தூத்துக்குடி மாநகராட்சி வலியுறுத்தல்:
போகி தினத்தன்று குப்பை எரிப்பதை தவிர்க்க வேண்டுகோள்
Tamil Nadu updates,
Photo news by Arunan journalist
தூத்துக்குடி, ஜன.11-
வரும் 2025 பொங்கல் பண்டிகையையொட்டி போகி தினத்தன்று பொதுமக்கள் குப்பைகளை எரிப்பதை தவிர்க்க வேண்டும் என தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
போகி தினத்தன்று பழைய குப்பைகளை
எரிக்காதீர்கள்!!!
தூய்மை இந்தியா திட்டம் 2.0-ன் கீழ் செயல்படுத்தப்படும் இந்த முயற்சியில், பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய பொருட்கள் மற்றும் குப்பைகளை மாநகராட்சி குப்பை சேகரிப்பு பணியாளர்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்மூலம் நகரில் காற்று மாசுபாடு ஏற்படுவதை தடுக்க முடியும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் மதுபாலன் மற்றும் மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோரின் உத்தரவின் பேரில், இன்று (11.01.2024) தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் மாநகராட்சி ஊழியர்கள் ஒலிபெருக்கி மூலம் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
"தூய்மையான தூத்துக்குடியை உருவாக்குவதில் ஒவ்வொரு குடிமகனும் பங்களிப்பு செய்ய வேண்டும். குறிப்பாக போகி பண்டிகையின் போது குப்பைகளை எரிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்" என மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக