துனை முதல்வர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
துனை முதல்வர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 14 நவம்பர், 2024

தூத்துக்குடியில் திமுக நிர்வாகிகளுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை!

🤷🏻‍♀️ _லீக்ஸ்_

15-11-2024

தூத்துக்குடியில் ரூ.206.47 கோடி நலதிட்ட உதவிகள்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்!

தூத்துக்குடியில் பல்வேறு அரசு துறைகளின் சார்பில் ரூ.206.47 கோடி மதிப்பில் நலதிட்ட உதவிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார். 



அப்போது பல்வேறு வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தும், முடிவுற்ற புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும் வருகிறார். 


அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு 2 நாள் சுற்று பயணமாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  தூத்துக்குடி வருகை தந்தார்.

பின்னர் 14-11-2024 வியாழன்று தூத்துக்குடி சத்யா ரிசார்ட்டில் நடைபெற்ற திமுக வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட சார்பு அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.


 பின்னர் அவர் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


 பின்னர்  7,893 பயனாளிகளுக்கு, ரூ.206.47 கோடி மதிப்பில் பல்வேறு அரசு துறைகளின் சார்பாக நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


இந்நிகழ்வில்,  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்  பி.கீதா ஜீவன்,   மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்  அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள்  எம்.சி.சண்முகையா,   ஜி.வி.மார்க்கண்டேயன்,   ஊர்வசி செ.அமிர்தராஜ், மேயர்  பெ.ஜெகன், சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை செயலாளர் மருத்துவர் தாரேஸ் அகமது,  மாவட்ட ஆட்சியர்  க.இளம்பகவத்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான்,சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை துணைச் செயலாளர்  மு.பிரதாப்,  மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர்  அ.பிரம்மசக்தி, துணை மேயர்  செ.ஜெனிட்டா, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர்  லி.மதுபாலன்,  கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)
செல்வி இரா.ஐஸ்வர்யா,  மாவட்ட வன அலுவலர்  ரேவதி ராமன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடியில் திமுக நிர்வாகிகளுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை!

2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக தூத்துக்குடியில் திமுக சார்பு அணி நிர்வாகிகளுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் சார்பு அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் குறிஞ்சி நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 


இந்த கூட்டத்தில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன் வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், எம்எல்ஏக்கள் மார்க்கண்டேயன், சண்முகைய்யா, மேயர் ஜெகன் பெரியசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தமிழக துணை முதல்வரும் இளைஞர் அணி மாநில அமைப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 2026 தேர்தலில் பணியாற்றுவது குறித்து ஆலோசனை வழங்கினார். மேலும் புதியதாக துவங்கப்பட்டுள்ள நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் மற்றும் எதிர்க்கட்சிகளில் எதிர்ப்பை விமர்சனங்களை எவ்வாறு எதிர்கொள்வது குறித்தும் ஆலோசனை வழங்கினார்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும். அரசின் திட்டங்களை வீடு வீடாக கொண்டு சேர்க்க வேண்டும் _என_ நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டார்.