புதன், 19 நவம்பர், 2025

தூத்துக்குடி பழைய புதிய பேருந்து நிலையத்தில் வாக்காளர் சேவை மையங்கள் பொதுமக்களுக்கு உதவுவதற்காக இன்று தொடக்கம்

 தூத்துக்குடி லீக்ஸ் — நாளிதழ் செய்தி

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் சிறப்பு தீவிர திருத்தம் – 2026 :
ஏழு இடங்களில் வாக்காளர் சேவை மையங்கள் தொடக்கம்

தூத்துக்குடி: நவ20 

சிறப்பு தீவிர திருத்தம் – 2026 தொடர்பாக, வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த பொதுமக்களுக்கு உதவுவதற்காக, தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் ஏழு இடங்களில் வாக்காளர் சேவை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

thoothukudileaks


தூத்துக்குடி மாநகராட்சி மைய அலுவலகம், நான்கு மண்டல அலுவலகங்கள், தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் மற்றும் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட மொத்தம் ஏழு பகுதிகளில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்காளர்கள், இந்த சேவை மையங்களை காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை தொடர்பு கொண்டு, சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பான அனைத்து சந்தேகங்களையும் தீர்த்துக் கொள்ளலாம்.

thoothukudileaks


வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்கள் சரிபார்த்து, தேவையான திருத்தங்கள் மற்றும் புதுப்பிப்புகளைச் செய்ய வாக்காளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு அலுவலரும், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையரும் அன்புடன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இவன்,
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி
வாக்குப்பதிவு அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக