Tamil Nadu updates
Photo news by Arunan journalist
🛵 தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் மாநகராட்சி வாகனக் காப்பகம் நிரம்பியது – டூவீலர்கள்!நிறுத்த இடமில்லாமல் பரிதவிப்பு
மாநகராட்சி வாகன காப்பகம் விரிபடுத்த வேண்டு கோள்!!!
ThoothukudiLeaks - தூத்துக்குடி
தூத்துக்குடி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் மாநகராட்சி கட்டண வாகனக் காப்பகம், கடந்த சில நாட்களாக வாகனங்களின் அதிகரிப்பு காரணமாக முழுவதும் நிரம்பிய நிலையில் காணப்படுகிறது.
இதனால் டூவீலர்கள் நிறுத்திட இடமில்லாததால், பயணிகள் தங்கள் டூவீலர்களை நேரடியாக உள்ளே பஸ் நிறுத்தும் நடைமேடைகளில் நிறுத்தி விட்டு செல்கிறார்கள்.
சிலர் அருகிலுள்ள கடைகளின் முன்பாகவே வாகனங்களை நிறுத்துவதால், வணிகர்கள் கடைகளுக்குள் வர முடியாமல் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இது குறித்து வாகனங்களை நிறுத்தும் பயணிகள், “மாநகராட்சி காப்பகத்தில் இடமில்லை. எங்களுக்குத் வேறு தேர்வு இருக்கிறதா சொல்லுங்கள்
கடை முன் பஸ் நிறுத்தம் செய்யும் நடைமேடை கவுண்டரில் டூவீலர்கள் நிறுத்தினால் திருடு போகும் என்று நன்கு புரிந்தும் நிறுத்தி விட்டு செல்கிறோம்” என கூறுகின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடி பேருந்து நிலையம் மாநகராட்சி வாகன காப்பகத்தில் பின் பகுதியில் இடம் உள்ளதால், மாநகராட்சி வாகனக் காப்பகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்களும் வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.