புதன், 19 நவம்பர், 2025

தூத்துக்குடியில் பொதுமக்கள் கோரிக்கையை நிறைவேற்றி கொடுத்த அமைச்சர் கீதாஜீவன் – பொதுமக்கள் பாராட்டு

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

தூத்துக்குடி: நவ19

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அண்ணாநகர் பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில், வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவனிடம் பொதுமக்கள் முக்கியமான கோரிக்கை ஒன்றை முன்வைத்தனர்.

அந்த பகுதியில் அதிகமான ரேஷன் கார்டுதாரர்கள் வசித்து வருவதால், அவர்கள் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்க வேண்டிய சூழல் இருந்து வந்தது. இதனால் வயது முதிர்ந்தோர் மற்றும் போக்குவரத்து சிக்கல்கள் காரணமாக பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். இதனை கருத்தில் கொண்டு, அண்ணாநகர் பகுதியில் புதிய ரேஷன் கடை ஒன்றை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் மனு அளித்தனர்.

அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சர் கீதாஜீவன், சில நாட்களில் டூவிபுரத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகக் கட்டிடத்தின் ஒரு பகுதியில் தூத்துக்குடி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கம் சார்பில் தற்காலிக ரேஷன் கடை தொடங்க ஏற்பாடு செய்து, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தினார்.



இதையடுத்து, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.13 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடைக்கான கட்டுமான பணிகள் தொடங்கி பூமிபூஜை நடைபெற்றது. கட்டுமான பணி முடிவடைந்த நிலையில், வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான கீதாஜீவன் புதிய ரேஷன் கடையை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு முதல்நாளே பொருட்கள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்:

பொது விநியோக திட்ட துணை பதிவாளர் சுப்புராஜ், வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குநர் தனலட்சுமி, பொதுவிநியோக திட்ட சார்பதிவாளர் அந்தோணிபட்டுராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் ஐகோட் மகாராஜா, உதவி செயற்பொறியாளர் ரவி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ரவீந்திரன், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், வட்டச்செயலாளர் செந்தில்குமார், கவுன்சிலர் அதிஷ்டமணி, விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் அன்பழகன், அவைத் தலைவர் ராஜ்மோகன், வட்ட பிரதிநிதிகள் பாஸ்கர், கார்த்திகேயன், சுப்பிரமணியன், துணை செயலாளர்கள் சந்திரசேகர், சபேசன், முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார், சட்டமன்ற உறுப்பினர் அலுவலக பொறுப்பாளர் அற்புதராஜ், மணி, அல்பட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அமைச்சரிடம் வைத்த கோரிக்கையை மிக விரைவாக நிறைவேற்றியமைக்கு அண்ணாநகர் பகுதியின் பொதுமக்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக