செவ்வாய், 25 ஜூன், 2024

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி இந்திரா நகாில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமாா் ஆய்வு

 ▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 25-6-2024 photo news by sunmugasunthram Reporter 

மாப்பிள்ளையூரணி இந்திரா நகாில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமாா் ஆய்வு செய்தார்.

இது பற்றிய செய்தியாவது:-

     தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் உத்தரவுபடி, தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமாிப்புதுறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகையா எம்.எல்.ஏ ஆகியோர் வழிகாட்டுதலின்படி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் பல்வேறு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 



அதை சூழற்சி முறையில் 59 குக்கிராமம் பகுதிகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொள்ளுவது மட்டுமின்றி தங்களது பகுதிகளில் உள்ள குறைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்றும் புதிதாக சில பணிகளையும் செய்து தரவேண்டும். என்று தூத்துக்குடி கிழக்கு ஓன்றிய திமுக செயலாளரும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமாரிடம் பொதுமக்கள் கொடுக்கும் கோாிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொண்டு பல்வேறு பகுதிகளை ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில் 

    ஊராட்சிக்குட்பட்ட இந்திராநகா் பகுதியில் புதிய பேவர் பிளாக் சாலைஅமைத்து தரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் வைத்த கோாிக்கையை ஏற்று புதிதாக நடைபெறும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்து ஓப்பந்த தாரர்களிடம் நல்லமுறையில் பணிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

    மக்களுடன் கலந்துரையாடலில் பேசும் போது திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் இந்த பகுதிக்கு புதிய திட்டங்கள் குறிப்பாக சாலை வசதி, கழிவு நீர் கால்வாய் வசதி, செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் எந்த பணியுமே நடைபெறாமல் இருந்ததை நீங்கள் அறிவீர்கள் மக்களுக்காக தொடா்ந்து பணியாற்றும் கட்சி திமுக தான். திமுக ஆட்சிதான் உங்களுக்கு பொற்காலம் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலினும் மக்கள் நலன் தான் முக்கியம் என்று கருதி பணியாற்றுகிறார். அவரது வழியில் உங்களது சில கோாிக்கைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக முழுமையாக  செய்து கொடுப்பேன் என்றும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்றதலைவர் சரவணக்குமார் உத்தரவாதம் அளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக