Tamil Nadu updates
தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்தி
நெல்லை:நவ19
தேசத்திற்காக தன்னலமின்றி போராடிய சுதந்திரப் போராட்ட வீரர், கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ. சிதம்பரனாரின் 89 ஆவது குருபூஜை விழா நெல்லை மணி மண்டபத்தில் நேற்று சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் தமிழ்நாடு வ.உ.சி எழுச்சி பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் தூத்துக்குடி தமிழ்ச்செல்வன், வெள்ளாளர் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் கல்மேடு சிவலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு சிதம்பரனார் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட வீரரின் தியாகங்கள், தேசிய உணர்வு, இன்றைய தலைமுறைக்கு அவர் வழங்கிய சொற்பொழிவுகளின் முக்கியத்துவம் குறித்து பேரவை நிர்வாகிகள் உரையாற்றினர்.
நிகழ்ச்சியில் பல்வேறு சமூக அமைப்பினரையும் இளைஞர்களையும் கலந்து கொண்டனர்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக