பிரஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 23 அக்டோபர், 2025

தமிழக அரசை கண்டித்து தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டத்தில் அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டதால் சலசலப்பு

தூத்துக்குடி, அக்.23 - பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டு மனை வழங்கப்படாததை கண்டித்து இன்று (வியாழன்) காலை தூத்துக்குடி பிரஸ் கிளப் அலுவலகம்

thoothukudileaks

முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


தூத்துக்குடியில் வசிக்கும் பத்திரிகையாளர்களின் 30 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட நாள் கோரிக்கையான சலுகை விலை வீட்டு மனை வழங்கப்படாததை கண்டித்து தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.




காலை 11 மணியளவில் தூத்துக்குடி பிரஸ் கிளப் சங்க தலைவர் சண்முகசுந்தரம் தலைமையிலும், செயலாளர் மோகன் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் தொடங்கியது.

அரசியல் தலைவர்களின் வருகையால் சலசலப்பு

ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த பத்து நிமிடங்களில், அதிமுக முன்னாள் அமைச்சர் சிட செல்லப்பாண்டியன், முன்னாள் மேயர் அந்தோனி கிரேஸி, வழக்கறிஞர் செங்குட்டுவன், பாஜக ராஜவேலு உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் திடீரெனக் கலந்துகொண்டதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

"2026 ல் அதிமுக  ஆட்சியில் வீட்டு மனை தருவோம்" - முன்னாள் அமைச்சர் உறுதி

இதையடுத்து முன்னாள் அமைச்சர் சித செல்லப்பாண்டியன் பேசுகையில், ...

"கடந்த அதிமுக ஆட்சியில் இந்த பத்திரிகையாளர் சங்கத்திற்கு இடம் தொடர்பான விஷயங்களை செய்து கொடுத்தோம். அதை அவர்கள் மறக்கவில்லை" என்று குறிப்பிட்டார்.

"இன்னும் சில மாதங்களில் அதிமுக ஆட்சி வந்துவிடும். புரட்சித் தமிழர் எடப்பாடியார் நிச்சயமாக தூத்துக்குடியில் ஒருவர் விடாமல் இங்குள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் சலுகை விலையில் வீட்டு மனைகள் தருவோம் என உறுதி கூறுகிறேன்" என்று அவர் தெரிவித்தார்.

"பத்திரிகையாளர்கள் மற்றவர்கள் உரிமை பிரச்சினைக்காக போராடும்போது பக்கபலமாக தோள் கொடுப்பார்கள், போட்டோ எடுப்பார்கள். இன்று பத்திரிகையாளர்களே தங்கள் உரிமைக்காக இந்த அவல ஆட்சியில் போராட்ட நிலைக்குத் தள்ளப்பட்டு, அவர்களை யாரோ போட்டோ எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் பாருங்களேன்" என்று அவர் குறிப்பிட்டார்.


video பார்க்க 

பல்வேறு சங்கத் தலைவர்கள் பங்கேற்பு

ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடியில் உள்ள அனைத்துப் பத்திரிகை சங்கங்களின் தலைவர்கள் டூட்டி முருகன், உதயம் பிரான்சிஸ் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

thoothukudileaks




(நமது சிறப்பு நிருபர் அறிக்கை)

செவ்வாய், 30 செப்டம்பர், 2025

சரஸ்வதி பூஜை முன்னிட்டு தூத்துக்குடி பிரஸ் கிளப் உறுப்பினர்களுக்கு பூஜைக்கான 12 வகையான தொகுப்புகள் அடங்கிய பொருள்களை பிரஸ் கிளப் நிர்வாகிகள் வழங்கினர்.

தூத்துக்குடி செப், 30 


சரஸ்வதி பூஜை  முன்னிட்டு தூத்துக்குடி பிரஸ் கிளப் அலுவலகத்தில் ஆண்டுதோறும்  பூஜை செய்வது வழக்கம் இதில் அனைத்து பத்திரிகையாளர்களும் கலந்து கொண்டு  சிறப்பிப்பார்கள். 


வீடியோ பார்க்க 


அதன்படி அக்,1 நாளை நடைபெறும் சரஸ்வதி பூஜை முன்னிட்டு  பிரஸ் கிளப்  அலுவலகத்தில் சிறப்பு பூஜை  நடத்த முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில். இன்று  தூத்துக்குடி பிரஸ் கிளப்  உறுப்பினர்கள் அனைவருக்கும்  சரஸ்வதி பூஜையை சிறப்பாக  கொண்டாடும் விதமாக தூத்துக்குடி  பிரஸ் கிளப் நிர்வாகம்  சார்பில்  

அச்சு வெல்லம்,

 பச்சரிசி,

 கொண்டைக்கடலை, 

 பொரி,அவல், பொரிகடலை, ஏலக்காய், முந்திரி, கிறிஸ்மஸ் பழம், சந்தனம், விபூதி, குங்குமம் உள்ளிட்ட 

 பூஜைக்கான 

12 வகையான தொகுப்புகள் அடங்கிய பொருள்களை பிரஸ் கிளப் நிர்வாகிகள் மன்ற உறுப்பினர்களுக்கு இன்று வழங்கினர்.

 தூத்துக்குடி பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் ராஜு, துணைத் தலைவர் சிதம்பரம், இணைச் செயலாளர் சதீஷ்குமார், ஆகியோர் தலைமையில்  கௌரவ ஆலோசகர்கள், அன்பழகன், அருண், ஆத்திமுத்து ஆகியோர் முன்னிலையில்  

 உறுப்பினர்கள் அனைவருக்கும் பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினர்கள் முத்துராமன் 

மாரி ராஜா, கண்ணன், லட்சுமணன், இருதயராஜ்  மற்றும் உறுப்பினர்கள் ஜாய்சன், ராமச்சந்திரன், கற்பகநாதன், இசக்கி ராஜா, மாரிமுத்து, பாலகிருஷ்ணன், ரமேஷ், சேகர், சூர்யா, சந்தன ரமேஷ், முத்துக்குமார், அருள்ராஜ், நடராஜன், கார்த்திகேயன், ஜெயராமன், நீதி ராஜன், மாணிக்கம், செய்யது அலி சித்திக், உள்ளிட்ட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு  சிறப்பித்தனர்.

வியாழன், 6 பிப்ரவரி, 2025

தூத்துக்குடி செய்தியாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா – மாவட்ட ஆட்சியர் உறுதி

தூத்துக்குடி செய்தியாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா – மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.



இது பற்றிய செய்தியாவது:-


தூத்துக்குடி: மாவட்டத்திலுள்ள செய்தியாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் உறுதியளித்தார்.


தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் செய்தியாளர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு வழங்கினர். செயலாளர் மோகன்ராஜ், பட்டா வழங்கும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கி, இதுவரை ஏற்பட்ட தடைகளை பற்றி ஆட்சியரிடம் எடுத்துக்கூறினார்.



இதுகுறித்து, செய்தியாளர்கள் உரிய தீர்வு கிடைக்காவிட்டால், போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளதாக தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியர், எந்த போராட்டத்திலும் ஈடுபட தேவையில்லை என்றும், அனைத்து செய்தியாளர்களுக்கும் விரைவில் இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார்.


மேலும், உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அருகில் இருந்த வருவாய் கோட்டாட்சியர் பிரபுவுக்கு அவர் உத்தரவிட்டார்.


இந்த சந்திப்பில், பொருளாளர் ராஜு, இணைச் செயலாளர் சதீஷ்குமார், கௌரவ ஆலோசகர் பாலகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் லட்சுமணன், முத்துராமன், ராஜன், டேவிட் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


வியாழன், 2 ஜனவரி, 2025

தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் அமைச்சர் கீதாஜீவனுக்கும் மேயர் ஜெகனுக்கும் புத்தாண்டு வாழ்த்து

தூத்துக்குடி, ஜன. 3:


தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் அமைச்சர் கீதாஜீவனுக்கும் மேயர் ஜெகனுக்கும் புத்தாண்டு வாழ்த்து

2025ம் ஆண்டின் புத்தாண்டை முன்னிட்டு, தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் அமைச்சர் கீதாஜீவனுக்கும் மேயர் ஜெகன் பொியசாமிக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.



தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சருமான கீதாஜீவனை, போல்பேட்டையில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்த பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் ராஜு, துணைத் தலைவர் சிதம்பரம் உள்ளிட்டோர், புத்தாண்டு வாழ்த்துகளுடன் டைரி மற்றும் காலண்டரை வழங்கினர்.


அதேபோல், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமியையும், போல்பேட்டை முகாம் அலுவலகத்தில் சந்தித்து, பிரஸ் கிளப் சார்பில் டைரி மற்றும் காலண்டரை வழங்கினர்.


 இதில் செயற்குழு உறுப்பினர்கள் டேவிட்ராஜா, முத்துராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



இந்த நிகழ்வுகளில் பல முக்கிய பிரஸ் கிளப் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


செவ்வாய், 31 டிசம்பர், 2024

தூத்துக்குடி பிரஸ் கிளப்பில் புத்தாண்டு கொண்டாட்டம்

தூத்துக்குடி பிரஸ் கிளப்பில் புத்தாண்டு கொண்டாட்டம்

---------------------------------------------------

பத்திரிகையாளர்கள் கேக் வெட்டி, வெடி வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்


தூத்துக்குடி,2025 ஜன.1:


தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் 2025-ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் தமிழ் சாலையில் உள்ள கிளப் தலைமை அலுவலகத்தில் நள்ளிரவு 12 மணிக்கு விமரிசையாக நடைபெற்றது.



பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம் மற்றும் செயலாளர் மோகன்ராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் துணைத் தலைவர் சிதம்பரம், மூத்த பத்திரிகையாளரும் கௌரவ ஆலோசகருமான ஆத்திமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



செயற்குழு உறுப்பினர்களான மாரிராஜா, முத்துராமன், கண்ணன் உள்ளிட்டோர் முன்னிலையில் தூத்துக்குடி பிரஸ் கிளப் பெயர் பொறிக்கப்பட்ட சிறப்பு கேக் வெட்டப்பட்டது. தொடர்ந்து பத்திரிகையாளர்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். அனைவருக்கும் கேக் வழங்கப்பட்டது.



பின்னர் கிளப் அலுவலக வாசலில் பட்டாசுகள் வெடித்து புத்தாண்டு கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட லசால் பள்ளி ஆசிரியர் ஜெயக்குமார் பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். முன்னாள் செயலாளர் இசக்கிராஜா மற்றும் சூர்யா செய்தியாளர்கள் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

திங்கள், 7 அக்டோபர், 2024

நெல்லை சரக டிஐஜி, தூத்துக்குடி எஸ்பி ஆகியோரை நேரில் சந்தித்த தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் தேர்தலில் வெற்றி பெற்ற பிரஸ் கிளப் புதிய தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் நிர்வாகிகள்!!!

▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

7-10- 2024 

photo news 

Arunan journalist 

தூத்துக்குடி பிரஸ் கிளப் புதிய நிர்வாகிகள் தேர்தலில் வெற்றி பெற்றதும் தொடர்ந்து மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் ஆகியோர் களை மரியாதை நிமித்தம் சந்தித்து  வாழ்த்துக்கள் பெற்று வருகின்றன.

இது நல்ல முன்னுதாரணமாக பார்க்கப்படுகிறது.

புதன், 2 அக்டோபர், 2024

அமைச்சர் அலுவலகத்தில் தூத்துக்குடி பிரஸ் நிர்வாகிகள் தீடீர் சந்திப்பு அமைச்சர் கீதாஜீவன் வாழ்த்துக்கள் தெரிவித்தார்

 ▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

2-10- 2024 

photo news 

Arunan journalist 

அமைச்சர் அலுவலகத்தில் தூத்துக்குடி பிரஸ் நிர்வாகிகள் தீடீர் சந்திப்பு அமைச்சர் கீதாஜீவன் வாழ்த்துக்கள் தெரிவித்தார் .



இது பற்றிய செய்தியாவது:-


     தூத்துக்குடி பிரஸ் கிளப் 2024 - 2026ம் ஆண்டிற்கு தேர்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளான தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் செயலாளா் மோகன்ராஜ், துணைத்தலைவர் சிதம்பரம், உள்ளிட்ட நிர்வாககுழுவைச் சேர்ந்தவர்கள் மரியாதை நிமித்தமாக போல்பேட்டை முகாம் அலுவலகத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவனை நேரில் சந்தித்தனர் 

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரஸ் கிளப் நிர்வாகிகளை நேரில் பார்த்ததும் மகிழ்ச்சியுடன் தனது வாழ்த்துக்கள் தெரிவித்தார் 


மிகையாகாது!!!

தூத்துக்குடி மாநகரில் உள்ள செய்தியாளர்கள் இடம் இப்போது அல்ல ஆரம்ப காலத்தில் இருந்தே நல்ல உறவுடன் மதிப்பு உடன் அன்னோன்யமாக பேசி பழகி வருபவர் அமைச்சர் கீதாஜீவன் மட்டுமே என்றால் மிகையாகாது.

இவரை மட்டுமே நேரில் உடன் சந்திக்கலாம் மற்றவர்கள் அப்படியல்ல !  

கோரிக்கை!!!

 இதனால்  ? புதிதாக தேர்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அமைச்சர் கீதாஜீவனிடம் தங்கள் கோாிக்கை மனுவை அளித்தனர்.



     நிகழ்ச்சியில் கௌரவ ஆலோசகர் பாலகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் சரவணபெருமாள், குமாா், மாாிராஜா, செந்தில்முருகன், இருதயராஜ், ஆகியோர் கலந்து கொண்டனர்.

சனி, 7 செப்டம்பர், 2024

தூத்துக்குடி பிரஸ் கிளப்-பில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்

 தூத்துக்குடி பிரஸ் கிளப்-பில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இது பற்றிய செய்தியாவது:-


இன்று 7-9-2024 விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோயில்களில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.. 




மேலும், தூத்துக்குடி மாநகரின் பல பகுதிகிளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது..


இந்நிலையில், தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.


…. தூத்துக்குடி மாநகர், தமிழ் சாலை ரோட்டில் உள்ள தூத்துக்குடி பிரஸ் கிளப்பில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது

தூத்துக்குடி பிரஸ் கிளப் நிர்வாகிகள் 

தேர்தலில்...

 புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்ட, பிரஸ் கிளப் தலைவர் A.T.சண்முக சுந்தரம், பொருளாளர் J.ராஜூ, துணைத் தலைவர் A.சிதம்பரம், இணைச் செயலாளர் P.சதீஷ்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற பூஜையில் மூத்த நிருபர்கள் ஆத்தி முத்து, லட்சுமணன் மற்றும் பிரஸ் கிளப்பின் உறுப்பினர்கள், மாரி ராஜா, கண்ணன், இருதயராஜ், மாணிக்கம், நீதி ராஜன், மணிகண்டன், சித்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்..

செவ்வாய், 26 டிசம்பர், 2023

படு கேவலமாக பொதுமக்கள் உடன் போட்டி போட்டு அரசியல் வாதிகளிடம் நிவாரண பொருட்கள் அன்பளிப்பு பெறும் பத்திரிகையாளர்கள்

 நம்ம ஊருல...

கனமழை பெய்து வெள்ளத்தில்.. பொதுமக்கள் தவித்த போது அவர்கள் கண்ணீரை துடைக்கும் பொருட்டு அரசு மற்றும் அரசியல் கட்சிகள் வெளியூரில் இருந்து வந்த மதுரை இராமேஸ்வரம் முதற்கொண்டு வந்த தன்னார்வலர்கள் உதவி நிவாரண பொருட்கள் வழங்கி வருகிறது

மனதுக்குள் பேராதறுதல் தந்தது

அதே வேளையில்.... 

இங்கு 

பொதுமக்களுக்கு உடன் போட்டி போட்டு அரசியல் கட்சிகள் பிரமுகர்களை உருட்டியோ எப்படியோ பத்திரிகையாளர் கள் தங்களுக்கும் நிவாரண பொருட்கள் வாங்கி வருகிறார்கள்!!!

மீண்டும் மீண்டும் ஒவ்வொரு கட்சியாக  பெற முயற்சித்தும் வருகிறார்கள் ???



பாதிக்கப்பட்டது  பொதுமக்கள் தான்

பத்திரிகையாளர் கள் தரப்பில் ...

நிவாரண பொருட்கள் கொடுக்க வேண்டும்

அதை விடுத்து

பொதுமக்கள் உடன் போட்டி போட்டு 

அட ச்சே! என்கிறார்கள்

 

அரசியல் வாதிகள் கேட்கையில்

பொதுமக்களுக்கு தான் நிவாரண பொருட்கள் கொண்டு வந்தோம் நீங்கள் வேறா என திகைத்து போயுள்ளார்கள்

ஏற்கனவே தீபாவளி பண்டிகை அன்பளிப்பு கள் அள்ளி வழங்கி உள்ளார்கள் எரிச்சல் அடைகிறார்கள் 



பொதுமக்கள் உடன் போட்டி போட்டு அலையும் 

 டிவி  நாளிதழ் பத்திரிகையாளர்களால் களால்

நல்ல செய்தியாளர்களுக்கு தலை குனிவு 

தற்போதும் விடாமல் இங்குள்ள ஆளும் கட்சி இரண்டு விஜபிக்களை துரத்தி வருகிறார்களாம் எதிர்கட்சி இரண்டு 

மா சே விஜபிக்களை கூட விடாமல் தந்தே ஆக வேண்டும் என துரத்துகிறார்களாம்

என்னத்த சொல்ல என்கிறார்கள்

இத்தனைக்கும் இங்கு உள்ள பத்திரிகையாளர் கள் பலரும் பிற தொழில்கள்  கடை பண வசதி வாய்ப்புகள் நிலபுலன் டூவீலர் கார் என பெரும் வசதி உள்ளவர்களாகவே இருக்கிறார்கள் .

சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனங்கள் தரமே இம்புட்டு தானா கேள்வி எழுகிறது முகம் சுளிக்கிறார்கள் 

எந்த சூழ்நிலையிலும்..

கஷ்டப்பட்டு வரும் நல்ல பத்திரிகையாளர்கள் அவரவர் பணியே செவ்வனே செய்து வருகின்றனர்

பாராட்டு க்குரியது


பாதிக்கப்பட்டது பொதுமக்கள் தான்

பத்திரிகையாளர் கள் அல்ல 

பாக்ஸ் நியூஸ் 



இத்தனைக்கும் 

அசுரத்தனமான கனமழை பெய்து கடந்த 17-12-2023 அன்று தினகரன் நாளிதழ் இளம் துடிப்பு மிகு போட்டோ கிராபர் பெலிக்ஸ் இறந்த போனார் 

இவருக்கு கூட இறுதி அஞ்சலி மரியாதை  செலுத்த கூட உடன் பயணித்தவர்கள் ஆழ்ந்த இரங்கல் கூட செய்யவில்லை என்கிறார்கள் .