ரேசன் கடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரேசன் கடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 1 நவம்பர், 2025

தூத்துக்குடியில் தாயுமானவர் திட்டம் – மூத்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு குடியமைப் பொருட்கள் வழங்கல்

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

photo news by Arunan journalist 

தூத்துக்குடி:நவ1

தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறை சார்பில், தாயுமானவர் திட்டத்தின் கீழ் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு குடியமைப் பொருட்கள் வழங்கும் விழா நடைபெற உள்ளது.

thoothukudileaks


தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு துறை அலுவலகத்தின் அறிவிப்பின்படி, நவம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் மாவட்டம் முழுவதும் உள்ள நியாயவிலை கடைகள் வாயிலாக 65 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அடையாள அட்டையுடைய பயனாளிகளுக்கு வீடுகளுக்குச் சென்று குடியமைப் பொருட்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் நோக்கத்தின்படி, சமூக நலனில் பங்காற்றும் வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இந்த இரண்டு நாட்களிலும் (03.11.2025 மற்றும் 04.11.2025) மாவட்டம் முழுவதும் பயனாளிகளுக்கு தேவையான குடியமைப் பொருட்கள் வழங்கும் பணிகள் நடைபெறும் என கூட்டுறவு துறை அறிவித்துள்ளது.

– தூத்துக்குடி லீக்ஸ் 📰

வெள்ளி, 10 ஜனவரி, 2025

விறுவிறு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்

2025தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் விறுவிறுப்பு அடைந்துள்ளது.


தூத்துக்குடி, ஜன.10-


தூத்துக்குடி மதுரா கோட்ஸ் கூட்டுறவு பண்டக சாலை நியாய விலை கடையில் தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் நேற்று துவங்கியது.



மதுரா கோட்ஸ் நியாய விலை கடை மேலாளர் மைக்கேல் ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், விற்பனையாளர் சுப்பிரமணி முதல் தொகுப்பினை வழங்கி துவக்கி வைத்தார். 


பரிசு தொகுப்பில் வேட்டி, சேலை, பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன. பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்களது பரிசு தொகுப்புகளை பெற்று சென்றனர்.



இந்த விநியோகம் தொடர்ந்து நடைபெற உள்ளதாக கடை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

செவ்வாய், 29 அக்டோபர், 2024

விரைவில் ரேசன் கார்டு முடக்கம் மக்கள் உஷாராக இருங்கள்

தூத்துக்குடி லீக்ஸ்

 29-10-2024

மூன்று மாதம்  பொருள் வாங்காத ரேஷன் கார்டுகள் முடக்கம்?




ரேஷன் கடைகள் மூலம் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருள்களை குறைந்த விலையில் அரசு வழங்கி வருகிறது.



முடக்கம்!!!!

தமிழக அரசின் விதிப்படி 3 மாதம் வரை பொருள் வாங்கவில்லை எனில், ரேஷன் அட்டைகள் பயனில் இல்லை என கருதி முடக்கப்படும்.


கண்டு பிடிப்பு??

விரைவில்...

அதன்படி, தற்போது நாடு முழுவதும் பல லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள், 

மூன்று மாதம் வரை எந்த பொருளும் வாங்காதது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும், அவை விரைவில் முடக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.