actress லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
actress லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 16 பிப்ரவரி, 2026

Trisha Krishnan குறித்து அவதூறு கருத்து: சட்ட நடவடிக்கை எச்சரிக்கை

 தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்தி photo news by Arunan journalist 

சென்னை, பிப்.15:

புகழ்பெற்ற இந்திய திரைப்பட நடிகை Trisha Krishnan குறித்து சமீபத்தில் சில ஊடகங்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரவி வரும் அருவருப்பான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துகள் தொடர்பாக, அவரது சட்ட ஆலோசகர் நித்யேஷ் நடராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

thoothukudileaks


அறிக்கையில் கூறப்பட்டதாவது: மாநில அரசியல் தளத்தில் உயர்ந்த நிலையை வகிக்கும் ஒருவரால் இத்தகைய பொருத்தமற்ற மற்றும் விரும்பத்தகாத கருத்து வெளியிடப்படும் என்று நடிகை திரிஷா ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. 

திரிஷா எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்புடையவர் அல்ல என்றும், எதிர்காலத்திலும் அரசியலில் ஈடுபட எந்தவிதமான விருப்பமும் இல்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அரசியல் தொடர்பான விவகாரங்களில் தாம் எப்போதும் நடுநிலைப் போக்கையே பின்பற்றி வருகிறார் என்றும், தன்னை ஒரு கலைஞராக மட்டுமே அடையாளப்படுத்த வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 


மேலும், தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில் விவாதத்திற்கோ அல்லது கருத்துரைக்கோ உட்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயர்ந்த பதவியில் உள்ளவர்கள் பொது கருத்துரைகளில் பொறுப்புணர்வு மற்றும் சமநிலையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதும், தொடர்பில்லாத விஷயங்களில் நடிகையின் பெயரை இழுத்து பேச வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

thoothukudileaks


இந்த அறிக்கை 15.02.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

சட்ட அலுவலகம்: தி ஈஸ்டர்ன் சேம்பர்ஸ், நிகில் சாதன், கம்பர் தெரு, கலாக்ஷேத்ரா காலனி, பெசண்ட் நகர், சென்னை – 600090.

— தூத்துக்குடி லீக்ஸ்

திரிஷா வழக்கறிஞர் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து குறித்து பரபரப்பு அறிக்கை – தமிழாக்கம்

நித்யேஷ் நடராஜ்

வழக்கறிஞர் ஆலோசகர்

அறிக்கை

புகழ்பெற்ற இந்திய திரைப்பட நடிகை Trisha Krishnan அவரின் அறிவுறுத்தலின் பேரில், பின்வரும் விஷயங்களை பதிவு செய்வதற்காக இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்:

சமீபத்தில் ஊடகங்களில் பரவி வரும், நடிகை திரிஷா குறித்த அருவருப்பான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்து குறித்து இவ்வறிக்கை வழங்கப்படுகிறது.

thoothukudileaks


மாநில அரசியல் தளத்தில் உயர்ந்த நிலையை வகிக்கும் ஒருவரால் இத்தகைய பொருத்தமற்ற மற்றும் விரும்பத்தகாத கருத்து வெளியிடப்படும் என்று நடிகை திரிஷா ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.

திரிஷா எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்புடையவர் அல்ல என்பதையும், எதிர்காலத்திலும் அரசியலில் ஈடுபட விருப்பமில்லை என்பதையும் தெளிவாக தெரிவித்துக் கொள்கிறார்.


 மேலும், அரசியல் தொடர்பான விஷயங்களில் தாம் எப்போதும் நடுநிலைப் போக்கையே பின்பற்றி வருகிறார் என்பதையும் மீண்டும் வலியுறுத்துகிறார்.

தன்னை ஒரு கலைஞராக மட்டுமே அடையாளப்படுத்த வேண்டும் என்பதே நடிகை திரிஷா வின் விருப்பமாகும்; எந்தவொரு அரசியல் தொடர்பு குறித்த குற்றச்சாட்டுகளாலும் அல்ல. மேலும், ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை பொதுவெளி விவாதத்திற்கோ அல்லது கருத்துரைக்கோ உட்படுத்தப்படக் கூடாது என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நெறியாகும். 

உயர்ந்த பதவியில் உள்ளவர்கள் பொதுக் கருத்துரைகளில் பொறுப்புணர்வும் சமநிலையும் கடைப்பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனது‌ கட்சிகாரர் நடிகை திரிஷா தொடர்பில்லாத விஷயங்களில் அவருடைய பெயரை இழுத்து பேச வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மரியாதையுடன்,

நித்யேஷ் நடராஜ் சார்பில்

(வெளியிடப்பட்ட தேதி: 15.02.2026)

சட்ட அலுவலகம்: தி ஈஸ்டர்ன் சேம்பர்ஸ்

@ நிகில் சாதன், H-9/1, கம்பர் தெரு,

கலாக்ஷேத்ரா காலனி,

பெசண்ட் நகர், சென்னை – 600090.

மின்னஞ்சல்: theeasternchambers@gmail.com