செவ்வாய், 25 ஜூன், 2024

திமுக அரசின் பித்தலாட்டம்..!! சொன்னது 3 லட்சம் கொடுத்தது 1 லட்சம் மட்டுமே!!!

முதலமைச்சர் மீனவர் நிவாரண நிதியில் திமுக அரசின் பித்தலாட்டம்..!! சொன்னது 3 லட்சம் கொடுத்தது 1 லட்சம் மட்டுமே..!? 


தேசிய மீனவர் கட்சி பொதுச்செயலாளர்சேனாதிபதி சின்னத்தம்பி, அறிக்கை வெளியிட்டுள்ளார் .



அதில் கூறியுள்ளதாவது:-


        கடந்த 15-6-2024 அன்று  இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு விசைப்படகு கடலில் மூழ்கி அதிலிருந்து மூன்று மீனவர்கள் இறந்தனர். 


 இவர்களுக்கு.... தமிழ்நாடு அரசு சார்பில் மூன்று லட்ச ரூபாய் முதலமைச்சர் நிவாரண நிதியாக அறிவிக்கப்பட்டது.


 ஆனால் பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியாக  ஒரு லட்சம் மட்டுமே காசோலையாக கொடுக்கப்பட்டுள்ளது.


 முதலமைச்சர் நிவாரண நிதி என சொன்னது 3 லட்சம் ஆனால் கொடுத்தது 1 லட்சம் மட்டுமே..!!

     


வழக்கமாக மீனவர்கள் விபத்தில் இறந்தால் மீனவ சொசைட்டி மூலமாக மீனவர் நல வாரிய இலப்பீட்டு தொகை 2 லட்சம் நிவாரணமாக கொடுக்கப்படும்.


 இந்த தொகை மீனவர்கள் நல வாரியத்துக்கு செலுத்தும் வருட சந்தா ₹20 ரூபாயில் இருந்து எடுத்து இளப்பீடாக ₹2,02,500 கொடுப்பார்கள்.


 இதை முதல்நாள்  கடலில் கண்டெடுக்கப்பட்ட 2 மீனவர்களுக்கு தலா 2,02,500  ரூபாய் காசோலையை வழங்கப்பட்டு உள்ளது. 


அதன்பின் முதலமைச்சர் நிவாரண நிதி 3 லட்சம் என்று அறிவித்தவுடன், தனியாக ஒரு லட்சம் ரூபாய் காசோலை மட்டும் கொடுத்து விட்டு, ஏற்கெனவே கொடுத்த மீனவர் நல வாரிய தொகை 2 லட்சத்தையும் கணக்கில் காட்டி, முதலமைச்சரின் மீனவர் நிவாரண நிதி 3 லட்சம் கொடுக்கப்பட்டதாக செய்தி வெளியிட்டு ஒரு பித்தலாட்டத்தை தமிழக மீன்வளத்துறை செய்துள்ளது.


         இந்திய நாட்டிற்கு சுமார் ஒரு லட்சம் கோடி அந்நிய செலாவாணியையும், 3 லட்சம் கோடி உள்நாட்டு செலவானியையும் ஈட்டி தருவது மீனவர்கள் தான். அதேசமயம் 4% சதவீத இந்திய பொருளாதார வளர்ச்சியில் 1% சதவீத பொருளாதார வளர்ச்சியை ஈட்டி தந்து, நாட்டின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக மீனவர்கள் திகழ்ந்து வருகிறார்கள். 


       இதில் கிட்டத்தட்ட 25% சதவீதம் தமிழக மீனவர்கள் உழைப்பின் மூலமாக உருவானது. 


இதன் அடிப்படையில்  தமிழக மீனவர்களால் தமிழக அரசுக்கு சுமார் ஒரு லட்சம் கோடி வருமானம் கிடைக்கிறது.


 ஆனால் இவ்வளவு பெரிய தொகையை வருமானமாக மீனவர்கள் மூலம் கிடைத்தாலும், அதை பெற்றுக்கொண்டு தமிழக அரசு தொடர்ந்து மீனவர்களை வஞ்சித்து வருகிறது. 


மீனவர்கள் பயன்படுத்தும் டீசலில் இருந்து  மட்டும் அரசுக்கு வரியாக 5000 கோடி வருமானம் வருகிறது. 


இந்த பணம் எல்லாம் எங்கு செல்கிறது..!?

      கள்ளச்சாராய சாவில் இறந்தவர்களுக்கு 10 லட்சம் கொடுக்கும் தமிழக அரசு, தன் வயிற்று பிழைப்பிற்காகவும், இந்த நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், காற்றோடும், கடலோடும் போராடி மடிந்த மீனவனுக்கு கொடுப்பது வெறும் ஒரு லட்சம் நிவாரணமா..!? 

உயிரை பணயம் வைத்து தமிழக அரசுக்கு ஒரு லட்சம் கோடி வருமானம் ஈட்டி கொடுக்கும் மினவனுக்கு அதில் ஒரு சிறு பகுதியை  நிவாரணமாக கொடுக்க கூட தமிழக முதலமைச்சருக்கு மனமில்லை..!?


 என்பது வருத்தம் கலந்த வேதனையான விஷயம். 

காலம் காலமாக ஓட்டு வங்கியாக மீனவ சமூகத்தை பயன்படுத்தி வரும் அரசியல் கட்சிகளுக்கு மீனவர்களின் துன்பம் தெரிவதில்லை.



     அதேவேளை ரப்பர் தோட்டத்தில் யானை மிதித்து கொல்லப்பட்ட தொழிலாளிக்கு முதலமைச்சர் நிவாரணம் 10 லட்சமும், வனத்துறை வழிகாட்டலில் கீழ் ரப்பர் வாரிய நிவாரணம் 10 லட்சமும்  ஆக மொத்தம் 20 லட்சம் இளப்பீடு சட்டப்பேரவையில் அறிவித்துள்ளது தமிழக அரசு. 



இதை நாங்கள் வரவேற்கிறோம்.



     அதேசமயம் கள்ளச்சாராய குடித்து இறந்த நபர்களுக்கும், ரப்பர் தோட்ட தொழிலாளிக்கும் எந்த விதத்தில் மீனவன் குறைந்து போய்விட்டான்..!?


 சொல்லப்போனால் அவர்களைவிட 100 மடங்கு அரசுக்கு வருவாயை தன் உயிரை பணயம் வைத்து தமிழக மீனவன் ஈட்டி தருகிறான். 

       கள்ளச்சாராய சாவுகளுக்கு 10 லட்சம், வீணான கொண்டாட்டங்களுக்கு பல கோடி என மீனவர்களின் வரிப்பணத்தை செலவு செய்து கணக்கு காட்டி விட்டு, மீனவர் நிவாரணத்துக்கு மட்டும் பணம் இல்லை என்று சொல்வது நியாயமா..!?


     இதுபோன்று மீனவன் இரத்தம் சிந்தி உழைத்து கொடுக்கும் வரிப்பணத்தை, எல்லோருக்கும் நிவாரணமாக கொடுக்கும் திமுக அரசு, மீனவர்களை மட்டும் புறக்கணிப்பது எந்த விதத்தில் நியாயம்..!? 

       எனவே உடனடியாக ...இந்த விஷயத்தை தமிழக முதல்வர் கவனம் செலுத்தி கடலில் மீன் மீன்பிடிக்கும் போது விபத்தில் உயிரிழந்த 3 மீனவர்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியாக 10 லட்சம் ரூபாய் உடனடியாக அளிக்க வேண்டும் எனறு தேசிய மீனவர் கட்சி (N.I.S.H.A.D) சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

              இவன்

சேனாதிபதி சின்னத்தம்பி,

பொதுச்செயலாளர்,

தேசிய மீனவர் கட்சி (N.I.S.H.A.D)

தொடர்புக்கு : 72009200000

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக