கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 9 ஜூலை, 2026

2026-27 கல்வியாண்டு பள்ளி வேலைநாட்கள் விவரம் வெளியீடு

 தூத்துக்குடி லீக்ஸ் | நாளிதழ் செய்தி

2026-27 கல்வியாண்டு பள்ளி வேலைநாட்கள் விவரம் வெளியீடு

210 வேலைநாட்கள் – 155 விடுமுறை நாட்கள்; ஏப்ரல் 24-ல் பள்ளிகள் நிறைவு

சென்னை, ஜூலை 9:

2026–2027 கல்வியாண்டிற்கான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் வேலைநாட்கள் மற்றும் விடுமுறை நாட்கள் விவரத்தை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

thoothukudileaks


அதன்படி, புதிய கல்வியாண்டு ஜூன் 1, 2026 அன்று தொடங்கி ஏப்ரல் 24, 2027 வரை நடைபெற உள்ளது. இந்த கல்வியாண்டில் மொத்தம் 210 வேலைநாட்களும், 155 விடுமுறை நாட்களும் இடம்பெற்றுள்ளன. மொத்த நாட்கள் 365 ஆகும்.

வெளியிடப்பட்ட கால அட்டவணையின்படி:

  • முதல் பருவத் தேர்வு செப்டம்பர் 17 முதல் 25 வரை நடைபெறும். தொடர்ந்து செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 4 வரை (9 நாட்கள்) பருவ விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இரண்டாம் பருவத் தேர்வு டிசம்பர் 15 முதல் 23 வரை நடைபெறும். இதையடுத்து டிசம்பர் 24 முதல் ஜனவரி 3 வரை (11 நாட்கள்) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
  • மூன்றாம் பருவத் தேர்வு ஏப்ரல் 12 முதல் 24 வரை நடைபெற உள்ளது.
  • 2026–27 கல்வியாண்டின் இறுதி வேலைநாள் ஏப்ரல் 24, 2027 என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் கோடை விடுமுறை ஏப்ரல் 25 முதல் மே 31 வரை (37 நாட்கள்) அமையும்.

இந்த கால அட்டவணையின்படி மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கல்வி நடவடிக்கைகள், தேர்வுகள் மற்றும் விடுமுறைகளை முன்கூட்டியே திட்டமிட வசதியாக இருக்கும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

செவ்வாய், 23 ஜூன், 2026

சர்வதேச தினம் யோகாவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு தூத்துக்குடி சக்தி வித்யாலயா பள்ளியில் பல்வேறு யோகாசனங்களை செய்து அசத்திய மாணவ மாணவிகள்

 Tamil Nadu updates news by Arunan journalist 

தூத்துக்குடி, ஜூன் 23:

தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.


thoothukudileaks

நன்மைகள் !!!

பள்ளியின் தாளாளரும் முதல்வருமான ஆர். ஜெயசண்முகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக யோகா பயிற்சியாளர் ஸ்டீபன் கலந்து கொண்டு யோகாவின் முக்கியத்துவம் மற்றும் அதன் உடல்நல நன்மைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.

thoothukudileaks

அசாத்திய மாணவ மாணவிகள்!!!

தொடர்ந்து மாணவ, மாணவிகள் சூரிய நமஸ்காரம், பத்மாசனம், பச்சிமோத்தானாசனம், தனுராசனம், யோகமுத்திரா, திரிகோணாசனம், வஜ்ராசனம் உள்ளிட்ட பல்வேறு யோகாசனங்களை செய்து அவற்றின் பயன்களை அறிந்துகொண்டனர்.

thoothukudileaks


நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இறுதியில் துணை முதல்வர் ரா.ச. பிரியங்கா நன்றி கூறினார்.


 நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


இந்த யோகா தின விழா மாணவர்களிடையே உடல் மற்றும் மன ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதாக பள்ளியில் நிர்வாகம் தெரிவித்தது.

 

திங்கள், 22 ஜூன், 2026

தூத்துக்குடியில் 100 ஏழை மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள், பள்ளி சீருடைகள் வழங்கிய ராஜம் அறக்கட்டளை

Tamil Nadu updates photo news by Arunan journalist 

தூத்துக்குடி, ஜூன் 22:

தூத்துக்குடி ராஜம் அறக்கட்டளை சார்பில் ஏழை மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மாணவ, மாணவியர்களுக்கு இலவச நோட்டு மற்றும் சீருடை வழங்கும் விழா இன்று (22.06.2026) மாலை 5 மணிக்கு தூத்துக்குடி ராஜம் மஹாலில் நடைபெற்றது.

thoothukudileaks


இந்த நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் நிர்வாகி எஸ். ரம்போலா தலைமை வகித்தார் சிறப்பு விருந்தினராக முன்னாள் துணைத் தலைவர் ஆ. தேவராஜ் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மேலும், அருட்திரு கீஷோர் முன்னிலை வைத்தார் 

thoothukudileaks




video 

விழாவில் சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பிரியங்கா பங்கேற்று மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை நோட் புக் பள்ளி சீருடைகள் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடியில் உள்ள அரசு உதவி பெறும் 10 பள்ளிகளைச் சேர்ந்த 100 மாணவ, மாணவியர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டது.

கல்வி வளர்ச்சிக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் முன்னேற்றத்திற்கும் உதவும் வகையில் நடைபெற்ற இந்த விழாவில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

.

வியாழன், 26 பிப்ரவரி, 2026

சாயர்புரம் செயிண்ட் மேரீஸ் பள்ளி 24ஆம் ஆண்டு விழா

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

தூத்துக்குடி: பெ27

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தில் இயங்கி வரும் செயிண்ட் மேரீஸ் நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளியின் 24ஆம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட தனியார் பள்ளிகள் கல்வி அலுவலர் டி. சிதம்பரநாதன் தலைமை தாங்கினார்.

thoothukudileaks


Bishop Jebaraj தொடக்க ஜெபத்தை நடத்தினார். பள்ளி முதல்வர் அக்னஸ் ஜெயலின் வரவேற்புரை வழங்கி ஆண்டு அறிக்கையை வாசித்தார்.

சாயர்புரம் பாஸ்டரேட் தலைவர் ஜே. மனோகரும், மாவட்ட நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகள் சங்க செயலாளர் ஏ. ஜோசப்பும் சிறப்புரையாற்றினர். Pope Memorial Higher Secondary School தலைமையாசிரியர் சி. எட்வர்ட் ஜான்சன் பால் மற்றும் St. Mary's Girls Higher Secondary School தலைமையாசிரியர் ஆர். ஹெப்சிபா புவேலா மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து மாணவர்களின் நடனம், நாடகம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சாயர்புரம் நகர பஞ்சாயத்து கவுன்சிலரும், மாவட்ட திமுக துணைச் செயலாளருமான ஜே. ஜெபா தங்கம் பிரேமா உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்டனர். சிஎஸ்ஐ மறைமாவட்ட உறுப்பினர்கள் அலய்மணி, ஜெயகுமார் மற்றும் பலரும் பங்கேற்றனர்.

இறுதியாக உதவி தலைமையாசிரியர் அருள் மேரி நன்றியுரை வழங்கினார்.

விழா உற்சாகமாகவும், சிறப்பாகவும் நடைபெற்றது.

திங்கள், 1 செப்டம்பர், 2025

ஆசிரியர் பணியில் சேர, தொடர மற்றும் பதவி உயர்வு பெற TET தேர்ச்சி கட்டாயம் என உச்ச நீதிமன்றம் உத்தரவு கேள்வி குறியாகும் ஆசிரியர்கள் நிலைமை மாணவர்கள் எதிர்காலம்? முழு விவரம் பரபரப்பு தகவல்

 அருணன் செய்தியாளர் 

👍இங்கே விரிவான தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி 


🤷🏻‍♀️ thoothukudi leaks

🔴 #𝗕𝗥𝗘𝗔𝗞𝗜𝗡𝗚••••

ஆசிரியர் பணியில் சேர, தொடர மற்றும் பதவி உயர்வு பெற TET தேர்ச்சி கட்டாயம் என உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுதில்லி:
நாட்டின் அனைத்து பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் TET (Teacher Eligibility Test) தேர்ச்சி பெறுவது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 1) தெளிவான உத்தரவை பிறப்பித்துள்ளது.

thoothukudileaks


📌 தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:

  • புதிய ஆசிரியர்கள் பணியில் சேர TET தேர்ச்சி பெற வேண்டும்.
  • ஏற்கனவே பணியாற்றி வரும் ஆசிரியர்களில் 5 ஆண்டுகளுக்கு குறைவான பணிக்காலம் உள்ளவர்களுக்கு மட்டுமே தற்காலிக விதிவிலக்கு.
  • 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணி புரியும் ஆசிரியர்கள் தொடர்ந்து பணி செய்ய TET தேர்ச்சி கட்டாயம்.
  • TET தேர்ச்சி பெறாதவர்கள் வேலையை விட்டு வெளியேறலாம் அல்லது இறுதி சலுகைகளுடன் கட்டாய ஓய்வு பெற வேண்டும்.
  • பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்விற்கும் TET தேர்ச்சி கட்டாயம்.

இந்த உத்தரவிற்கு எதிராக, தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிர மாநில ஆசிரியர் கூட்டமைப்புகள் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜஸ்டிஸ் சஞ்சய் கரோல், ஜஸ்டிஸ் அரவிந்த் குமார் தலைமையிலான அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது.

தீர்ப்பில், “கல்வித் தரத்தை உயர்த்தவும், தகுதியான ஆசிரியர்கள் மட்டுமே மாணவர்களுக்கு பாடம் நடத்துவதை உறுதி செய்யவும் TET தேர்வு ஒரு அடிப்படை அளவுகோலாக அமைய வேண்டும்” என நீதிபதிகள் வலியுறுத்தினர்.

📍 பின்னணி:
2011ஆம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் TET தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. ஆனால் பல மாநிலங்களில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் இன்னும் TET தேர்ச்சி பெறாமல் பணி புரிந்து வருகின்றனர். இதனை எதிர்த்து ஆசிரியர் சங்கங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன.

📍 மாநில அரசின் நிலைப்பாடு:
தமிழ்நாடு அரசு சார்பில், “ஏற்கனவே பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு சிறப்பு சலுகை வழங்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டது. எனினும், மாணவர்களின் நலனுக்காக எந்தவித சலுகையும் வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.


👉  மாணவர்களின் எதிர்காலம் – ஆசிரியர்களின் நிலைமை


🤷🏻‍♀️ thoothukudi  leaks

Arunan journalist 1-9-2025

🔴 #𝗦𝗣𝗘𝗖𝗜𝗔𝗟 𝗥𝗘𝗣𝗢𝗥𝗧••••

TET தேர்ச்சி கட்டாயம் – மாணவர்களின் எதிர்காலம் & ஆசிரியர்களின் நிலைமை

மாணவர்களின் எதிர்காலம்

உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படி, ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் TET தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு.

  • தகுதியான ஆசிரியர்கள் மட்டுமே வகுப்பறையில் மாணவர்களை கற்பிப்பது உறுதி செய்யப்படுகிறது.
  • கல்வி முறையில் ஒற்றுமையும் தரநிலையும் ஏற்படும்.
  • மாணவர்கள் போட்டித்தேர்வுகளில் சிறந்து விளங்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.
  • நாட்டின் கல்வி தரம் சர்வதேச அளவில் உயர்வதற்கான பாதை உருவாகும்.

thoothukudileaks


ஆசிரியர்களின் நிலைமை

ஆனால், இந்த உத்தரவு பல்வேறு சிக்கல்களை ஆசிரியர்கள் முன்வைக்க வைத்துள்ளது.

  • ஏற்கனவே 10, 15, 20 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் இன்னும் TET தேர்ச்சி பெறவில்லை.
  • வயதான ஆசிரியர்களுக்கு தேர்வு எழுதுவது கடினம் என சங்கங்கள் வலியுறுத்துகின்றன.
  • “பணி தொடர முடியாவிட்டால் வேலை இழக்க நேரிடும்” என்ற அச்சம் ஆசிரியர்களிடம் அதிகரித்துள்ளது.
  • குடும்பப் பொறுப்புகள், பொருளாதாரச் சிக்கல்கள், மீண்டும் தேர்வுக்குப் படிப்பது போன்ற சிரமங்கள் ஆசிரியர்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

மாநில அரசுகளின் எதிர்வினை

தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா அரசுகள் “பணியில் உள்ளவர்களுக்கு சலுகை வழங்க வேண்டும்” என கோரியிருந்தாலும், மாணவர்களின் நலனுக்காக எந்த சலுகையும் வழங்க முடியாது என உச்ச நீதிமன்றம் மறுத்தது.

இறுதி குறிப்பு

இந்த உத்தரவு மாணவர்களின் கல்வித் தரத்திற்கு சாதகமாக இருந்தாலும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் பணிநிலையும் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. 


அதனால், மாநில அரசுகள் புதிய பயிற்சிகள், சிறப்பு வகுப்புகள், தேர்வு தயாரிப்பு மையங்கள் போன்றவற்றை ஏற்பாடு செய்து, ஆசிரியர்கள் TET தேர்ச்சி பெற உதவ வேண்டும் என்பதே கல்வியாளர்களின் கருத்தாகும்.