போக்குவரத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
போக்குவரத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 26 செப்டம்பர், 2025

போக்குவரத்து தொழிலாளர்கள் சம்பளம் குறித்து அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் பரபரப்பு அறிக்கை

📰 தூத்துக்குடி லீக்ஸ் – 26.09.2025

அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதியம் – செப்டம்பர் 30-ஆம் தேதியே வழங்க வேண்டும்: அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் வலியுறுத்தல்

சென்னை: செப் 26
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான 2025 செப்டம்பர் மாத ஊதியம் மற்றும் விடுமுறை காரணமாக, வழக்கம்போல் ஊதிய நாள் ஒத்திவைக்கப்படும் நிலையில், தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு செப்டம்பர் 30-ஆம் தேதியே ஊதியம் வழங்க வேண்டும் என அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர். கமலக்கண்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

thoothukudileaks


அவரது அறிக்கையில்,
“அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஊதியம் வழங்கும் நாள் அரசு விடுமுறை ஆக இருந்தால் அடுத்த வேலை நாளில் வழங்கப்படும் நடைமுறை உள்ளது. 


ஆனால், அக்டோபர் 1-ஆம் தேதி ஆயுதபூஜை மற்றும் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி ஆகிய இரண்டு நாட்களும் அரசு விடுமுறை ஆக இருப்பதால், போக்குவரத்து தொழிலாளர்கள் சிரமத்தில் சிக்காமல், 2025 செப்டம்பர் மாத ஊதியம் செப்டம்பர் 30-ஆம் தேதியே வழங்கப்பட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

அதே நேரத்தில், தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அவர் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


அறிக்கை வெளியீட்டவர்:
ஆர். கமலக்கண்ணன்,
செயலாளர்,
அண்ணா தொழிற்சங்க பேரவை, சென்னை.


👉 

திங்கள், 24 பிப்ரவரி, 2025

அம்மா பிறந்த நாள் விழா

தூத்துக்குடி நகர பணிமனையில்....

அம்மா பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

தூத்துக்குடி: புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்த நாள் விழா, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், தூத்துக்குடி நகர பணிமனையில், அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.



விழாவின் ஆரம்பத்தில், அண்ணா தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கப்பட்டன. தொழிலாளர்களுக்காக பணிமனையில் உள்ள உணவகத்தில் சிறப்பான உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மண்டல நிர்வாகி ராமசாமி தலைமையில், கிளை நிர்வாகிகள் ஆதிராஜ், வெள்ளையா, முத்துகிருஷ்ணன், முருகவேல், சண்முகராஜ், தொப்பை கணபதி, முருகேசன், இ. பேச்சிமுத்து, ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

உற்சாகம்!!!

மேலும், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் அனைத்து தொழிலாளர்களும் இணைந்து விழா நிகழ்வுகளில் உற்சாகமாக பங்கேற்றனர்.

வியாழன், 16 ஜனவரி, 2025

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பஸ் பயணிகள் கூட்டம் அதிகாரிகள் வராததால் குழப்பம்

 TamilNadu updates 


தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பஸ் பயணிகள் கூட்டம் இன்று (16-1-2025) அதிகாரிகள் வராததால் குழப்பம்


தூத்துக்குடி, ஜனவரி 16: 


தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பயணிகள் கூட்டம் 

16-1-2025 இன்று போக்குவரத்து அதிகாரிகள் பணிக்கு வராததால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

குழப்பமான சூழ்நிலை!!!

நேர காப்பாளர் அலுவலகம் பூட்டப்பட்டுள்ள நிலையில், அரசு போக்குவரத்து துறையின் நேர காப்பாளர்கள், செக்கர்கள் மற்றும் ஏஜென்டுகள் யாரும் பணிக்கு வராததால் பேருந்து நிலையத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது.



கோவில்பட்டி, விளாத்திகுளம், மதுரை இராமநாதபுரம் திருச்சி திருப்பூர் கோவை சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வந்துள்ள பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.


 பேருந்துகள் எவ்வித ஒழுங்குமுறையும் இன்றி குறுக்கும் நெடுக்குமாக நிறுத்தப்பட்டுள்ளன. எந்தப் பேருந்து எந்த வழித்தடத்தில் எப்போது புறப்படும் என்ற அடிப்படை தகவல்களை கூட பயணிகளால் அறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து அதிகாரிகள் மீது பொதுமக்கள் கடும் அதிருப்தி!!!

பண்டிகை காலத்தில் அதிகாரிகள் பணிக்கு வராதது  பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.



 போக்குவரத்து துறை உடனடியாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வியாழன், 14 நவம்பர், 2024

தூத்துக்குடி போக்குவரத்துறை RTO, டிராபிக் காவலர் கும்பகர்ண தூக்கம் களையுமா?

தூத்துக்குடி

போக்குவரத்துறை

RTO, டிராபிக் காவலர்கள் கும்பகர்ண தூக்கம் களையுமா? என்கிறார்கள்.

         

        தூத்துக்குடி மாநகரில் ஷேர் ஆட்டோ, மினி பேருந்துகள் அரசு விதிகளை மீறி செயல்படுகிறது.

2கிமீ 5 ரூபாய் தான் டிக்கெட் அது இங்கு இல்லை ஏன்?

       அரசு 2 கி.மீ தூரம் செல்ல 5 ரூபாய் கட்டணம் வசூலிக்க உத்திரவு வழங்கி உள்ளது.

ஆனால் இங்கு 10 ரூபாய் குறைந்து டிக்கெட் வழங்க மாட்டார்கள் ?

       தூத்துக்குடி மாநகரில் அரசு விதிகளை ஷேர் ஆட்டோ, மினி பேருந்துகள் தூக்கி எறிந்து செயல்படுகிறது.



      ஷேர் ஆட்டோவில் 5 பயணிகள், மினி பேருந்தில் 25 பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆடுமாடு போல மனுஷங்களை அடைத்து செல்லும் அவலம்!!!

        ஷேர் ஆட்டோ, மினி பேருந்தில் பயணிகளை ஆடு,மாடுகளை போல ஏற்றி அடைத்து செல்லப்படுகிறது.


இஷ்டம் போல வழித்தடம்!!!

       தூத்துக்குடியில் 25 மினி பேருந்துகள் செயல்படுகிறது. இந்த பேருந்துகள் அரசு அனுமதித்த வழித்தடம் செல்வதில்லை.

இட நெருக்கடி 

       அது போல தூத்துக்குடி அண்ணா பேருந்தில் RTO அனுமதி பெறாமல் மினி பேருந்துகள் செயல்படுவதோடு, தனி இடவசதி செய்யப்படுகிறது.


       இந்த அதிக எண்ணிக்கையில் தாறுமாறாக நிற்கும் மினி பேருந்துகளால் அண்ணா பேருந்து நிலையத்தில் இடநெருக்கடி ஏற்பட்டு, விபத்துகள் உண்டாகுகிறது

       ஷேர் ஆட்டோக்களும் இது போலதான் செயல்படுகிறது. 

வழித்தடம் - போக்குவரத்து விபத்து ?


25 ஷேர் ஆட்டோ உரிமைதாரர்களுக்கு வழித்தடம் தேர்வு செய்யாததால்,....? போக்குவரத்து நெருக்கடி வாகன விபத்து ஏற்படுகிறது.

அனைத்தும் ஒரே இடத்தில் இருந்து கிளம்ப வேண்டுமா அதிகாரிகள் தூங்கி விட்டார்களா ?

தூத்துக்குடி வடபகுதியில் மற்றும் குறிப்பாக தூத்துக்குடி புதிய பேருந்து 

நிலையம் அங்கு இருந்து வழித்தடம் ஒன்று கூட இல்லையே ஏன்?



கனி ஹோட்டல் எதிரே அனுமதி வழங்காமலே ஷேர் ஆட்டோ நிறுத்துங்கள் 

     தூத்துக்குடி பால விநாயகர்கோவில்தெரு போக்குவரத்து நிறைந்த பகுதி, மேலும் பிரபல ஹோட்டல்கள், தங்கும் விடுதி, பள்ளி மற்றும் மருத்துவமனை உள்ளது. இந்த இடத்திற்கு வந்து, செல்ல டிராபிக் (போக்குவரத்துறை) அனுமதி வழங்கவில்லை. 



இடையூறு!!!

ஆட்டோ நிறுத்தும் இடத்தில் ஷேர் ஆட்டோ ???

இந்த ஷேர் ஆட்டோ, ஆட்டோ நிறுத்துமிடத்தில் நிறுத்துவதோடு, விபத்து ஏற்படுத்தும் அபாய நிலை உண்டாக்குகிறது.

பேருந்து நிலைய வாயிலில் முன்பே ஷேர் ஆட்டோ ஏற்றி இறக்கி விடுவதால் ?

இதனால் அரசு பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் உள்ளே போக இடையூறு ஏற்படுகின்றன.

பொதுமக்கள் அவதி!!!

       தூத்துக்குடி போக்குவரத்துறை RTO, டிராபிக் போலீசார் தேவையற்ற வசதி ஏற்படுத்தி  தருவதால் பொதுமக்கள், பயணிகள் சொல்லமுடியாத அவலத்தை சந்தித்துவருகின்றனர்.

  தூத்துக்குடி போக்குவரத்துறை RTO, டிராபிக் போலீசாரின் கும்பகர்ண தூக்கம் கலைத்து விட்டு நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.



செவ்வாய், 17 செப்டம்பர், 2024

சண்முகையா எம்எல்ஏ - அமைச்சர் சிவசங்கர் சந்திப்பு புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம், குறுக்குசாலை புதிய வழிதடம் வே வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியில்....

ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் வெளியூர்களில் கல்வி பயின்று வருகின்றனர்.



 அரசு ஊழியர்கள், மாணவர்கள், ஜவுளி வியாபாரிகள், பொதுமக்கள் ஆகியோர் சென்னை போன்ற பெருநகரங்களுக்கு பணிகள் நிமித்தமாகவோ, கல்வி நிமித்தமாகவோ செல்வதற்கு நேரடியாக போதிய பேருந்து வசதிகள் இல்லை.



 தூத்துக்குடி சென்று அங்கிருந்து அரசு விரைவு பேருந்துகள் மூலமாக சென்னை செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. 

வீண் அலைச்சல்?

நேரடியாக பேருந்து வசதிகள் இல்லாத காரணத்தினால் அரசு ஊழியர்களும், வியாபாரிகளும், மாணவர்களும், பொதுமக்களும் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.!


ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர் ஆகிய இரண்டு நகரங்களும் மதுரை - தூத்துக்குடி விரைவு சாலைக்கு இடையே மேற்குப்பகுதியில்  அமைந்துள்ளன. 

மாற்று வழி ஏற்பாடு?

தினமும் மாலை 6 மணி முதல் 8 மணி வரை இயக்கப்படுகின்ற அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சில குறிப்பிட்ட பேருந்துகளை புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம் குறுக்குச்சாலை வழியாக இயக்கினால் மாணவர்களும், அரசு ஊழியர்களும், வியாபாரிகளும், பொதுமக்களும் பெரிய அளவில் பயன்பெறுவார்கள்.


கடிதம்?

 இதனால் கால விரையமும், அலைச்சலும், தேவையற்ற போக்குவரத்து செலவும் நிரந்தரமாக தவிர்க்கப்படும் அதனால் 

புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம், குறுக்குசாலை என விரைவு போக்குவரத்து கழக புதிய வழித்தடம் உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை நேரில் சந்தித்து ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா எம்எல்ஏ வேண்டுகோள் வைத்து கடிதம் வழங்கினார்..!

புதன், 14 ஆகஸ்ட், 2024

அதிரடி முயற்சி எடுத்த ..சேர்வைகாரன்மடம் ஊராட்சி உப தலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா கிராம மக்கள் வரவேற்பு

 ▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

14-8-2024 photo news 

by sunmugasunthram Reporter 

தூத்துக்குடி - சாயர்புரம் - திருவைகுண்டம் - திருநெல்வேலி இடையே உரிய நேரத்தில் ..கிராம பேருந்து வழித்தடங்கள் மாற்றி விட்டதால் பொதுமக்கள் அவதியுற்றனர்.

 அதிரடி முயற்சி யாக தமிழக முதல்வருக்கு தெரிவித்து மீண்டும் பழைய வழித்தடம்.. பேருந்து வர செய்த சேர்வைகாரன்மடம் ஊராட்சி உப தலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா -வுக்கு கிராம மக்கள் பாராட்டு.


இதுபற்றி செய்தியாவது:-

தூத்துக்குடி - சாயர்புரம் - திருவைகுண்டம் - திருநெல்வேலி இடையே உரிய நேரத்தில், உரிய வழித்தடத்தில் மீண்டும் முறையாக இயக்கத்தை தொடங்கியுள்ள தடம் எண் 578 என்கிற பேருந்திற்கு கிராம மக்கள் மாலை அணிவித்து, வரவேற்பு அளித்தனர்.  



தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் - சிவகளை - பண்டாரவிளை - சாயர்புரம் - சேர்வைகாரன்மடம் -கூட்டாம்புளி-புதுக்கோட்டை - தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி இடையே தடம் எண் 578 என்கிற அரசு பேருந்து இயக்கப்படுகிறது.


வழித்தடம் மாறிய பேருந்து?

  இப்பேருந்து, தூத்துக்குடியில் காலை 9.45 மணி மற்றும் மாலை 5.45 மணியில் கிளம்பக் கூடியதாகும்.


 ஆனால்??? சமீபகாலமாக காலையில் திருவைகுண்டத்தில் கிளம்பி.... தூத்துக்குடிக்கு வரும் இப்பேருந்து, அங்கிருந்து 9.45 மணிக்கு எடுத்து மீண்டும்.... திருவைகுண்டத்திற்கு செல்லாமல் வேறு இடங்களுக்கு மாற்றிவிடப்பட்டு வந்தது.


திருவைகுண்டத்தில் இருந்து... தூத்துக்குடிக்கே தாமதமாக 10.00 மணிக்கு வருவதுதான் அதற்கு காரணமாக இருந்து வந்தது.



 இதனால் அடுத்த தடவையும்(மாலை 5.45 மணி) இந்த பேருந்து வழித்தடத்திற்கு சரிவர வராமல் போனதும் நடந்து வந்தது. 


எனவே  வழித்தட பொதுமக்களுக்கு இதன் சேவை முழுமையாக கிடைக்காமல் போனது. 


அப்படியானால் ?? திருவைகுண்டத்தில் அப்பேருந்தை அதன் பழைய உரிய கால நேரமான 7.55 மணிக்கு கிளம்ப செய்வதுதான் அதற்கு சரியான தீர்வு என்று....

இது குறித்து சேர்வைகாரன்மடம் ஊராட்சி உப தலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா மற்றும் பொதுமக்கள், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், போக்குவரத்துகழக துறை அமைச்சர் சிவசங்கர், மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆகியோர்களிடம் மனுக்கள் மூலம் கோரிக்கை வைத்தனர். 


அரசு நடவடிக்கை!!!

அதன்பேரில்.... இப்பேருந்து தற்போது திருவைகுண்டத்தில் அதன் உரிய நேரமான காலை 7.55 மணிக்கு கிளம்பி பயணத்தை தொடங்கி, தூத்துக்குடிக்கு 9.30 மணிக்கு சென்று அங்கிருந்து 9.45 மணிக்கு கிளம்பி மீண்டும் அதேவழித்தடத்தில் திருவைகுண்டம் செல்கிறது.


 அதுபோல் மாலை 4.00 மணிக்கு திருவைகுண்டத்தில் கிளம்பி மீண்டும் அதே வழித்தடத்தில் தூத்துக்குடிக்கு 5.30 மணிக்கு வருகிறது.


 அங்கிருந்து 5.45 மணிக்கு கிளம்பி மீண்டும் அதன் வழித்தடத்தில் திருவைகுண்டம் செல்கிறது.  

இதனால் வழித்தட கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

கிராம மக்கள் மகிழ்ச்சி!! 

இது குறித்து ஏஞ்சலின் ஜெனிட்டா, கூறியதாவது:-

 எங்கள் கிராம மக்களுக்கு மிகவும் பயன்பட்டு வரும் பேருந்து தடம் எண் 578. திருவைகுண்டத்தில் அப்பேருந்து லேட்டாக கிளம்பும் போது தூத்துக்குடிக்கு சென்று மீண்டும் எங்கள் வழித்தடத்துக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. 


வராமல் அப்படியே வெளியே அனுப்பிக் கொண்டிருந்தனர்.



 நாங்கள் முதலமைச்சருக்கும், மாவட்ட கலெக்டருக்கும், அமைச்சர், எம்.எல்.ஏவுக்கும் மனுக்கள் மூலம் கோரிக்கை வைத்தோம்.


 நடவடிக்கை எடுக்கப்பட்டத்தின் அடிப்படையில் இப்போது அப்பேருந்து காலை, மாலை என இரண்டு தடவையும் அதன் உரிய நேரத்தில் இயக்கப்படுகிறது.


 இதனால் எங்கள் பகுதி மக்கள் பயனடைந்து வருகின்றனர் என்றார்.  

இனிப்பு வழங்கல்!!

 பேருந்து ஊருக்கு வந்த போது....

இன்று (14.08.2024) சக்கம்மாள்புரத்தில் வைத்து சேர்வைகாரன்மடம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா, உறுப்பினர் குணபாலன் மற்றும் அப்பகுதி மக்கள், அப்பேருந்திற்கு வரவேற்பு அளித்தனர்.



 பேருந்திற்கு மாலை அணிவித்து, பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்

 



 

திங்கள், 1 ஜூலை, 2024

படிக்கட்டில் தொற்றியபடி பஸ் கண்டக்டர்? அரசு செவி சாய்க்குமா!!

தூத்துக்குடி சாயர்புரம் அருகே பேருந்தில் இடம் இல்லாததால் படிக்கட்டில் பயணம் செய்யும் கண்டக்டர் புகைப்படம் வைரல்!



தூத்துக்குடியில் இருந்து சாயர்புரம், நாலுமாவடி வழியாக நாசரேத் வரை காலையில் தனியார் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. 


இந்த வழித்தடத்தில் பல பள்ளிகள் உள்ளதால் பேருந்தில் தினமும் அளவுக்கு அதிகமான பயணிகளின் கூட்டம் உள்ளது. 


 மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி உயிருக்கு ஆபத்தான நிலையில் பயணம் செய்து வருகின்றனர்.


 கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்ததால் நேற்று( 30-6-2024)கண்டக்டர் பேருந்தில் பின்னால் உள்ள கம்பியை பிடித்துச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.


இந்த பேருந்தை தவற விட்டு அடுத்த பேரூந்தில் சென்றால் ஆசிரியர்கள் பிரம்படியுடன் முழங்காலில் நிற்க வேண்டும் என்பதால் மாணவர்கள் அடுத்த பேருந்தில் செல்லாமல் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர்.


 மாணவர்கள் பேருந்தில் இடமில்லாமலே படிக்கட்டில் தொத்தி செல்கின்றனர் என்பதற்கு கண்டக்டர் பயணமே சாட்சியாக உள்ளது. 


இந்த வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் அதிகமான மாணவர்கள் வரும் பகுதிகளுக்கு பள்ளி நிர்வாகம் வேன் வசதி செய்து தர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

அரசு செவி சாய்க்குமா!!!

▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 1-7-2024 

திங்கள், 6 மார்ச், 2023

பேருந்துகள் இயக்க கார்ப்பரேட் நிறுவனங்களா? சிஐடியு கண்டனம்

 பேருந்துகள் இயக்க கார்ப்பரேட் நிறுவனங்களா?

சிஐடியு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.


இது பற்றிய செய்தியாவது ;-

சென்னை  மாநகர போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேருந்துகளை இயக்க ஆலோசனை வழங்குவதற்கான நிறுவனத்தை தேர்வு செய்வதற்காக ஒப்பந்தப்புள்ளி 1.3.2023ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.



அரசின் இந்த நடவடிக்கையை சிஐடியு வன்மையாக கண்டிப்பதுடன், இதைக் கைவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறது.  நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு, சென்னை நகரத்தில் தனியார் பேருந்துகள் இயங்கி வந்தன.  


தனியார் நிறுவனங்கள் மக்களிடம் முறைகேடாக கட்டணம் வசூலிப்பது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டன.  இதை ஆய்வு செய்வதற்கு பிரிட்டிஷ் அரசு ஒரு குழுவை நியமித்தது.  பேருந்து சேவையை அரசு நடத்துவதுதான் மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என அரசு நியமித்த குழுவின் ஆலோசனை அடிப்படையில், பிரிட்டிஷ் அரசாங்கம் பேருந்துகளை தேசியமயமாக்கி அரசின் கட்டுப்பாட்டில் பேருந்து இயக்கம் துவங்கப்பட்டது.


நாடு சுதந்திரம் அடைந்தபின்பு மக்களுக்கு மலிவான, நம்பகமான, இடைவிடாத பேருந்து சேவை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, 1950ம் ஆண்டு சாலைப்போக்குவரத்து சட்டம் கொண்டுவரப்பட்டது.  இதன்படி நாடு முழுவதும் அரசுத்துறை பேருந்துகள் இயங்கத் துவங்கின.  தமிழ்நாட்டில் 1967ம் ஆண்டு அறிஞர் அண்ணா தலைமையில் திராவிட முன்னேற்ற கழக அரசு பேருந்து தேசியமய கொள்கையை உருவாக்கியது.  


1972ம் ஆண்டு கலைஞர் தலைமையிலான அரசு மாநிலம் முழுவதும் தனியார் பேருந்துகளை தேசியமயமாக்கி அரசு போக்குவரத்து கழகங்கள் உருவாக்கப்பட்டன.  


போக்குவரத்து கழகங்கள் உருவான 50 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் இடைவிடாத, நம்பகமான பேருந்து சேவை குறைந்த கட்டணத்தில் உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளது.  மாணவர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் என சமூகத்தில் பல்வேறு பிரிவினருக்கு கட்டணம் இல்லாத பேருந்து பயணம் உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளது.  


போக்குவரத்து கழகங்கள் தமிழ்நாட்டின் சமூக, பொருளாதார வாழ்வில் முக்கிய பங்கு வகித்து வருகின்றன.  


தமிழ்நாட்டின் ஜிடிபி (உள்நாட்டு மொத்த உற்பத்தி) உயர்ந்ததில் போக்குவரத்து கழகங்களுக்கும் சிறப்பான பங்கு உண்டு.  



சென்னை நகரத்தில் கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக, அரசு பேருந்துகளே இயங்கி வருகின்றன.  சென்னை நகரத்தின் வழித்தடங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட தேசியமய வழித்தடங்கள்.  இவ்வழித்தடங்களில் போக்குவரத்து கழகங்கள் மட்டுமே பேருந்தை இயக்க முடியும்.  போக்குவரத்து கழகங்களுக்கு சொந்தமான இந்த வழித்தடங்களில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து ஓட்டும் நோக்கத்தோடு கடந்த அண்ணா திமுக ஆட்சியில் மோட்டார் வாகனச்சட்டத்தில் 288எ என்ற புதிய பகுதி உருவாக்கப்பட்டது.  


இது போக்குவரத்து கழகங்களை சீர்குலைக்க அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை என மிக கடுமையாக ஆட்சேபனை தெரிவித்து சிஐடியு, எல்பிஎப் உள்ளிட்ட அனைத்து சங்கங்களும் போராட்டம் நடத்தின.  


இப்போராட்டங்களுக்கு எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்ற கழகமும் ஆதரவு தெரிவித்தது.  தனியார் மயம் இல்லை.  தனியார் பங்களிப்போடு மின்சாரப் பேருந்துகளை இயக்கத்தான் சட்டத்திருத்தம் செய்யப்பட்டதாக அதிமுக அரசு விளக்கம் அளித்தது.  ஆனால் கடும் எதிர்ப்பு காரணமாக அந்நடவடிக்கை கைவிடப்பட்டது.


தற்போது அதிமுக அரசால் கைவிடப்பட்ட நடவடிக்கையை திராவிட முன்னேற்ற கழக அரசு துவங்கியுள்ளது ஏற்றுக்கொள்ள முடியாதது.

தனியார் மயம் இல்லை.  தனியார் பங்களிப்புடன் மின்சாரப் பேருந்துகளை இயக்க ஆய்வு செய்வதற்காகத்தான் டெண்டர் கோரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

  

மின்சார பேருந்துகளின் விலை சுமார் ரூ. 2 கோடி.  500 பேருந்துகள் இயக்க வேண்டுமானால், ரூ. 1000 கோடி மூலதனம் வேண்டும்.  கார்ப்பரேட் நிறுவனங்களாலேயே இதுபோன்ற முதலீட்டை செய்ய இயலும்.  பய கள் போக்குவரத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் நுழைய அனுமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.  மேலும் மின்சாரப் பேருந்து இயக்கச்செலவு சாதாரண பேருந்துகளைவிட கூடுதலானது


  தற்போது மாநகர போக்குவரத்து கழகத்தில் ஒரு பேருந்து இயக்க 1 கி.மீட்டருக்கு ரூ. 55 வரை செலவாகிறது.  மும்பையில்  மின்சாரப் பேருந்துகள் கிராஸ் காண்ட்ராக்ட் அடிப்படையில் இயக்கப்படுகின்றன.  ஒரு கிலோ மீட்டருக்கு 125 ரூபாய் தனியாருக்கு வழங்கப்படுகிறது.  எனவே  இதுபோன்ற நிலை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு மிகப்பெரிய சீர்குலைவை ஏற்படுத்தும்.  


ஒன்றிய அரசின் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை பேருந்து சேவை சம்பந்தமாக வெளியிட்டுள்ள ஆய்வின்படி 10,000 பேர் பயணம் செய்ய குறைந்தபட்சம் 50 பேருந்துகளையாவது இயக்க வேண்டுமென கூறியுள்ளது.  அதனடிப்படையில் சென்னை நகரத்தில் மட்டும் குறைந்தபட்சம் 6000 பேருந்துகள் இயக்கப்பட வேண்டும்.  தற்போது இயக்கப்படும் 3200 பேருந்துகளும் முழுமையாக இயக்கப்படுவதில்லை.  ஓட்டுனர், நடத்துனர் இல்லாமல் தினமும் 900 பேருந்துகள் இயங்குவதில்லை.


ஜெர்மன் வங்கி நிதியுதவியுடன் 2000 பேருந்துகள் வாங்கப்படும் என கடந்த 5 ஆண்டுகளாக ஒவ்வொரு பட்ஜெட்டிலும் கூறப்படுகிறது.  ஆனால், இதுவரை ஒரு பேருந்துகூட வாங்கப்படவில்லை.  இருக்கும் பேருந்துகளை இயக்காமல் அறிவித்த அடிப்படையில் புதிய பேருந்துகளும் வாங்காத சூழ்நிலையில், தற்போது தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க ஆய்வு செய்வதாக கூறப்படுவது மிக மோசமான நடவடிக்கையாகும்.  


எனவே அரசு வெளியிட்டுள்ள டெண்டர் அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும்.  சுற்றுச்சூழலுக்கு உகந்த அடிப்படையில் டெல்லி நகரத்தில் இயங்குவதுபோல இயற்கை எரிவாயு மூலம் இயக்கப்படும் பேருந்துகளை போக்குவரத்து கழகங்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 


 மேலும், ஓட்டுனர், நடத்துனர்கள் ப  நியமனம் செய்து, சென்னை நகர மக்களுக்கு பேருந்து சேவையை முறையாக வழங்க முழுமையான பேருந்துகளை இயக்க வேண்டும்.  பட்ஜெட்டில் அறிவித்த அடிப்படையில் புதிய பேருந்துகள் வாங்க வேண்டும்.  


சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க, விபத்தைக் குறைக்க, போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கி போக்குவரத்து கழகங்களை மேம்படுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.


அ.சவுந்தரராசன் 

சம்மேளன தலைவர்


கே,ஆறுமுகநயினார்

பொதுச் செயலாளர்


தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) 

சனி, 16 ஜூலை, 2022

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம்

 தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம்

கருங்குளம் பிஎம்எஸ் திருமண மண்டபத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் ஆர். சித்ராங்கதன் தலைமையில் (16-07-2022) இன்று காலை 10 மணியவில் நடைபெற்றது.



இந்த செயற்குழு கூட்டத்தின் சிறப்பு பார்வையாளர்களாக தமிழக பாரதிய ஜனதா கட்சியின் கூட்டுறவு பிரிவு மாநில தலைவரும், சோழவந்தான் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம். பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் மீனாதேவ் ஆகியோர்கலந்து கொண்டு பேசினார். 




இக்கூட்டத்தில் பாஜக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளாளமானோர் கலந்து கொண்டனர். 


புதன், 8 ஜூன், 2022

தி மு க ஆட்சியில் போக்குவரத்து தொழிலாளர்கள் நசுக்கப்படுகின்றன தூத்துக்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் பரபரப்பு

தூத்துக்குடி லீக்ஸ் - 08-06- 2022

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தை குறித்து தொழிலாளர்களிடம் விளக்கி கூறும் அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு வாயிற்கூட்டம் தூத்துக்குடி முத்தம்மாள் காலணி போக்குவரத்து பணிமனை முன்பு இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது.  

தூத்துக்குடி போக்குவரத்து பணிமனை முன்பு


கூட்டத்திற்கு போக்கு வரத்து பிரிவு மண்டலச் செயலாளர் கல்விக்குமார் தலைமை தாங்கினார்.  மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக். ராஜா முன்னிலை வகித்தார். 



கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் பேசியதாவது:- 


முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை குறித்து நடைபெற்ற 14வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் பங்கேற்ற இன்றைய ஆளும் திமுக அரசின் தொழிற்சங்கமும் அவர்களின் கூட்டணியில் உள்ள கமியூனிஸ்ட் உள்ளிட்ட பிற தொழிற்சங்கங்களும் கூட்டாக சேர்ந்து 25 சதவிகித ஊதிய உயர்வு, போக்குவரத்து கழக  தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக்குவது  மேலும் அன்றைய சூழ்நிலையில் செயல் படுத்த முடியாத பிற கோரிக்கைகளையும் வலியுறுத்தினார்கள்.? 

திருச்செந்தூர் - ஸ்ரீவைகுண்டம் போக்குவரத்து பனி மணை முன்பு


ஆனால் இன்றைக்கு ஆளும் அரசாக உள்ள திமுக தொழிற்சங்கமான எல்.பி.எப், சி.ஐ.டி.யு மற்ற பிற திமுக ஆதரவு சங்கங்கள் அதிமுக ஆட்சிக் காலத்தில் தொழிலாளர்களுக்கு கேட்ட 25 சதவிகித ஊதிய உயர்விற்கு பதிலாக தொழிலாளர்களை வஞ்சிக்கும் வகையில் 8 சதவிகித ஊதிய உயர்வு கேட்டு பேச்சு வார்த்தையை தொடங்கினர் இது தொழிலாளர் விரோத போக்குமட்டுமல்லாமல் அவர்களின் வயிற்றில் அடிக்கும் செயலாகும். இந்நிலையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட திமுக அரசின் போக்குவரத்து துறை அமைச்சர் 1.9.2019 முதல் 31.12.2021 வரை 2 சதவிகித ஊதிய உயர்வும், 1.1.2022 முதல் 3 சதவிகித ஊதிய உயர்வும் தருவதாக கூட்டுக்குழுவில் தெரிவித்தார் .

இதை அதிமுக வன்மையாக கண்டிக்கிறது.


ஆனால் திமுக தொழிற்சங்கமான எல்.பி.எப், சி.ஐ.டி.யு மற்ற பிற திமுக ஆதரவு சங்கங்கள் எந்த  எதிர்ப்பும் தெரிவிக்காமல் வாய் பொத்தி வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது.  


விடியல் அரசு அறிவித்த பேருந்துகளில் மகளிர்களுக்கான இலவச பயணம் திட்டத்தில் தொழிலாளர்களுக்கு பிக்ஸ்ட் பேட்டா 100 ரூபாய் வழங்க வேண்டும் என அண்ணா தொழிற்சங்கம் கோரிக்கை வைத்தது.  


அதையும் திமுக அரசு தரவில்லை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடியார் ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் பாதுகாக்கப்பட்டனர்.  

ஆனால் விடியல் முதல்வர் ஆட்சியில் போக்குவரத்து தொழிலாளர்கள் நசுக்கப்படுகின்றனர். 



தொழிலாளர்களை வஞ்சிக்கும் எந்த செயலாக இருந்தாலும் அதை எதிர்த்து அதிமுக தொழிலாளர்களுக்கு உறுதுணையாக இருக்கும் 


இவ்வாறு பேசினார். 


இந்நிகழ்ச்சியில் அமைப்புசாரா ஓட்டுநரணி மாநில இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட கழக அவைத் தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவரும் மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவருமான இரா.சுதாகர், மாவட்ட இணைச் செயலாளர் செரினா பாக்கியராஜ், துணைச் செயலாளர் சந்தனம், மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் வக்கீல் வீரபாகு, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ஏசாதுரை, முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி, பகுதி கழக செயலாளர்கள் ஜெய்கணேஷ், பொன்ராஜ், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் தனராஜ், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், தலைமைக் கழக பேச்சாளர் முருகானந்தம், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் கே.டி.சி.ஆறுமுகம், சுரேஷ், ஜவஹர், பொன்னம்பலம்,  வட்ட கழக செயலாளர்கள் திருச்சிற்றம்பலம், மனுவேல்ராஜ், கொம்பையா, அந்தோணிராஜ், ஈஸ்வரன், ஜெயக்குமார், நவ்சாத், ஜெகதீஸ்வரன், செக்கலிங்கம், முன்னாள் கவுன்சிலர்கள் செல்லப்பா, சந்திரா பொன்ராஜ், சந்தனப்பட்டு, நிர்வாகிகள் ஜெயராஜ், முத்துக்குமார், உதயகுமார், ஜெயபால், பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜா மற்றும் போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் மண்டல தலைவர்  எட்வின்அந்தோணிராஜ், மண்டல இணைச் செயலாளர்  லெட்சுமணன், துணை தலைவர்  ராமசாமி, பார்வதி, தூத்துக்குடி நகர பணிமனை தலைவர் முத்துக்கிருஷ்ணன், செயலாளர் ஆதிராஜ்வெள்ளையா, பொருளாளர் முருகவேல், இணைச்செயலாளர் தொப்பை கணபதி, பொன்சிங், திருமணி, சரவணசாமி, பாலகுமார், தூத்துக்குடி புறநகர் கிளை செயலாளர் அரிராமன், பொருளாளர் பெஸ்கி பத்மசிங், முத்துகிருஷ்ணன், முத்துவிஜயன், மகேந்திரன், முத்துக்குமார், ஸ்ரீவைகுண்டம் நிர்வாகிகள் லட்சுமணன், மாரியப்பன், பொன்ராஜ், மணிகண்டன், வேல்குமார், ஆழ்வார் சாத்தான்குளம் நிர்வாகி சுந்தரபாண்டியன், சுரேஷ், பாஸ்கர், திருச்செந்தூர் நிர்வாகிகள் தலைவர் ஈனமுத்து,  செயலாளர் உத்திரபாண்டியன், பொருளாளர் அய்யம் பெருமாள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் இரா. சுதாகர் நன்றி கூறினார்.



--



திங்கள், 9 மே, 2022

தூத்துக்குடியில் அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பார்ட்டம்

தூத்துக்குடி அதிமுக அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு சார்பாக  திமுக அரசை கண்டித்து மாபெரும்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இது பற்றிய செய்தியாவது :

 தூத்துக்குடி அதிமுக அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு சார்பாக   இன்று ( 9-5-2022) மாலை 3 மணி அளவில் தூத்துக்குடி புற நகர் பனிமனை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பார்ட்டம் நடைபெற்றது

திமுக அரசை கண்டித்து மாபெரும்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக அரசு பழைய ஒய்வு ஊதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் 

ஒய்வு ஊதியவர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை காலம் கடத்தாமல் உடனே வழங்க வேண்டும்

 என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும்

தேர்தல் வாக்குறுதிகளை  நிறைவேற்றாத  திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

 ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் பற்றிய விவரம்

அண்ணா தொழிற்சங்க பேரவை இணைச் செயலாளர் சங்கரலிங்கம்.அண்ணா தொழிற்சங்க தெற்கு மாவட்ட செயலாளர் டேக்ராஜா 

தலைவர் சுதாகர் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் மண்டலச் செயலாளர் கல்வி குமார் மண்டலத் தலைவர் எட்அந்தோணி ராஜ்

மண்டலப் பொருளாளர் லட்சுமண குமார் இணைச் செயலாளர் லட்சுமணன்.பாலமுருகன் துணைத்தலைவர் மரிசாமி.பார்வதி துணைச்செயலாளர்ஜேசு பாதம் தூத்துக்குடி அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துனை செய லாளர் பொன்னம்பலம்

நகர கிளை தலைவர் முத்துகிருஷ்ணன் செயலாளர் பொருளாளர் முருகவேல்

புறநகர் கிளை செயலாளர் அரிராமன்பொருளாளர்

புறநகர் கிளை பொருளாளர். பேஸ் கி

ஸ்ரீவைகுண்டம்கலை தலைவர் லட்சுமணன் செயலாளர் மாரியப்பன் பொருளாளர் பொன்ராஜ்

 சாத்தான்குளம் கிளைச் செயலாளர் சுந்தரபாண்டி

திருச்செந்தூர் கிளை தலைவர் ஈனமுத்து

செயலாளர் உக்ரபாண்டி பொருளாளர் அய்யம்பெருமாள்



கோவில்பட்டி கிளை தலைவர் வைரமணி செயலாளர் கணேசன் பொருளாளர் திருப்பதி

விளாத்திகுளம் கிளை தலைவர் சண்முகையா செயலாளர் பார்த்தசாரதி பொருளாளர்செல்வகுமார்

தூத்துக்குடி மண்டலகிளை நிர்வாகிகள்பொன்சிங் தொப்பை கணபதிஅபயம் தீர்த்தான் முருகேசன் முப்பிலிகுமார்பாலசுப்ரமணியன் லட்சுமண குமார் ராம்குமார் கலைச் செல்வம் ஒளி முத்து கருணாகரன் கண்ணன் Rகண்ணன் M.Pகுமார் ராஜேஷ்பண்டாரவளை பாஸ்கர் மாணவரணி செயலாளர் பிரபாகர் சந்தனப்பொட்டு சகாயராஜ் பகுதி செயலாளர் பொன்ராஜ் வக்கீல் செல்வகுமார் மற்றும் அண்ணா தொழிற்சங்க உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்