உண்ணாவிரதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உண்ணாவிரதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 13 மே, 2026

கணவரை சுட்ட போலீஸ் அதிகாரியை கைது செய்ய வேண்டும்” மணிகண்டன் மனைவி பொன்மணி கோரிக்கை; சாகும்வரை உண்ணாவிரதம் அறிவிப்பு

Tamil Nadu updates 13-5-2026

photo news by Ravi

தூத்துக்குடி மே13

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் கிராமத்தில் கடந்த 07.04.2026 அன்று நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயமடைந்த மணிகண்டனின் மனைவி பொன்மணி மணிகண்டன், தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.

thoothukudileaks


அரசு வேலை வழங்க வேண்டும் நீதியும் உதவியும் கிடைக்கவில்லை!!!

அப்போது அவர் கூறுகையில், ..

“எனது கணவரை சுட்ட உதவி காவல் ஆய்வாளர் இசக்கி ராஜாவை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். 

மேலும், தமிழக அரசு எங்கள் குடும்பத்திற்கு நிவாரணத் தொகை வழங்கி, அரசு வேலை வழங்க வேண்டும். இதுவரை எங்களுக்கு எந்த நீதியும் உதவியும் கிடைக்கவில்லை” என்று வேதனையுடன் தெரிவித்தார்.

மே 26 ல்  சாகும் வரை உண்ணாவிரதம்!!!

மேலும், தங்களது கோரிக்கைகள் நிறைவேறாத நிலையில், வரும் 26.05.2026 அன்று ஆலங்குளத்தில் உள்ள முன்னாள் தமிழக முதல்வர் காமராஜர் சிலை முன்பு சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர் அறிவித்தார்.

thoothukudileaks
செய்தியாளர் சந்திப்பு 


இந்த செய்தியாளர் சந்திப்பின்போது சான்றோர் வழக்கறிஞர் கூட்டமைப்பு தமிழ்நாடு நிறுவனர் தலைவர் வழக்கறிஞர் எஸ்.பி. சிலுவை, வழக்கறிஞர் திலக் மற்றும் வழக்கறிஞர் நம்பிராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

திங்கள், 9 செப்டம்பர், 2024

உண்ணாவிரதம் போராட்டம் மீனவர்களுக்கு ஆதரவாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு!!!

 ▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

9-9-2024 photo news 

by Arunan journalist 

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தருவைக்குளம் மீனவர்கள் 22

பேரையும் அவர்களது 2 விசைப்படகுகளையும் மீட்டுத்தரக்கோரி மத்திய, மாநில அரசுகளின்

கவனம் ஈர்க்கும் விதமாக தருவைக்குளம் பொதுமக்கள் சார்பாக

உண்ணாவிரதப் போராட்டம் 

மீனவர்கள் போராட்டத்தில் அதிமுக முழு ஆதரவு தெரிவித்து 

முன்னாள் அமைச்சர்கள் அதிமுகவினர் கலந்து கொண்டனர்.


இது பற்றிய செய்தியாவது:-


இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்க வலியுறுத்தி தருவைகுளத்தில் பேருந்து நிறுத்தம் முன்பு உண்ணாவிரதம் மற்றும் கடையடைப்பு  போராட்டம் இன்று 09.09.2024 நடைபெற்று வருகிறது.



காலை 8.30 முதல் மாலை 5.00 மணிவரை...

 உண்ணாவிரதம் போராட்டத்தில் அப்பகுதியில் பொதுமக்கள்  தங்கள்  குடும்பத்துடன் பங்கேற்றுள்ளனர்.



உண்ணாவிரதத்தில் ஊர் தலைவர்கள் பங்கு தந்தை வின்சென்ட்   இவர்களுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் கள் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ் பி சண்முகநாதன் வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ, மற்றும் அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளர் சித செல்லப்பாண்டியன் ஆகியோர் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

இன்று நடைபெற்ற கடையடைப்பு உண்ணாவிரதம் தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

திங்கள், 24 ஜூன், 2024

24 மணி நேர பட்டினி போராட்டம் தூத்துக்குடியில் திமுக அரசின் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துதமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் - சிஐடியு

 ▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 24-6-2024 photo news by anbarasan B.A



தூத்துக்குடி அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பாக ஏழு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 24 மணி நேர உண்ணாவிரத போராட்டம்.



 இக்கூட்டத்திற்கு தூத்துக்குடி பணிமனை தலைவர் பிச்சைமணி செயலாளர் தர்மராஜ் பொருளாளர் மாயகுமார் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

திமுக அரசின் கொள்கை க்கு எதிர்ப்பு தெரிவிப்பு !!!


திமுக அரசின் நிலையில் மாற்றம் வேண்டும்

சேவைத்துறை என்ற அடிப்படையில் 'போக்குவரத்து கழகங்களின் வரவுக்கும், செலவிற்குமான வித்தியாசத்

தொகையை பட்ஜெட்டில் வழங்க வேண்டும்' என 10 ஆண்டுகளாக கோரி வருகிறோம். 


இதற்காக திமுக அரசு

2022இல் அரசாணையும் வெளியிட்டது. 

ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக எவ்வித நிதியும்

ஒதுக்கப்படவில்லை.

வெறுங்கையோடு செல்கிறோம் நியாயம் தானா???

 2024ஆம் ஆண்டு பட்ஜெட்டிலும் உரிய நிதி ஒதுக்கப்படவில்லை. எனவே, பணியில்

உள்ள தொழிலாளர்கள். ஓய்வுபெற்ற ஊழியர்களின் பிரச்சனைகள் தொடர்ந்து நீடிக்கும் நிலையே உள்ளது.

பணிஓய்வு பெறும் தொழிலாளர்கள் வெறுங்கையோடு வீட்டிற்கு அனுப்பப்படுகின்றனர்.


 2017க்கு முன்பு

ஆண்டுக்கணக்கில் ஓய்வுகால பலன் மறுக்கப்பட்டது. 


2017 வேலை நிறுத்தத்திற்குப் பின்பு இதில்முன்னேற்றம் ஏற்பட்டது. 



தற்போது மீண்டும் பழைய நிலைக்கு சென்றுவிட்டது. 

பணி ஓய்வுபெற்ற

தொழிலாளர்களுக்கு 

18 மாத காலமாக ஓய்வுகால பலன்கள் வழங்கப்படவில்லை.


 எப்போது கிடைக்கும் என்றஉத்தரவாதமும் இல்லை.

2015ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஓய்வூதியர்களுக்கு DA உயர்வு நிறுத்தப்பட்டது. DA உயர்வை வழங்க

கூடாது என அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.

அன்று எங்களோடு அதிமுக வை எதிர்த்த திமுக இன்று வஞ்சிக்கிறது

 

 இன்று அதையே

 இதற்கு எதிராக நடைபெற்ற வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பித்த

உத்தரவுகளை எதிர்த்து, திமுக அரசு அப்பீல் மேல் அப்பீல் செய்கிறது.


 பொருத்தமற்ற வாதங்களைக்கூறி

வழக்குகளை இழுத்தடிக்கிறது. 


104 மாதங்களாக DA உயர்வு மறுக்கப்பட்டு, ஓய்வுபெற்ற ஊழியர்கள்

வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர்.


40 ஆண்டுகால நடைமுறை மாற்றப்பட்டு, போராடிப் பெற்ற 3 ஆண்டு ஒப்பந்தம் 4 ஆண்டாக மாற்றப்பட்டது.

இப்போது 5வது ஆண்டும் நெருங்குகிறது. ஒப்பந்த பேச்சுவார்த்தையைத் துவக்க அரசு தயாராக இல்லை.

தனியார் பேருந்துகளை தேசியமாக்கி கழகங்கள் கலைஞரால் உருவாக்கப்பட்டன.

தனியார் மயமாக்குதலில் இறங்கும் திமுக அரசு  !!!

 கடந்த காலத்தில்

தனியார்மய நடவடிக்கை எடுக்கப்பட்டபோது. அதற்கு எதிராக தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தை திமுக

ஆதரித்தது. 


இப்போது இ-பஸ் என்ற பெயரால் மறைமுகமாக தனியார்மய நடவடிக்கையை அரசு

துவக்கியுள்ளது.


நவீன அடிமைத்தனத்திற்கும், சுரண்டலுக்கும் பெயர்தான் காண்ட்ராக்ட் முறை. இட ஒதுக்கீடு உள்ளிட்ட

சமூக நீதியை மறுத்து. தொழிலாளர்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தும் முறைதான் காண்ட்ராக்ட் முறை.


காண்ட்ராக்ட் முறைக்கு எதிரான வழக்கில் இதை நீதிமன்றமும் கூறியுள்ளது. ஆனால், சமூக நீதி பேசும் அரசின்

வழக்கறிஞர் காண்ட்ராக்ட் முறை என்பது அரசின் கொள்கை முடிவு என நீதிமன்றத்தில் வாதாடுகின்றார்.


 சமூக
நீதிக்கு எதிரான காண்ட்ராக்ட் முறைதான் திமுக அரசின் கொள்கையா? எனவே.

• 15வது ஊதிய ஒப்பந்தத்தை உருவாக்கவும், புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிடவும்.

ஓய்வுபெற்றவுடன் பணப்பலன். 


ஒப்பந்த பலன்களை வழங்கி ஓய்வூதிய உயர்வு, பணியில்

உள்ள தொழிலாளர்களுக்கு இணையாக DA உயர்வு, மற்ற துறைகளைபோல்

மருத்துவக் காப்பீடு பெறவும்,

தனியார்மய, காண்ட்ராக்ட் முறையை முறியடிக்கவும்,

• பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி வரவுக்கும், செலவிற்குமான வித்தியாசத் தொகையைப் பெறவும்,

• வாரிசு வேலையை உறுதிப்படுத்தவும்,

கழகங்களைப் பாதுகாக்க, பணியில் உள்ள,

ஓய்வுபெற்ற ஊழியர்களின் அவலங்களைப் போக்க வலியுறுத்தி

24 2024 ஜூன் 24, திங்கட்கிழமை, காலை 10 மணிமுதல் 100

25ஆம் தேதி செவ்வாய் கிழமை, காலை 10 மணிவரை மையங்களில்

உண்ணாவிரதம் நடைபெறுகிறது.

அனைவரும் ஆதரவுதருக!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் - சிஐடியு