வ உ சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வ உ சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 8 ஜூலை, 2026

தூத்துக்குடியில் புதிய துறைமுகம்" அல்ல... "வ.உ.சிதம்பரனார் துறைமுகம்" என மாற்றக் கோரி அமைச்சர் ஏ. ஸ்ரீநாத் இடம் பரபரப்பு மனு

வ.உ.சிதம்பரனார் துறைமுகம் பெயரை வழித்தட பலகைகளில் பேருந்துகளில் இடம்பெற செய்யாமல் கடந்த அதிமுக -திமுக ஆட்சியில் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து மத்திய அரசு உத்தரவு புறக்கணித்து வந்தது அதிகாரப்பூர்வ பெயரை நடைமுறைப்படுத்தாமல் இழுத்துடித்து வருகின்றனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தூத்துக்குடி, ஜூலை 8:

2011-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தூத்துக்குடி புதிய துறைமுகம், மத்திய அரசால் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் என அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது.


இந்நிலையில், கடந்த 08.10.2023 அன்று திறக்கப்பட்ட தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் வழித்தட அறிவிப்பு பலகைகள் மற்றும் பேருந்துகளில், அதிகாரப்பூர்வ பெயரான "வ.உ.சிதம்பரனார் துறைமுகம்" என்பதற்குப் பதிலாக "புதிய துறைமுகம்" என்ற பெயரே பயன்படுத்தப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வேதனை!!!

அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தும், பேருந்து நிலைய வழித்தட பலகைகள் மற்றும் பேருந்துகளில் பழைய பெயரே தொடர்ந்து பயன்படுத்தப்படுவது வரலாற்று பெருமைமிக்க சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பெயருக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை என பல்வேறு தரப்பினர் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

அமைச்சர் இடம் கோரிக்கை!!!

இதுகுறித்து, அனைத்து வழித்தட அறிவிப்பு பலகைகள் மற்றும் பேருந்துகளில் அதிகாரப்பூர்வ பெயரான "வ.உ.சிதம்பரனார் துறைமுகம்" என்ற பெயரையே உடனடியாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீன்வளம் மற்றும் மீனவர்கள் நலத்துறை அமைச்சர் ஏ. ஸ்ரீநாத் அவர்களிடம், தமிழ்நாடு வ.உ.சி. எழுச்சி பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் மா. தமிழ்ச்செல்வன் கோரிக்கை மனு அளித்துள்ளார்.உடனே அமைச்சர் ஸ்ரீநாத் ஆவண செய்வதாக கூறினார் 

thoothukudileaks

thoothukudileaks


இந்த கோரிக்கையை முன்வைத்த மா. தமிழ்ச்செல்வன் அவர்களை  தமிழ்நாடு சைவவேளாளர் சங்கம் – தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வ.உ.சி. பேரவை – தூத்துக்குடி மாவட்டம் ஆகிய அமைப்புகள் பாராட்டி, அதிகாரப்பூர்வ பெயர் அனைத்து அரசு அறிவிப்பு பலகைகள் மற்றும் பேருந்துகளில் விரைவில் நடைமுறைக்கு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளன..

புதன், 19 நவம்பர், 2025

கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் 89 ஆவது குருபூஜை விழா சிறப்பாக நிறைவு

Tamil Nadu updates

தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்தி

நெல்லை:நவ19

தேசத்திற்காக தன்னலமின்றி போராடிய சுதந்திரப் போராட்ட வீரர், கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ. சிதம்பரனாரின் 89 ஆவது குருபூஜை விழா நெல்லை மணி மண்டபத்தில் நேற்று சிறப்பாக நடைபெற்றது.



விழாவில் தமிழ்நாடு வ.உ.சி எழுச்சி பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் தூத்துக்குடி தமிழ்ச்செல்வன், வெள்ளாளர் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் கல்மேடு சிவலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு சிதம்பரனார் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

வீடியோ பார்க்க 

பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட வீரரின் தியாகங்கள், தேசிய உணர்வு, இன்றைய தலைமுறைக்கு அவர் வழங்கிய சொற்பொழிவுகளின் முக்கியத்துவம் குறித்து பேரவை நிர்வாகிகள் உரையாற்றினர்.

thoothukudileaks



நிகழ்ச்சியில் பல்வேறு சமூக அமைப்பினரையும் இளைஞர்களையும் கலந்து கொண்டனர்.


.



வெள்ளி, 5 செப்டம்பர், 2025

வ.உ. சிதம்பரனார் 154-வது பிறந்த நாள் விழா – தூத்துக்குடியில் தவெக சார்பில் கொண்டாட்டம்

Tamil Nadu updates, photo news 

by Arunan journalist 

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

வ.உ. சிதம்பரனார் 154-வது பிறந்த நாள் விழா – தூத்துக்குடியில் தவெக சார்பில் கொண்டாட்டம்

தூத்துக்குடி: செப் 5
தமிழகத்தின் சுதந்திரப் போராட்ட வீரரும், மண்ணின் மைந்தருமான கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் பிறந்த நாள் இன்று (செப்டம்பர் 5) மாநிலம் முழுவதும் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது.

thoothukudileaks


இதையொட்டி தூத்துக்குடி கிழக்கு மண்டல நகராட்சி வளாகத்தில் உள்ள சிதம்பரனார் திருவுருவச் சிலைக்கு, தவெக முன்னாள் கவுன்சிலர் ஆனந்தராஜ் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர் தவெக தொண்டர்கள் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.



இந்நிகழ்வில் முன்னாள் கவுன்சிலர் ஆனந்தராஜ், உஷா, அன்னை பெசி, சந்தனராஜ், ராஜா, கண்ணன், கிறிஸ்து ராஜா, நிர்மல், சுதன், பாலா உள்ளிட்டோர் கலந்து கொண்ார்கள்.






வியாழன், 5 செப்டம்பர், 2024

போராட்ட தாத்தா வ உ சிதம்பரனார் 153 வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது

 ▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

5-9-2024 photo news 

by Arunan journalist 

செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை 153 வது பிறந்தநாள் 

 திமுக அதிமுக மற்றும் அரசியல் கட்சிகள் பல் வேறு அமைப்புகள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி வேட்டி சேலை நலத் திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

இது பற்றிய செய்தியாவது 


கப்பலோட்டிய தமிழன் ஜயா வ உ சிதம்பரனார் அவரின் 153 வது பிறந்தநாள் 

தமிழகம் முழுவதும் அரசு விழாவாக கொண்டாடி வருகின்றனர் 

போராட்ட தாத்தா தான் எங்கள் முன்னோடி!!

அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள்  போராட்ட உணர்வாளர்கள் தமிழகத்தில் தங்கள் முன்னோடியாக எதற்கும் அடிபணியாத நேர்மை வைராக்கியம் குணம் உறுதி மிகுந்த தங்கள் போராட்ட தாத்தா என்றழைத்து இன்று கோஷமிட்டு செக்கிழுத்த செம்மல் ஜயா வ உ சி யின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடி வருகிறார்கள்.


அரசு விழா

தூத்துக்குடியில்

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 153வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு இன்று (05.09.2024) ஒட்டப்பிடாரத்தில்

உள்ள அன்னாரது இல்லத்தில் அமைந்துள்ள திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர்

க.இளம்பகவத், இ.ஆ.ப.,  ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா  மாவட்ட காவல்

கண்காணிப்பாளர் திரு.ஆல்பர்ட் ஜான் இ.கா.ப.,  ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் எல்.ரமேஷ்

வ.உ.சிதம்பரனார் அவர்களின் வாரிசுதார் உ.செல்வி  ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திமுக !!!



அதிமுக 




சிஜடியூ



பனை வாரியம் நலத் தலைவர் எர்ணாயூர் நாராயணன் 


பெரியார் அம்பேத்கர் மார்க்ஸ் உணர்வார்கள் கூட்டமைப்பு 





போராளிகளின்தாத்தா கோஷமிடும் வீடியோ பார்க்க...
தமிழக வெற்றி கழகம் 
மற்றும் தேசிய கட்சிகள் பாஜக,காங்கிரஸ்  மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல வளாகத்தில் அமைந்துள்ள..



 கப்பலோட்டிய தமிழன் ஜயா வ உ சிதம்பரம் அவரது திருவுருவ சிலை முன்பு பட்டாசு வெடித்து மாலை அணிவித்து இனிப்பு மற்றும் நலத் திட்டம் வழங்கி னார்கள்.