தூத்துக்குடி போலீஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தூத்துக்குடி போலீஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 17 மே, 2026

அரிசி கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை ? தூத்துக்குடி காவல் துறை அதிரடி

Tamil Nadu update 17-5-2026

தூத்துக்குடி மே17

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்து, 30 கிலோக்கும் மேற்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர்.

இது பற்றி செய்தியாவது ..

குளத்தூர் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், உதவி ஆய்வாளர்  ராமலெட்சுமி தலைமையிலான போலீசார் இன்று குளத்தூர் பஜார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது அங்குள்ள ஒரு அரிசிக்கடை முன்பு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ...

 ஓட்டப்பிடாரம் பகுதியைச் சேர்ந்த வீரசின்னரசு (38), மாரிமுத்து (46) என்பதும், அவர்கள் குளத்தூரைச் சேர்ந்த அரிசிக்கடை உரிமையாளர் பிச்சைமணி (61) என்பவரிடமிருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வாங்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

thoothukudileaks


அரிசி கடையில்...

இதையடுத்து போலீசார் அரிசிக்கடையில் சோதனை மேற்கொண்டதில், அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சட்டவிரோத விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


கைது நடவடிக்கை!!!

உடனடியாக போலீசார் பிச்சைமணி, வீரசின்னரசு மற்றும் மாரிமுத்து ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து மொத்தம் 30 கிலோ 475 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் ரூ.10,000 ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து குளத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வியாழன், 9 ஏப்ரல், 2026

சொத்து தகராறில் அண்ணனை கொலை செய்ய முயற்சி? எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்த குடும்பம்

தூத்துக்குடி, ஏப்.10:

தூத்துக்குடி மாவட்டத்தில் சொத்து தகராறு காரணமாக தம்பி கூலிப்படையினரை வைத்து தன்னை கொலை செய்ய முயற்சி மேற்கொள்கிறார் என குற்றம்சாட்டி, அண்ணன் தனது குடும்பத்தினருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

thoothukudileaks


தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் கிராமத்தைச் சேர்ந்த அய்யம்பெருமாளின் மூத்த மகன் சுயம்புலிங்கம், தனது தம்பி அணில் சிவலிங்கம் மீது இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இவர்களுக்கு நான்கு சகோதரர்கள் மற்றும் மூன்று சகோதரிகள் உள்ளனர்.

இதுகுறித்து சுயம்புலிங்கம் கூறுகையில், ...

தனது தம்பி அணில் சிவலிங்கம் பெங்களூரில் தொழில் செய்து வருவதாகவும், அங்கு பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டிருந்ததாகவும் குற்றம்சாட்டினார். 

தனது சொத்தை கைப்பற்றும் நோக்கில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதாகவும், அந்த வழக்கில் சொத்து தனிப்பட்ட முறையில் தான் சம்பாதித்த பணத்தில் வாங்கப்பட்டதாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதாகவும் தெரிவித்தார்.

இதனால் ஆவேசமடைந்த அணில் சிவலிங்கம், தனது காரை எரித்துவிட்டு தப்பியோடியதாகவும் அவர் குற்றம்சாட்டினார். பின்னர் காவல் நிலைய ஆய்வாளர் மாற்றப்பட்டதை தொடர்ந்து மீண்டும் ஊருக்குள் வந்து சொத்தில் பங்கு கேட்டு மிரட்டல் விடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

thoothukudileaks


மேலும் கடந்த 26ஆம் தேதி, வேலாயுதபுரம் அருகே காரில் சென்றபோது, அணில் சிவலிங்கம் மற்றொரு காரில் பின்தொடர்ந்து வந்து, வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறினார்.

 “நீ இறந்தவுடன் உன் சொத்தை உன் மனைவி, பிள்ளைகளிடம் கையெழுத்து வாங்கி விற்காமல் விடமாட்டேன்” என்று மிரட்டியதாகவும் தெரிவித்தார்.

அதேபோல், கடந்த 2ஆம் தேதி வேம்பார் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே கூலிப்படையினரை வைத்து தன்னை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக தகவல் கிடைத்ததையடுத்து, விளாத்திகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் கூறினார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.

இதனால்  தனது குடும்பத்தினருடன் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதனை நேரில் சந்தித்து மனு அளித்ததாகவும், தனது உயிருக்கு பாதுகாப்பு வழங்கி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளதாகவும் சுயம்புலிங்கம் தெரிவித்தார். 

திங்கள், 30 மார்ச், 2026

பிரபல தனியார் வங்கி பெயரில் போலி முதலீட்டு மோசடி தூத்துக்குடியில் காவல்துறை எச்சரிக்கை

தூத்துக்குடி லீக்ஸ் | நாளிதழ் செய்தி

தூத்துக்குடி மாவட்டம் : 30.03.2026

தூத்துக்குடி மாவட்டத்தில் சமீப காலமாக பிரபல தனியார் வங்கிகளின் பெயரில் “Bank Securities” எனப்படும் போலியான முதலீட்டு திட்டங்கள் மூலம் பொதுமக்களை ஏமாற்றும் இணைய மோசடிகள் அதிகரித்து வருவதாக மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


இந்த மோசடியில் ஈடுபடும் நபர்கள் முதலில் பொதுமக்களை WhatsApp குழுக்களில் இணைத்து, அதிக லாபம் கிடைத்ததாக போலியான தகவல்கள் மற்றும் ஸ்கிரீன்ஷாட்களை பகிர்ந்து நம்பிக்கை ஏற்படுத்துகின்றனர். பின்னர் அவர்கள் உருவாக்கிய போலியான மொபைல் செயலிகள் மற்றும் வங்கி முதலீட்டு தளங்கள் மூலம் முதலீடு செய்ய வற்புறுத்துகின்றனர். 


இந்த தளங்கள் உண்மையான வங்கி சேவைகளைப் போலவே தோற்றமளிக்கும் வகையில் Bank Logo, Dashboard, Customer Support போன்ற வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

thoothukudileaks


இதனை நம்பி பொதுமக்கள் முதலீடு செய்த பின்னர், லாபம் அல்லது முதலீட்டு தொகையை திரும்ப பெற முயற்சிக்கும் போது, மேலும் பணம் முதலீடு செய்தாலே அதிக லாபம் கிடைக்கும் என கூறி தொடர்ந்து மோசடி செய்யப்படுகிறது.



பொதுமக்களுக்கு முக்கிய அறிவுரை:

சமூக ஊடகங்களில் வரும் அதிக லாபம் தரும் முதலீட்டு விளம்பரங்களை நம்ப வேண்டாம்.

அறியப்படாத லிங்குகள் அல்லது செயலிகள் மூலம் முதலீடு செய்ய தவிர்க்கவும்.

SEBI-ல் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மூலமாக மட்டுமே முதலீடு செய்ய வேண்டும்.

DEMAT கணக்கு இல்லாமலே முதலீடு செய்யலாம் என வரும் விளம்பரங்கள் பெரும்பாலும் மோசடி ஆகும்.

உங்கள் DEMAT கணக்கை அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு தளங்களுடன் மட்டுமே இணைக்கவும்.

வங்கி அல்லது நிதி நிறுவன பெயரில் வரும் முதலீட்டு தகவல்களை நேரடியாக அந்த நிறுவனத்துடன் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

புகார் அளிக்கும் வழிகள்:

இத்தகைய சைபர் மோசடிகளில் சிக்கினால் உடனடியாக

 cybercrime.gov.in இணையதளம் லிங் 

 1930 (சைபர் குற்ற உதவி எண்)

மூலம் புகார் அளிக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, மேலும் நிதி இழப்பை தவிர்க்க முடியும் எனவும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

ஞாயிறு, 29 மார்ச், 2026

தூத்துக்குடி பெட்டிக்கடையில் ரூ 19 ஆயிரம் மதிப்புள்ள சட்டவிரோத புகையிலை பாக்கு விற்பனை பறிமுதல் கடை உரிமையாளர் கைது போலீஸ் நடவடிக்கை

தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்தி

தூத்துக்குடி மாவட்டம் : 29.03.2026

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நடவடிக்கையில் ரூபாய் 19,000 மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


thoothukudileaks


நேற்று (28.03.2026) வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி நிவேதா தலைமையில் போலீசார், பஜார் பகுதியில் உள்ள கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு பெட்டிக்கடையில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.


சோதனையின் போது, அந்த கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. கடையின் உரிமையாளரான தூத்துக்குடியைச் சேர்ந்த விஜயகுமார் (31) என்பவர் இதற்கு காரணமாக இருப்பது போலீசாரால் உறுதி செய்யப்பட்டது.


இதனைத் தொடர்ந்து போலீசார் உடனடியாக விஜயகுமாரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ரூபாய் 19,000 மதிப்புள்ள 14 கிலோ 851 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


இந்த சம்பவம் தொடர்பாக வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் விற்பனைக்கு எதிராக போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செய்தி புகைப்படங்கள் செயற்கை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது 




வெள்ளி, 20 மார்ச், 2026

குளத்தூர் சிறுமி கொலை வழக்கு: 25 காவல்துறையினருக்கு நற்பணி சான்றிதழ்

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

photo news by Arunan journalist 

தூத்துக்குடி மாவட்டம், மார்ச் 21, 2026

குளத்தூர் காவல் நிலையத்தில் நடைபெற்ற சிறுமி கொலை வழக்கில் திறம்பட விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை விரைவாக கண்டறிந்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திய காவல்துறையினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

thoothukudileaks


இவ்வழக்கில் சிறப்பாக பணியாற்றிய 25 காவல்துறை அதிகாரிகளுக்கு, திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் சரவணன் இ.கா.ப, நேற்று (20.03.2026) திருநெல்வேலி சரக காவல் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நற்பணி சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

video 

இந்தப் பாராட்டைப் பெற்றவர்களில் விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் சக்திவேல், எப்போதும்வென்றான் காவல் நிலைய ஆய்வாளர் உமா மகேஸ்வரி, சங்கரலிங்கபுரம் காவல் நிலைய ஆய்வாளர் அசோக்பாபு, புதூர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் காசிபாண்டியன், முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் ஹரிஹரன், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் இடம்பெற்றனர்.

thoothukudileaks

thoothukudileaks


மேலும் தருவைக்குளம், சைபர் குற்றப்பிரிவு, ஆறுமுகநேரி, மாசார்பட்டி உள்ளிட்ட காவல் நிலையங்களின் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள், காவல் கட்டுப்பாட்டு அறை பணியாளர்கள் உள்ளிட்ட மொத்தம் 25 பேர் இந்த நற்பணி சான்றிதழ்களை பெற்றனர்.

இந்த நிகழ்வில் காவல்துறையினரின் துல்லியமான விசாரணை மற்றும் விரைவான நடவடிக்கை பொதுமக்கள் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றுகிறது என பாராட்டப்பட்டது.

சனி, 18 அக்டோபர், 2025

தூத்துக்குடியில் 686 கேமராக்கள் மூலம் நகரம் முழுவதும் 24 மணி நேர கண்காணிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் நவீன காவல் கண்காணிப்பு மையம் இன்று தொடக்கம்

686 கேமராக்கள் மூலம் நகரம் முழுவதும் 24 மணி நேர கண்காணிப்பு







தூத்துக்குடி, அக்டோபர் 18 - தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நவீன காவல் கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மையம் இன்று புதிதாக நிறுவப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

அமைச்சர் கீதாஜீவன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் வீடியோ பார்க்க 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஆல்பர்ட் ஜான், இ.கா.ப.  அறிவுறுத்தல்படி, தூத்துக்குடி நகர உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் டாக்டர். சி.மதன், இ.கா.ப. கண்காணிப்பில் இந்த நவீன திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

மூன்று கட்டமாக 686 கேமராக்கள்

தூத்துக்குடி மாநகராட்சியின் அனுமதியுடன் தனியார் நிறுவன பங்களிப்பில், மூன்று கட்டமாக முக்கிய சாலைகள், சந்திப்புகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மொத்தம் 686 கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. இதில் வாகன எண் தகடுகளை தானாகவே பதிவு செய்யும் ANPR (Automatic Number Plate Recognition) தொழில்நுட்பம் கொண்ட 30 சிறப்பு கேமராக்களும் அடங்கும்.

இன்று முதல் கட்டமாக 430 கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன. மீதமுள்ள கேமராக்களும் விரைவில் இயக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

அதி நவீன தொழில்நுட்ப வசதிகள்

நிறுவப்பட்டுள்ள கேமராக்கள் மிக துல்லியமான பார்வை திறன் கொண்டவை. சுமார் 30 நாட்கள் காட்சிகளை சேமித்து வைக்கும் திறன் கொண்டவை. மின்சாரம் தடைபட்டாலும் பேட்டரி மூலம் மூன்று நாட்கள் வரை செயல்படும் வசதியும் உள்ளது.

ஆத்தி இம்புட்டும் தெரியுமா???


கேமராவை சேதப்படுத்தவோ திசை மாற்றவோ யாராவது முயன்றால் உடனடியாக எச்சரிக்கை அறிவிப்பு வழங்கப்படும். தனிப்பட்ட மின்சார இணைப்பு மற்றும் கண்காணிப்பு வழித்தடம் கொண்டதால் இடையூறு ஏற்படுத்த முடியாது என காவல்துறை தெரிவித்துள்ளது.

ட்ரோன் கண்காணிப்பு அமைப்பு

இரவு நேரங்களில் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை துல்லியமாக பார்க்கும் வகையில் அதி நவீன தொழில்நுட்ப கேமராக்கள் பொருத்தப்பட்ட ட்ரோன்களும் பயன்பாட்டில் உள்ளன. திறன்பட பயிற்சி பெற்ற காவல்துறை குழுவினர் முக்கிய திருவிழாக்கள், பண்டிகைகள் மற்றும் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் பகுதிகளில் ட்ரோன்களை பறக்கவிட்டு, காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து நேரடியாக கண்காணிப்பர்.






பன்முக பயன்கள்

இந்த ஒருங்கிணைந்த கண்காணிப்பு அமைப்பு குற்றங்களை தடுப்பது, குற்றவாளிகளை விரைவாக கண்டுபிடிப்பது, சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவது மற்றும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது ஆகிய பணிகளில் காவல்துறைக்கு பேருதவியாக இருக்கும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி நகர காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து இந்த கேமராக்கள் அனைத்தும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும்.

(நமது சிறப்பு நிருபர், தூத்துக்குடி)

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2025

தூத்துக்குடி – உயிரைப் பணயம் வைத்து வீரத்துடன் செயல்பட்ட பெண் சார்பு ஆய்வாளர்

 Tamil Nadu updates, photo news by Arunan journalist 

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செந்தூர் சாலையில் ..

நேற்று (11.08.2025) மாலை நேரத்தில், இரண்டு நபர்கள் கத்தியால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டிருந்த சம்பவம் நடைபெற்றது.

அங்கு ரோந்து பணியில் இருந்த சார்பு ஆய்வாளர்  தரணியா, அச்சம்பவத்தை கண்டு..., 

தனது உயிரைப் பொருட்படுத்தாமல் உடனடியாக தலையிட்டு, இருவரையும் தடுத்து நிறுத்தினார்.

thoothukudileaks
Model photo

அசம்பாவிதம் ஏற்படாமல் தடுத்ததுடன், காயமடைந்தவர்களுக்கு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

thoothukudileaks
தூத்துக்குடி – உயிரைப் பணயம் வைத்து வீரத்துடன் செயல்பட்ட பெண் சார்பு ஆய்வாளர் தரணியா வுக்கு தூத்துக்குடி மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டு சான்றிதழ் வழங்கும் போது எடுத்த படம் 


உயிரைப் பணயம் வைத்து விரைந்து செயல்பட்டு, அசம்பாவிதத்தை தடுத்தும், காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை ஏற்பாடு செய்தும் சிறப்பாக பணியாற்றிய சார்பு ஆய்வாளர் தரணியாவை, இன்று (12.08.2025) தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப , பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

வெள்ளி, 4 ஏப்ரல், 2025

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம்

# தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம் நடைபெற்றது 


தூத்துக்குடி, ஏப்ரல் 04:

 தூத்துக்குடி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை நிலை குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக, கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.


"போதைப்பொருள் கடத்தல்காரர்களின் சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது." 


மேலும், பொது அமைதிக்குப் பங்கம் விளைவிப்பவர்கள் மற்றும் கண்காணிக்கப்படும் குற்றவாளிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் மதிப்பீடு செய்யப்பட்டது.


நீதிமன்ற அலுவல்கள் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அவற்றை விரைவாக முடிப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசனைகள் நடைபெற்றன.


இந்த முக்கியமான கூட்டத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் உட்பட பல காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.


"மாவட்டத்தில் குற்றங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். குறிப்பாக போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்," என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான் தெரிவித்தார்.

செவ்வாய், 1 ஏப்ரல், 2025

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.11 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்கள் மீட்பு

 # தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.11 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்கள் மீட்பு


தூத்துக்குடி, ஏப்ரல் 1: தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போன செல்போன்கள் தொடர்பான புகார்களின் அடிப்படையில், காவல்துறையினர் துரித நடவடிக்கை எடுத்து ரூபாய் 11 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்களை மீட்டுள்ளனர். 




இந்த செல்போன்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் நேற்று உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.


தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன்கள் காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்ட புகார்கள் மற்றும் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்குகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.



 சைபர் குற்றப்பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் சகாய ஜோஸ் மேற்பார்வையில், சைபர் குற்றப்பிரிவு ஆய்வாளர் சாந்தி தலைமையிலான குழுவினர் காணாமல் போன செல்போன்களின் IMEI எண்களைக் கொண்டு தொழில்நுட்ப ரீதியாக விசாரணை நடத்தினர்.


விசாரணையின் மூலம் கண்டறியப்பட்ட தகவல்களை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தெரிவித்து, மொத்தம் ரூபாய் 11 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்கள் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட செல்போன்களை, இன்று (01.04.2025) மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து, அவற்றின் உரிமையாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக ஒப்படைத்தார்.


இதுவரை மொத்தம் ரூபாய் 1,13,30,000/- மதிப்புள்ள 1065 காணாமல் போன செல்போன்களை தொழில்நுட்ப ரீதியாக கண்டறிந்து மீட்ட சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார். நிகழ்வின் போது, சைபர் குற்றங்கள் குறித்தும், அவற்றிலிருந்து தற்காத்துக் கொள்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


பொதுமக்கள் சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்களை 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டோ அல்லது cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்தோ தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டது.


 மேலும், செல்போன் தொலைந்துவிட்டால் காவல் நிலையத்தில் புகார் அளித்த விவரங்களுடன் CEIR.gov.in என்ற இணையதளத்திலும் பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது.


இந்நிகழ்வில் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர்  சகாய ஜோஸ் உள்ளிட்ட சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

வெள்ளி, 14 மார்ச், 2025

அதிர்ச்சியில் வியந்த போன தூத்துக்குடி வாகனயோட்டிகள் மற்றும் பொதுமக்கள்"போக்குவரத்து காவலரே சாலையை சரிசெய்கிறாரே!"

Tamil Nadu updates,15-3-2025

Photo news by Arunan journalist 


தூத்துக்குடி நான்காவது ரயில்வே கேட் முன்புறம் உள்ள சாலை மோசமான நிலைமைக்குத் தள்ளப்பட்டு, பெரும் விபத்து ஏற்பட்டது.

 பலர் தடுமாறி விழுந்து கால் முட்டில் காயமடைந்து ரத்தக்காயம் அடைந்தனர்.


இன்று, 15-3-2025 காலை 10 மணியளவில் அந்தப் பகுதியில் போக்குவரத்து பணியில் இருந்த சு.வள்ளி நாயகம், காவல்துறை போக்குவரத்து சிறப்பு உதவியாளர், தனது கடமைக்கு மேல் சென்று சமூகப் பொறுப்புடன் செயல்பட்டார்.



 அருகிலிருந்த மண் மூட்டையை பயன்படுத்தி, குண்டும் குழியும் நிறைந்த சாலையை தற்காலிகமாக சரிசெய்தார்.


வீடியோ பார்க்க...

இதை நேரில் கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் அவ் வழியே நடந்து சென்ற பொதுமக்கள், "போக்குவரத்து காவலரே சாலையை சரிசெய்கிறாரே!" என வியப்பு தெரிவித்தனர். 


சனி, 8 பிப்ரவரி, 2025

திருநெல்வேலி சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தூத்துக்குடி மாவட்ட ஊர்காவல் படையினர் முதலிடம்

தூத்துக்குடி மாவட்டம், 08.02.2025

சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற தூத்துக்குடி ஊர்க்காவல் படையினருக்கு பாராட்டு 

Tamil Nadu updates,

news by Arunan journalist 

தூத்துக்குடி, பிப்ரவரி 8, 2025


திருநெல்வேலி சரகத்தின் 29வது ஆண்டு விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான் இ.கா.ப  இன்று பாராட்டி கௌரவித்தார்.



கடந்த 2025 பிப்ரவரி 1-ஆம் தேதி திருநெல்வேலி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற இப்போட்டிகளில், தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படையினர் பல பிரிவுகளில் சிறப்பான வெற்றிகளை பெற்றனர். 

குறிப்பாக:....


- கொடி அணிவகுப்பு - முதல் இடம்

- 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் - முதல் இடம்

- 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயம் - முதல் இடம்

- ஒருங்கிணைந்த விளையாட்டுப் போட்டிகள் - இரண்டாம் இடம்


பாராட்டு விழாவில்.... தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் டாக்டர் C. மதன் இ.கா.ப, ஊர்காவல்படை வட்டார தளபதி  பாலமுருகன் மற்றும்  காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



இந்த வெற்றி திருநெல்வேலி சரகத்தில் தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படையின் சிறந்த பயிற்சி மற்றும் தயார்நிலையை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தமது பாராட்டுரையில் தெரிவித்தார்.



வியாழன், 6 பிப்ரவரி, 2025

மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதாக கூறி நூதன மோசடி – காவல்துறையின் எச்சரிக்கை!

தூத்துக்குடி லீக்ஸ் 06.02.2025 | தூத்துக்குடி மாவட்டம்


மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதாக கூறி நூதன மோசடி – காவல்துறையின் எச்சரிக்கை!


தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் உதவித்தொகை வழங்குவதாக கூறி பண மோசடி செய்வது தொடர்பாக மாவட்ட காவல்துறையினர் பொதுமக்கள், பெற்றோர்கள், மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



மத்திய மற்றும் மாநில அரசு உதவி தொகை மையத்தில் இருந்து பேசுகிறோம்...என்று கூறி, மாணவர்களின் பெயர், பள்ளி/கல்லூரி விவரங்கள், மதிப்பெண்கள் போன்ற தகவல்களை கேட்டு, "உங்களுக்கான உதவித்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது" என தகவல் தருகின்றனர்.


 பின்னர், அந்த தொகையை பெற ஒரு QR கோடு அல்லது லிங்க் அனுப்பி, அதை ஸ்கேன் செய்யுமாறு கூறுகின்றனர்.


QR கோடு ஸ்கேன் செய்தவுடன், வங்கி கணக்கில் உள்ள பணம் முறைகேடாக எடுத்துக்கொள்ளப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.


பொதுமக்கள் கவனத்திற்கு:


✅ உதவித்தொகைக்கு விண்ணப்பித்திருந்தாலும், விண்ணப்பிக்காத நிலையிலும் இத்தகைய அழைப்புகளை நம்ப வேண்டாம்.

✅ எந்தவிதமான தனிப்பட்ட தகவல்களையும் பகிர வேண்டாம்.

அனுப்பப்படும் QR கோடு ஸ்கேன் செய்யக் கூடாது.

✅ உண்மையான உதவித்தொகை இருப்பதை உறுதிப்படுத்த பள்ளி/கல்லூரி நிர்வாகத்தினை தொடர்பு கொள்ளலாம்.


மோசடிக்கு இரையானவர்கள் உடனடியாக புகார் செய்ய வேண்டும்!


மோசடிக்கு இலக்கானவர்கள் பண பரிவர்த்தனை விவரங்களை பதிவு செய்து உடனடியாக 1930 என்ற சைபர் குற்றப்பிரிவு உதவி எண்ணிற்கு அழைக்கலாம் அல்லது cybercrime.gov.in இணையதளத்தில் புகார் அளிக்கலாம்.


இவ்வாறு புகார் செய்தால் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.


வெள்ளி, 24 ஜனவரி, 2025

ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றிய காவல் ஆய்வாளர் மாரியப்பன்

TamilNadu updates 

news by Arunan journalist 

தூத்துக்குடி மாவட்டம் : 24.01.2025


ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காவல் ஆய்வாளர் மாரியப்பன் மீட்டு உயிரை காப்பாற்றி பாராட்டு பெற்றார்



தூத்துக்குடி: ஜனவரி 23

23.01.2025 அன்று 65 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஆத்தூர் பாலத்திலிருந்து தற்கொலைக்கு முயன்று ஆற்றில் குதித்தார். 


இந்த  சம்பவம் குறித்து உடனடியாக தகவல் கிடைத்த ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர்  மாரியப்பன், தனது உயிரை பொருட்படுத்தாமல், உடனடியாக கயிறு கட்டி பாலத்திலிருந்து ஆற்றில் குதித்து, அந்த பெண்ணை பாதுகாப்பாக மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தார்.


தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் பாராட்டு !!!

"இச் சம்பவத்தில்...

 தற்கொலைக்கு முயன்ற பெண்ணை ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் மாரியப்பன் உடனடியாக  தனது உயிரை பணயம் வைத்து காவலர்கள் முனியசாமி மற்றும்  விக்னேஷ் ஆகியோரின் உதவியுடன் கயிறு கட்டி காவல் ஆய்வாளரும் ஆற்றில் குதித்து அப்பெண்ணை பத்திரமாக மீட்ட வீரதீர செயலால் பாராட்டும் பெற்றார்கள்

இன்று

(24.01.2025) தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்  சங்கர்ஜிவால் இ.கா.ப 


காவல் ஆய்வாளர்  மாரியப்பன் மற்றும் காவலர்கள்  முனியசாமி, விக்னேஷ் ஆகியோரை சென்னை காவல்துறை தலைமையகத்தில் வைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

 





அவரின் உழைப்பும் வீரத்தையும் மக்களும், பெரும் பாராட்டுடன் கவனித்துள்ளனர். 


தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான் இ.கா.ப  காவல் ஆய்வாளரின் வீரதீர செயலுக்கு பாராட்டுகள் தெரிவித்தனர்.


இந்தச் சம்பவம் காவல்துறை அதிகாரிகளின் உறுதிப்பட்ட பணியாற்றும் நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் மக்களின் வாழ்க்கையை காப்பாற்ற உதவுவதாக அமைந்துள்ளது.


வெள்ளி, 3 ஜனவரி, 2025

கொலை முயற்சியை தடுத்து உயிர் காத்த தூத்துக்குடி போலீசார்: டிஜிபி பாராட்டு

Tamil Nadu updates,

Photo news by Arunan journalist 

#கொலை முயற்சியை தடுத்து உயிர் காத்த தூத்துக்குடி போலீசார்: டிஜிபி பாராட்டு


தூத்துக்குடி லீக்ஸ், ஜனவரி 4, 2025


தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் காவல் நிலைய போலீசார் துணிச்சலுடன் செயல்பட்டு ஒரு கொலை முயற்சியை தடுத்து நிறுத்தி, காயமடைந்தவரை காப்பாற்றிய சாதனைக்காக தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர்ஜிவால் நேரில் பாராட்டி கெளரவித்துள்ளார்.



## சம்பவ விவரம்:


கடந்த டிசம்பர் 27, 2024 அன்று திருச்செந்தூர்-தூத்துக்குடி சாலையில் உள்ள முக்காணி பகுதியில் குடும்ப தகராறில் சுயம்புலிங்கம் (38) என்பவர் மீது அவரது உறவினர்களான நாராயணன் (38) மற்றும் மாரியப்பன் எனும் பெரிய முண்டன் (38) ஆகியோர் கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்டனர்.


## போலீசாரின் துணிச்சல்:


ரோந்து பணியில் இருந்த:

- சார்பு ஆய்வாளர் பாஸ்கரன்

- தலைமை காவலர் குமரேசன்

- தலைமை காவலர் ராஜபாண்டியன்


ஆகியோர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுத்தனர். தலைமை காவலர் ராஜபாண்டியன் தனது ஹெல்மெட்டை ஆயுதமாக பயன்படுத்தி தாக்குதல் நடத்தியவர்களை சமாளித்தார். 


குமரேசன் தனது உடல் பலத்தை கொண்டு தாக்குதல் நடத்தியவர்களை வீழ்த்தினார்.


##உயிர் காப்பாற்றப்பட்டது:


காவல்துறையினரின் துரித நடவடிக்கையால் ஒரு கொலை தடுக்கப்பட்டதோடு, காயமடைந்த சுயம்புலிங்கம் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிர் காப்பாற்றப்பட்டது.

பாராட்டு!!!

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர்ஜிவால் இ.கா.ப., சென்னையில் நேற்று (ஜனவரி 3) நடைபெற்ற சிறப்பு விழாவில் மூன்று காவல்துறை வீரர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் சிறப்பு வெகுமதி வழங்கி கெளரவித்தார்.

வெள்ளி, 27 டிசம்பர், 2024

தூத்துக்குடி மாவட்டம்: தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் மூவர் கைது

தூத்துக்குடி மாவட்டம்: தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் மூவர் கைது


தூத்துக்குடி, 2024 டிச.28:


தூத்துக்குடி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த மூன்று நபர்கள் நேற்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

Photo old lottery ticket designs 


கடும் உத்தரவு!!!

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் (இ.கா.ப.) அனைத்து உட்கோட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும் கடும் உத்தரவு பிறப்பித்திருந்தார்.


தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை!!!

இந்நிலையில், ..

நேற்று (27.12.2024) தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். 


இதில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரண்டு நபர்களும், விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவரும் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பறிமுதல்!!!

உடனடியாக மூன்று பேரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து லாட்டரி எண்கள் எழுதப்பட்ட சீட்டுகள் மற்றும் பணத்தினை பறிமுதல் செய்தனர். 

இது தொடர்பாக மூன்று தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எஸ் .பி பேட்டி !!!

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் கூறுகையில்,...

 "மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

திங்கள், 28 அக்டோபர், 2024

தூத்துக்குடி அருகே கோழி பண்ணையில் போலி பட்டாசு தயாரிப்பு 4 பேர் கைது வாகனம் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம் : 28.10.2024


தூத்துக்குடி அருகே எப்போதும்வென்றான் காவல் நிலைய பகுதியில் அரசு அனுமதி இன்றி கோழி பண்ணையில் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்த 4 பேர் கைது - வெடிமருந்து பொருட்கள் மற்றும் ஒரு மினி சரக்கு வாகனம் பறிமுதல்.

இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி எப்போதும்வென்றான் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நேற்று (27.10.2024) எப்போதும்வென்றான் காவல் நிலைய ஆய்வாளர்  முருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர்  அந்தோணி திலிப் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டார் கள்

கோழி பண்ணையில் 

 அப்போது எப்போதும்வென்றான் அருங்குளம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் கார்த்திக் (27) என்பவருக்கு சொந்தமான அதே பகுதியில் உள்ள கோழிப் பண்ணையை சோதனை செய்தபோது...?

 அங்கு விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை சங்கரபணியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்களான தேவராஜ் மகன் கருப்பசாமி (38), பொன்னுசாமி மகன் சதீஷ்குமார் (27) மற்றும் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த லட்சுமணன் மகன் பிரதீப்குமார் (29) ஆகியோர் அரசு அனுமதி மற்றும் பட்டாசு தயாரிப்பதற்கான உரிமமன்றி சட்டவிரோதமாக வெடிமருந்து பொருட்களை வாங்கி விற்பனைக்காக பட்டாசுகள் தயாரிப்பது தெரியவந்தது.



நால்வர் கைது!!!

வாகனம் பறிமுதல்!!!


இதனையடுத்து மேற்படி போலீசார் கார்த்திக், கருப்பசாமி, சதீஷ்குமார், பிரதீப்குமார் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து பட்டாசுகள் தயாரிக்க தேவைப்படும் சோடியம், சல்பர், அலுமினிய தூள் உட்பட வெடிமருந்து பொருட்களையும், பட்டாசு பொருட்களை சட்ட விரோத விற்பனைக்காக பயன்படுத்திய ஒரு மினி சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.


மேலும் இதுகுறித்து எப்போதும்வென்றான் காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திங்கள், 7 அக்டோபர், 2024

நெல்லை சரக டிஐஜி, தூத்துக்குடி எஸ்பி ஆகியோரை நேரில் சந்தித்த தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் தேர்தலில் வெற்றி பெற்ற பிரஸ் கிளப் புதிய தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் நிர்வாகிகள்!!!

▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

7-10- 2024 

photo news 

Arunan journalist 

தூத்துக்குடி பிரஸ் கிளப் புதிய நிர்வாகிகள் தேர்தலில் வெற்றி பெற்றதும் தொடர்ந்து மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் ஆகியோர் களை மரியாதை நிமித்தம் சந்தித்து  வாழ்த்துக்கள் பெற்று வருகின்றன.

இது நல்ல முன்னுதாரணமாக பார்க்கப்படுகிறது.

புதன், 11 செப்டம்பர், 2024

பிரபல டிவியில் பொய் செய்தி ? உண்மைக்கு புறம்பாக பொய் வெளியிட்ட டிவி செய்திக்கு தூத்துக்குடி எஸ். பி. மறுப்பு தெரிவித்துள்ளார்

உண்மைக்கு புறம்பாக பொய் செய்தி பிரபல டிவி வெளியிட்டுள்ளது என தூத்துக்குடி காவல்துறை கண்காணிப்பாளர்

ஆல்பர்ட் ஜான் இ.கா.ப  மறுப்பு தெரிவித்துள்ளார்.


தூத்துக்குடி மாவட்டம்  11.09.2024


கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தண்ணீர் நீர் தேக்க தொட்டி மீது ஏறி மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தினார். -



 இந்த செய்தியை மது, கஞ்சா போதைக்கு அடிமையாகி நீர்த்தேக்க தொட்டியின் மீது ஏறி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் என்று குறிப்பிட்டு உண்மைக்கு புறம்பாக பிரபல செய்தி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான் இ.கா.ப  மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது பற்றிய செய்தியாவது:-

நேற்று (10.09.2024) காலை கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கு திட்டங்குளம் பகுதியில் உள்ள தண்ணீர் நீர்த்தேக்க தொட்டி மீது மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் ஏறி தகராறில் ஈடுபட்டுள்ளார்.

என்ன நடந்தது!!!

 இதுகுறித்த தகவல் அறிந்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் அங்கு வந்து மேற்படி நபரிடம் வெகு நேரமாக போராடி பத்திரமாக கீழே இறக்கி அவரது தாய் தந்தையரிடம் ஒப்படைத்தனர்.


இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் நீர்தேக்க தொட்டி மீது ஏறியவர் வடக்கு திட்டங்குளம் பகுதியைச் சேர்ந்த திருமேனி சரவணன் என்பவரது மகன் ஜோதி ரமேஷ் (25) என்பதும், கடந்த 10 வருடங்களாக மனநிலை பாதிக்கப்பட்ட அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது. 

மன நலம் பாதிப்பு சிகிச்சை எடுத்து வருபவர்!!!

மேலும் கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் வடக்கு திட்டங்குளத்திலிருந்து குடிபெயர்ந்து தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர் நகர் பகுதியில் தனது தாய் தந்தையுடன் வசித்து வந்தும் தற்போது தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது.


இந்நிலையில் மேற்படி ஜோதி ரமேஷ் மருந்து மாத்திரை உட்கொள்ளாமல் இருந்து வந்த நிலையில் சங்கரன்கோவிலிலிருந்து சொந்த ஊரான வடக்கு திட்டங்குளத்திற்கு வந்த அவர் மனநிலை சரியில்லாமல் நேற்று (10.09.2024) காலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி தகராறில் ஈடுபட்டதும் பின்னர் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினரின் மூலம் பத்திரமாக கீழே இறக்கப்பட்டு அவரது தாய் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

பொய் செய்தி பிரபல டிவி!!!

இந்த செய்தியை மது, கஞ்சா போதைக்கு அடிமையாகி நீர்த்தேக்க தொட்டியின் மீது ஏறி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் ....

என்று குறிப்பிட்டு உண்மைக்கு புறம்பான செய்தியை பிரபல செய்தி தொலைக்காட்சி ஒன்று வெளியிட்டுள்ளது முற்றிலும் மறுக்கப்படுகிறது.

மறுப்பு!!!

எனவே இதுபோன்ற செய்தியின் உண்மைத்தன்மை தெரியாமல் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட வேண்டாம் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  தெரிவித்துள்ளார்.

சனி, 31 ஆகஸ்ட், 2024

70 பேர் கைது ?ஆசை வார்த்தைகளைக் கூறி தனிமையில்... இளம் வயதினரை குறி வைத்து மிரட்டல் பணம் பறிப்பு Google Playstore- Grindr போன்ற சாட் செய்யும் செயலில் எச்சரிக்கை காவல் துறை அறிவிப்பு அவசர உதவி எண் 1930

▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

31-8-2024 photo news 

by Arunan journalist 

ஆசை வார்த்தைகளைக் கூறி தனிமையில்...

இளம் வயதினரை குறி வைத்து மிரட்டல் பணம் பறிப்பு Google Playstore- Grindr போன்ற சாட் செய்யும் செயலி மூலம் முன் பின் தெரியாத நபர்களிடம் தகவல் பரிமாற்றம் போராபத்து ஏற்படுகிறது.

இளம்வயதினர்  இதில் எச்சரிக்கையாக இருக்குமாறு...

திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் முனைவர் பா. மூர்த்தி, இகாப., அறிவித்துள்ளார்.



இது பற்றிய செய்தியாவது 


Google Playstore-

Grindr (Gay Dating & Chat) 60m Gewal (Application)

பயன்பாட்டில் இருந்து வருகிறது. 


இந்த செயலியில், முன் பின் தெரியாத நபர்களிடம் தகவல்

பரிமாற்றம் (Chat) செய்யும் வசதி உள்ளது. 


இந்த செயலியின் மூலம் சில நபர்கள்

பொதுமக்களை குறிப்பாக இளம் வயதினரை ஏமாற்றி குற்ற செயல்களில் ஈடுபட்டு

வருவதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.


தனிமையில்... சாட் !!!

 இச்செயலியினால், முகம் தெரியாத நபர்கள்

தொடர்பு கொண்டு அதன் மூலம் பழக்கம் ஏற்பட்டு, ஆசை வார்த்தைகளைக் கூறி

தனிமையில் சந்திக்கத் தூண்டி அதன் மூலம் பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை

வழிப்பறி செய்து வருகின்றனர். 

70 பேர் கைது!!!

இது சம்மந்தமாக கிடைக்கப்பெறும் புகார் மனுக்களின்மீது

கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.



 திருநெல்வேலி சரகத்தில் உள்ள

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில், இந்த

ஆண்டில் மட்டும் 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவ்வழக்குகளில் சம்பந்தப்பட்ட

70 பேர்கள் கைது செய்யபட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.


 மேலும், இது போன்ற

குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து அவர்கள்மீது தீவிர நடவடிக்கைகள்

எடுக்கப்பட்டு வருகின்றன.


 பொதுமக்களும் இது போன்ற குற்ற செயல்புரியும்

எண்ணத்தோடு சமூக வலைதளங்கள், பிற தகவல் ஊடகங்கள் ஆகியவற்றில் தங்களை

அணுகும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும், இதுபோன்ற ஏமாற்று செயலின் மூலம்

பாதிக்கப்படாமல் கவனமாக இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. Grindr App மற்றும்

அதைப்போன்ற வேறு செயலிகளை பயன்படுத்தி பொதுமக்களை மிரட்டி வழிப்பறி செய்யும்

நபர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அவசர உதவி எண் 1930

இதுபோன்ற குற்ற செயல்களால் பாதிக்கப்படுபவர்கள் 1930 என்ற கட்டணமில்லா

தொலைபேசி சேவையையோ, அருகில் உள்ள காவல் நிலையத்தையோ அல்லது

சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையையோ தொடர்புகொண்டு தகவல்

தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

திங்கள், 5 ஆகஸ்ட், 2024

நீங்க போலீஸ் ஸ்டேஷன் செல்ல வேண்டாம்! இனிமேல் ஆன்லைனில் புகார் தரலாம்!

▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

5-8-2024  arunan journalist 

நீங்க.... இனிமேல் போலீஸ் ஸ்டேஷன் போக வேண்டாம்! ஆன்லைனில் புகார் தரலாம்! புதிய குற்றவியல் சட்டத்தின் சிறப்பம்சங்கள்

2024 ஜூலை 1 முதல் மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. 



இந்த புதிய குற்றவியல் சட்டத்தில் ஜீரோ எப்ஐஆர், ஆன்லைன் போலீஸ் புகார்களைப் பதிவு செய்தல், மின்னணு முறையில் சம்மன் அனுப்புதல் மற்றும் கொடூரமான குற்றங்கள் நடந்த இடங்களைக் கட்டாயமாக வீடியோ பதிவு செய்வது உள்ளிட்ட விதிகள் உள்ளன. 



இப்போது.... நடைமுறைக்கு வந்துள்ள பாரதீய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023 மற்றும் பாரதிய சாக்ஷ்ய ஆதினியம் 2023 ஆகியவை எளிய இந்திய மக்களுக்கும் கூட அதிகாரம் அளிக்கும் வகையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.


கடந்த ஆண்டு இந்த மூன்று சட்டங்களும் கொண்டு வரப்பட்டன. 


இவை ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்ட பிரிட்டிஷ் கால இந்தியத் தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்தியச் சாட்சியச் சட்டம் ஆகியவற்றுக்குப் பதிலாக அமைக்கப்பட்டுள்ளன.


ஆன்லைனில் புகார்!!!

இதில் புதிய சட்டங்களின் கீழ் ஒருவர் ஆன்லைன் மூலமாகவே புகார் அளிக்க முடியும். பழைய சட்டத்தின் கீழ் ஒருவர் புகார் அளிக்க நேரடியாக போலீஸ் நிலையத்திற்குச் செல்ல வேண்டும்.


 ஆனால், புதிய சட்டத்தின் கீழ் போலீஸ் நிலையத்திற்குச் செல்லாமல் ஆன்லைனிலேயே புகார் அளிக்கலாம்.


 இது பொதுமக்கள் எளிதாகவும் விரைவாகும் புகாரளிக்க வழிவகை செய்கிறது. 


இதன் மூலம் போலீசாரால் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடிகிறது.



ஜீரோ எஃப்ஐஆர்!!!


 அதேபோல ஜீரோ எஃப்ஐஆர் என்ற நடைமுறையும் அமலுக்கு வந்துள்ளது. அதாவது பழைய சட்டங்களின் கீழ் குற்றம் நடந்த இடம் எந்த போலீஸ் நிலைய வரம்பிற்குள் வருகிறதோ..? அந்த குறிப்பிட்ட போலீஸ் நிலையத்தில் தான் புகார் அளிக்க வேண்டும். 


இதனால் பல நேரங்களில் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு இருக்கிறது. 


இந்த பிரச்சினையும் புது சட்டத்தில் இருக்காது.


குற்றம் நடந்து இடம் எதுவாக இருந்தாலும் எந்த போலீஸ் நிலையத்தில் வேண்டும் என்றாலும் புகார் அளிப்பதை இந்த ஜீரோ எஃப்ஐஆர் வழிவகை செய்கிறது. 


இது சட்ட நடவடிக்கைகளைத் தொடங்குவதில் உள்ள தாமதங்களை நீக்குகிறது. 


புதிய சட்டங்களின் கீழ், பாதிக்கப்பட்டவர்கள் எஃப்ஐஆர் காப்பி இலவசமாக வழங்கப்படும்.


கைது விவரம் ???

 அதேபோல ஒருவர் கைது செய்யப்பட்டால் அவர் கூறும் நபருக்குக் கைது குறித்து போலீசார் கூற வேண்டும் எனச் சட்டம் சொல்கிறது.


 இதன் மூலம் கைது செய்யப்பட்ட நபரின் குடும்பத்தினருக்குக் கைது குறித்து உடனடியாக தெரிய வரும்.


 இது கைது செய்யப்பட்ட நபருக்கும் கிடைக்க வேண்டிய நியாயத்தைப் பெற்றுத் தரும்.


 மேலும், கைது விவரங்கள் இப்போது காவல் நிலையங்கள் மற்றும் கலெக்டர் அலுவலகங்களில் வைக்கப்படும்.


இதுவும் கைது குறித்த தகவல்கள் குடும்பத்தினர் தெரிந்து கொள்ள உதவும்.


வீடியோ எடுப்பது !!! 

அடுத்து.... விசாரணையை வலுப்படுத்த முக்கியமான விதி கொண்டு வரப்பட்டுள்ளது.


 அதாவது கடுமையான குற்றங்கள் நடந்த இடங்களுக்கு தடயவியல் நிபுணர்கள் நேரில் சென்று சாட்சியங்களைச் சேகரிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 



மேலும், குற்றம் நடந்த இடத்தை கட்டாயமாக வீடியோ படம் எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


இந்த இரண்டு விதிகளும் வலிமையான விசாரணையை உறுதி செய்யும்.


பெண்களுக்கு எதிரான குற்றங்கள்???


 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான விசாரணைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த புதிய சட்டங்கள் இருக்கிறது. 


மேலும் புகார் அளித்து இரண்டு மாதங்களுக்குள் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து வாக்குமூலம் பெற வேண்டும்..


 90 நாட்களுக்குள் வழக்கில் நடத்தப்பட்ட விசாரணை குறித்த தகவல்களைப் பாதிக்கப்பட்ட நபருக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதையும் புதிய சட்டங்கள் கட்டாயமாக்குகிறது.



பெண்களுக்கு எதிரான சில குற்றங்களுக்குப் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலங்கள் முடிந்தவரை ஒரு பெண் மாஜிஸ்திரேட் முன்னிலையில் பதிவு செய்ய வேண்டும். 


பெண் மாஜிஸ்திரேட் இல்லாதபட்சத்தில் ஒரு ஆண் மாஜிஸ்திரேட் முன்பு வாக்குமூலம் அளிக்கலாம்.


 இருப்பினும், பாதிக்கப்பட்டவருக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்க அருகே மற்றொரு பெண் இருப்பதைச் சட்டம் அனுமதிக்கிறது.


மேலும், புதிய சட்டங்களின் கீழ் நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச முதலுதவி அல்லது மருத்துவச் சிகிச்சைக்கு அளிக்கப்படுவதை உறுதி செய்கிறது.


டிஜிட்டல் சம்மன்!!!


 சம்மன்கள் இப்போது டிஜிட்டல் முறையில் அனுப்புவதையும் சட்டம் அனுமதிக்கிறது.


 இது சட்ட செயல்முறைகளை விரைவுபடுத்தவும், தேவையில்லாத பேப்பர் பயன்பாட்டைக் குறைக்கவும் உதவும்.



14 நாட்கள்!!!

 குற்றஞ்சாட்டப்பட்டவர் மற்றும் பாதிக்கப்பட்ட நபர்கள் என இரு தரப்பினருக்கும் 14 நாட்களுக்குள் எப்ஐஆர், போலீஸ் அறிக்கை, குற்றப்பத்திரிகை, அறிக்கைகள், வாக்குமூலங்கள் மற்றும் பிற ஆவணங்களின் நகல்களைப் பெற உரிமை உள்ளது.


 வழக்கு விசாரணைகளில் தேவையற்ற காலதாமதத்தைத் தவிர்க்கவும், நீதி தக்க சமயத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்யவும் நீதிமன்றங்கள் அதிகபட்சமாக இரண்டு வாய்தாக்களை மட்டுமே வழங்கலாம் என்ற விதி இருக்கிறது.



 சாட்சியங்களையும் பாதுகாக்கத் தனித் திட்டங்களை உருவாக்கவும் அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.