விடுதலைப்புலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விடுதலைப்புலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 15 பிப்ரவரி, 2025

விடுதலை புலிகள் பிரபாகரன் படத்தை சீமான் பயன்படுத்த தடை விதிக்க உயர்நீதிமன்றத்தில் வழக்கு

விடுதலை புலிகள் பிரபாகரன் படத்தை சீமான் பயன்படுத்த தடை விதிக்க உயர்நீதிமன்றத்தில் வழக்கு

Tamil Nadu updates,

Photo news by Arunan journalist 

இது பற்றிய செய்தியாவது:-

சென்னை: விடுதலை புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் புகைப்படத்தை பொதுவெளியில் பயன்படுத்த தடை விதிக்க கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.



சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எல்.கே. சார்லஸ் அலெக்சாண்டர் தாக்கல் செய்துள்ள மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


வழக்கின் முக்கிய அம்சங்கள்:


இந்தியாவில் எல்.டி.டி.இ. அமைப்பு தடை செய்யப்பட்டுள்ள நிலையில், பிரபாகரன் படத்தை சீமான் பயன்படுத்தி வருவதாக மனுவில் குற்றச்சாட்டு.


தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல் ஆதாயத்திற்காக பிரபாகரன் புகைப்படம் பயன்படுத்தப்படுவதாக புகார்.


இலங்கை போர் மற்றும் வன்முறையை தூண்டும் வகையில் “மார்பிங்” செய்யப்பட்ட படங்களை சீமான் வெளியிடுவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலைக்குப் பிறகு, இந்திய அரசு எல்.டி.டி.இ. அமைப்புக்கு தடை விதித்தது.


சீமான், எல்.டி.டி.இ தலைவர் பிரபாகரனை நேரில் சந்தித்து, ஏ.கே 47 துப்பாக்கியில் பயிற்சி பெற்றதாக பரப்புரை செய்யப்படுவதாக மனுவில் தகவல்.!!!



இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஞாயிறு, 12 பிப்ரவரி, 2023

விடுதலைபுலி பிரபாகரன் உயிருடன் நலமாக இருக்கிறார் பழ நெடுமாறன் அறிவிப்பு இவ் அறிவிப்பு வெளியானது ம் இலங்கை அரசு ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் மறுப்பு தெரிவித்து உள்ளார்.

thoothukudileaks 13-2-2023

விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமாக உள்ளார் அவரது மனைவியும் மகளும் நலமாக உள்ளார்கள்.அவரது குடும்பத்தினர் உடன் தொடர்பில் இருக்கிறேன் இருக்கும் இடத்தை அறிவிக்க இயலாது என இன்று13-2-2023தஞ்சாவூர் நடந்த நிகழ்ச்சி யின் போது தலைவர் பழ. நெடுமாறன் தொலைகாட்சி செய்தியாளர் களிடம் பேட்டி அளித்து அவரது பெயரில் அறிக்கையும் வெளியீட்டு உள்ளார் .

இதுபற்றிய செய்தியாவது:-

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன்
அவர்களைப் பற்றிய உண்மை அறிவிப்பு
1. சர்வதேசச் சூழலும், இலங்கையில் இராசபக்சே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு
வெடித்துக் கிளம்பியிருக்கிற சிங்கள மக்களின் போராட்டங்களும், தமிழீழத்
தேசியத் தலைவர் அவர்கள் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை
உருவாக்கியுள்ளது.

மாவீரன் பிரபாகரன் 


2.இந்தச் சூழலில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் நலமுடன்
இருக்கிறார் என்கிற நற்செய்தியை உலகம் முழுவதுமுள்ள தமிழர்களுக்கு
உறுதியாகத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். 



இதுவரை அவரைப் பற்றித்
திட்டமிட்டுப் பரப்பப்பட்ட யூகங்களுக்கும், ஐயங்களுக்கும் இது முற்றுப்புள்ளி
வைக்கும் என்று நம்புகிறோம்.



3. தமிழீழ மக்களின் விடியலுக்கான திட்டத்தை விரைவில் அவர் அறிவிக்க
இருக்கிறார். 


தமிழீழ மக்களும், உலகத் தமிழர்களும் ஒன்றுபட்டு நின்று அவருக்கு
முழுமையான ஆதரவினை அளிக்க முன்வருமாறு வேண்டுகிறோம்.

தலைவர் பழ.நெடுமாறன்



4. விடுதலைப்புலிகள் வலிமையாக இருந்த காலம் வரை இந்தியாவுக்கு எதிரான
நாடுகள் எதையும் தங்கள் மண்ணில் காலூன்ற அனுமதிக்கவில்லை. இந்தியாவுக்கு
எதிரான நாடுகள் எதனுடனும், எந்தக் காலகட்டத்திலும் எத்தகைய உதவியும்
பெறுவதில்லை என்பதிலும் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் மிக
உறுதியாக இருந்தார். 


தற்போது இலங்கையில் ஆழமாகக் காலூன்றி இந்திய
எதிர்ப்புத் தளமாக அதை ஆக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளதையும்,
இந்துமாக்கடலின் ஆதிக்கம் சீனாவின் பிடியில் சிக்கும் அபாயம் இருப்பதையும்
எண்ணிப்பார்த்து, அதனைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை
மேற்கொள்ள வேண்டும் என இந்திய அரசை வேண்டுகிறோம்.



5. இந்த முக்கியமான காலகட்டத்தில் தமிழக அரசும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக்
கட்சிகளும், தமிழக மக்களும் ஒன்றுபட்டு நின்று தமிழீழத் தேசியத் தலைவர்
பிரபாகரன் அவர்களுக்குத் துணை நிற்குமாறு வேண்டிக்கொள்கிறோம்.
அன்புடன்
நாள்: 13.02.2023 - திங்கள்
(பழ. நெடுமாறன்)
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம். தஞ்சாவூர்

இவ்வாறு பழ.நெடுமாறன் பேட்டி அவரது பெயரில் அறிக்கை வாட்ஸ்அப் போன்ற சமுக வலைதளங்களில் மற்றும் தொலைக்காட்சி யில் பேட்டி வெளியாகி  பரபரப்பு ஏற்பட்டது உள்ளது.

மறுப்பு

இந்நிலையில்...

பிரபாகரன் உயிருடன் இல்லை -இலங்கை ராணுவம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது


கடந்த 2009 மே 18 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை இறுதிக்கட்ட யுத்தத்தில் கொன்றதற்கான ஆதாரங்கள் தம்வசம் உள்ளதாக இலங்கை ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்தார்.