பொதுக்கூட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொதுக்கூட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 5 பிப்ரவரி, 2026

பொதுக் கூட்டங்களுக்கு புதிய வரம்பு – மாவட்ட வாரியாக உச்ச அளவு நிர்ணயம் தமிழ்நாடு அரசின் SOP வழிகாட்டுதல்கள் அமுல் முழு விவரம் பார்க்க

Tamil Nadu update 

photo news by Arunan journalist 

தூத்துக்குடி லீக்ஸ்” நாளிதழ்  செய்தி

தூத்துக்குடி, ஜனவரி 05:

தமிழ்நாட்டில் நடைபெறும் பொதுக் கூட்டங்கள், பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், அரசியல் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பெரும் மக்கள் கூடல்களை ஒழுங்குபடுத்தும் வகையில் அரசாணை எண் 5 (காவல் VIII) மூலம் புதிய செயல்பாட்டு நடைமுறை வழிகாட்டுதல்கள் (SOP) இன்று (05.01.2026) முதல் அதிகாரப்பூர்வமாக அமல்படுத்தப்பட்டுள்ளன.

thoothukudileaks


இந்த SOP-ன் முக்கிய அம்சமாக, மாவட்ட வாரியாக பொதுக் கூட்டங்களுக்கான உச்ச அளவு (Crowd Limit) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு மாவட்டத்திலும் அங்கீகரிக்கப்பட்ட இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அந்த இடங்களின் பரப்பளவு, பாதுகாப்பு வசதி மற்றும் போக்குவரத்து சூழ்நிலை ஆகியவற்றின் அடிப்படையில் அதிகபட்ச கூட்டத் திறன் கணக்கிடப்படும்.

அனுமதி பெற புதிய நடைமுறை

பொதுக் கூட்டம் நடத்த விரும்பும் அமைப்புகள் மற்றும் கட்சிகள்,

அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் நடத்த வேண்டுமெனில் 10 முதல் 21 நாட்களுக்கு முன்பாக

அங்கீகரிக்கப்படாத இடங்களில் நடத்த வேண்டுமெனில் 15 முதல் 30 நாட்களுக்கு முன்பாக

மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி விண்ணப்பிக்க வேண்டும்.

5,000 பேருக்கு மேற்பட்ட கூட்டங்களுக்கு SOP விதிகள் கட்டாயம் நடைமுறையில் இருக்கும்.

பாதுகாப்பு, மருத்துவ வசதி கட்டாயம்

கூட்டம் நடத்தும் அமைப்புகள்:

✔️ போதிய வாலண்டியர்கள் நியமனம்

✔️ குடிநீர், கழிப்பறை, தீயணைப்பு வசதி

✔️ ஆம்புலன்ஸ், மருத்துவ குழு

✔️ CCTV கண்காணிப்பு

✔️ போக்குவரத்து ஒழுங்கு ஏற்பாடு

போன்ற அனைத்தையும் கட்டாயம் செய்ய வேண்டும் என SOP-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர், காவல்துறை பொறுப்பு

இந்த SOP-ஐ அமல்படுத்தும் முழு பொறுப்பு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

விதிகளை மீறி கூட்டம் நடத்தினால் அனுமதி ரத்து, வழக்குப்பதிவு உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பே முக்கியம்

பெரும் கூட்டங்களில் ஏற்படும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கில் இந்த வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் பாதுகாப்பே அரசின் முதன்மை குறிக்கோள் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

வியாழன், 27 பிப்ரவரி, 2025

எதிர்பாராத கூட்டணி விரைவில் – தூத்துக்குடியில் அதிமுக பொதுக்கூட்டம்

 Tamil Nadu updates,28-2-2025

எதிர்பாராத கூட்டணி விரைவில் – தூத்துக்குடியில் அதிமுக பொதுக்கூட்டம்

தூத்துக்குடி, பிப். 28:

மறைந்த தமிழக முதல்வர், புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று (27.02.2025) மாலை தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகேயுள்ள எம்ஜிஆர் திடலில் நடைபெற்றது.



இதில் தூத்துக்குடி மத்திய வடக்கு பகுதி செயலாளர் ஜெய்கணேஷ் தலைமை வகித்தார். விழாவில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் விஜயகுமார், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா. சுதாகர், மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் வழக்கறிஞர் பிரபு உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.



விழாவில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறுகையில்,

"திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டுள்ளது. போதைப்பொருள் விற்பனை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கொள்ளைகள் அதிகரித்துள்ளன. மக்களுக்கு பயன்படும் எந்த நல்ல திட்டத்தையும் திமுக செயல்படுத்தவில்லை. 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் நல்லாட்சி அமையும்" என கூறினார்.

மேலும், "எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் அம்மா மினி கிளினிக், அம்மா மருந்தகம், விவசாயிகளுக்கான குடிபராமரிப்பு திட்டம், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஆனால் திமுக ஆட்சியில் நன்மை விளையாத நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளன" என்றார்.



இதற்குப் பின்னர், அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில்,

"தமிழக அரசை வாரிசு அரசாக மாற்றியிருக்கின்றனர். கனிமொழி நாடாளுமன்றத்தில் இரண்டு சபைக்கும் தலைவராக உள்ளார். அவரது அப்பா தி.ஆர். பாலுவை புறக்கணித்து, வாரிசு அடிப்படையில் அதிகாரத்தை மையப்படுத்தியுள்ளார். மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 16% அதிகரித்துள்ளன. ஒரே நாளில் 12 பாலியல் குற்றங்கள் நடைபெறுகின்றன. திமுக ஆட்சியில் தமிழக சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது" என்று குற்றம்சாட்டினார்.

மேலும், எதிர்பாராத கூட்டணி விரைவில் அமையவுள்ளதாக, அதற்கான யூகத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விரைவில் அறிவிப்பார் எனவும் தெரிவித்தார்.

"மத்திய அரசின் நிதிக்காக மும்மொழிக் கொள்கையை ஏற்று கடிதம் கொடுத்த பிறகு, மக்கள் எதிர்ப்பை எதிர்கொண்டு, பின்னர் நாடகமாடும் நிலைமையில் திமுக உள்ளது. மக்கள் மத்தியில் எதிர்வரும் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வருவார் என்ற நம்பிக்கை நிலவுகிறது" என்றார்.

இதில் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டல இணைச் செயலாளர் மற்றும் மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடா வழக்கறிஞர் மந்திரமூர்த்தி, மாவட்ட கழக அவை தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் பி.ஏ. ஆறுமுக நயினார், மாவட்ட சார்பு அணிச் செயலாளர்கள் எம். பெருமாள், ஏரோமியாஸ், மகளிரணிச் செயலாளர்கள் நாசரேத் ஜூலியட், ஜெயராணி, ஞானபுஷ்பம், நகர செயலாளர்கள் மகேந்திரன், மணிகண்டன், சண்முகபுரம் மாடசாமி, முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் சுகந்தன், ஆதித்தன், ஆண்ட்ரூ மணி உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.




நலத்திட்ட உதவிகள் வழங்கல்

விழாவின் ஒரு பகுதியாக தையல் இயந்திரம், அயன் பாக்ஸ், சைக்கிள், வேஷ்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் 1,000 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கான நன்றியுரை மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடா வழக்கறிஞர் மந்திரமூர்த்தி வழங்கினார்.

ஞாயிறு, 10 நவம்பர், 2024

திமுக எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்வது திமுகவின் தேர்தல் பூத் கமிட்டி முகவர்கள் நீங்கள் தான் அன்றைய தினம் முக்கியமானவர்கள் என அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு

thoothukudi leaks 11-11-2024

photo news by

sunmugasuthram Reporter 

தோ்தல் நாளன்று எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பவர்கள் பூத் கமிட்டி பாகமுகவா்கள் தான் 

நீங்கள் தான் அன்றைய தினம் முக்கியமானவர்கள் என அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

கலைஞர் அரங்கில் ஆலோசனை கூட்டம்!!!

       தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி பாகமுகவா்கள் ஆலோசனை கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மேயா் ஜெகன் பொியசாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. 



அமைச்சர் கீதா ஜீவன் !!

   வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பேசுகையில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கண்டிப்பான கட்டளையுடன் கூடிய உத்தரவை எல்லா மாவட்ட செயலாளர்களுக்கும் வழங்கியது மட்டுமின்றி தேர்தல் பொறுப்பாளர்களுக்கும் பல அறிவுரைகளுடன் கூடிய கட்டளைகளை பிறப்பித்துள்ளாா்கள்

நிறைவேற்றுங்கள்!!!

 அதையெல்லாம் நிறைவேற்றும் இடத்தில் பாகமுகவர்களாக நீங்கள் இருக்கின்றீா்கள். இதை உணர்ந்து அனைவரும் பொறுப்புடன் பணியாற்ற வேண்டும்.

 தேர்தல் நாளன்று எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து முட்டு கொடுப்பவர்கள் நீங்கள் தான் என்பதை நாங்கள் அறிவோம்.

வெற்றி நிச்சயம்!!!

 அதற்கேற்றாற்போல் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு முதலமைசசர் அமைத்து கொடுத்த வியூகத்தின் அடிப்படையில் நாம் பணியாற்றிய காரணத்தால் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றோம். 


அதே போல் வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதியில் வெற்றி பெற வேண்டும். என்ற இலக்கை நிர்ணயித்துள்ளார் தளபதியார் நாம் அதையும் கடந்து நிச்சயம் வெற்றி பெறுவோம்.

திமுக கட்சி தலைமை பேசும்!!!


 ஓவ்வொரு பூத் கமிட்டியிலும் இருக்கும் பாக முகவர்கள் 10 பேரும் நல்ல முறையில் பணியாற்ற வேண்டும். உங்களது பட்டியல் தலைமை கழகத்திற்கு வழங்கப்படும். அங்கிருந்தே தொடர்பு கொண்டு பேசும் சூழ்நிலை வரும். என்பதை தொிவித்துக்கொள்கிறேன். 


புதிய வாக்காளர் பட்டியலில் நம் வீட்டு பிள்ளைகளின் பெயா்களை சேர்க்க வேண்டும். 13ம் தேதி இரவு துணை முதலமைச்சர் நம் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரவுள்ளார்.


 அன்றையதினம் புதூர் எல்லையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. மறுநாள் ஓரு திருமண நிகழ்ச்சியிலும் அரசு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மாலை நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார். அனைவரும் பங்கெடுத்துக்ெகாள்ள வேண்டும். என்று பேசினார்.

துனை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகை பற்றி ...

இன்பா ரகு!!!

மாநில இளைஞர் அணி துணைசெயலாளரும் தூத்துக்குடி தொகுதி தோ்தல் பொறுப்பாளருமான இன்பாரகு பேசுகையில்... தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள...

" நான் இங்கு பணியாற்றுவதற்கு வரவில்லை திமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிடுகின்ற அனைவரும் டெபாசிட் இழக்க வேண்டும்."

 என்பதற்காக நியமனம் செய்யப்பட்டு உங்களோடு பணியாற்றி அதை நிறைவேற்றும் இடத்தில் நான் இருக்கிறேன். 

இந்த பாகமுகவர்கள் எல்லோருக்கும் முக்கியமான கடமை உண்டு. 

அதில் உள்ள குறைபாடுகள் எதுவாக இருந்தாலும் நீங்கள் தொிவிக்கலாம். உங்களுக்கு உதவிகள் செய்வதற்கு அமைச்சர் கீதாஜீவன் இருக்கிறார். எவ்வித தயக்கமும் இன்றி பணியாற்ற வேண்டும். என்று பேசினார். 


     

பாக்ஸ்: 

கூட்டம் ஆரம்பமானதும் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 52 வாா்டுகளில் உள்ள பாகமுகவர்கள் பெயர் வாசிக்கப்பட்டு வந்தவா்கள் குறித்த குறிப்பு எடுத்துக்கொள்ளப்பட்டது.


 6 வார்டுகளில் உள்ள பாகமுகவர்கள் குறைவாக வந்த காரணத்தால் வட்டச்செயலாளர்களை அழைத்து காரணம் என்ன என்று அமைச்சர் கீதாஜீவனும் இன்பா ரகுவும் கேட்டறிந்தனர். 


பட்டியல் தயாரிப்பு!!!

அதற்கு விளக்கமளித்த வட்டசெயலாளர்களிடம் பணி செய்வதற்கு வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டால் தொிவித்து விடுங்கள் புதியவர்கள் நியமணம் செய்யப்பட்டு 11ம் தேதிக்குள் பட்டியல் தயாாிக்கப்பட்டு 12ம் தேதி தலைமை கழகத்தில் ஓப்படைக்க வேண்டும். என்று இருவரும் கண்டிப்புடன் தொிவித்தனர். 


இனி நடைபெறுகின்ற கூட்டம் தொகுதிக்குட்பட்ட ஓவ்வொரு வார்டு பகுதிகளிலும் நடைபெறும் என்று தொிவித்தனர்.



கூட்டத்தில் மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர் ராஜ்மோகன் செல்வின், பொருளாளர் ரவிந்திரன், துணை மேயர் ஜெனிட்டா, மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, பொருளாளர் அனந்தையா, 


பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூாிதங்கம், இராஜா, மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளர் மதியழகன், துணை அமைப்பாளர்கள் ராதாகிருஷ்ணன், ஜோசப், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், நிர்மல்ராஜ், ராமகிருஷ்ணன், ஜெயக்குமாா், மேகநாதன், மாநகர மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி, 


இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தா், துணை அமைப்பாளர்கள் ரவி, சங்கரநாராயணன், செல்வின், பிரவீன்குமாா், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ரூபஸ், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமாா், 



மகளிர் அணி கவிதாதேவி, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், துணை அமைப்பாளாகள் அருணாதேவி, நாகராஜன், மாநகர அணி நிா்வாகிகள் சாகுல்ஹமீது, டைகர்வினோத், சந்தனமாாி, மாவட்ட பிரதிநிதிகள் ராஜ்குமாா், செல்வகுமாா், மீனாட்சிசுந்தரம், பெருமாள்கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமாா், 


கவுன்சிலர்கள் சரவணக்குமாா், கண்ணன், பொன்னப்பன், ரெக்ஸின், ஜெயசீலி, மாியகீதா, கந்தசாமி, விஜயகுமாா், வட்டச்செயலாளர்கள் கதிரேசன், ரவீந்திரன், சுப்பையா,  முத்துராஜா, சுரேஷ், செல்வராஜ், கருப்பசாமி, மனோ, சேகா், செந்தில்குமாா், ரவிசந்திரன், பத்மாவதி, சிங்கராஜ், பொன்னுச்சாமி, கங்காராேஜஷ், ராஜாமணி, ஜான்சன், சதிஷ்குமாா், முனியசாமி, முக்கையா, பொன்பெருமாள், தொழிற்சங்க செயலாளர் மாியதாஸ், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் சுரேஷ்குமாா், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் செந்தூர்பாண்டி, மற்றும் கருணா, பாஸ்கா், மணி, அருணகிாி, அற்புதராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர். 


புதன், 9 அக்டோபர், 2024

கனிமொழி ஏன் பேசுவதில்லை?தமிழகத்திற்கு விடிவு காலம் அதிமுக ஆட்சியில் மட்டுமே கிடைக்கும் தூத்துக்குடி யில் அதிமுக செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம்

 தூத்துக்குடி டூவிபுரம் ஐந்தாவது தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்  அதிமுக செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



இதுபற்றி செய்தியாவது:-


 தூத்துக்குடி மத்திய தெற்கு பகுதி செயலாளர் நட்டார் முத்து ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி.ஜி ராஜேந்திரன் மற்றும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சர்ருமான எஸ்.பி சண்முகநாதன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.


கூட்டத்தில் ...

அதிமுக அமைப்புச் செயலாளர் பி ஜி ராஜேந்திரன் பேசியதாவது:-


முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதன்  

கூட்டணி பலத்தை வைத்து மட்டும் தான் திமுக ஜெயித்துள்ளது நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் என்பது மோடி யா  ராகுலா  என்பதற்காக நடைபெற்ற தேர்தல் அதில் கூட்டணி வைத்து தான் தமிழகத்தில் திமுக ஜெயித்ததை தவிர தனி செல்வாக்கு செல்வாக்கில் வெற்றி பெறவில்லை. ஆனால் அதிமுக நாடாளுமன்றத்தில் தனித்து நின்றாலும் கடந்த கால வாங்கிய ஓட்டுகளை விட கூடுதலாக ஓட்டுகள் வாங்கியுள்ளது.



 தமிழகத்தில் அந்த அரசு  பொறுப்பேற்று மூன்றரை ஆண்டு காலம் ஆகிறது


 ஆனால் மக்களுக்கு தேவையான எந்த திட்டங்களையும் செய்யாமல் மக்கள் விரோத திட்டங்களை மட்டும் தான் செய்து வருகிறது.


 சொத்து வரி, மின்சார கட்டண உயர்வு ,பஸ் கட்டணம் பால் விலை உயர்வு என அனைத்து வரிகளையும் உயர்த்தி தமிழக மக்களை வஞ்சித்து வருகிறது.

கனிமொழி ஏன் பேசுவதில்லை???

  ஆனால்  ?

கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் எந்த ஒரு வரியையும் உயர்த்தாமல் மக்களுக்கு நல்லாட்சி தந்தது அதிமுக அரசு, கடந்த தேர்தலின் போது தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகமாக உள்ளனர் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தாக மதுவிலக்கு அமல் படுத்துவோம் என  தேர்தல் நேரத்தில்  கூறிய காரண கனிமொழி தற்போது அது குறித்து பேசுவதில்லை காரணம்?


 "தமிழகத்தில் மது ஆலைகள் வைத்திருப்பது அனைத்துமே திமுகவை சார்ந்தவர்கள் தான் அப்படி இருக்கும் பொழுது இது எப்படி நடைமுறைக்கு வரும் ?


இப்படி மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்தது தான் இந்த ஸ்டாலினின் அரசு, இதையெல்லாம் அனைவரும் மக்களிடம் வீடு வீடாக சென்று எடுத்துக் கூறி வேண்டும் , 2026ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியார் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் தமிழகத்திற்கு விடிவுகாலம், தூத்துக்குடி தொகுதியில் தற்போது உள்ள திமுக அமைச்சர் இதற்கு முன்பாகவும் அமைச்சராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து உள்ளார்.

 

தூத்துக்குடி தொகுதிக்கு  என்று எந்த ஒரு திட்டத்தையும் அவர் கொண்டு வரவில்லை இன்று தூத்துக்குடியில் நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்  கடந்த ஆண்டு கால எடப்பாடி யார் ஆட்சியில் கொண்டு வந்தது அதனை தான் இன்று தூத்துக்குடியில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி,
அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஆகியோர் திறந்து வைக்கின்றனர்

 

அவர்களாக எந்த ஒரு புதிய திட்டத்தையும் தூத்துக்குடி தொகுதிக்கு கொண்டு வரவில்லை 
எனவே வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கடுமையாக உழைத்து எடப்பாடியார் ஆட்சிக்கு வந்தால்தான் தமிழக மக்களின் கஷ்டங்கள் அனைத்தும் தீரும் எனவே இதனை ஒரு சபதமாக எடுத்து வரும் காலங்களில் நாம் அனைவரும் அயராது பாடுபட வேண்டும் என்றார்.


கூட்டத்திற்கு மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளரும், முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான இரா.சுதாகர், மாவட்ட சிறுபான்மையினர் நலப் பிரிவு செயலாளர் கே.ஜே பிரபாகர், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் மனுவேல்ராஜ், மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை பொருளாளர் பரிபூரண ராஜா, மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் சண்முகத்தாய், பகுதி கழக இணைச் செயலாளரும் ,முன்னாள் மண்டல சேர்மனுமான எம்.ஜெயபாரதி, பகுதி  துணைச் செயலாளர் சிவன், பகுதி கழகப் பொருளாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி விஜயன், வட்டச் செயலாளர்கள் எஸ்.பி பிரபாகரன்,

 முருகேசன், பூக்கடை எஸ்.என் வேலு,அருண் ராஜா, டைமன்ட் ராஜ், பூர்ண சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் என்.சின்னதுரை, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி இணைச் செயலாளர் பெருமாள் சாமி,

மாவட்ட மாணவர் அணி செயலாளர் பில்லா விக்னேஷ், பகுதிச் செயலாளர்கள் சேவியர், முருகன், வடக்கு பகுதி பொறுப்பாளர் செண்பக செல்வன் ,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் எஸ்.ஆர் சுகந்தன் ஆதித்தன், இணைச் செயலாளர் சரவண பெருமாள், மாவட்ட அண்ணா ஆட்டோ ஓட்டுனர் தொழிற்சங்க செயலாளர் நிலச் சந்திரன், மாவட்ட இளைஞர் பாசறை துணை செயலாளர் ஸ்ரீ ராம்,

அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து மண்டல செயலாளர் கல்விக்குமார், இணைச்செயலாளர் லட்சுமணன், துணைத் தலைவர் கே.டி.சி.ஆறுமுகம், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஜான்சன் தேவராஜ், தலைமைக் கழக பேச்சாளர் முருகானந்தம் மற்றும் விஸ்வ பெருமாள், பொன்ராஜ், மோசஸ் ,பத்மாவதி, சுப்பையா பிள்ளை, துரைப்பாண்டி, ஒர்க்ஷாப் சங்கர், முத்துராஜ், சோனமுத்து, சொக்கலிங்கம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

திங்கள், 30 செப்டம்பர், 2024

தூத்துக்குடியில் தவெக மாநாடு ஆலோசனை கூட்டம்

█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

1-10- 2024 

photo news John posco reporter 

தூத்துக்குடியில் நடிகர் விஜய் தவெக மாநாடு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது .

இது பற்றிய செய்தியாவது:-


நடிகர் விஜய் ஆரம்பத்திலுள்ள தமிழக வெற்றி கழகம் கட்சி யின் முதல் மாநாடு  அக்டோபர் 27 நடைபெறுகிறது .



இதை முன்னிட்டு 

தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி கருப்பட்டி சொசைட்டியில் அமைந்துள்ள அன்னத்தாய் திருமண மண்டபத்தில் வைத்து இம்மாதம் தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெற இருக்கும் முதல் மாநாட்டிற்கு திரளாக சென்று வர ஆலோசனை கூட்டம் நேற்று(30-9-2024) மாலை 6 மணியளவில் நடைபெற்றது.



  

 இந்நிகழ்வில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு பற்றி ஆலோசனை வழங்கினார்கள். 


இந்த கூட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.




 ஆலோசனை கூட்டத்தில் கழகநிர்வாகிகளால் தமிழக வெற்றி கழகத்தின் உறுதிமொழி எடுக்கப்பட்டது.


உறுதி மொழி!!!

 "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற தாரகை மந்திரத்தை சொல்லியும், 

"என் நெஞ்சில் குடியிருக்கும் என்று சொல்லியும்,"

 கழக நிர்வாகிகளில் ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்கள்.

2026 ல் நாம தான் வருவோம்!!

 ஆலோசனையில் தமிழக வெற்றி கழகத்தின் நிறுவுனரும், தலைவருமாகிய தளபதியின் கரத்தை வலுபெற செய்ய வேண்டும், 


  1. வருகிற 2026-ல் தளபதி விஜய் அவர்களை அரியனையில் உட்கார வைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றபட்டது.



ஆலோசனை!!!

 அதை தொடர்ந்து பேசிய கழக நிர்வாகிகள் நாம் நம் தாய் கழகத்தில் இணைந்துள்ள நீங்கள் நம் தளபதியின் விருப்பப்படி தனி மனித ஒழுக்கம் மிகவும் முக்கியம், நம்பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்க பழகி கொள்ள வேண்டும்,  


அதே நேரத்தில் நாமும் அதை கடைபிடிக்க முற்பட வேண்டும். பெண்களை மதிக்கவும், அவர்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் ஆகியவை நடைபெறாமல்  காக்க வேண்டும்.


நாம் ஒரு பின் உதாரணமாக இருக்க கூடாது. 



அனைவரும் நம் சகோதரர்கள்!!!

தளபதியின் சகோதர்களாக, சகோதரிகளாக, உறவுகளாக, இருக்கின்ற நம் அனைவரின் கொள்கைகள், கோட்பாடுகளை கடைபிடிக்கும் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விழாவை சிறப்பாக கொண்டாடுவது நம் அனைவருடைய கையில் தான் உள்ளது.


 தளபதி சொன்ன வார்த்தைகளை கடைபிடித்து வாழ முற்பட வேண்டும் என்று ஆலோசனைகள் கூறினார்கள்.


 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகளும், தேனீர் தூத்துக்குடி திரேஸ்புரம் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் வழங்கினார்கள்.

             

ஞாயிறு, 22 செப்டம்பர், 2024

மத்திய சென்னையில் அமமுக சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

22-9-2024 photo news 

by Arunan journalist

மத்திய சென்னையில் அமமுக சார்பில் பேரறிஞர்  அண்ணா  பிறந்த நாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது



இது பற்றிய செய்தியாவது:-


அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நேற்று 21-9-2024 மத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தில் பேரறிஞர் பெருந்தகை அண்ணா  116 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டமும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடைபெற்றது 



மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் பிற இயல் ராஜேந்திரன்  தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது .

சிறப்பு அழைப்பாளராக அமைப்பு சாரா ஓட்டுநர்களின் மாநில செயலாளர் குடில் குமார் குட்வில் குமார் தலைமை கழகப் பேச்சாளர் தஞ்சை தமிழ் பித்தன் மற்றும் பார்டர் தோட்டம் பழனி மற்றும் கட்சியின் பொறுப்பாளர்கள் வந்திருந்தார்கள்.



பொதுகூட்டத்தில் அமமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

புதன், 18 செப்டம்பர், 2024

மது ஆலை நடத்தும் சசிகலா? விடுதலை புலிகளின்தலைவர் பிரபாகரனுக்கு முழுமையான ஆதரவை எம்.ஜி.ஆர் வழங்கி தமிழர்களின் நலனை பாதுகாத்தாா் அதிமுக முன்னாள்அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் பரபரப்பு

▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃19--9- 2024 photo news 

by sunmugasunthram Reporter

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை எம்.ஜி.ஆர் ஆதாித்து தமிழர்களின் நலனை பாதுகாத்தார். தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் பெருமிதமடைந்தார்.




இது பற்றிய செய்தியாவது:-

     தூத்துக்குடி அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி உத்தரவிற்கிணங்க தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி சார்பில் அண்ணா 116வது பிறந்தநாளையொட்டி டூவிபுரம் 5வது தெருவில் நடைபெற்றது.




முன்னாள் அதிமுக அமைச்சர்!!!!

 

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சண்முகநாதன் பேசுகையில்......


 அதிமுக ஆட்சியில் தூத்துக்குடி  தொகுதியில் செய்த பணிகள் ஏராளம் உண்டு .


அதில் குறிப்பாக முதல் குடிநீர் திட்டத்தை குரூஸ்பா்னாந்தும் இரண்டாவது திட்டத்தை எம்.ஜி.ஆரும் 3ம் திட்டம் 4ம் திட்டத்தில் 284 கோடி ஓதுக்கீடு செய்து அதன் மூலம் குடிதண்ணீர் பிரச்சனை தீர்க்கப்பட்டது.

குடி தண்ணீர் பற்றாக்குறை வராது!

 இதனால் 20 ஆண்டுகளுக்கு குடிதண்ணீர் பற்றாக்குறை வராது. 


புரட்சித் தலைவி செயலலிதா  தேர்தல் வாக்குறுதி 

 தூத்துக்குடியில் மேம்பாலம்?

2011 தேர்தலின்போது தூத்துக்குடி  விவிடி மேம்பாலம் அமைக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் ஜெயலலிதா கூறினார்.


 அதன்பின் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதின் காரணமாக அந்த பணி தொடராமல் நிலுவையில் இருந்து வருகிறது.


 இதில் அக்கறை செலுத்தாமல் திமுக அரசு இருப்பது மக்களுக்கு பாதிப்பாக அமைந்துள்ளது.


 நான்காம் இரயில்வே கேட் பகுதியிலும் ஓரு மேம்பாலம் அமைத்திருக்கலாம்


 இரண்டையும் அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்தபின் நிறைவேற்றும்




புரட்சி தலைவர் எம்.ஜி ஆர் 

 விடுதலை புலிகளின்தலைவர் பிரபாகரனுக்கு முழுமையான ஆதரவை எம்.ஜி.ஆர் வழங்கி தமிழர்களின் நலனை பாதுகாத்தாா்.


மது ஆலை நடத்தும் சசிகலா?

 தமிழகத்தில் பலருக்கும் டாஸ்மாக் மதுஆலை உள்ளது. அதே போல் சசிகலாவுக்கும் உள்ளது. 


மகிழ்ச்சி?

7.5 சதவீத இட ஓதுக்கீட்டின் படி அதிமுக ஆட்சியில் மருத்துவ படிப்பை மேற்கொண்டதின் மூலம் 3442 குடும்பங்கள் மகிழ்ச்சியாகவுள்ளன.


தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது மோடி வேனுமா ??வேண்டாமா!!! 

என்ற கேள்விக்கு தான் விடையளித்துள்ளார்கள்...?

2026 தேர்தலில்...

 2026ம் ஆண்டு தேர்தல் வெற்றி ஓன்றுதான் எங்களுக்கு குறிக்கோள் என்று பேசினார். 


முன்னாள் அமைச்சரும் மாநில அமைப்பு செயலாளருமான பச்சைமால், தலைமை பேச்சாளர் கணபதி, உள்பட பலர் பேசினார்கள். 


பொதுக்கூட்டத்திற்கு பகுதி செயலாளர் நட்டார்முத்து, தலைமை வகித்தார்.




 பகுதி செயலாளர் ஜெய்கணேஷ், துணைச்செயலாளர் செண்பகச்செல்வன், பகுதி ஜெ பேரவை செயலாளர் சுடலைமணி, திருநெல்வேலி மண்டல தகவல் தொழில்நுட்ப பிாிவு இணைச்செயலாளரும் மாநகராட்சி எதிர்கட்சி கொறடாவுமான வக்கீல் மந்திரமூர்த்தி, மாவட்ட ஜெ பேரவை துணைச்செயலாளர் மாாியப்பன், ஆகியோர் முன்னிலை வகித்தனா். பகுதி செயலாளர் முருகன், வரவேற்புரையாற்றினார். 

கூட்டத்தில் அமைப்புச் செயலாளர் சின்னத்துரை, மாவட்ட அவைத் தலைவர் திருப்பாற்கடல், மாநில அமைப்பு சாரா ஓட்டுநர் அணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளரும் தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் உறுப்பினருமான வக்கீல் பிரபு, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் ஆண்ட்ரூமணி, பிள்ளைவிநாயகம்,  மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பெருமாள், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், சிறுபான்மை அணி செயலாளர் பிரபாகர், இளைஞர் இளம் பெண்கள் பாசறை தலைவர் தனராஜ், அண்ணா ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் நிலாசந்திரன், ஜெ பேரவை இணைச்செயலாளர்கள் திருச்சிற்றம்பலம், மனுவேல்ராஜ், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணை செயலாளர் டைகர்சிவா, எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர்கள் முருகன், சத்யாலட்சுமணன், வட்டச்செயலாளர்கள் சொக்கலிங்கம், சுப்பிரமணி, உலகநாதன், பூக்கடை வேலு, மனோகர்மற்றும் பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பகுதி செயலாளர் சேவியர் நன்றி கூறினார்.

திங்கள், 9 அக்டோபர், 2023

தூத்துக்குடியில் நாட்டை காப்போம் கூட்டமைப்பு பொதுகூட்டம்

தூத்துக்குடி லீக்ஸ் 9-10-2023


நாட்டை காப்போம்  கூட்டமைப்பு முன்னெடுக்கும் பரப்புரை கலைப்பயணம், பொதுக்கூட்டம் தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில் 08/10/2023 ஞாயிறு நேற்று மாலை 7 மணியளவில் நடைபெற்றது.

 


விஷமத்தனமான,மதரீதியான பொய் பிரச்சாரத்தை கட்டமைத்து கேடுகெட்ட பரப்புரையை காலங்காலமாக மக்களை பிளவுபடுத்தும் வெறுப்பு அரசியலை களைவோம்.




அடிப்படையில் 

சட்டம் ஒழுங்கு, 

மதநல்லிணக்கம்,

பொது அமைதி, ஏற்படுத்துவோம் பரப்புரை செய்தார்கள் 

சமூக வலைதளங்களில் ஆர்கனைஸ்ட்டாக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பொய்யை, அவதூறை உண்மைக்கு புறம்பான, செய்தியை மதபிரச்சாரத்தை, வெறுப்பு பிரச்சாரத்தை செய்து மக்களை பிளவுபடுத்துகிற அரசியல் கட்சிகளை புறந்தள்ள வேண்டும் 

பெண்கள், குழந்தைகள், தலித்துகள், மதச்சிறுபான்மையினர், மொழி சிறுபான்மையினர், மீனவர்கள்

அனைத்து வகை தொழிலாளர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், அரசு பணியாளர்கள், என நமது சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பினருக்கும்

உரிமைகளை கடமைகளை வழங்கும், பாதுகாக்கும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாப்போம் என பொதுகூட்டத்தில் பேசினார்கள் 

இப் பொதுகூட்டத்தில்...

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக இக்பால் கலந்து கொண்டு உரைநிகழ்த்தினார் மற்றும் 

வணிகரணி மாவட்ட அமைப்பாளர் சுலைமான், 

முகாம் பொறுப்பாளர் நூர்,

வழக்கறிஞர் அணி அர்ஜுன், 

முன்னாள் தொண்டரணி அமைப்பாளர் 

பட்டு வளவன்

வழக்கறிஞர் 

அணி இளையவளவன் 

மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.

சனி, 30 செப்டம்பர், 2023

தூத்துக்குடியில் கூட்டுறவு வங்கி ஊழியர்களின் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நலச்சங்கம் மற்றும் தூத்துக்குடி சங்க அனைத்துப் பணியாளர்கள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற பணியாளர்கள் நலச்சங்கம் இணைந்து நடத்திய பொதுப்பேரவைக் கூட்டத்தில் முடிவு

தூத்துக்குடி லீக்ஸ் 1-10--2023

செய்தி &புகைப்படங்கள்

அருணன் செய்தியாளர்

தூத்துக்குடியில் கூட்டுறவு வங்கி ஊழியர்களின் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெறும் என

தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நலச்சங்கம் மற்றும் தூத்துக்குடி சங்க அனைத்துப் பணியாளர்கள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற பணியாளர்கள் நலச்சங்கம் இணைந்து நடத்திய பொதுப்பேரவைக் கூட்டத்தில் முடிவு எடுத்தார்கள்.



இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நலச்சங்கம் மற்றும் தூத்துக்குடி சங்க அனைத்துப் பணியாளர்கள்மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற

பணியாளர்கள் நலச்சங்கம் இணைந்து நடத்திய பொதுப்பேரவைக் கூட்டம் தூத்துக்குடியில் அண்ணா பழைய பேருந்து நிலையம் கனிஸ் ரெஸ்டாரன்ட் கூட்டரங்கில் 01.10.2023 முற்பகலில் நடைபெற்றது .

இந்நிகழ்ச்சியில் 80-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டார்கள்.

தலைமை

தோழர் மு.போத்தியடியான்

தோழர் இராமசுப்பு

வரவேற்புரை

: தோழர் S.சீனிவாசன்

தலைவர்களின் படத்திறப்பு : தோழர் M.இராமலிங்கம்

படத்திறப்பு 


வாழ்த்துரை

: தோழர் R.ரெங்கன் ஏஐடியுசி திருநெல்வேலி மாவட்டம்

தோழர் A.P.சிவசுப்பிரமணியன் முன்னாள் பொது மேலாளர்

தூத்துக்குடி மாவட்ட மத்தியக்கூட்டுறவு வங்கி

தோழர் P.சக்திவேல், பொதுச்செயலாளர்,

தூத்துக்குடி நகர வங்கி ஊழியர்கள் சங்கம்

தோழர் P.லோகநாதன் பொதுச்செயலாளர்

ஏஐடியுசி தூத்துக்குடி மாவட்டம்

தோழர் பா.மயிலேறும் பெருமாள் பொதுச்செயலாளர்

தோழர் S.பொன்சாமி, பொருளாளர்

தோழர் இரா.கிருஷ்ணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர்,

வங்கி சங்கங்களின் ஐக்கிய அமைப்பு, தூத்துக்குடி

17-10-2023 அன்று வேலைநிறுத்தம் 


தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நலச்சங்கம் மற்றும் தூத்துக்குடி சங்க அனைத்துப் பணியாளர்கள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற பணியாளர்கள் நலச்சங்கம் இணைந்து நடத்திய பொதுப்பேரவைக் கூட்டத்தில்

கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 17.10.2023 அன்று கூட்டுறவு வங்கி

ஊழியர்களின் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது.

கோரிக்கைகள்

1 கூட்டுறவு நகர வங்கியில் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு கருணை

ஓய்வூதியம் அனுமதித்தல்.

2அனைத்து தரப்பு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு கோப்பின்

மீது தொடர் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுத்தல்.

 3 கூட்டுறவு நகர வங்கியில் காலியாக உள்ள உயர் பதவிகளுக்கு உரிய

பதவி உயர்வு வழங்க ஆணையிடுதல்.

4 கூட்டுறவு நகர வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை

உரிய பணிநியமனம் மூலம் நிரப்புதல்.

5 வங்கி வாடிக்கையாளர்களுக்கு நவீன சேவைகளை வழங்கிடும் வகையில்

மென்பொருளை மேம்படுத்துதல்.

6 நிறுத்தி வைத்துள்ள உரிமை விடுப்பில் ஆண்டு தோறும் பணமாக்கும்

சலுகையை மீண்டும் அனுமதித்தல்.

7வங்கி பணியிடங்களில் வணிக வங்கிகளில் உள்ள நடைமுறை போல்

IBPS மூலம் தேர்வு நடத்தி பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும்.

video 

இவ்வாறு தெரிவித்தனர் நிகழ்ச்சி முடிவில் சங்க உறுப்பினர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.




 தொடர்பு:-

தோழர் மயிலோறும் பெருமாள்

கைப்பேசி எண் : 7598787414


திங்கள், 15 மே, 2023

தூத்துக்குடியில் இங்கே குடியிருக்கும் முந்தைய அதிமுக எம்பி ஒன்றுமே செய்யல ? தற்போது திமுக கனிமொழி எம்.பி 6 தொகுதிகளிலும் உள்ள மக்களுக்கு சிறப்பாக பணி செய்கிறார். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம் பரபரப்பு பேச்சு

 thoothukudileaks 16-5-2023

photo news by shanmuga sunthram 

தூத்துக்குடியில் இங்கு குடியிருக்கும் முந்தைய அதிமுக எம்பி ஒன்றுமே செய்யல ? தற்போது திமுக கனிமொழி எம்.பி 

6 தொகுதிகளிலும் உள்ள மக்களுக்கு சிறப்பாக பணி செய்கிறார். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம் பரபரப்பு பேச்சு  ...



இதுபற்றி செய்தியாவது:-


தூத்துக்குடி திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் நடைபெறவேண்டும்.

என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கிணங்க முதல்கட்டமாக நடைபெற்று முடிந்தது. 


இரண்டாவது கட்டமாக மாநில திமுக இளைஞர் அணி செயலாளரும் விளையாட்டுதுறை அமைச்சருமான உதயநிதிஸ்டாலின் இளைஞர் அணி சார்பில் திராவிடமாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். என்று உத்தரவிட்டதையடுத்து தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், வழிகாட்டுதலின் படி...

     தூத்துக்குடி அன்னை இந்திராநகர் பகுதி இளைஞர் அணி சார்பில் ஹவுசிங்போர்டு பகுதியில் பொதுகூட்டம் நடைபெற்றது. 

     இக்கூட்டத்தில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், பேசியதாவது:-


 திராவிட மாடல் ஆட்சி 2021ல் மே 7ம் தேதி தமிழக முதலமைச்சராக தளபதி பொறுப்பேற்றுக்கொண்டார். 


அந்த காலக்கட்டத்தில் உலகம் முழுவதும் கொரோனா என்ற கொடிய நோய் கடுமையாக இருந்த காலக்கட்டம் ஒருவரை ஒருவர் சந்தித்து பேச முடியாமல் உறவினர் வீட்டுக்கு செல்லமுடியாமல் பரிதவித்த காலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை தமிழக மக்களை பாதுகாக்கும் கடமை எனக்கு உள்ளது என்பதை உணர்ந்து இந்தியாவில் எந்த முதலமைச்சரும் அரசு மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தது கிடையாது.


 ஆனால் நம்முடைய முதல்வர் சந்தித்து நலம் விசாரித்து மருத்துவர்களிடம் நல்லமுறையில் சிகிச்சை அளிக்க வேண்டும். என்று உத்தரவிட்டு ஆக்ஜிசன் தட்டுபாடு இல்லாமல் பார்த்துக்கொண்டு அனைவருக்கும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள அறிவுரை வழங்கி தமிழக மக்களின் நலனை பாதுகாத்தார். 


பின்னர் இரண்டு கட்டமாக நான்காயிரம் வழங்கப்பட்டது. 


பால்விலை ரூ3 குறைவு, பெண்களுக்கு இலவசபேருந்து பயணம், மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, புதுமைப்பெண் திட்டத்தில் கல்லூரி படிப்பு உதவித்தொகைக்கு ஆயிரம் முதியோர் உதவி தொகை  மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்க 30 ஆயிரம் கோடி ஓதுக்கீடு விவசாய கடன் நகைக்கடன் தள்ளுபடி, என்று சாதனை பட்டியல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 


10 ஆண்டுகளாக தமிழகத்தில் எந்த வளர்ச்சியும் அடைய வில்லை. 


தற்போது தொழில்வளர்ச்சி வேலைவாய்ப்பு என வழங்கப்பட்டு செயல்படாமல் இருந்த நலவாரியங்கள் அனைத்தும் முறையாக ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுகின்றன.


 பத்திரிகையாளர்களுக்கும் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. புதிய சாலைகள் அமைக்கப்படுவது மட்டுமின்றி உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திட்டத்தின் அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதி 2 கோடியில் கோரிக்கை மனுக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செலவிடப்பட்டது.


 தூத்துக்குடியில் இந்த பகுதியில் கடந்த காலங்களில் மழையால் முத்தம்மாள் காலணி, ரஹ்மத்நகர், தனசேகர் நகர், ஹவுசிங் போர்டு காலணி மழையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டபோது முதல்வராவதற்கு முன்பு ஆய்வு மேற்கொண்டார்.


 முதல்வரானபின்பும் ஆய்வு செய்து இப்போது அந்த குறைபாடுகள் இல்லாத நிலையை உருவாக்கியுள்ளார்.

ஆனால் ?இந்த பகுதியில் குடியிருக்கும் அதிமுக எம்.பி, அப்போது ஒன்றுமே செய்யவில்லை ..

 

ஆனால்? திமுக கனிமொழி எம்.பி 6 தொகுதிகளிலும் உள்ள மக்களுக்க பணி செய்வது மட்டுமின்றி கோரிக்கை மனுக்கள் மீது தீர்வு கண்டு வருகிறார். 


இந்த ஆட்சியின் சாதனையும் தொடரவேண்டும் கனிமொழி எம்.பியின் பணியும் நமக்கு தேவை என்பதை உணர்ந்து வரும் காலங்களில் நடைபெறவுள்ள நாடளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் வெற்ற பெற வேண்டும் இந்த தொகுதியில் கனிமொழி எம்.பிக்கு நீங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும். என்று பேசினார். 


கூட்டத்திற்கு பகுதி இளைஞர் அணி துணைச்செயலாளர் ராஜீவ்குமார் தலைமை வகித்தார். 


3வது வார்டு வட்டச்செயலாளர் தெய்வேந்திரன், அவைத்தலைவர் ராஜசேகர், துணைச்செயலாளர் பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பகுதி செயலாளர் சிவக்குமார் வரவேற்புரையாற்றினார்.

தலைமை பேச்சாளர்கள் பாலகிருஷ்ணன், கமலா எப்ரேம், உள்பட பலர் பேசினார்கள்.

      கூட்டத்தில் தெற்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, இலக்கிய அணி அமைப்பாளர் ராமசாமி, இளைஞர் அணி அமைப்பாளர் அம்பாசங்கர், வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ரகுராமன், மாணவரணி துணை அமைப்பாளர் மாரிசெல்வம், மாவட்ட பிரதிநிதிகள் தர்மராஜ், பூவேஸ்நாதன், செல்வகுமார், ஒன்றிய செயலாளர் சுரேஷ்காந்தி, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ஸ்டாலின், பகுதி துணைச்செயலாளர் மகேஷ்செல்வம், மகளிர் அணி அமைப்பாளர் ரமணி, மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பௌஷியாஅபுதாகீர், மாணவரணி அமைப்பாளர் அன்புமணி, துணை அமைப்பாளர் பூமாரி, கவுன்சிலர் காந்திமணி, நிர்வாகிகள் விக்னேஷ்வரன், குலாம் அலிஷா, கமாலுதீன், சேது என்ற சேந்தையன், நெல்சன், உள்பட பல்வேறு அணியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் தர்மராஜ், நன்றியுரையாற்றினார்.

வெள்ளி, 5 மே, 2023

தலைவர் வசுமதி அம்பா சங்கர் தலைமையில் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்

 thoothukudileaks 5-5-2023

photo news by shanmuga sunthram 

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் வசுமதி அம்பா சங்கர் தலைமையில் நடைபெற்றது. 



தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் புதுக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில் ஒன்றிய குழு தலைவர் வசுமதி அம்பா சங்கர் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வசந்தா, ஹெலன் பொன்மணி, ஒன்றிய குழு துணை தலைவர் ஆஸ்கர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. 

கூட்டத்தில் கவுன்சிலர் பேசுகையில்: மாப்பிள்ளையூரணி பகுதிக்கு 5 டிராக்டர் வழங்கிய கனிமொழி எம்.பி.க்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மாப்பிள்ளையூரணி பகுதியில் உள்ள பூப்பாண்டியாபுரம் டி.சவேரியார்புரம், மாப்பிள்ளையூரணி ஓம்சக்தி நகர் புதிய முனியசாமிபுரம் ஜோதிபாஸ்நகர், நேருகாலனி ஆகிய பகுதிகளில் உள்ள அங்கன்வாடி பணிகளை துரிதப்படுத்த வேண்டும். பூப்பாண்டியாபுரம், ராஜபாளையம் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய் செல்லும் பகுதியில் மூடி அமைக்காமல் உள்ளன. அதனால் பொதுமக்கள் பாதிப்படையும் நிலை உள்ளது. அதை உடனே செய்ய வேண்டும். அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெறுகின்ற பணிகளையும் முறைப்படுத்த வேண்டும். செயல்படுத்த இருக்கின்ற பணிகளை முறையாக உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ்பாலன் கேள்வி எழுப்பினார். இதற்கு அதிகாரிகள் பதிலளிக்கையில்: செய்கின்ற பணிகளையும், நடைபெற உள்ள திட்டங்களையும் முறைப்படுத்துவோம் என்று தெரிவித்தனர். பின்னர்;, தொம்மை சேவியர் தனது பகுதிகளில் உள்ள கோரிக்கைகளை முன்வைத்து பேசினார். 

ஒன்றிய குழு தலைவர் வசுமதி அம்பா சங்கர் பேசுகையில்: அனைத்து பணிகளும் எல்லா பகுதிக்கும் முறைப்படுத்தி, முறையாக நடைபெறும். அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

மாப்பிள்ளையூரணி ஊராட்சி வடக்கு சோட்டையன் தோப்பு, விவேகானந்தர் நகர், வடக்கு சுனாமி காலனி, மேற்கு சுனாமி காலனி ஆகிய பகுதிகளில் கிணறு அமைத்தல், அல்லிகுளம், திம்மராஜபுரம் போன்ற பகுதிகளில் போர்கள் மற்றும் மோட்டார் அமைத்தல், தளவாய்புரம், வர்த்தகரெட்டிபட்டி, கூட்டுடன்காடு, குமாரகிரி உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி மன்ற பகுதிகளில் தார் சாலை, பேவர் பிளாக், சிமெண்ட் சாலை உள்ளிட்ட 35 பகுதிகளில் பணிகள் மேற்கொள்ளுதல் என மொத்தம் 36 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் சுதர்சன், தொம்மைசேவியர், ஆனந்தி, முத்துமாலை, அந்தோணி தனுஷ் பாலன், ஜெயகணபதி, மரிய செல்வி, முத்துக்குமார், முத்துலட்சுமி, செல்வபார்வதி, நர்மதா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஸ்வரி, சண்முகசுந்தரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துலெட்சுமி, செல்வராணி, தினகரன், சாந்தி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவஹர், பொறியாளர் தளவாய், மேற்பார்வையாளர் முத்துராமன், யூனியன் மேலாளர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சனி, 7 ஜனவரி, 2023

பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு முறையாக பதில் சொல்ல முடியாமல்? முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி என்ற போர்வையில் பிஜேபி அண்ணாமலை மிரட்டுகிறார் தமிழகத்தில் யாரும் இதற்கெல்லாம் பயப்படபோவதில்லை தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி கடும் சாடல்

thoothukudileaks 7-1-2023

photo & news by shanmuga Sundaram 

பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு முறையாக பதில் சொல்ல முடியாமல்? முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி என்ற போர்வையில் பிஜேபி அண்ணாமலை மிரட்டுகிறார் தமிழகத்தில் இதற்கெல்லாம் யாரும் பயப்படபோவதில்லை.  அடுத்து அதிமுகவை பிளவு படுத்தி பிஜேபியை முன்னிலைப்படுத்தி மத்திய அரசு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னமே இல்லாத நிலையை உருவாக்க போகின்றன என  தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பிஜேபி யை கடுமையாக சாடினார் .



இது பற்றிய செய்தியாவது 

       தூத்துக்குடி மாநகர முத்தையாபுரம் பகுதி திமுக சார்பில் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு திமுக பொதுக்கூட்டம் நேற்று 7-1-2023 நடைபெற்றது. 

பொதுகூட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பகுதி செயலாளர் மேகநாதன் தலைமை வகித்தார். துணைச்செயலாளர்கள் தங்கசேகர், மனோகர், தமிழ்செல்வி, பொருளாளர் முத்துராஜா, பிரதிநிதிகள் ஜலாலுதீன், தீபக்ரோஸ், ஸ்டாலின், ஆரோக்கியராபின், அய்யப்பன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளரும் மாநகராட்சி மண்டலத்தலைவருமான வக்கீல் பாலகுருசாமி, வரவேற்புரையாற்றினார்.



மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது:- 


தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று 19 மாதங்கள் ஆகின்றன. மக்கள் நலனை கருத்தில் கொண்டு முதலமைச்சர் பணியாற்றுகிறார். இந்த பகுதியில் உள்ள ஸ்பிக் தொழிற்சாலை யார் ஆட்சியில் வந்தது என்று சிந்தித்து பார்க்க வேண்டும். 


துறைமுகம் விமான நிலையம் என பல இருந்தும் சிலவற்றை தனியாருக்கு விற்பனை செய்து வருகின்றனர். 

கடந்த திமுக ஆட்சியின் போது கொண்டு வந்த சேது சமுத்திர திட்டத்தை ராமர் பெயரை சொல்லி தடுத்துவிட்டனர். 

அதிமுகவை பிளவு படுத்தி பிஜேபியை முன்னிலைப்படுத்தி மத்திய அரசு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னமே இல்லாத நிலையை உருவாக்க உள்ளனர். 

பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு முறையாக பதில் சொல்ல முடியாமல் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி என்ற போர்வையில் அண்ணாமலை மிரட்டி பார்க்கிறார். இதற்கெல்லாம் தமிழகத்தில் இருப்பவர்கள் பயப்பட போவதில்லை. 

அதே போல் கவர்னர் மாநில பெயர் மாற்றம் பிரச்சனையை கிளப்பி பிஜேபியின் ஆதரவாளராக செயல்படுகிறார். இவரும் அவர் வழியில் வந்த ஓரு ஐபிஎஸ் அதிகாரி பொறுப்புக்கு வருகிறவர்கள் வரலாறுகளை தெரிந்து கொண்டு பேச வேண்டும். 




9 ஆண்டுகால பிஜேபி ஆட்சியில் ஏதுவுமே செய்யவில்லை. 2024ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அவர்களை வீழ்த்த வேண்டும். அதற்கு முதல்வர் வழியில் வியூகம் அமைத்து 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும் என்று பேசினார்.



. கூட்டத்தில் அடுத்ததாக 

    வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:- 

தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி நடைபெறுகிறது எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் கொள்கை நமது மாவட்டத்தில் 1100 கோடியில் பர்னிச்சர் பார்க் உள்பட 3 பெரிய தொழில்நிறுவனங்கள் வரவுள்ளன. 


அதன்மூலம் படித்த இளைஞர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் தமிழகத்தில் 14 ஆயிரத்து 510 கோடியில் புதிய தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

கல்வி வேலைவாய்ப்பு உள்ளிட்டவைகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. மொழி இனம் காக்கப்பட வேண்டும் கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 5பவுனுக்கு கீழ் உள்ள தங்க நகை கடனும் தள்ளுபடி எல்லாத்துறைகளிலும் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது தமிழகம், இது போன்று சாதனைகள் திமுக ஆட்சியில் ஏராளம் உள்ளன. 


பாரதிய ஜனதா கட்சி என்ன சாதனையை செய்தது என்று உங்களால் கூற முடியுமா? கேஸ் மாணியம் கொடுப்பதாக கூறி வங்கி கணக்கு தொடங்க சொல்லி நான்கு மாதத்திற்கு பிறகு எதுவும் வரவில்லை. மினிமம் தொகை இல்லை என்று வங்கி கணக்கு முடிந்து விட்டது


 தமிழகத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமணை அமைக்கப்படும் என்று சொன்னதோடு சரி ஓரு செங்கலை வைத்துவிட்டு சென்று விட்டீர்கள். ????

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்த வருவாயில் தமிழகத்திற்கு தேவையானதை கொடுக்காமல் புறக்கனித்து வருகிறது மத்திய அரசு. பீகார் உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் தமிழகத்தில் இருப்பது போல் வளர்ச்சியும் இல்லை பாதுகாப்பும் இல்லை. 

பொங்கலுக்கு ஆயிரம் ரூபாயுடன் பொருட்கள் வழங்கப்படுகிறது. விடுமுறை நாட்களிலும் தலைமை செயலகம் முன்பு பணியாற்றும் முதல்வரை நாம் பெற்றுள்ளோம். அதிமுக பொறுப்பில் இருந்த காலத்தில் மாநகராட்சி பகுதியில் முறையாக பணியும் இல்லை வளர்ச்சியும் இல்லை இந்த பகுதி கால்வாய் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் அரசுக்கு துணை நிற்க வேண்டும். என்று பேசினார் அமைச்சர் கீதா ஜீவன்..


தலைமை பேச்சாளர்கள் சரத்பாலா, இருதயராஜ், மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், உள்பட பலர் பேசினார்கள்.

கூட்டத்தில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, ஜான் அலெக்ஸாண்டர், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் நிர்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலட்சுமி, பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாநகர துணைச்செயலாளர்கள் கனகராஜ், பிரமிளா, மாவட்ட அணி அமைப்பாளர்கள் கஸ்தூரிதங்கம், உமாதேவி, மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் வக்கீல் சீனிவாசன், ராமர், சின்னத்துரை, மின்வாரிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, மாநகர அணி துணை அமைப்பாளர்கள் வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜ், சிவக்குமார் என்ற செல்வின், பால்ராஜ், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர்கள் ரவி, ஜார்ஜ்புஷ், கவுன்சிலர்கள் முத்துவேல், விஜயகுமார், பட்சிராஜ், ராஜதுரை, சுயம்பு, ஜான்சிராணி, மகளிர் அணி நிர்வாகிகள் ரேவதி, சந்தனமாரி, சத்யா, வட்டச்செயலாளர்கள் சுப்பையா, செல்வராஜ், பிரசாந்த், மற்றும் கருணா, ஜோஸ்பர், செந்தில்குமார், லிங்கராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநகர மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி நன்றியுரையாற்றினார்.


பிஜேபி சாதனையை வெளியே சொல்ல முடியுமா? தூத்துக்குடி முத்தையாபுரம் பொதுக் கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் கேள்வி? இதனால் தூத்துக்குடியில் மீண்டும் பரபரப்பு!!!

செவ்வாய், 11 அக்டோபர், 2022

தூத்துக்குடியில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம்

தூத்துக்குடியில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் தூத்துக்குடி பழைய பேருந்து நிலைய பகுதியில் 11-10 2022 இன்று 4 மணியளவில் நடைபெற்றது.




இது பற்றிய செய்தியாவது -

தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் இன்று 11-10-2022 நடைபெற்றது.

 அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டறிக்கைக நல்லிணக்கத்தை பாதுகாக்க  மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்திருந்தனர்.

மனித சங்கிலி போராட்டத்தில் தமிழகத்தில் பல லட்சம் பேர் பங்கேற்றனர்.



 கி.வீரமணி, திருமாவளவன், வைகோ, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..



 மத அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தி, அமைதியை சீர்குலைக்க முயலும் பிரிவினை வாதிகளை ஒருபோது அனுமதிக்கமாட்டோம் என்று கோஷம் எழுப்பினர். 

சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தில் 17 கட்சிகளும் 44 இயக்கங்களும் பங்கேற்றனர்.

தூத்துக்குடியில் பழைய பேரூந்து நிலையம் பகுதியில் தூத்துக்குடி மாநகராட்சி அருகே இருந்து அன்னை ஜூவல்லர்ஸ் அருகே மனித சங்கலி நீண்டிருந்தது. இதில் மேற்குரிய கட்சி தொண்டர்கள் இஸ்லாமிய மகளிர்கள் அதிகமாக  கலந்து கொண்டனர்.





தூத்துக்குடி மாநகரில் மனித சங்கிலி மாலை 4 மணி இருந்து 5 மணி வரை ஒரு மணி நேரம் நடைபெற்றது.

இதில் 300-க்கும் மேற்பட்டோர் எழுச்சியுடன் கலந்து கொண்டார்கள்.

தூத்துக்குடி நடைபெற்ற சமூக நல்லிணக்க மனித சங்கிலி  நிகழ்ச்சியின் போது ...அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்படாமல் பொதுமக்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் நடைபெற்றது.

தூத்துக்குடி காவல்துறை DSP சத்தியராஜ் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தார்கள்.