Tamil Nadu update 17-5-2026
தூத்துக்குடி மே17
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்து, 30 கிலோக்கும் மேற்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர்.
இது பற்றி செய்தியாவது ..
குளத்தூர் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், உதவி ஆய்வாளர் ராமலெட்சுமி தலைமையிலான போலீசார் இன்று குளத்தூர் பஜார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்குள்ள ஒரு அரிசிக்கடை முன்பு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ...
ஓட்டப்பிடாரம் பகுதியைச் சேர்ந்த வீரசின்னரசு (38), மாரிமுத்து (46) என்பதும், அவர்கள் குளத்தூரைச் சேர்ந்த அரிசிக்கடை உரிமையாளர் பிச்சைமணி (61) என்பவரிடமிருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வாங்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.
அரிசி கடையில்...
இதையடுத்து போலீசார் அரிசிக்கடையில் சோதனை மேற்கொண்டதில், அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சட்டவிரோத விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கைது நடவடிக்கை!!!
உடனடியாக போலீசார் பிச்சைமணி, வீரசின்னரசு மற்றும் மாரிமுத்து ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து மொத்தம் 30 கிலோ 475 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் ரூ.10,000 ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து குளத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக