thoothukudileaks 31-5-2023
news by arunan
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் முத்துநகர் பல்லுயிர் பூங்கா திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில், 32 ஏக்கர் பரப்பளவில் முத்துநகர் பல்லுயிர் பூங்கா உருவாக்குவதாக மிரள வைத்துள்ளார்கள்.
இது பற்றிய செய்தியாவது:-
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற வேண்டும் என ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த பொதுமக்கள் 13 பேர் மீது காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியது இந்த சம்பவம் தொடர்பாக 16 பேர் இறந்து போனார் கள்.
தூத்துக்குடி யில் கலவரம் ஏற்பட்டது அதனால் தமிழ்நாடு அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக சீல் வைத்துள்ளது.
இன்று வரை தூத்துக்குடி யில் ஸ்டெர்லைட் ஆலை முடப்பட்டு கிடக்கிறது.
சீல் வைத்து முடப்பட்ட தமிழக அரசை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடுத்து உள்ளது.
இது தொடர்பாக வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது தூத்துக்குடி யில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில், 32 ஏக்கர் பரப்பளவில் முத்துநகர் பல்லுயிர் பூங்கா உருவாக்கி வருவதாக அதிர்ச்சி அளித்து உள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா மீளவிட்டானில் நடைபெற்றது.
விழாவுக்கு சரவணன் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சிக்கு தெற்கு சிலுக்கன்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் பாலசுப்ரமணியன், சாமிநத்தம் பஞ்சாயத்தை சேர்ந்த நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுமதி பேசிய தாவது:-
’ஸ்டெர்லைட் ஆலை ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் கால்வாய்களை புணரமைத்தல், கிராமப்புறங்களில் உள்ள குளங்களைத் தூர்வாறுதல் போன்ற பணிகளை செய்து வருகிறது.
பசுமை தூத்துக்குடி என்ற பெயரில் தற்போது, 1.25 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.
அடுத்த கட்டமாக மூலிகைத் தோட்டம், அரிய வகை தாவரங்களை மீட்டெடுத்தல், நட்சத்திர வனம், மூங்கில் தோட்டம் ஆகியவற்றை தூத்துக்குடியில் உள்ள 403 கிராம பஞ்சாயத்துகளில் 35சதவீத காடுகளை உருவாக்க தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், கிராமப் பஞ்சாயத்து அமைப்புகள், Sterlite.communication@vedanta.co.in என்ற மின்னஞ்சலிலோ, 91 8870477985 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்’’ என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக