தூத்துக்குடி டூவிபுரம் ஐந்தாவது தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதுபற்றி செய்தியாவது:-
தூத்துக்குடி மத்திய தெற்கு பகுதி செயலாளர் நட்டார் முத்து ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி.ஜி ராஜேந்திரன் மற்றும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சர்ருமான எஸ்.பி சண்முகநாதன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் ...
அதிமுக அமைப்புச் செயலாளர் பி ஜி ராஜேந்திரன் பேசியதாவது:-
முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதன்
கூட்டணி பலத்தை வைத்து மட்டும் தான் திமுக ஜெயித்துள்ளது நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் என்பது மோடி யா ராகுலா என்பதற்காக நடைபெற்ற தேர்தல் அதில் கூட்டணி வைத்து தான் தமிழகத்தில் திமுக ஜெயித்ததை தவிர தனி செல்வாக்கு செல்வாக்கில் வெற்றி பெறவில்லை. ஆனால் அதிமுக நாடாளுமன்றத்தில் தனித்து நின்றாலும் கடந்த கால வாங்கிய ஓட்டுகளை விட கூடுதலாக ஓட்டுகள் வாங்கியுள்ளது.
தமிழகத்தில் அந்த அரசு பொறுப்பேற்று மூன்றரை ஆண்டு காலம் ஆகிறது
ஆனால் மக்களுக்கு தேவையான எந்த திட்டங்களையும் செய்யாமல் மக்கள் விரோத திட்டங்களை மட்டும் தான் செய்து வருகிறது.
சொத்து வரி, மின்சார கட்டண உயர்வு ,பஸ் கட்டணம் பால் விலை உயர்வு என அனைத்து வரிகளையும் உயர்த்தி தமிழக மக்களை வஞ்சித்து வருகிறது.
கனிமொழி ஏன் பேசுவதில்லை???
ஆனால் ?
கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் எந்த ஒரு வரியையும் உயர்த்தாமல் மக்களுக்கு நல்லாட்சி தந்தது அதிமுக அரசு, கடந்த தேர்தலின் போது தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகமாக உள்ளனர் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தாக மதுவிலக்கு அமல் படுத்துவோம் என தேர்தல் நேரத்தில் கூறிய காரண கனிமொழி தற்போது அது குறித்து பேசுவதில்லை காரணம்?
"தமிழகத்தில் மது ஆலைகள் வைத்திருப்பது அனைத்துமே திமுகவை சார்ந்தவர்கள் தான் அப்படி இருக்கும் பொழுது இது எப்படி நடைமுறைக்கு வரும் ?
இப்படி மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்தது தான் இந்த ஸ்டாலினின் அரசு, இதையெல்லாம் அனைவரும் மக்களிடம் வீடு வீடாக சென்று எடுத்துக் கூறி வேண்டும் , 2026ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியார் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் தமிழகத்திற்கு விடிவுகாலம், தூத்துக்குடி தொகுதியில் தற்போது உள்ள திமுக அமைச்சர் இதற்கு முன்பாகவும் அமைச்சராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து உள்ளார்.
தூத்துக்குடி தொகுதிக்கு என்று எந்த ஒரு திட்டத்தையும் அவர் கொண்டு வரவில்லை இன்று தூத்துக்குடியில் நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு கால எடப்பாடி யார் ஆட்சியில் கொண்டு வந்தது அதனை தான் இன்று தூத்துக்குடியில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி,
அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஆகியோர் திறந்து வைக்கின்றனர்
அவர்களாக எந்த ஒரு புதிய திட்டத்தையும் தூத்துக்குடி தொகுதிக்கு கொண்டு வரவில்லைஎனவே வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கடுமையாக உழைத்து எடப்பாடியார் ஆட்சிக்கு வந்தால்தான் தமிழக மக்களின் கஷ்டங்கள் அனைத்தும் தீரும் எனவே இதனை ஒரு சபதமாக எடுத்து வரும் காலங்களில் நாம் அனைவரும் அயராது பாடுபட வேண்டும் என்றார்.
கூட்டத்திற்கு மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளரும், முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான இரா.சுதாகர், மாவட்ட சிறுபான்மையினர் நலப் பிரிவு செயலாளர் கே.ஜே பிரபாகர், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் மனுவேல்ராஜ், மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை பொருளாளர் பரிபூரண ராஜா, மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் சண்முகத்தாய், பகுதி கழக இணைச் செயலாளரும் ,முன்னாள் மண்டல சேர்மனுமான எம்.ஜெயபாரதி, பகுதி துணைச் செயலாளர் சிவன், பகுதி கழகப் பொருளாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி விஜயன், வட்டச் செயலாளர்கள் எஸ்.பி பிரபாகரன்,
முருகேசன், பூக்கடை எஸ்.என் வேலு,அருண் ராஜா, டைமன்ட் ராஜ், பூர்ண சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் என்.சின்னதுரை, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி இணைச் செயலாளர் பெருமாள் சாமி,
மாவட்ட மாணவர் அணி செயலாளர் பில்லா விக்னேஷ், பகுதிச் செயலாளர்கள் சேவியர், முருகன், வடக்கு பகுதி பொறுப்பாளர் செண்பக செல்வன் ,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் எஸ்.ஆர் சுகந்தன் ஆதித்தன், இணைச் செயலாளர் சரவண பெருமாள், மாவட்ட அண்ணா ஆட்டோ ஓட்டுனர் தொழிற்சங்க செயலாளர் நிலச் சந்திரன், மாவட்ட இளைஞர் பாசறை துணை செயலாளர் ஸ்ரீ ராம்,
அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து மண்டல செயலாளர் கல்விக்குமார், இணைச்செயலாளர் லட்சுமணன், துணைத் தலைவர் கே.டி.சி.ஆறுமுகம், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஜான்சன் தேவராஜ், தலைமைக் கழக பேச்சாளர் முருகானந்தம் மற்றும் விஸ்வ பெருமாள், பொன்ராஜ், மோசஸ் ,பத்மாவதி, சுப்பையா பிள்ளை, துரைப்பாண்டி, ஒர்க்ஷாப் சங்கர், முத்துராஜ், சோனமுத்து, சொக்கலிங்கம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக