என்றால் மிகையாகாது.



புதன், 31 ஜனவரி, 2024

ஸ்டெர்லைட் எதிர்ப்பு துப்பாக்கிச் சூடு வழக்கு தமிழக அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறியது பொய் என்பதால் கோபமான நீதிபதிகள்!!!

thoothukudileaks 1-2-2024

Arunan journalist 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு நீதிமன்றத்தில்  தமிழக அரசு வழக்கறிஞர் இராமன் கூறியது பொய் தகவல் என்பதால் கோபமடைந்த நீதிபதிகள்  பரபரப்பு!!!



நேற்று (31.01.2024) தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மாண்புமிகு நீதிபதி   சுந்தர், மாண்புமிகு நீதிபதி  செந்தில்குமார் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. 


அப்போது, தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர்   இராமன்  ஆஜராகி, துப்பாக்கிச் சூட்டில் சம்பந்தப்பட்ட 17 காவல்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் மற்றும் 3 தாசில்தார்களுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பவது இந்த தருணத்தில் தேவையில்லை என்று வாதிட்டார்.


 மேற்சொன்ன நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நாங்கள் தான் முடிவு செய்தோம் என நீதிபதிகள் தெரிவித்தபோது,  நீதியரசர் அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கை இப்போது வரை தமிழ்நாடு சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் வரவிருக்கின்ற சட்டமன்றக்கூட்டத் தொடரில் நீதியரசர் அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கை  சமர்ப்பிக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர்  தெரிவித்தார்.

 இது உண்மைக்குப் புறம்பானது. 


ஏனெனில் கடந்த 18 அக்டோபர் 2022  அன்று அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை தமிழ்நாடு சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதன் விளைவாக   ஆணையிடப்பட்டு அதிகாரிகளின் குற்றங்கள் உறுதி செய்யப்பட்டு, அதற்கான விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.  


இந்த தகவல் தமிழ்நாட்டில் இருக்கும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.


ஆகவே அரசுத் தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர் வேதாந்தா (ஸ்டெர்லைட்) குழுமத்தின் வழக்குகளில் ஆஜாராகாத வழக்கறிஞராக இருந்தால் சிறப்பு என்று மனுதாரர் வழக்கறிஞர் ஹென்றி திபேன் தனது கருத்தைப் பதிவு செய்தார். 


வழக்கு பிப்ரவரி 21 மீண்டும் விசாரணைக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.




வியாழன், 4 ஜனவரி, 2024

ஒட..ஒட ஸ்டெர்லைட் வாகனம் திரேஸ்புரம் பகுதியில் மக்கள் விரட்டியடிப்பு

thoothukudileaks4-1-2024

news by arunan journalist 


ஒட..ஒட தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் வாகனம் திரேஸ்புரம் பகுதியில் மக்கள் விரட்டியடிப்பு பரபரப்பு 



இது பற்றிய செய்தியாவது:-

 2023டிசம்பர் 17 பெய்த கனமழை காரணமாக கடந்த சிலநாட்களாக...

வெள்ள நிவாரண தருகிறோம் என சோற்று பொட்டலம் மற்றும் தூத்துக்குடி எம்பி கனிமொழி பார்வையில் தெரிய வேண்டும் என அவர் குடியிருப்பு குறிஞ்சி நகர் என சில பகுதிகளில் மட்டுமே சுற்றி சுற்றி  நிவாரண பொருட்கள் வழங்கி வந்தனர்.

இந்நிலையில்...

 ஸ்டெர்லைட் வாகனம் திரேஸ்புரம் பகுதியில் விரட்டியடிப்பு



ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடி விட்டு நிரந்தரமாக அகற்ற வேண்டும் என  நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கி யால் சுட்டு 16 பேர் உயிரிழந்தனர் நூற்றுக்கணக்கானோர் உடல் ரீதியாகவும் பாதிப்பு வழக்குகள் என அல்லாடினார்கள்

இதை தூத்துக்குடியில் உள்ள பொதுமக்கள் எவரும் மறக்கவில்லை என தெரிய வருகிறது .

அதன் உண்மையான வெளிப்பாடு ஸ்டெர்லைட் ஆலை கொண்டு வந்த நிவாரண பொருட்கள் பொதுமக்கள் ஏற்க மறுத்து விரட்டியடிப்பு சம்பவம் பல இடங்களில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

 


இன்று ஸ்டெர்லைட் நிறுவனத்தின் வாகனம் (04.01.24) மதியம் 2.30 மணியளவில் வெள்ள நிவாரண பொருட்கள் தருகிறோம் என்ற போர்வையில் மக்களை பிளவுபடுத்தி, மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு திரேஸ்புரம் பகுதிக்கு வந்தது. 


அதனை பார்த்த திரேஸ்புரம் பகுதி இளைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவர்களை ஓட ஓட விரட்டினர். இனிமேல் இந்த பகுதிக்கு வரக்கூடாது என்று எச்சரித்து அனுப்பியுள்ளனர்.



ஞாயிறு, 24 டிசம்பர், 2023

வாங்காதீர்கள் ஸ்டெர்லைட் ஆலையின் நிவாரண பொருட்களை என தமிழர் விடியல் கட்சியினர் எதிர்ப்பு தூத்துக்குடி பொதுமக்களுக்கு தமிழர் விடியல் கட்சிசேமா. சந்தனராஜ் பாண்டியன் அன்பு வேண்டுகோள் பரபரப்பு

thoothukudileaks 24-12-2023

Arunan journalist 

வாங்காதீர்கள் ஸ்டெர்லைட் ஆலையின் நிவாரண பொருட்களை என  தமிழர் விடியல் கட்சியினர்  எதிர்ப்பு  தெரிவித்து வருகின்றனர்

நீங்கள் வசிக்கக்கூடிய பகுதிகளும் ஸ்டெர்லைட் காரன் மக்களோடு மக்களாக கலப்பதற்கு நிவாரணப் பொருட்களை கொடுக்க வருவான் தயவு செய்து அவர்களை விரட்டியுங்கள். என்று தூத்த்துக்குடி மாவட்ட பொதுமக்களுக்கு தமிழர் விடியல் கட்சி சார்பில் பரபரப்பு வேண்டுகோள்

இது பற்றி தமிழர் விடியல் கட்சி சேமா சந்தனராஜ் பாண்டியன் தெரிவித்திருப்பதாவது:-


தூத்துக்குடி மண்ணை மட்டுமல்ல தமிழகத்தையே உலுக்கிய மிகப்பெரிய துப்பாக்கி சூடு சம்பவம் படுகொலை நடந்த இடம் தூத்துக்குடி மண். 


 ஸ்டெர்லைட் ஆலை யை தூத்துக்குடியை விட்டு நிரந்தரமாக அகற்ற வேண்டும் 

 தூத்துக்குடி மண்ணை, மக்களை, நீர் நிலங்களை காப்பாற்றுவதற்காக போராடிய போராட்டத்தால் 15 உயிர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். 

இது உலகம் இருக்கும் வரை மறைக்கவும் மறக்கவும் முடியாத ஒரு துயர் சுவடு. 




தற்போது தூத்துக்குடி மாவட்டம் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டு இருக்கின்ற இந்த சம்பவத்தை பயன்படுத்தி மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை யினர் அது ஸ்டிக்கர் ஒட்டி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தனது செல்வாக்கை உயர்த்த வேண்டும்.

 தூத்துக்குடி மக்களை மடைமாற்றி மீண்டும் ஸ்டெர்லைட் திறப்பதற்கு நிவாரண பொருட்கள் மூலமாக கொடுத்து வருகிறது



 தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே சிதறி நிவாரண பொருட்களை கொடுத்து வருகிறார்கள்.


ஆங்காங்கே தோழர்கள் இது சம்பந்தமாக ஸ்டெர்லைட் காரன் நிவாரண பொருட்களை கொடுத்து வருகிறான் நாங்கள் ஆங்காங்கே விரட்டிய சம்பவம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது 


தூத்துக்குடியில் இன்று 24.12.2023 ஞாயிற்றுக்கிழமை   நண்பகல் 12 மணி அளவில்  எங்கள் பகுதியில்   ஸ்டெர்லைட் ஆலை ஒரு படையுடன் வந்து நிவாரண பொருட்கள் உடன் மக்களுக்கு வலை வீசினார்கள் 

அதில் பாரதிய ஜனதா போர்வையுடன் பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல செயலாளர்கள் பொறுப்பாளர்கள் வந்ததாக என தெரிவிக்கிறார்கள்

அவர் களிடம் தமிழர் விடியல் சார்பில் பேசினோம் 

நீங்கள் பாரதிய ஜனதா கட்சியோ, அதிமுக, திமுக கட்சியோ உங்கள் கட்சி பெயரில் நிவாரண பொருட்கள் கொடுங்கள் 

ஆனால் ஸ்டெர்லைட்டுக்காரன் கொடுக்கின்ற நிவாரண பொருட்களை கொண்டு வந்து கொடுக்கக் கூடாது என்று  தமிழர் விடியல் கட்சி சார்பில் அப்பகுதியில் தடுத்து நிறுத்தி அப் பகுதி வாசிகள் புறக்கணித்தனர்.


இதனால் திரும்பி சென்றனர் .

மக்களுக்கு நான் சொல்லக்கூடிய செய்தி என்னவென்றால், 

இதே போல் நீங்கள் வசிக்கக்கூடிய பகுதிகளும் ஸ்டெர்லைட் காரன் மக்களோடு மக்களாக கலப்பதற்கு நிவாரணப் பொருட்களை கொடுக்க வருவான் தயவு செய்து அவர்களை விரட்டியுங்கள். 


இந்த மண்ணை காப்பதற்காக 15 உயிர்கள் பலி கொடுக்கப்பட்டு இருக்கிறார்கள்


 அவர்களுக்கு நாம் செய்யும் கடமை நாம் செய்யும் வணக்கம் அதுவாகத்தான் இருக்கும். 


பரிபூரண உயிரை நம்மால் கொடுக்க முடியாது. 


ஆனால் அவர்கள் எந்த நோக்கத்திற்காக படுகொலை செய்யப்பட்டார்களோ அவருடைய நோக்கம் நிறைவேற வேண்டும்.


 ஆகையால் பொதுமக்கள் ஸ்டெர்லைட் தரப்பில் வருகின்ற நிவாரண பொருட்களை தயவு செய்து வாங்கி விடாதீர்கள்


 அவனுடைய பொருட்களை வாங்கி தான் நாம் வாழ வேண்டும் என்று சொன்னால் நாம் இந்த நேரமே உயிர் விட தயாராக இருக்க வேண்டும் .

அன்பு மக்களே தயவு செய்து ஸ்டெர்லைட் கொடுக்கின்ற  பிச்சை நிவாரணத்தை தயவு செய்து வாங்காதீர்கள் வாங்காதீர்கள் என தெரிவித்து உள்ளார்


சேமா. சந்தனராஜ் பாண்டியன்

தமிழர் விடியல் கட்சி.

செவ்வாய், 30 மே, 2023

பரபரப்புடன்..தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் முத்துநகர் பல்லுயிர் பூங்கா அடிக்கல் நாட்டு விழா

thoothukudileaks 31-5-2023

news by arunan 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் முத்துநகர் பல்லுயிர் பூங்கா திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில், 32 ஏக்கர் பரப்பளவில்  முத்துநகர் பல்லுயிர் பூங்கா  உருவாக்குவதாக மிரள வைத்துள்ளார்கள்.


இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற வேண்டும் என ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த பொதுமக்கள்  13 பேர் மீது காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியது இந்த சம்பவம் தொடர்பாக 16 பேர் இறந்து போனார் கள். 

தூத்துக்குடி யில் கலவரம் ஏற்பட்டது அதனால் தமிழ்நாடு அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக சீல் வைத்துள்ளது.

இன்று வரை தூத்துக்குடி யில் ஸ்டெர்லைட் ஆலை முடப்பட்டு கிடக்கிறது. 

சீல் வைத்து முடப்பட்ட தமிழக அரசை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடுத்து உள்ளது.

 இது தொடர்பாக வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

    இந்த நிலையில் தற்போது தூத்துக்குடி யில்  ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில், 32 ஏக்கர் பரப்பளவில்  முத்துநகர் பல்லுயிர் பூங்கா  உருவாக்கி வருவதாக அதிர்ச்சி அளித்து உள்ளது. 


இதற்கான அடிக்கல் நாட்டு விழா மீளவிட்டானில் நடைபெற்றது.

    விழாவுக்கு சரவணன் தலைமை வகித்தார். 

 நிகழ்ச்சிக்கு தெற்கு சிலுக்கன்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் பாலசுப்ரமணியன், சாமிநத்தம் பஞ்சாயத்தை சேர்ந்த நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

     இதில், ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுமதி பேசிய தாவது:-

’ஸ்டெர்லைட் ஆலை ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் கால்வாய்களை புணரமைத்தல், கிராமப்புறங்களில் உள்ள குளங்களைத் தூர்வாறுதல் போன்ற பணிகளை செய்து வருகிறது. 


பசுமை தூத்துக்குடி என்ற பெயரில் தற்போது, 1.25 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.


 அடுத்த கட்டமாக மூலிகைத் தோட்டம், அரிய வகை தாவரங்களை மீட்டெடுத்தல், நட்சத்திர வனம், மூங்கில் தோட்டம் ஆகியவற்றை தூத்துக்குடியில் உள்ள 403 கிராம பஞ்சாயத்துகளில் 35சதவீத காடுகளை உருவாக்க தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், கிராமப் பஞ்சாயத்து அமைப்புகள், Sterlite.communication@vedanta.co.in  என்ற மின்னஞ்சலிலோ, 91 8870477985 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்’’ என்றார்.


புதன், 3 மே, 2023

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆதரவு குழுவினர் 27 பேர் கைது

 thoothukudileaks 3-5-2023

photo news by arunan 

தூத்துக்குடியில் இன்று ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர்கள் கைது  



இதுபற்றி செய்தியாவது:-

ஸ்டெர்லைட் ஆலை திறக்க வேண்டும் என இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போச்சு தங்கள் வாழ்வாதாரம் பாதிப்பு ஏற்பட்டதுள்ளது என கூறி அய்யனடடைப்பு பஞ்சாயத்து பகுதியில் இருந்து ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் தூத்துக்குடி மாவட்ட அலுவலகம்  கலெக்டர் இடம் மனு கொடுக்க வந்திருந்தார்கள்.

செய்தியாளர் சந்தித்து பேட்டி அளித்தனர்.

video 

காவல்துறை போலிஸார் அப்பகுதியில் அதிகமாக வந்து இறங்கினார்கள்.


இதுவரை ஸ்டெர்லைட் ஆதரவு மனு கொடுக்க கலெக்டர் அலுவலகத்தில் வந்திருந்தவர்களை கைது நடவடிக்கை எடுக்காமல் பிரச்சினை வராமல் பாதுகாத்துக் கொண்டு இருந்தது..

ஆனால்? 

இந்த தடவை இன்று 27 பேர் காவல்துறை கைது செய்து வண்டியில் ஏற்றியது.

தூத்துக்குடி காவல்துறை கைது அதிரடி நடவடிக்கையால் கைதுக்கு பயந்து ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாக வந்திருந்தவர்கள் பலர்  பாதி பேர் நழுவி மாயமாகி விட்டனர்..

காவல்துறை யின் அதிரடி கைது நடவடிக்கையால் ஸ்டெர்லைட் ஆலை ஆதரவு என கூறி கிராமத்தில் இருந்து அழைத்து வருபவர்கள் அதிர்ச்சி அடைந்து போயுள்ளார்கள்.

சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் ...

தமிழக காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க இருக்கிறது என்கிறார் கள்.

இனி எல்லாமே அப்படி தான்!!!



சனி, 22 ஏப்ரல், 2023

ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பிரஸ் மீட் எனும் பெயரில் அவதூறு செய்திகள் பரப்பி வருகின்றார்கள் தூத்துக்குடி காவல்துறை க்கு புகார்

thoothukudileaks 22-4-2023

news by arunan 

தூத்துக்குடி காவல்துறை க்கு புகார் ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து பிரஸ் மீட் எனும் பெயரில் அவதூறு செய்திகள்  பரப்பி வருகின்றார்கள்.இவர்கள் மீது நடவடிக்கை காவல்துறை மெத்தனமாக இராமல் உடனே எடுத்திட வேண்டும்.  தூத்துக்குடியில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்க பட‌வேண்டும் என பரபரப்பு ஏற்பட்டதுள்ளது.

இதுபற்றி செய்தியாவது:-

தூத்துக்குடி காவல்துறை அதிகாரி க்கு அளித்துள்ள புகார் மனு தெரிவித்ததாவது;-



ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம்

Anti-Sterlite People's Movement


பெறுநர்: உயர்திரு துணை காவல் கண்காணிப்பாளர்

தூத்துக்குடி நகர உட்கோட்டம்

தூத்துக்குடி.

தேதி : 22.04.23

பொருள்:-

ASPM மாநில ஒருங்கிணைப்பாளர் திருமதி பாத்திமா பாபு அவர்கள் மீது...

அவதூறு செய்திகள் பரப்பி வரும் ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி....

ஐயா,

கடந்த 11/4/2023 அன்று ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் தனலட்சுமி,நான்சி,

சந்தனராஜ், சம்சு மற்றும் 10 பேர் கூட்டாக சேர்ந்து பத்திரிகையாளர்  சந்திப்பில், அவதூறான பரப்புரை செய்துள்ளார்கள்.

போராட்டத்திற்கு....

2018ஆம் ஆண்டு நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு

வெளிநாட்டில் இருந்து பணம் பெற்றுக் கொண்டு தான் ஆலைக்கு எதிராக

போராடினார்கள் என்றும், பேராசிரியர் பாத்திமா பாபு வீராங்கனை

அமைப்பின் மூலம் தான் பணம் பெற்று போராட்டம் நடத்தினார்கள் என்றும்

இந்தப் போராட்டத்திற்கு அவர்கள் வெளிநாட்டில் இருந்து கையூட்டு

பெற்றார்கள் என்றும் ஒரு தனி நபரின் பெயரை களங்கப்படுத்தும் விதமாக

அவதூறாக பேசி பேட்டி கொடுத்துள்ளார்கள். 


பேராசிரியர் பாத்திமா பாபு  அவர்களுக்கு சமூகத்தில் இருக்கும் நற்பெயருக்கு குந்தகம் விளைவிக்கும்

விதமாக இந்தப் பேட்டி உள்ளது. இந்த செயல், அவர்களை மிகுந்த மன

உளைச்சலுக்கு ஆளாக்கி யுள்ளது. இப்படி அபாண்டமான, ஆதார மற்ற

பரப்புரைகளை செய்து வரும் ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் அத்தனை பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்படி இந்த புகார் மனுவை கொடுக்கிறோம்.

இப்படிக்கு

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம்

செவ்வாய், 18 ஏப்ரல், 2023

ஸ்டெர்லைட்காரன் என்னை ஏமாற்றி விட்டான்!!! ஒரு கோடியே 92 லட்சம் ரூபாய் பணம் தரவில்லை ஜய்யய்யோ என்னோட பணம் வாங்கி தாருங்கள் ஜயா ஸ்டெர்லைட் ஆலை மீது பகீர் குற்றச்சாட்டு

 thoothukudileaks 18-4-2023

photo news by arunan 

ஸ்டெர்லைட் காரன் என்னை நல்லா ஏமாற்றி விட்டான்!!! ஒரு கோடியே 92 லட்சம் ரூபாய் பணம் தரவில்லை ஜய்யய்யோ என்னோட பணம் வாங்கி தாங்கள் ஜயா ஸ்டெர்லைட் ஆலை மீது பகீர் குற்றச்சாட்டு !!!

கடைசியில் என்னுடைய இந்த செய்தியை போடுறேன் னு நேற்று லோக்கல் பத்திரிகை டிவியில்  காட்டுறேன்னு !!! ரூபாய் 10ஆயிரம் வாங்கிட்டு செய்தி போடாமாமல் ஏமாத்திட்டாங்க ஹய்யா என புலம்பினார்.அட கொடுமையே!!!



இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திடம் இருந்து சுமார் ரூ.2கோடி பணத்தை மீட்க மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒப்பந்ததாரர் மாதவன் நேற்று 17-4-2023 தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இடம் மனு கொடுத்துள்ளார்.

இதுவரை அடிக்கடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கள் மனு அன்றைய தினங்களில்... ஸ்டெர்லைட் ஆலை நல்ல மிக உசந்த  ஆலை மக்களுக்கு ரொம்ப நல்லது செய்யுது கல்விகொடுக்குது மருத்துவமனையில் மருந்து கொடுக்குது வேலை கொடுக்குது கொரானாவுக் ஆக்ஸிஜன் கொடுக்குது என அளந்த படி திறந்து விடுங்கள் என ஆலை தரப்பு ஆதரவு கோஷ்டியே மாவட்ட அலுவலகத்தில் வழக்கமாக டேரா போடுவாங்க...!!!!

இன்று 17-4-2023 ஸ்டெர்லைட் ஆலை சுமார் ஒரு கோடி 92 லட்சம் என்னை ஏமாற்றி விட்டது ஐய்யோ என்னை காப்பாற்றுங்கள் பணம் பெற்று தாருங்கள் என்றார் மாதவன் 

ஸ்டெர்லைட் ஆலை சாயம் வெளுத்து போச்சா என அள்ளி அள்ளி வழங்குது என சொன்னாங்களே அது இப்படி அம்மாஞ்சி களை சுரண்டி ஏமாற்றி தானா என கேட்க தொடங்கி உள்ளார்கள்.

இதுபற்றி செய்தியாவது:-


தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலை கடந்த 2018ம் ஆண்டு மே22ல்  நடைபெற்ற தூத்துக்குடி மக்கள் எதிர்ப்பு போராட்டத்தால் 16 பேர் சுட்டு கொல்லப்பட்டனர் அவர் களின் உயிர் தியாகத்தால் தமிழக அரசு எடுத்த நடவடிக்கையால் ஸ்டெர்லைட் ஆலையை சீல் வைத்து மூடப்பட்டது. 

இதனை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அந்த நிறுவனம் சட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது.


 இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டிட வேலை சம்பந்தமாக ஸ்டெர்லைட் ஆலை தரப்பினர் ஒரு கோடியே 92 லட்சம் ரூபாய் தர வேண்டும் என கூறி கட்டிட ஒப்பந்ததாரர் மாதவன் என்பவர் மனு அளித்தார் 


அப்போது அவர் பேசியதாவது:-  


சென்னை கணபதி நகரில் உள்ள SHA கன்ஸ்ட்ரக்சன் என்ற தனியார் நிறுவனம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நேரடி கண்ஸ்ட்ரக்சன் ஆக ஒப்பந்த பணியில் கட்டிட வேலை செய்து வந்தோம்.



 2015-2017 வரை பார்த்து வந்த பணி காரணமாக ஒரு கோடியே 92 லட்சம் ரூபாய் அதற்கான பணம் தரவில்லை. மேலும், எங்களுடைய பொருட்களும் பணி செய்யும் தளவாடல்கள் எல்லாம் ஆலையில் இருந்து திரும்ப எடுக்க முடியவில்லை. இது குறித்து பலமுறை ஸ்டெர்லைட் நிர்வாகத்திடம் கேட்டபோது இழுத்தடிக்கின்றனர்.


 ஆகவே ஸ்டெர்லைட் ஆலை மீது மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து பணம் பெற்று வழங்குமாறு கேட்டு கொண்டார்.

ஞாயிறு, 22 ஜனவரி, 2023

ஸ்டெர்லைட் ஆலை பற்றி? தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற மக்கள் சிவில் உரிமை கழகம் பொதுக்குழு கூட்டத்தில் பரபரப்பு தீர்மானம்.

thoothukudileaks 22-1-2023

News by arunan 

தூத்துக்குடி மாவட்ட மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் பரபரப்பாக இன்று நடைபெற்றது.



இது பற்றிய செய்தியாவது:-

மாவட்ட மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் தூத்துக்குடியில் (22-1-2023) இன்று காலை 10 மணி அளவில் ராசி மஹாலில் வைத்து நடைபெற்றது 

இக் கூட்டத்திற்கு தேசிய குழு உறுப்பினர் பேராசிரியை பாத்திமா பாபு தலைமை வைத்தார். 

மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயராஜ்  மாவட்ட பொருளாளர் நவமணி முன்னிலை வகுத்தார்கள். தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ராஜா வரவேற்பு உரை ஆற்றினார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


01 )  தூத்துக்குடி மாவட்ட மக்கள் சிவில் உரிமை கழகத்தில் புதிய உறுப்பினர்கள் அதிகப்படியாக சேர்க்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.


02 )

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எந்த சூழ்நிலையிலும் மீண்டும் இயக்க அரசு அனுமதிக்க கூடாது என்று  மாநில அரசினை தூத்துக்குடி மக்கள் சிவில் உரிமை கழகம் வலியுறுத்துகிறது.


03 )  ஓய்வுபெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் அவர்களின் பரிந்துரைப்படி தமிழ்நாடு அரசு உடனடியாக மே 22, 2018 ல் நடந்த துப்பாக்கி சூட்டில் வரையறை மீறிய காவல்துறையினர், வருவாய் துறையினர் மற்றும் அப்போதைய மாவட்ட ஆட்சியர் மீது உடனடியாக குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மேலும் பல தீர்மானங்கள் கொண்டு வந்தார்கள்.

ஞாயிறு, 11 டிசம்பர், 2022

தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைக்க கோரி தூத்துக்குடி கலெக்டரிடம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் மனு அளித்தனர்


🤷🏻‍♀️, thoothukudileaks

12-12-2022

தூத்துக்குடி மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று 12-12-2022 காலை 10. மணி அளவில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் _சுமார் 300மேற்பட்டோர் தமிழக மூதல்வர் ஸ்டாலின் அவரிடம் ஒப்படைக்க கோரி தூத்துக்குடி கலெக்டர் செந்தில் ராஜ் இடம் புகார் மனு கொடுத்தார் கள். 


மனு கொடுக்க எழுச்சியுடன் வந்த ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள்



_இதனால் தூத்துக்குடி மாநகரத்தில் பல பகுதிகளில் காவல்துறை வாகனம் போலீசார் பாதுகாப்பு பணி‌ என்று நிறுத்த ப்பட்டிருந்தார்கள்_



_இதையொட்டி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வழக்த்தை விட காவல்துறை போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டு இருந்தார்கள்_




ஒருங்கிணைந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பாக அளித்த மனுவில் கூறப்பட்டிருந்தாவது:-

7339110763 9443584049 9488478955 9843412669 9791123059 7305172352

பெறுநர்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,

தலைமைச் செயலகம்,

சென்னை.

உரிய வழியாக:

மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்கள்,

தூத்துக்குடி மாவட்டம்,

தூத்துக்குடி.

தேதி:12.12.2022

பெருமதிப்பிற்குரிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு,

நாசகார ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே.22 & 23, 2018

நாட்களில் நடந்த அமைதி வழிப் போராட்டத்தில், காவல்துறையால் 13 பேர்

சுட்டும், 2 பேர் அடித்தும் கொல்லப்பட்டனர். துப்பாக்கிசூட்டில் காவல்துறை

அத்துமீறல் இருந்ததா? என்பதை விசாரிக்க கடந்த அதிமுக அரசால்

நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி திருமதி. அருணா ஜெகதீசன் ஆணையம்

கடந்த மே-18 ல் தமிழக அரசிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.



ஆணையத்தின் அறிக்கையை முழுவதுமாக ஏற்றுக்கொள்வதாக தாங்கள் கூறினீர்கள்.

ஆணைய அறிக்கை மீது, கடந்த 18-10-2022-ல் தமிழக சட்டமன்றத்தில்

நிகழ்ந்த வாதத்தின் போது தாங்கள் "துப்பாக்கிச்சூட்டில் சம்பந்தப்பட்ட

அனைவரும் குற்றவாளி கூண்டில் ஏற்றப்படுவார்கள்” என்று உறுதியளித்தீர்கள்.

தூத்துக்குடி-தமிழக மக்களும், பிஜேபி தவிர்த்த அனைத்து கட்சிகளும் தங்களின்

உறுதிமொழியை பெரிதும் வரவேற்றனர்.

ஆனால் 17-10-22 அன்று தங்களது அரசால் வெளியிடப்பட்ட G.O.No.SS

11/320-16/2022 அரசாணையில், அமைச்சரவை முடிவுப்படி, ஆணையத்தின்

பரிந்துரையில் துறை ரீதியான நடவடிக்கை மட்டும் ஏற்றுக்கொள்வதாக

கூறப்பட்டுள்ளது. இது எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியையும், மனவேதனையையும்

உண்டாக்கியுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்த பின்பு தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில்

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித் தகுதிக்கேற்ற வேலை,

வேலை வாய்ப்பு & வெளிநாடு செல்ல வழக்குத்தடை நீக்கம், ஸ்டெர்லைட்

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீதும் தலைவர்கள் மீதும் பதியப்பட்ட

வழக்குகள் வாபஸ், சட்ட முரணாக சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு

ரூ.1,00,000/-நிவாரணம் உட்பட பல்வேறு பொருத்தமான துயர்துடைக்கும்

பணிகளை செவ்வனே செயல்படுத்தி உள்ளீர்கள். இன்றுவரை ஸ்டெர்லைட்டை

திறக்க விடாமல் தடுத்து வருகிறீர்கள்.

துறை ரீதியிலான

குற்ற நடவடிக்கையும்,

கொன்றவர்கள் மீதான

நடவடிக்கையும் ஆணைய அறிக்கை வந்தவுடன் தமிழ்நாடு அரசு எடுக்கும் என

எதிர்பார்த்தோம். 

தாங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, மக்களை

படுகொலை செய்தவர்கள் எந்த உயர் பொறுப்பில் இருந்தாலும் குற்றவியல்

நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்படுவார்கள் எனவும், கடந்த அதிமுக அரசின்

ஸ்டெர்லைட் ஆலையை மூடும் அரசாணை பலவீனமானது என்றும் தாங்கள்

ஆட்சிக்கு வந்த பின்பு சிறப்பு சட்டம் இயற்றி ஸ்டெர்லைட் நிரந்தரமாக

அகற்றப்படும் என்றும் உறுதியளித்து இருந்தீர்கள்.

தங்களின் வாக்குறுதியை உண்மையானது, சரியானது, உறுதியாக

நடைமுறைக்கு வரும் என்று ஏற்றுக்கொண்டோம். ஆனால், தற்போது கொலை செய்த போலீசார் மீது குற்ற நடவடிக்கை இல்லை என்பது தூத்துக்குடி மக்களை

அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

எனவே, சட்டப் பேரவையில் தாங்கள் "தவறு செய்தோர் குற்றவாளிக்

கூண்டில் ஏற்றப்படுவார்கள்" என்ற உறுதிமொழியை அமல்படுத்த,

அமைச்சரவையை மறுபடியும் கூட்டி உரிய ஆலோசனை செய்து மேற்படி

அரசாணையை திரும்பப் பெற்றோ அல்லது திருத்தம் செய்தோ துப்பாக்கிச் சூடு

நடத்தி மக்களை கொன்ற போலீஸார் மீதும், அதற்கு துணை போன அதிகாரிகள்

மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டியும், சிறப்பு சட்டமியற்றி

ஸ்டெர்லைட்டை அகற்றி, நீதியை நிலைநாட்டிட வேண்டுமென்றும் தங்களை

மிகுந்த நம்பிக்கையோடு தூத்துக்குடி மற்றும் தமிழ்நாடு மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

ஒருங்கிணைந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு

கூட்டமைப்பு

இடம்: தூத்துக்குடி