வெள்ளி, 10 ஜனவரி, 2025

விறுவிறு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்

2025தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் விறுவிறுப்பு அடைந்துள்ளது.


தூத்துக்குடி, ஜன.10-


தூத்துக்குடி மதுரா கோட்ஸ் கூட்டுறவு பண்டக சாலை நியாய விலை கடையில் தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் நேற்று துவங்கியது.



மதுரா கோட்ஸ் நியாய விலை கடை மேலாளர் மைக்கேல் ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், விற்பனையாளர் சுப்பிரமணி முதல் தொகுப்பினை வழங்கி துவக்கி வைத்தார். 


பரிசு தொகுப்பில் வேட்டி, சேலை, பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன. பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்களது பரிசு தொகுப்புகளை பெற்று சென்றனர்.



இந்த விநியோகம் தொடர்ந்து நடைபெற உள்ளதாக கடை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக