▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 24-6-2024 photo news by anbarasan B.A
தூத்துக்குடி அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பாக ஏழு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 24 மணி நேர உண்ணாவிரத போராட்டம்.
இக்கூட்டத்திற்கு தூத்துக்குடி பணிமனை தலைவர் பிச்சைமணி செயலாளர் தர்மராஜ் பொருளாளர் மாயகுமார் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
திமுக அரசின் கொள்கை க்கு எதிர்ப்பு தெரிவிப்பு !!!
திமுக அரசின் நிலையில் மாற்றம் வேண்டும்
சேவைத்துறை என்ற அடிப்படையில் 'போக்குவரத்து கழகங்களின் வரவுக்கும், செலவிற்குமான வித்தியாசத்
தொகையை பட்ஜெட்டில் வழங்க வேண்டும்' என 10 ஆண்டுகளாக கோரி வருகிறோம்.
இதற்காக திமுக அரசு
2022இல் அரசாணையும் வெளியிட்டது.
ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக எவ்வித நிதியும்
ஒதுக்கப்படவில்லை.
வெறுங்கையோடு செல்கிறோம் நியாயம் தானா???
2024ஆம் ஆண்டு பட்ஜெட்டிலும் உரிய நிதி ஒதுக்கப்படவில்லை. எனவே, பணியில்
உள்ள தொழிலாளர்கள். ஓய்வுபெற்ற ஊழியர்களின் பிரச்சனைகள் தொடர்ந்து நீடிக்கும் நிலையே உள்ளது.
பணிஓய்வு பெறும் தொழிலாளர்கள் வெறுங்கையோடு வீட்டிற்கு அனுப்பப்படுகின்றனர்.
2017க்கு முன்பு
ஆண்டுக்கணக்கில் ஓய்வுகால பலன் மறுக்கப்பட்டது.
2017 வேலை நிறுத்தத்திற்குப் பின்பு இதில்முன்னேற்றம் ஏற்பட்டது.
தற்போது மீண்டும் பழைய நிலைக்கு சென்றுவிட்டது.
பணி ஓய்வுபெற்ற
தொழிலாளர்களுக்கு
18 மாத காலமாக ஓய்வுகால பலன்கள் வழங்கப்படவில்லை.
எப்போது கிடைக்கும் என்றஉத்தரவாதமும் இல்லை.
2015ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஓய்வூதியர்களுக்கு DA உயர்வு நிறுத்தப்பட்டது. DA உயர்வை வழங்க
கூடாது என அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.
அன்று எங்களோடு அதிமுக வை எதிர்த்த திமுக இன்று வஞ்சிக்கிறது
இன்று அதையே
இதற்கு எதிராக நடைபெற்ற வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பித்த
உத்தரவுகளை எதிர்த்து, திமுக அரசு அப்பீல் மேல் அப்பீல் செய்கிறது.
பொருத்தமற்ற வாதங்களைக்கூறி
வழக்குகளை இழுத்தடிக்கிறது.
104 மாதங்களாக DA உயர்வு மறுக்கப்பட்டு, ஓய்வுபெற்ற ஊழியர்கள்
வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர்.
40 ஆண்டுகால நடைமுறை மாற்றப்பட்டு, போராடிப் பெற்ற 3 ஆண்டு ஒப்பந்தம் 4 ஆண்டாக மாற்றப்பட்டது.
இப்போது 5வது ஆண்டும் நெருங்குகிறது. ஒப்பந்த பேச்சுவார்த்தையைத் துவக்க அரசு தயாராக இல்லை.
தனியார் பேருந்துகளை தேசியமாக்கி கழகங்கள் கலைஞரால் உருவாக்கப்பட்டன.
தனியார் மயமாக்குதலில் இறங்கும் திமுக அரசு !!!
கடந்த காலத்தில்
தனியார்மய நடவடிக்கை எடுக்கப்பட்டபோது. அதற்கு எதிராக தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தை திமுக
ஆதரித்தது.
இப்போது இ-பஸ் என்ற பெயரால் மறைமுகமாக தனியார்மய நடவடிக்கையை அரசு
துவக்கியுள்ளது.
நவீன அடிமைத்தனத்திற்கும், சுரண்டலுக்கும் பெயர்தான் காண்ட்ராக்ட் முறை. இட ஒதுக்கீடு உள்ளிட்ட
சமூக நீதியை மறுத்து. தொழிலாளர்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தும் முறைதான் காண்ட்ராக்ட் முறை.
காண்ட்ராக்ட் முறைக்கு எதிரான வழக்கில் இதை நீதிமன்றமும் கூறியுள்ளது. ஆனால், சமூக நீதி பேசும் அரசின்
வழக்கறிஞர் காண்ட்ராக்ட் முறை என்பது அரசின் கொள்கை முடிவு என நீதிமன்றத்தில் வாதாடுகின்றார்.
சமூக
நீதிக்கு எதிரான காண்ட்ராக்ட் முறைதான் திமுக அரசின் கொள்கையா? எனவே.
• 15வது ஊதிய ஒப்பந்தத்தை உருவாக்கவும், புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிடவும்.
ஓய்வுபெற்றவுடன் பணப்பலன்.
ஒப்பந்த பலன்களை வழங்கி ஓய்வூதிய உயர்வு, பணியில்
உள்ள தொழிலாளர்களுக்கு இணையாக DA உயர்வு, மற்ற துறைகளைபோல்
மருத்துவக் காப்பீடு பெறவும்,
தனியார்மய, காண்ட்ராக்ட் முறையை முறியடிக்கவும்,
• பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி வரவுக்கும், செலவிற்குமான வித்தியாசத் தொகையைப் பெறவும்,
• வாரிசு வேலையை உறுதிப்படுத்தவும்,
கழகங்களைப் பாதுகாக்க, பணியில் உள்ள,
ஓய்வுபெற்ற ஊழியர்களின் அவலங்களைப் போக்க வலியுறுத்தி
24 2024 ஜூன் 24, திங்கட்கிழமை, காலை 10 மணிமுதல் 100
25ஆம் தேதி செவ்வாய் கிழமை, காலை 10 மணிவரை மையங்களில்
உண்ணாவிரதம் நடைபெறுகிறது.
அனைவரும் ஆதரவுதருக!
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் - சிஐடியு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக