சென்னை மே14
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில், திமுக தலைவர் M. K. Stalin உணர்ச்சி பொங்க உரையாற்றினார்.
தேர்தல் தோல்வி, கட்சியின் எதிர்காலம், சமூக வலைத்தள அரசியல், அமைப்பு மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து அவர் விரிவாக பேசினார்.
சூரியன் திரும்ப உதித்தே தீரும்!!!
“என்ன ஆனாலும் சரி, சூரியன் ஒருபோதும் மறையாது. திரும்ப உதித்தே தீரும். சூரியன் இல்லாமல் எதுவும் நடக்காது. இது தமிழ்நாட்டு அரசியல் நியதி” என உரையை தொடங்கிய ஸ்டாலின், நடந்து முடிந்த தேர்தலில் திமுக ஆட்சியை அமைக்க முடியாத போதிலும், கணிசமான வாக்கு விகிதத்தை பெற்றிருப்பதை சுட்டிக்காட்டினார்.
இப்போதும் வெற்றி தான்!!
1989, 1996, 2006 ஆகிய தேர்தல்களுக்கு பின்னர் ஏற்பட்ட தோல்விகளை நினைவுகூர்ந்த அவர், “அப்போது விட தற்போது திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த முறை 59 இடங்களில் வென்றிருக்கிறோம். கூட்டணியுடன் சேர்த்து பார்த்தால் 73 இடங்கள் கிடைத்துள்ளன” என்றார்.
அலெட்சியம்!!
மேலும், “திமுகதான் வெற்றி பெறும் என நினைத்து அலட்சியமாக வாக்களித்ததாக பலர் சமூக வலைத்தளங்களில் வருத்தப்படுகிறார்கள். இது நமது ஐந்தாண்டு நல்லாட்சிக்கு கிடைத்த அங்கீகாரம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
திமுக தோல்வி முழு பொறுப்பு!!!
தோல்விக்கான காரணம் குறித்து யாரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்ட வேண்டாம் என வலியுறுத்திய ஸ்டாலின், “கழகத்தின் தலைவர் என்ற முறையில் இந்த தோல்விக்கான முழு பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்கிறேன்” என தெரிவித்தார்.
தனி இணையதளம்!!!
கட்சியின் அமைப்பு மற்றும் செயல்பாடுகளில் பெரிய மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்றும், தொகுதி வாரியாக கள ஆய்வு நடத்தி 20 நாட்களுக்குள் அறிக்கை பெற குழு அமைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். மேலும், கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் கருத்து தெரிவிக்க தனி இணையதளம் தொடங்கப்படும் எனவும் கூறினார்.
அறிவுரை!!!
சமூக வலைத்தளங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், “முன்னாடி டீக்கடையில பேசின அரசியலை, இனிமே சோஷியல் மீடியாவில் பேசியாகணும்” என நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
கணிப்பு!!!
அதிமுக மற்றும் ஆளும் கூட்டணி நிலைமை குறித்து பேசிய ஸ்டாலின், “அடுத்த அரசியல் சூழல் எப்படி மாறும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. ஆனால் சட்டமன்றத்தில் திமுக வலுவான எதிர்க்கட்சியாக செயல்படும்” என்றார்.
தோல்வி தற்காலிகமே!!!
இறுதியாக, “இந்த தோல்வி தற்காலிகம் தான். திட்டமிடுவோம், தீவிரமாக உழைப்போம், மீண்டு வருவோம், மீண்டும் வெற்றி பெறுவோம்” என உற்சாகமாக உரையை நிறைவு செய்தார்.
.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக