DMK News லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
DMK News லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 3 ஆகஸ்ட், 2026

பரபரப்பு முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தூத்துக்குடியில் சாலை மறியல்

முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தூத்துக்குடியில் சாலை மறியல்

முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் போராட்டம்  நூற்றுக்கணக்கான திமுகவினர் கைது

தூத்துக்குடி, ஆக. 4:

தமிழக முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து, தூத்துக்குடி மாநகர் மாவட்ட திமுக சார்பில் செவ்வாய்க்கிழமை அண்ணா பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

thoothukudileaks


முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் திமுக நிர்வாகிகள், மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, இளைஞரணி, மகளிரணி உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு கைது நடவடிக்கையை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் அண்ணா பேருந்து நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பின்னர் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான திமுகவினரை கைது செய்து காவல் வாகனங்களில் அழைத்துச் சென்றனர்.

இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக அண்ணா பேருந்து நிலையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

thoothukudileaks


புகைப்பட விளக்கம்:
முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து, தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையம் முன்பு முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் அமர்ந்து முழக்கமிட்ட திமுகவினர்.

விவசாயிகளை வஞ்சிக்கும் அரசுக்கு எதிராக தஞ்சையில் தி.மு.க. மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

 தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

news by Arunan 3-8-2026

தஞ்சை மாநகரில் விவசாயிகள் பிரச்சினைகளை முன்னிறுத்தி தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கழக நிர்வாகிகள், தோழமை இயக்கத்தினர், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் துணை முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின்,.....

 "அலட்சியத்துடனும் ஆணவத்துடனும் செயல்படும் அரசால் விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆடிப்பெருக்கு நாளன்று கூட அகண்ட காவிரி வறண்ட நிலையில் காட்சியளிப்பதற்கு தற்போதைய அரசின் செயல்பாடுகளே காரணம்" என்று குற்றம்சாட்டினார்.


மேலும், "விவசாயிகள் துயரத்தில் தவிக்கும் நேரத்தில், முதலமைச்சர் மக்கள் பிரச்சினைகளைப் புறக்கணித்து செயல்படுகிறார். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

thoothukudileaks

thoothukudileaks


இந்த ஆர்ப்பாட்டத்தில், விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் மேகதாது அணை கட்டும் முயற்சியைத் தடுக்க வேண்டும், டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


இறுதியாக, "சட்டமன்றம், நீதிமன்றம், மக்கள் மன்றம் என அனைத்து தளங்களிலும் விவசாயிகளின் உரிமைகளுக்காக தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுக்கும்" என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

திங்கள், 27 ஜூலை, 2026

பாளையங்கோட்டை சிறையில் மார்க்கண்டேயனை சந்தித்தார் உதயநிதி ஸ்டாலின் !!! விடுதலைக்கான சட்ட நடவடிக்கைகள் தீவிரம் தவெக ஆட்சியை கடுமையாக விமர்சித்த பேச்சு

Tamil Nadu updates

 photo news by Arunan journalist 

பாளையங்கோட்டை சிறையில் மார்க்கண்டேயனை சந்தித்தார் உதயநிதி ஸ்டாலின் !!! விடுதலைக்கான சட்ட நடவடிக்கைகள் தீவிரம்  தவெக ஆட்சியை கடுமையாக விமர்சித்த பேச்சு...


திருநெல்வேலி: ஜுலை 27


தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு துணை முதலமைச்சரும் தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று சிறைக்குச் சென்று அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

thoothukudileaks


அப்போது, சிறையில் இருந்தாலும் முன்பைவிட அதிக உற்சாகத்துடனும், கழகப் பணியிலும் மக்கள் சேவையிலும் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்ற மன உறுதியுடனும் மார்க்கண்டேயன் இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

ஆறுதல்!!!

மேலும், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, மார்க்கண்டேயனின் விடுதலைக்காக கழகத்தின் வழக்கறிஞர்கள் சட்ட ரீதியான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும், அதுகுறித்து விளக்கி அவருக்கு ஆறுதல் தெரிவித்ததாகவும் கூறினார்.


தூத்துக்குடி விமான நிலையத்தில்..

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ...உதயநிதி ஸ்டாலின்,

 "பழிவாங்கும் நோக்கத்தில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மிசா மற்றும் அவசரநிலை காலத்தையே எதிர்கொண்ட இயக்கம் தி.மு.க. ஆகும். இதுபோன்ற கைது நடவடிக்கைகளுக்கு கழகத் தொண்டர்கள் ஒருபோதும் அஞ்சமாட்டார்கள். 

thoothukudileaks


விமர்சனங்களை அடக்குவதற்காக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு கைது நடவடிக்கையும் நீதிமன்றத்தில் தோல்வியடைகிறது. இதேபோல் மக்கள் மன்றத்திலும் இந்த ஆட்சி தோல்வியை சந்திப்பது உறுதி" என்று கடுமையாக விமர்சித்தார்.


இந்த சந்திப்பின் போது ...

முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப், தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, மேயர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

திங்கள், 20 ஜூலை, 2026

பாளையங்கோட்டை மத்திய சிறையில் விளாத்திகுளம் எம் எல் ஏ மார்க்கண்டேயன்!!!

 

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

விளாத்திகுளம் தொகுதி எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது

15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவு 

இது பற்றிய செய்தியாவது....

தூத்துக்குடி, ஜூலை 20:

தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு-1 (DCB-1) போலீசார், DCB குற்ற எண்: 16/2026-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில், விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. மார்க்கண்டேயன் அவர்களை திங்கள்கிழமை (20.07.2026) கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

thoothukudileaks




இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட மார்க்கண்டேயன், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தூத்துக்குடி நீதித்துறை நடுவர்-1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

பாளையங்கோட்டை சிறை 

வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர், மார்க்கண்டேயனை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, அவரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்க போலீசார் அழைத்துச் சென்றனர்.


இந்த கைது மற்றும் நீதிமன்ற நடவடிக்கை தூத்துக்குடி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கு தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெள்ளி, 3 ஜூலை, 2026

முன்ஜாமீன் தள்ளுபடியான 90 நிமிடங்களில் அதிரடி ஆய்வுப் பணியில் இருந்த திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் ஸ்பாட்டிலேயே கைது!

 

ஆத்தூர் (03.07.2026):

தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து பொதுவெளியில் ஒருமையில் அவதூறாகப் பேசிய வழக்கில், திமுக முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் காவல்துறையினரால் இன்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

thoothukudileaks



முதலமைச்சருக்கு எதிராக அவமரியாதையான முறையில் கருத்துக்களைத் தெரிவித்ததாகப் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில், தன் மீதான கைது நடவடிக்கையைத் தவிர்க்கும் பொருட்டு அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 


இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இன்று அதனை அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அனிதா ராதாகிருஷ்ணன் இன்று ஆத்தூர் பேரூராட்சிப் பகுதியில் உள்ளாட்சித் துறை சார்ந்த பல்வேறு ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

90 நிமிடங்களுக்குள்...

மனு தள்ளுபடியான அடுத்த 90 நிமிடங்களுக்குள் அதிரடி நடவடிக்கையில் இறங்கிய தமிழக காவல்துறை, அவர் ஆய்வுப் பணியில் இருந்த ஆத்தூர் ஸ்பாட்டுக்கே நேரடியாகச் சென்று அவரைச் சுற்றி வளைத்து அதிரடியாகக் கைது செய்தது. 

வீடியோ 

நீதிமன்ற உத்தரவு வெளியான மிகக் குறுகிய கால அவகாசத்திற்குள் காவல்துறை நடத்திய இந்தத் துரிதக் கைது நடவடிக்கை, தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் பரபரப்பான விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.



செவ்வாய், 2 ஜூன், 2026

தூத்துக்குடியில் கலைஞர் கருணாநிதி 103வது பிறந்தநாள் விழா முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் கொண்டாட்டம் மேயர் வராததால் பரபரப்பு செய்தியாளர் ஏமாற்றம்!!!

Tamil Nadu updates photo news by Arunan journalist 

தூத்துக்குடி, ஜூன் 3:

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் திமுகவினரால் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு லட்டு வழங்கி கொண்டாடப்பட்டது.

thoothukudileaks


thoothukudileaks


தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலைய நுழைவுவாயில் முன்பு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு பட்டாசுகள் வெடிக்கப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டன.

thoothukudileaks

thoothukudileaks


தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மற்றும் மாநகர திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியில், பல்வேறு கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

மேயர் ஆப்சென்ட்!!!

இந்நிலையில், வழக்கமாக கலைஞர் பிறந்தநாள் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இம்முறை மாநகராட்சி அலுவலகம் அருகாமையில் உள்ள பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற விழாவில் கலந்து கொள்ளாதது...


 கட்சி வட்டாரத்திலும், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடையிலும் பேசுபொருளாக அமைந்தது.

செய்தியாளர் ஏமாற்றம்!!!

மேயரின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்த செய்தியாளர்களும், அவரது பங்கேற்பு இல்லாததால் ஏமாற்றமடைந்ததாக தெரிவித்தனர். மேயர் நிகழ்ச்சியில் பங்கேற்காததற்கான காரணம் குறித்து  தகவல் எதுவும் வெளியாகவில்லை.


இதனால், கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்துடன், மேயரின் வருகையின்மை குறித்த விவாதமும் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

சனி, 30 மே, 2026

திமுக கழகத் தொண்டனின் கண்ணீர் கடிதம். தலைவர் ஏன் தோற்றுப் போனார்?

திமுக கழகத் தொண்டனின் கண்ணீர் கடிதம். தலைவர் ஏன் தோற்றுப் போனார்? 

சில உண்மைகளையும் சில மூடநம்பிக்கைகளையும் நாம் நம்பித்தான் ஆக வேண்டி இருக்கிறது. ஏனென்றால், பிரபஞ்சம் அப்படித்தான் இந்த உலகத்தை, இந்த மக்களை இயக்கிக் கொண்டிருக்கிறது. 

thoothukudileaks


வெளிப்படையான உண்மைகள். 

ஆனால், நாம் ஏற்றுக் கொள்ள தவறிய உண்மைகள்: 


``தலைவர்கள் மாறலாம், தர்பார்கள் மாறலாம், தத்துவம் என்றும் அட்சய பாத்திரம்’’ என்று சொல்வார்கள். ஆனால், தத்துவம் எப்போதும் தோற்றுப் போனவர்களின் மன ஆறுதலுக்காகச் சொல்லப்பட்டது. உண்மையோ வேறு. 


உண்மையில், இது பெரியார் மண் அல்ல, இது கலைஞர் மண்.


பெரியார் ஊறுகாய் போன்றவர். அண்ணா உப்பைப் போன்றவர்.

ஆனால், கலைஞரோ ஒரு விருந்தின் சோறு போன்றவர். 


thoothukudileaks


சிறுபான்மையினர், கிறிஸ்தவர், இஸ்லாமிய பெண்கள், தலித்துகள், பெண்கள் (நான் சொல்வது கொஞ்சம் கசப்பாகத்தான் இருக்கும்) இவர்களில் பலர் எல்லோரும் அல்ல எப்போதுமே சந்தர்ப்பவாதிகள். ஆண் பொதுநலம், பெண் சுயநலம். 



இவர்களில் பலரும் நன்றிகெட்டுப் போய், நமக்கு வாக்களிக்கவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. 


ஒரு வீட்டில், அப்பா பிள்ளையை `தற்குறி’ என்பான் 

பிள்ளையோ.. அப்பாவை `அப்பா, அப்டேட் வெர்சனாக இல்லாத`பூமர்’ என்பான். இதுதான் இப்போது நடந்திருக்கிறது. 



கோபால்சாமி வெளியேறியதோடு தி.மு.க.வின் கோபமும் வெளியேறிவிட்டது. 


இளைஞர்களை நம் வயப்படுத்த நாம் தவறிவிட்டோம். அது கடந்த 35 ஆண்டுகளாக, கழகத்தில் தமிழ்நாட்டில் புரையோடிய புண்ணாகவே இருந்து வருகிறது. 


இந்த 35 ஆண்டுகால இளைஞர்களுக்கு அரசியலில் ஆர்வம் இல்லை. விட்டேத்தியான மனோபாவத்துடன், அரசியலில் அக்கறை இல்லாமல் இருந்தார்கள். உண்மையில், அவர்களுக்குள் ஒரு அரசியல் இருந்தது. அவர்களுக்கு பெரியார், அண்ணா, கலைஞர், எம்ஜி ஆர், ஜெயலலிதா, என்று எவரின் அரசியலும் தெரியாது. அதனால் அது பிடிக்காது.


நம்பவே முடியாத ரொம்ப அளவுக்கு அதிகமாக சித்தரிக்கப்பட்ட காமராஜர், கக்கன் பிம்பங்களைப் பேசிக்கொண்டு....  சகல அயோக்கியத்தனங்களுக்கும் தயாரானவர்களாகவே அவர்கள் இருந்தார்கள். இருக்கிறார்கள். இருப்பார்கள்.  அதற்கு காரணம், அவர்களை நாம், நம் வயப்படுத்த தவறிவிட்டோம்.  அத்தனை எளிதாக அவர்களை, நம் வயப்படுத்தவும் முடியாது. 


அவர்களுக்கு அரசியல் பாடம் புகட்டி பார்த்தோம், எவ்வளவோ பேசிப் பார்த்தோம். ஆனாலும், அவர்களுக்கு அந்த அரசியல் பாடம் புத்தியில் ஏறவில்லை.  ஒரே சிறு உதாரணம் டைட்டல் பார்க்கையும் ஐ.டி பில்டையும் வளர்த்தெடுத்தோம். நமக்கு ஆப்பு வைத்ததெல்லாம் இவர்கள்தான். 


இவர்கள் 10 வயதில், பிரபாகரனின் மரணத்தையும் 2-ஜி வழக்கையும் மனதில் ஏற்றிக்கொண்டே வளர்ந்தவர்கள். அப்போது இருந்தே, நாம் சோசியல் மீடியாவில் மிகவும் வீக்காகவே இருந்திருக்கிறோம். 



மேலும் இந்த இளைஞர்களும் இளைஞிகளும் 50 வயது உட்பட்ட பெண்களும் விஜயை தங்களின் ஆதர்ச ஹீரோவாகவே பார்த்து வளர்ந்தவர்கள்.


இவர்களில் ஒரு குருப்,  ``பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, பிரியமுடன், ப்ரியமானவளே, ஷாஜகான், யூத், வசீகரா, துள்ளாதமனமும் துள்ளும்,படம் பார்த்து வளர்ந்தவர்கள். 


இன்னொரு செட், போக்கிரி, துப்பாக்கி, மெர்சல், கத்தி, சர்க்கார், தெறி, பீஸ்ட், கோட், லியோ பார்த்து வளர்ந்தவர்கள்.


நான் 1981- இல் நடத்திய கையெழுத்துப் பிரதியிலேயே எழுதி இருக்கிறேன்.


எம்.ஜி.ஆர். தி.மு.க.வை மக்களிடம் எடுத்துச் சென்றார். மக்கள் தி.மு.க.வை கீழே வைத்துவிட்டு, எம்.ஜி.ஆரை எடுத்துக் கொண்டார்கள் என்று. அதுதான் எம்.ஜி.ஆர். மறைவு வரை நடந்தது.


 எப்போது பார்த்தாலும் கீழ்தட்டு மக்கள் அரிதார பூச்சுகளையே நம்பி இருப்பார்கள். உண்மைக்கு அருகில், அவர்கள் வரவே மாட்டார்கள்.


எப்போதாவதுதான் தி.மு.க. ஜெயிக்கும். எப்போதுமே அ.தி.மு.க. தான் ஜெயிக்கும். 60 ஆண்டு திராவிட அரசியலில் 35 ஆண்டுகள் அவர்களுக்குத்தான் இவர்கள் வாக்களித்து இருக்கிறார்கள். இவர்களை முட்டாள் என்று சொல்வதைவிட, அவர்களின் அறிவு உயரம் அவ்வளவுதான். 


அதனால் அவர்களின் அறிவு லெவலுக்கு இறங்கிப்போய்தான், நாம் பேச வேண்டும். அவர்கள் விரும்பும் வழியில் பேச வேண்டும். 

அதைத்தான் விஜய் செய்தார். அதில் அவர் வெற்றியும்பெற்றார். 


டிபன்ஸ் மெக்கானிசம் (தற்காப்பு முறை) அஃபென்ஸ் மெக்கானிசம் (தாக்குதல் முறை) என்று இரண்டு வித போர் முறைகளைச் சொல்லுவார்கள். 


நாம் டிபன்ஸ் மெக்கானிசத்தை கையில் எடுத்தோம். அவர் அஃபன்ஸ் மெக்கானிசத்தை கையில் எடுத்தார். தாக்குதலுக்கு எதிர்தாக்குதல் செய்ய வேண்டும். அவை வெறும் மீம்ஸ்களில் போஸ்ட் கார்டுகளில் மட்டுமல்ல. ஒரே யுத்ததில், இருவேறு போர் முறைகளை, இரு வேறு ஆயுதங்களைக் கையாளக்கூடாது இது போரின் விதி.

thoothukudileaks



கரூரிலேயே எஃப் ஐ ஆர் போட்டு விஜயை கைது செய்து உள்ளே வைத்து ஒரு மூன்று மாதமாவது விசாரணை என்ற பெயரில், அசிங்கப்படுத்தி இருக்க வேண்டும். அதை நாம் செய்ய தவறினோம் ?

கரூர் மக்களுக்கு, இந்த உண்மை தெரிந்ததால்தான் அங்கு த.வெ.க. தோற்றது. ஆனால், அவரோ ஊர் முழுவதும் போய் நம் மீது சேற்றை வாரி பூசி விட்டுப் போய் விட்டார். மடமை உலகில் மக்கள் அதையே நம்பினார்கள் .


`காலைச் சுற்றிய பாம்பு கடிக்காமல் விடாது’ என்பார்கள் அந்தப் பாம்பை அடித்துக் கொல்லத் தவறியது நம்முடைய மேட்டிமைத்தனம். அதுவே இப்போது பெரிய பிரச்சினையாகி விட்டது.


 வளர்த்த கிடா மூன்றாவது முறையாக கழகத்தை முட்டி கிழித்துப் போட்டு இருக்கிறது. 


முதல் முறை எம்.ஜி.ஆர். 

இரண்டாவது முறை வைகோ. 

மூன்றாவது முறை விஜய். 


நெருப்புப் பிடித்தது போல் அவருக்கு கூடிய கூட்டத்தைப் பார்த்து, நாம் அசட்டையாக இருந்தோம். 


மேலும் நம்முடைய வேட்பாளர் பட்டியல் ஏக குளறுபடிகளோடு அரங்கேறியது. நம் வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை. 


எத்தனை இடங்களை மாற்றி மாற்றி அறிவிப்பது. ஒரு எம்.எல்.ஏ. அந்த தொகுதியில், தன்னை தயார் செய்து வைத்திருந்தார் என்றால், அவரை விடுத்து, இன்னொருவரைத் தேர்வு செய்தால், அவர், அவருக்குத் தொடர்பான நெட்வொர்க் அத்தனையும் துண்டித்துப் போய்விடும். அல்லது அவர்  அவற்றை வெட்டி விடுவார் என்பதை ஏன் நாம் உணரவில்லை. 


சிற்றரசுக்கும் அண்ணா நகருக்கும் என்ன சம்பந்தம்? தாயகம் கவி, பரந்தாமன், தி.நகர் கருணாநிதி போன்றவர்களுக்கு வாய்ப்பை வழங்கி இருக்க வேண்டும் தலைநகரில் இப்படி ஏக குழப்பங்கள். மற்ற பகுதிகளின் கதை தனி. 



ஒரு முறையாவது, திராவிட முன்னேற்றக் கழகம் 234 தொகுதிகளும் தனித்துப் போட்டியிடாதா என்ற பேரார்வம் எப்போதுமே கழகத் தொண்டனுக்கு உண்டு.


இந்த எக்ஸ்ட்ரா பிட்டிங் லக்கேஜுகளை எல்லாம் எதற்காக நாம் நனைந்து சுமக்க வேண்டும்.


இவர்கள் எப்போதுமே நமக்கு உண்மையாக இருக்க மாட்டார்கள். இந்த கோஷ்டி `மக்கள் நல கூட்டணி’ என்ற பெயரில், 2016-இல் நம்மை தோற்கடித்தவர்கள். அந்த கோஷ்டிதான் நமக்காக 2011-இல் நம் பெயரை கெடுத்து, குட்டிச்சுவர் ஆக்கியவர்கள். அவர்களைக் காப்பாற்றி, அவர்கள் வாக்கினால் வெற்றி பெறலாம் என்று  நாம் நினைக்கக்கூடாது.



நலத்திட்ட உதவிகள் என்ற பெயரில், வேஷ்டி சேலை, பிளாஸ்டிக் பக்கெட் கொடுப்பதால் என்ன பயன்? கல்யாண வீட்டில் 95 ரூபாய் வால் கிளாக் கொடுப்பதுபோல் அவற்றை வெறுத்தே விட்டார்கள்.  



இன்னொரு முக்கிய காரணம், `அட்டை மாற்றப்பட்ட நம் தேர்தல் அறிக்கை’. 

இந்த ஐந்து ஆண்டுகள்தான் மறுபடியும் தொடர போகிறது என்கிற பீதி, எல்லோர் மனதிலும் இருந்தது. 


90 லட்சம் பேர் மகளிர் உதவித்தொகை பெறாதவர்கள், நமக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள். 


பொதுப் பணத்தில், பொது பட்ஜெட்டில்  சமூகநீதியை வளர்க்க, ஒரு குறிப்பிட்ட அளவே செலவிட வேண்டும். ஆனால், மொத்த பட்ஜெட்டிலும் பெருந்தொகையை செலவிட்டால், அது அனைவருக்கும் கிடைக்க வேண்டும். 


எடப்பாடி பழனிச்சமி தேர்தல் அறிக்கையில் முக்கியமான  ஆறு  அறிவிப்புகள் இருந்தன. அவை கிராமப்புறங்களில் மிகச்சிறப்பாக வேலை செய்தன.


பத்தாயிரம் பணம்

ஃப்ரிட்ஜ் 

       3) அரிசி கார்டு வைத்திருப்போருக்கு எல்லாம் 2000 

       4) பயிர் கடன் தள்ளுபடி 

       5) கல்வி கடன் தள்ளுபடி 

       6) ஆண்களுக்கும் பஸ்ஸில் இலவச பயணம்.


 

53 இடங்களை எடப்பாடி பெற்றதற்கு காரணம் இந்த அறிக்கைதான். 


ஏகப்பட்ட வாக்குறுதிகள் கொண்ட அறிக்கை, எப்போதும் தேவையே இல்லை. வெறும் பத்தே பத்து கட்டளைகள் போதும். 


கிராமப்புறங்களில், பயிர் கடன் தள்ளுபடியை எதிர்பார்த்து, நான்காண்டுகளுக்கு முன்பே 80 ஆயிரத்திலிருந்து 3 லட்சம் வரை மூன்று இடங்களில் கடன் வாங்கி வைத்திருப்பார்கள் விவசாயிகள். இவர்கள் தள்ளுபடி ஆகும் என்பதற்காகவே, பணத்தை கடன் வாங்கியவர்கள்.

 


 இரண்டாம் உலகப்போருக்குக் காரணம், முதல் உலகப் போரின் உடன்படிக்கைதான் என்று சொல்வார்கள், அது போல 2026 தேர்தலில் தோற்றதற்கு முக்கிய காரணம் 2021 தேர்தல் அறிக்கைதான்.


 தேவை இல்லாமல், அதில் நாம் கொடுத்த வாக்குறுதிகள் நமக்கு எதிராக திரும்பின. கையைக் கொடுத்தால், திமிறி தப்பி விடலாம் வாயைக் கொடுத்தால் தப்ப முடியாது. 


போதாக்குறைக்கு ``உங்களுடன் ஸ்டாலின்’’, ``முதல்வரின் முகவரி’’ ``உங்கள் கனவைச் சொல்லுங்கள்’’ என்று ஒவ்வொரு முறையும் தலைப்பை மாற்றி, மக்களிடம் மனுக்கள் வாங்கியது. இது மிகப்பெரும் பேராபத்தான விஷயம்.  ஏனென்றால், எல்லோருக்கும் இன்று தேவை பணம், பணம் மட்டுமே. 


மனதளவில் அனைவரும் கோடீஸ்வரன்தான். ஆனால் எவனிடமும் காசுதான் இல்லை. அந்தப் பணத்தை எவன் தருகிறானோ, தருகிறேன் என்று எவன்  சொல்கிறானோ அவனையே கடவுளாக எண்ணுகிறான். அந்த அந்த நேரத்தில் கிடைக்கும் பணம், அது தீரும்வரையே நன்றியோடும் மகிழ்ச்சியோடும் இருப்பான். பிறகு அடுத்த தேவைக்கு அடுத்த தொகையைத் தேடுவான். (5,000 முன்னதாக கொடுத்தது.)


அதனால் ஏழைகளிடம் நடுத்தர வர்க்கத்திடம் மனுக்களை வாங்குவது கூடவே கூடாது. சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் கொடுக்கச் சொல்லிவிட வேண்டும்.


ஒவ்வொரு மனுவிலும் ஒரு ஏழையின் ஆன்மா ஒளிந்து இருக்கிறது என்று சொல்வார்கள். அந்த மனுக்களுக்கு நாம் உயிர் கொடுக்காத பட்சத்தில், அந்த மனுவே நமக்கு எதிராகத் திரும்பி விடும். 



எளிய மனிதர்களிடம் இருந்து, எப்போதுமே தலைவர்கள் விலகி இருக்க வேண்டும். நம் மீதுள்ள காரிஷ்மா போய் விடும்.


ஏனென்றால், அவர்களுக்கு என்ன உதவி செய்தாலும், அவர்கள் உங்களின் வாழ்க்கையைத்தான் பரிசாகக் கேட்பார்கள். நான் உன் தோழன் உன் பங்காளி, உன் வீட்டு வீட்டில் ஒருவன், என்பதை எல்லாம் அவன் நம்ப மாட்டான். 



தவிர, ``ரம்ஜானுக்கு போய் நோன்பு கஞ்சி குடிப்பது, கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கேக் சாப்பிடுவது இதைச் செய்பவர்கள், பிள்ளையார் சதுர்த்திக்கு கொழுக்கட்டையும் சாப்பிட வேண்டும்’’ என்ற  அவர்கள் விமர்சனம் வைத்தார்கள். அல்லது நம்முடைய  இந்துக்கள் பாசம் மக்களுக்குத் தெரிகிறதோ இல்லையோ, சோசியல் மீடியாவை வழிபாட்டுத் தெய்வமாகக் கொண்டிருந்த இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் தெரிந்து விட்டது.


 

இவர்கள் ஒன்றும் இந்து மதத்தைத் தூக்கி காப்பாற்ற போகிறவர்கள் அல்ல. ஆனால், இவர்கள் புத்தர் வேஷம் போட்டு, சகல அயோக்கியத்தனங்களுக்கும் தயாரானவர்கள். தங்களை புனிதராக்கி கொண்டு நம்மை குறை சொல்வதற்கு, இது போன்ற மீம்ஸ்களே காரணமாயின. 

thoothukudileaks



சின்னவரின் பேச்சு, பாணி மாற்றப்பட வேண்டிய ஒன்று. ஒரு முறைதான் எடப்பாடி காலில் விழுந்தார். அதை ஒரு கோடிமுறை சொல்லி, நம்மை நாமே நம் மதிப்பைக் குறைத்துக் கொண்டோம் 



`பத்து தோல்வி பழனிச்சாமி 10 தோல்வி பழனிச்சாமி’ என்று சொல்லவே கூடாது. ஏனென்றால் தோல்வியைக் கொண்டு, மற்றவர்களை அவமானப்படுத்தினால், நம்மை அவமானப்படுத்த பிரபஞ்சம் அடுத்த படிக்கட்டில் காத்திருக்கும்.

 

thoothukudileaks

பைபிளில் உள்ள திருவசனத்தைச் சொல்கிறேன். 


தீர்ப்பிடாதிருங்கள்,  தீர்ப்பிடப்படுவீர்கள் என்று ஒரு வசனம் இருக்கிறது.



சில மூட நம்பிக்கைகள். செண்டிமெண்டுகளை நாம் பின்பற்றிவிட்டுப் போனால்தான் என்ன?


வள்ளுவர் கோட்டத்திற்குள் போகக்கூடாது, என்றால், போகாமல் இருப்பது தானே நல்லது. ஏற்கனவே அதற்கு உதாரணங்கள் இருக்கும்போது, அவற்றை நான் உடைப்பேன் என்று பேசுவது தவறு. 


மதத்தையும் சாதியையும் சமமாக நடத்திச் செல்வது, நமக்கு பலன் தரும் அல்லது அது பற்றி பேசாமல் இருப்பது நமக்குப் பலன் தரும். 


எல்லா தெய்வங்களும் வேண்டாம் என்பவனும், எல்லா தெய்வங்களும் வேண்டும் என்பவனும் ஒன்றுதான். இரண்டாவதை விஜய் செய்திருக்கிறான். 


அரசு ஊழியர்களுக்கு, அவர்களின் சம்பளம் உயர்வதற்கு தி.மு.க. தேவை.  அவர்கள் வேலை பார்க்காமல், சும்மா இருந்து சம்பளம் வாங்குவதற்கு, அண்ணா தி.மு.க. தேவை. அவர்கள் எப்போதுமே நமக்கு விசுவாசமாக இருக்கவே மாட்டார்கள். ஆளும் அரசாங்கத்தை மிரட்டியே காரியம் சாதிப்பார்கள். 


இலவசப் பயணத்தால் போக்குவரத்து ஊழியர்கள், ஆட்டோக்காரர்கள் நமக்கு எதிராகச் செயல்பட்டார்கள். இலவச பஸ் என்றால் திருப்பதி மலையில் இருக்கும் ஃப்ரீ பஸ் போல முழுவதும் இலவசமாக இருக்கவேண்டும். அதில் பெண்கள் மட்டுமே பயணிக்கட்டும். காசு கொடுத்து டிக்கெட் எடுத்த ஆம்பளை பஸ்ஸின் டெரிமினஸில் இருந்து டெபோ வரை நின்று கொண்டு வருவான். பெண்கள் ஜன்னல் ஓர சீட்டாகப் பார்த்து இரண்டு பக்கம் உட்கார்ந்து கொண்டு வருவார்கள். அவர்களை எழுந்திரிக்கவும் சொல்லமுடியாது. 


நான் சொல்வது எல்லாம் பொது புத்தியில் சிந்தித்து எழுதியவைதான். `பொது புத்தியில் சிந்திக்காதே’ என்றே சிலர் சொல்லி சிலர் உங்களைக் குழப்புவார்கள்.


 பொது புத்தியில் ஒருத்தன் சிந்திக்கிறான் என்றால், பெரும்பான்மையை தானே அவன் சொல்லுவான். இங்கு நீங்கள் விதிவிலக்கைப் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கக் கூடாது. விதிவிலக்குகள் சட்டங்கள் ஆவதில்லை. 


விஜய்க்கு, இளைஞர்களில் பலர் நம்முடைய கலைஞர் தந்த நுழைவுத் தேர்வு இல்லாத பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படித்தவர்கள்தான் நன்றி கெட்டுப் போய் இன்று வாக்களித்து இருக்கிறார்கள்.


 இந்த கேடு கெட்டவர்களுக்கு நாம் பெரிய கதவைத் திறந்து விட்டதால்தான் சென்னையில் நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கை மிகவும் நசிவுற்று போய்விட்டது. 


விலைவாசிகள் பெரிய அளவில் உயர்வதற்கு, அரசு ஊழியர்கள்தான் காரணம் என்று 50 ஆண்டுகளுக்கு முன் சொல்வார்கள். ஏனென்றால், நமது ஆட்சியில்தான் அரசு ஊழியர்களுக்கு தாறுமாறான சம்பளம் அதிக சம்பளம் வாங்குகிறவன் சின்ன பொருளுக்கே கூடுதலாக காசைக் கொடுத்து வாங்கி செல்வான்.  




விஜயை அரச கட்டிலில் உட்கார வைத்துவிட்டு, சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை விட்டு திட்ட விடுவதால், இனி என்ன பயன் நடந்து விடப் போகிறது. முளையிலேயே கிள்ளி எறிந்து இருக்க வேண்டும்.


 பெருந்தன்மைக்கும் நல்லவர்களுக்குமான காலம் இதுவல்ல. இது சந்தர்ப்பவாதிகளுக்கான உலகம். `தகுதி உள்ளது தப்பி பிழைக்கும்’ என்று சொன்னாலே அது சந்தர்ப்பவாதம்தானே.


 `பல் இருக்கிறவன் பக்கோடா தின்பான்’ என்றால் அந்தப் பல்லை உடைப்பதுதானே நம் வேலை.


எம்.ஜி.ஆருடன் விஜயை ஒப்பிடாதீர்கள் என்பார்கள். என்.டி.ராமராவ் ஒன்பதே மாதத்தில் ஆட்சிக்கு வந்தார். 

விஜய்க்கு இரண்டு ஆண்டுகள் பிடித்திருக்கிறது. அவரது முகமும் விசில் சின்னமும் போதும் என்பதை தேர்தல் சொல்லி இருக்கிறது.


`எம்.ஜி.ஆர் மதிப்பு ஒன்று மற்றவர்கள் எல்லாம் பூஜ்ஜியம்தான்’ அவர் அருகில் நிற்கும் போது, அவர்களுக்கு மதிப்பு கூடி விடுகிறது.நினைத்தே பார்க்கமுடியாதவர்கள் எல்லாம் இன்று வெற்றிபெற்று அரசவைக்குச் செல்லுகிறார்கள்.


 கிறிஸ்தவர்களிடம் கிறிஸ்துவராகவும்,

 மீனவர்களிடம் மீனவராகவும், மாணவர்களிடம் மாணவனாகவும் இஸ்லாமியர்களிடம் இஸ்லாமியராகவும், இந்துக்களிடம் இந்துக்களாகவும் மாறி இருக்கிறார். 


இவற்றுக்கெல்லாம் முடிவாக, தலைவருக்கு இப்பொழுது அஷ்டம சனி அது அவமானத்தைத் தந்தே தீரும். அதை அனுபவித்து கடந்து செல்வோம். சபைக்கு தலைவர் செல்லாமல் இருப்பது நமக்குக்  கிடைத்த நல் வாய்ப்பு.

thoothukudileaks


சின்னவருக்கு பெரிய யோகம் இருக்கிறது. இது நமக்கு ஒருவிதத்தில் மிகவும் நல்லது. நாம் இறங்கி நிறைய வேலைகள் செய்ய வேண்டி இருக்கிறது. அந்த வேலைகளை புதிய திசையில் புதிய கோணத்தில் செயல்பட்டு, வெற்றி அடைவோம்.


 நன்றி வணக்கம்


அன்புடன்,

எஸ்.கதிரேசன்.

திங்கள், 25 மே, 2026

தூத்துக்குடி முன்னாள் எம்.எல்.ஏ பெரியசாமியின் 9-ஆம் ஆண்டு நினைவு தினம் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் மற்றும் திமுகவினர் மலரஞ்சலி! ஏழைகள் வேட்டி சேலை வழங்கி அன்னதானம் நடைபெற்றது

Tamil Nadu updates

photo news by Arunan journalist 

தூத்துக்குடி: மே26

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும், திமுகவின் மறைந்த தூத்துக்குடி மாவட்டச் செயலாளருமான 'முரட்டு பக்தர் ' பெரியசாமியின் 9-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (மே 26) அனுசரிக்கப்பட்டது.

thoothukudileaks


thoothukudileaks






​இதையொட்டி, தூத்துக்குடி போல்பேட்டையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் (சமாதி) தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பெ. கீதா ஜீவன், அவரது சகோதரரும் தூத்துக்குடி மாநகராட்சி மேயருமான என்.பி. ஜெகன் ஆகியோர் தலைமையில் திமுகவினர் திரளாகக் கூடி மாலை அணிவித்து, மலர் தூவி நெஞ்சார்ந்த மரியாதை செலுத்தினர்.

thoothukudileaks


​பொதுமக்களுக்கு அன்னதானம்

​நினைவஞ்சலி நிகழ்ச்சியைத் தொடர்ந்து, தூத்துக்குடி கீதா ஹோட்டல் வளாகத்தில் மறைந்த பெரியசாமியின் நினைவு நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வேட்டி சேலை வழங்கப்பட்டது அதனை தொடர்ந்து பிரம்மாண்ட அன்னதான வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

​இந்த அன்னதான நிகழ்வை முன்னாள் அமைச்சர் பெ. கீதா ஜீவன் மற்றும் மேயர் என்.பி. ஜெகன் ஆகியோர் முறைப்படி தொடங்கி வைத்தனர்.

​திமுகவினர் திரளாகப் பங்கேற்பு

​. இந்நிகழ்வில் ...

திருச்செந்தூர் எம்எல் ஏ அனிதா ராதாகிருஷ்ணன், கோவில் பட்டி கருணாநிதி எம்எல்ஏ, விளாத்திகுளம் எம்எல்ஏ, மார்க்கண்டேயன் மற்றும் அஜிதா ஆர்கனல் தூத்துக்குடி மாநகராட்சி மண்டலத் தலைவர்கள், பகுதிச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் ஏராளமான திமுக தொண்டர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். 


தூத்துக்குடி மாவட்ட அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய பெரியசாமியின் நினைவு தினத்தில் ஒட்டுமொத்த திமுகவினரும் திரண்டிருந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

திங்கள், 18 மே, 2026

தூத்துக்குடியில் மாநகராட்சி வணிக வளாகங்கள் ஆய்வு மாவட்ட திமுக பிரதிநிதி இல்லத் திருமண விழாவில் கனிமொழி எம்.பி. பங்கேற்பு

Tamil Nadu updates 

news by Arunan journalist 

தூத்துக்குடி, மே 18:

இன்று (18.05.2026) திங்கள்கிழமை, தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சிதம்பரநகரில் அமைந்துள்ள மாநகராட்சி வணிக வளாகம் மற்றும் ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலைய வணிக வளாகம் ஆகிய பகுதிகளை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

thoothukudileaks


thoothukudileaks

பாராமரிப்பு பணி ஒழுங்காக நடக்கிறததா???

அப்போது வணிக வளாகங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகள், பொதுமக்கள் பயன்பாடு, கடை அமைப்புகள் மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். 

thoothukudileaks


வணிகர்களுக்கு ஆலோசனை!!

மேலும், பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் தேவைகள் தொடர்பாக ஆலோசனைகளும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

thoothukudileaks


திருமணம் நிகழ்ச்சி பங்கேற்பு!!!


இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி அபிநயா மஹாலில் நடைபெற்ற மாவட்ட திமுக பிரதிநிதி  பொன்ராஜ் அவர்களின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட கனிமொழி எம்.பி., மணமக்கள் சக்தி லிங்கேஸ்வரன் – சிவா பிரியா ஆகியோருக்கு திருமண வாழ்த்துகளை தெரிவித்தார்.

thoothukudileaks

thoothukudileaks


இந்த நிகழ்வுகளில் மாவட்ட கழகச் செயலாளர் கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் பிரியங்கா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வியாழன், 14 மே, 2026

சூரியன் திரும்ப உதித்தே தீரும்! தோல்விக்கான முழு பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை மே14

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில், திமுக தலைவர் M. K. Stalin உணர்ச்சி பொங்க உரையாற்றினார். 

தேர்தல் தோல்வி, கட்சியின் எதிர்காலம், சமூக வலைத்தள அரசியல், அமைப்பு மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து அவர் விரிவாக பேசினார்.

சூரியன் திரும்ப உதித்தே தீரும்!!!

“என்ன ஆனாலும் சரி, சூரியன் ஒருபோதும் மறையாது. திரும்ப உதித்தே தீரும். சூரியன் இல்லாமல் எதுவும் நடக்காது. இது தமிழ்நாட்டு அரசியல் நியதி” என உரையை தொடங்கிய ஸ்டாலின், நடந்து முடிந்த தேர்தலில் திமுக ஆட்சியை அமைக்க முடியாத போதிலும், கணிசமான வாக்கு விகிதத்தை பெற்றிருப்பதை சுட்டிக்காட்டினார்.

thoothukudileaks


இப்போதும் வெற்றி தான்!!

1989, 1996, 2006 ஆகிய தேர்தல்களுக்கு பின்னர் ஏற்பட்ட தோல்விகளை நினைவுகூர்ந்த அவர், “அப்போது விட தற்போது திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த முறை 59 இடங்களில் வென்றிருக்கிறோம். கூட்டணியுடன் சேர்த்து பார்த்தால் 73 இடங்கள் கிடைத்துள்ளன” என்றார்.

அலெட்சியம்!!

மேலும், “திமுகதான் வெற்றி பெறும் என நினைத்து அலட்சியமாக வாக்களித்ததாக பலர் சமூக வலைத்தளங்களில் வருத்தப்படுகிறார்கள். இது நமது ஐந்தாண்டு நல்லாட்சிக்கு கிடைத்த அங்கீகாரம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

திமுக தோல்வி முழு பொறுப்பு!!!

தோல்விக்கான காரணம் குறித்து யாரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்ட வேண்டாம் என வலியுறுத்திய ஸ்டாலின், “கழகத்தின் தலைவர் என்ற முறையில் இந்த தோல்விக்கான முழு பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்கிறேன்” என தெரிவித்தார்.

தனி இணையதளம்!!!

கட்சியின் அமைப்பு மற்றும் செயல்பாடுகளில் பெரிய மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்றும், தொகுதி வாரியாக கள ஆய்வு நடத்தி 20 நாட்களுக்குள் அறிக்கை பெற குழு அமைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். மேலும், கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் கருத்து தெரிவிக்க தனி இணையதளம் தொடங்கப்படும் எனவும் கூறினார்.

அறிவுரை!!!

சமூக வலைத்தளங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், “முன்னாடி டீக்கடையில பேசின அரசியலை, இனிமே சோஷியல் மீடியாவில் பேசியாகணும்” என நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

கணிப்பு!!!

அதிமுக மற்றும் ஆளும் கூட்டணி நிலைமை குறித்து பேசிய ஸ்டாலின், “அடுத்த அரசியல் சூழல் எப்படி மாறும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. ஆனால் சட்டமன்றத்தில் திமுக வலுவான எதிர்க்கட்சியாக செயல்படும்” என்றார்.

தோல்வி தற்காலிகமே!!!

இறுதியாக, “இந்த தோல்வி தற்காலிகம் தான். திட்டமிடுவோம், தீவிரமாக உழைப்போம், மீண்டு வருவோம், மீண்டும் வெற்றி பெறுவோம்” என உற்சாகமாக உரையை நிறைவு செய்தார்.

வெள்ளி, 17 ஏப்ரல், 2026

தூத்துக்குடி பெரிய ஜாமியா பள்ளிவாசல் உள்ளே அதிமுக திமுக தவெக உட்பட ஐந்து கட்சிகள் அதிரடியாக கட்சி பிரச்சாரம் செய்திட தள்ளுமுள்ளு பரபரப்பு காவல்துறை திணறல்

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி செய்தி புகைப்படங்கள் அருணன் செய்தியாளர் 

தூத்துக்குடி ஏப்ரல் 17

தூத்துக்குடி பெரிய  ஜாமியா பள்ளிவாசல் உள்ளே அதிமுக திமுக தவெக கட்சி பிரச்சாரத்தில் தள்ளுமுள்ளு   திணறி போன் தூத்துக்குடி காவல்துறை.

தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் (ஏப்ரல் 17)  இன்று வெள்ளிக்கிழமை ஆதலால் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த வருவார்கள்

thoothukudileaks
அதிமுக வேட்பாளர் சித செல்லப்பாண்டியன் குல்லா அணிந்தவாறு...


காத்துகிடந்த அதிமுக!!!

இதை கருத்தில் கொண்டு அதிமுக வேட்பாளர் சித செல்லப்பாண்டியன் முன்னதாக தொழுகை நேரத்தில் இருந்து ஜாமியா பள்ளிவாசல் உள்ளே அலுவலக அறையில் காத்திருந்தார்.

 அப்போது அனுமதி பெற்றதை காட்டுங்க என்ற போலீஸ் பெண் அதிகாரி கேட்டதும் இன்று ஷாட் பிரச்சார விவரத்தை காவல்துறை இடம் காட்டினார். 

ஜாமியா பள்ளி வாசல் தொழுகை முடிந்ததும் மக்கள் வெளிவர ... தொடங்கினர் அதிமுக வேட்பாளர் சித செல்லப்பாண்டியன்  தலைமையில் குல்லா அணிந்து வாறு தனது கட்சியினர் இம்ரான் நாசர் ஜெய்கணேஷ்  ஜான்சன் தேவராஜ் தங்க மாரியம்மன் மிக்கேல் ஆகியோர் உடன் அதிமுக வாக்குறுதி துண்டு பிரசுரங்கள் வழங்கி தொடங்கினர் நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது 

பதறி போன திமுக!!!

இதைப் பார்த்த திமுக வினர் ரொம்பவே பதறி போய் கவுன்சிலர் சுரேஷ் உள்ளிட்ட பலர் பள்ளி வாசல் உள்ளே வந்து திமுக வாக்குறுதி துண்டு பிரசுரங்கள் வழங்க வந்தார்கள்.

thoothukudileaks
திமுக கவுன்சிலர் சுரேஷ் உள்ளிட்டோர் 


 பிரச்சனை வரும் என கருதி நீங்களும் அனுமதி பெறாமல் உள்ள வர வேண்டாம் என்று தடுக்க அதை மீறி பள்ளி வாசல் உள்ளே வந்து அதிமுக வேட்பாளர் சித செல்லப்பாண்டியன் துண்டு பிரசுரங்கள் வழங்கும் அவர் அருகிலே உதயசூரியன் ஒட்டு போடுங்கள் என கூறியபடி  துண்டு பிரசுரங்கள் வழங்க பரபரப்பு உண்டானது. கைகலப்பு மோதல் ஏற்படும் சூழல் உருவாகியது .

thoothukudileaks
வேட்பாளர் கிதர் பிஸ்மி 


போலிஸ் திணறிய நிலையில் வேல்முருகன் கட்சியான தமிழக வாழ்வுரிமைக் வேட்பாளர் கிதர் பிஸ்மி அவரது சின்னமான கேமிரா உடன் வந்தார் 

வேட்பாளர் ஏசாதுரை 

அடுத்து சசிகலா கட்சி புரட்சி  முன்னேற்ற கழக வேட்பாளர் ஏசாதுரை தனது கட்சி நிர்வாகிகள் உடன் ஓடோடி வந்து சேர்ந்தார்.

பறந்தோடி வந்த தவெக !!!

கடைசியாக இந்த செய்தி கேள்விப்பட்ட விஜய் கட்சி தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் ரசிகர்கள் இளைஞர்கள் பட்டாளத்துடன் பறந்தோடி வந்து துண்டுபிரசுரங்கள் வழங்க போலீசார் சில மணி திணிறித்தான் போனார்கள்

thoothukudileaks
தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் 


ஒரே நேரத்தில் பல கட்சிகள் குவிந்ததால் போலீஸார் சிறிது நேரம் திணறிப் போனாலும், பின்னர் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

thoothukudileaks


தேர்தல் நெருங்க நெருங்க வழிபாட்டுத் தலங்களும் அரசியல் களமாகி வருவது இந்த சம்பவம் மூலம் தெளிவாகிறது.

thoothukudileaks


— தூத்துக்குடி லீக்ஸ் நிருபர்





சனி, 4 ஏப்ரல், 2026

திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்துதூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவனுக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி 

news by Arunan senior reporter weekly

தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவனுக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக நலத்துறை அமைச்சரான கீதாஜீவனுக்கு எதிராக கிராம மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

thoothukudileaks




தூத்துக்குடி அருகிலுள்ள அத்திமரப்பட்டி, முள்ளக்காடு, பொட்டல்காடு, சவேரியார்புரம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள உப்பளங்களை அழித்து கப்பல் கட்டும் தளம் அமைக்க முயற்சிகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த திட்டத்திற்கு அமைச்சரான கீதாஜீவன் உடந்தையாக உள்ளதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


இதனைத் தொடர்ந்து, அந்த பகுதிகளில் வாக்கு சேகரிக்க சென்ற அமைச்சருக்கு எதிராக ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் மற்றும் உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் இணைந்து கருப்புக்கொடி ஏந்தி திமுக வேட்பாளர் கீதா ஜுவன்  வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களும் எழுப்பப்பட்டன.

போராடும் போது கண்டு கொள்ளாதவர் என குற்றச்சாட்டு!!!

கடந்த காலங்களில் தாங்கள் போராடும் போது கலந்து கொள்ளவும் கண்டு கொள்ளவும் இல்லை இப்போது எதற்கு வருகின்றனர் என கேள்வி எழுப்பினார்கள் 

மேலும் இதேபோல், நேற்று(4-3-2026) திருச்செந்தூர் பகுதியில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் பிரச்சாரத்திற்கு சென்றபோது, கிராம மக்கள் அவரை உள்ளே வரவிடாமல் தடுத்து விரட்டி அடித்த சம்பவமும் குறிப்பிடத்தக்கது.

இந்த தொடர் எதிர்ப்புகள் தூத்துக்குடி மாவட்டத்தில் அரசியல் சூழ்நிலையை சூடுபிடிக்க வைத்துள்ளன

குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக வேட்பாளர்கள் பிரச்சாரம் பண்ண வருகையில் பொதுமக்கள் தங்களது எதிர்ப்புகளை காட்டி வருகின்றனர் 

ஓட்டப்பிடாரம் தொகுதியில் திமுக வேட்பாளர் ராம ஜெயம் வேட்பு மனு தாக்கல் – கூட்டணி கட்சிகளின் ஆரவார ஊர்வலம்,

தூத்துக்குடி லீக்ஸ் | நாளிதழ் செய்தி

தூத்துக்குடி, ஏப்ரல் 4:

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில், திமுக வேட்பாளர் ராம ஜெயம் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

thoothukudileaks


இதற்கு முன்னதாக, மதசார்பற்ற கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மக்கள் நீதி மய்யம், தேமுதிக மற்றும் கம்யூனிஸ்ட் காங்கிரஸ் கட்சி  நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் இணைந்து ஆரவாரமாக ஊர்வலமாக திரண்டனர். அவர்கள் ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகம் வரை பேரணியாக சென்றனர்.

thoothukudileaks
திமுக வேட்பாளர் ராமஜெயம் 


இந்த ஊர்வலத்தின் காரணமாக அப்பகுதியில் சில மணி நேரத்திற்கு  பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு பணிக்காக காவல்துறை பலப்படுத்தப்பட்டிருந்தது.

வேட்பு மனு தாக்கல் நிகழ்வில் கட்சி நிர்வாகிகள், கூட்டணி தலைவர்கள் மற்றும் பல்வேறு பகுதி ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். தேர்தல் சூழல் காரணமாக ஓட்டப்பிடாரம் பகுதியில் அரசியல் சூடுபிடித்துள்ளது.

சனி, 14 மார்ச், 2026

பாஜக அரசை கண்டித்து திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தூத்துக்குடியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

Tamil Nadu updates photo news by Arunan journalist 

தூத்துக்குடி, மார்ச் 15:

மத்திய பாஜக அரசை கண்டித்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தூத்துக்குடியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

thoothukudileaks

.

இந்த ஆர்ப்பாட்டம் 15.03.2026 அன்று காலை 10.30 மணியளவில் தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் எதிரில் நடைபெற்றது.


 சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

thoothukudileaks


ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை வழங்கவில்லை என்றும், பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. “தமிழ்நாட்டுக்கு திட்டங்களும் இல்லை, அடுப்பு எரிக்க கேஸ் சிலிண்டரும் இல்லை” எனக் கூறி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

thoothukudileaks

thoothukudileaks


மேலும், தமிழ்நாட்டின் உரிமைகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்களுக்கு மத்திய அரசு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

thoothukudileaks

thoothukudileaks


இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த பல்வேறு நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

சனி, 28 பிப்ரவரி, 2026

தூத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின் 73வது பிறந்த நாள்: புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கல்

 Tamil Nadu updates photo news by Arunan journalist 

தூத்துக்குடி, மார்ச் 1 –

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் 73வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் திமுக சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் வளாகத்தில் இன்று காலை நடைபெற்ற இந்த நிகழ்வில், திமுக தொண்டர்கள் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு இனிப்பு லட்டு வழங்கி மகிழ்ச்சி பகிர்ந்தனர். பேருந்து நிலையம் வழியாக பயணம் செய்த நூற்றுக்கணக்கான பயணிகள் இனிப்பை பெற்றுக் கொண்டு முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் செயலாளர்கள் பங்கேற்று, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு பல்வேறு துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவித்தனர். பொதுமக்களுடன் கலந்துரையாடியும் வாழ்த்து பரிமாறியும் நிகழ்ச்சி உற்சாகமாக நடைபெற்றது.

முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பல்வேறு சமூக நலத்திட்டங்கள் மற்றும் நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.