ஞாயிறு, 13 அக்டோபர், 2024

வேட்டையன் பாணியில் தூத்துக்குடியில் கோச்சிங் அகாடமிகள் புற்றீசல்களாய் தூத்துக்குடிக்கு படையெடுக்கும் மாணவ மாணவிகள் பரிதாபங்கள்

 ⚫ வேட்டையன் பாணியில் தூத்துக்குடியில் கோச்சிங் அகாடமிகள் புற்றீசல்களாய் தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடிக்கு  படையெடுக்கும் மாணவ மாணவிகள் பரிதாபங்கள்


கடந்த வாரம் 2024அக்10ல் ரீலீஸான ரஜினிகாந்த் அமிதாப் நடித்த வேட்டையன் திரைப்படத்தில் மாணவ மாணவிகளுக்கு நல்ல விழிப்புணர்வு படமாகவும் இனியும் பெற்றோர்கள் கோச்சிங் என்ற பேரில் தனியே தங்கள் மகன் மகளை அனுப்பி சீரழிய வேண்டாம் என நெற்றில் பொட்டில் அடித்தால் போன்றுள்ளது.


பத்திரிகை ஊடகம் இணையதளம் முலமாக விளம்பரங்கள் 


அதையும் தோலுரித்து காட்டுகிறார்கள் 

அது ஜட்டி விளம்பர மாடலிங் 

 வேலை வாய்ப்பு பெரிய பதவியில்  இருப்பவர் காட்டபடுவர்கள் வெறும் பனியன் ஜட்டி மாடல்களே என அதிர வைக்கும் காட்சிகளும் உண்டு 


நம்பர் ஒன் கோச்சிங் சென்டர் என்று சொல்லி வில்லன்ஆயிரக்கணக்கான மாணவிகள் இடம் பணம் வாங்கி கோடி கோடியாக கொள்ளையடிப்பதும் கோச்சிங் பிடிக்காத மாணவி தற்கொலை வரை போவதும் அதெல்லாம் போலி விளம்பரங்கள் மாயை என சரண்யா டீச்சர் மற்றும் குணா இஞ்சினியங் குணா தடுத்து போராடி மீடியா வில் வெளிவர முயற்சி எடுத்ததால் சரண்யா டீச்சர் கொலையாவதும் இஞ்சினியரிங் குணா என்கெவுண்டர் அதிகாரி ரஜினியால் சுட்டு கொல்வதும் 

பின் மனித உரிமை நீதிபதி அமிதாப் வால் உண்மை யறிந்து அரசியல் அதிகாரம் பின்புலத்துடன் இயங்கும் நாக் கோச்சிங் அகாடமி நடத்தும் வில்லனை கடைசியாக கைது செய்து மாணவ மாணவிகள் எதிர்காலத்தை காப்பாற்றுவதே கதை

தூத்துக்குடியில் 

சக்கை போடு!!!

கடந்த சில ஆண்டுகளாக ? படிப்பு அல்ல!!!வெறும் கோச்சிங் அகாடமிகள் பல தோன்றி சக்கப்போடு போட்டு கொண்டு இருக்கிறது 


 தூத்துக்குடியிலும் ஆம் !

கோச்சிங் ல சேர திருச்சி தஞ்சாவூர் தேனி திண்டுக்கல் மதுரை இராமநாதபுரம் என பல மாவட்டங்களில் இருந்து மாணவ மாணவிகள் குறிப்பாக பெண் பிள்ளைகள் தங்களுக்கு அரசு வேலை பேங்க் வேலை கிடைக்கும் என இதை நம்பி சேர்ந்து இங்கு தங்க இடமில்லாமல திணறல் ஐந்து ஆறு பேர் என ஒரு ரூமில் தங்கி வருவதாகவும் வேதனை வரவழைக்கிறது 

அல்லல் & அல்லாடல்!!

ஏன் இங்கே மட்டும் குவியல்?

 பேங்க் டெஸ்ட் தமிழக அரசு டி என்பிசி  கேள்வி தயாரிப்பு ஆசிரியர்களை கைக்குள் போட்டுக் 

கொஸ்டின் பேப்பர் அவுட் நடக்கிறதா?

என்றால் பதில் பூஜ்யம்? மர்மம் தான்.

கொஸ்டின் பேப்பர் ரெடி பண்ணும் 

அதிகாரிகளுக்கே வெளிச்சம்?


தினமும் மாணவ மாணவிகள் 

இப் பகுதியில் சேர்ந்து சேர்ந்து? அலைந்து கொண்டு இருக்கிறார்கள்.


தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பஸ் நிலையம் போன்ற பகுதிகளிலும் பார்க்க?

பெற்றோர் கண்ணீர் வரவழைக்கும்!


இதில் எங்கேயோ கல்வி பயின்ற மாணவர்கள் மானவி கள் பெற்றோர் தரும் பணம் போதாமல்  பிற செலவுகளாலால் பசி பட்டினியால் இருப்பதும் இவர்களுக்காகவே அப்பகுதியில் சில ஹோட்டல்களில் 25 ரூபாய் தேங்காய் சாதம் தக்காளி சாதம் பத்து ரூபாய் தோசை விற்பனை? 20 ரூபாய் 30 பிரியாணிகளும் தோன்றி யுள்ளார்.


இதைவிட..... பரிதாபம் 

தூத்துக்குடியில் எங்காவது அன்னதானம் நடந்தால் ஆஜாராகி விடுகின்றன அதேபோல் திருமண மண்டபங்களில் உள் புகுந்து ஆஜர்

தூத்துக்குடி சிவன் கோயில் உள்ளே தினம் நூறுபேர் அன்னதானம் 


இதில் கொடுமை என்னவென்றால் முதியோர் உடன் போட்டி கொண்டு டோக்கன் வாங்கிய ஆஜாராகிவிடும் பரிதாபமாக இருக்கிறது என்கிறார்கள் .

என்னத்த சொல்ல !!!

இதை தினமும் பார்க்கும் பொதுமக்கள் இவர்கள் மீது பரிதாபப்படுகிறார்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்கள் குருடாகி போச்சு?


கோச்சிங் சென்டர் நடத்தி வருபவர்கள் அதில் பணம் கட்டி பயிலுகின்றவர்களுக்கு ஹாஸ்டல் தங்குமிடம் உணவு வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் 

கனிமொழி எம்பி அமைச்சர் கீதாஜீவன் கவனிப்பார்களா?

தூத்துக்குடியில் இருக்கும் கல்வியறிவு மகத்தவம் பற்றி மற்றவர்கள் விட நன்கு உணர்ந்த கல்வி நிறுவனங்கள் நடத்தும் அமைச்சர் கீதாஜீவன் மற்றும் கனிமொழி எம்பி ஆகியோர் மாணவ மாணவிகள் பரிதாபங்களை இனியாவது கண்டு கொள்வார்களா?


மயக்கம் தெளியுமா?

விளம்பரங்கள் பார்த்து மயங்கி விட்டில் பூச்சிகள் அதன் முடிவை தேடி கொள்ளும் இந்த மயக்கம் தெளிய வேண்டியது அவசியம்.

இந்த மாதிரி அகாடமி மில் கோச்சிங் படித்தால் தான் பாஸாக முடியும் வேலைகள் கிடைக்கும் என மாயை வலைக்குள் விழ வைத்து சம்பாதிக்கிறார்கள் 

கல்வி பயின்ற மாணவ மாணவிகள் நீங்கள் கோச்சிங் போக விட்டாலும் பாஸாகி வீடுவிர்கள் என்று உணர வேண்டும் 

  இங்கே சேர்ந்தால் தான் வேலை கிடைக்கும் நம்புவது என்பது மடமையே


அனைவரும் அரசு வேலைகள் உள்ளார்களா என கொஞ்சம் சிந்தியுங்கள்.


 கல்வி பயின்ற  மாணவ மாணவிகள் அந்தந்த மாவட்டங்களில் இருந்து நீங்கள் தயாரா ஆகலாம் என மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முயல்வார்களா காத்திருப்போம்.

சமுக அக்கறையுடன்...

ரோஜா அருணன் 

செய்தியாளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக