பொதுமக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொதுமக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 30 நவம்பர், 2024

தூத்துக்குடியில் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் பொதுமக்களுக்குநிலவேம்பு குடிநீர் வழங்கல்

தூத்துக்குடி மாவட்டம்  ஒட்டப்பிடாரம்  தாலுகாவில்  அமைந்துள்ள  தருவைக்குளம் கிராமத்தில்    காமராஜர் நற்பணி மன்றத்தின் செயல்பாடு பாராட்டத்தக்கது.


 தொடர்ச்சியாக 7 ஆண்டுகள் வழங்கப்பட்டு, இம்முறை 8வது ஆண்டாக நிலவேம்பு குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 

தூயமிக்கேல் அதிதூதர் ஆலய கொடிமரம் முன்பாக பொது மக்கள் 


மழைக்கால நோய்களை தடுக்கும் இந்த முயற்சி பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சிறந்த சேவையாகும். 


நிகழ்வில் பொதுமக்கள் சேர்ந்து கொண்டு பயன்பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.



வியாழன், 6 ஏப்ரல், 2023

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பகுதியில் அடிக்கடி மின் அழுத்த பிரச்சனை பொதுமக்கள் பாதிப்பு மின்வாரிய அதிகாரிகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் கோரிக்கை

 thoothukudileaks 6-4-2023

photo news by shanmuga sunthram 

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பகுதியில் அடிக்கடி மின் அழுத்த பிரச்சனை இதனால் பொதுமக்கள் பாதிப்பு மின்வாரிய அதிகாரிகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் கோரிக்கை 

இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி மாவட்டத்தில் உள்ள 403 ஊராட்சிகளில் மிகப்பெரிய ஊராட்சிகளில் 59 கிராமங்கள் உள்ளடங்கிய வளர்ந்து வரும் பெரிய ஊராட்சியாகும்.

காளியம்மான் கோவில் கொடை விழாவில் பாரதிநகர் ஊர் பொதுமக்களுடன்ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் 

கோரிக்கை மனு 

 மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான சரவணக்குமார் மின்வாரிய நகர்புறம் வடக்கு உதவி செயற்பொறியாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது

    மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் உள்ள கீதாஜீவன் நகரில் வீடுகளுக்கு கொடுக்கப்பட்ட மின் இணைப்பில் மின்சாரம் சில நேரங்களில் உயர்மின் அழுத்தமாகவும் சில நேரங்களில் குறைந்த மின் அழுத்தமாகவும் இருப்பதாகவும் அதனை மின்சார வாரிய ஊழியர்கள் சரிசெய்த பின்னரும் மீண்டும் அடிக்கடி மின் அழுத்த பிரச்சனை ஏற்படுவதால் வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்கள் அடிக்கடி சேதம் அடைகிறது. 


ஆகவேமேற்குறிப்பிட்டுள்ள கீதாஜீவன் நகரில் அடிக்கடி ஏற்படுகின்ற மின்அழுத்த பிரச்சனையை உடனடியாக சரி செய்து நிரந்தர தீர்வு ஏற்படுத்தி கொடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


மாப்பிள்ளையூரணி ஊராட்சி பாரதிநகர் காளியம்மான் கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியை மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளருமான சரவணக்குமார் தொடங்கி வைத்து பாரதிநகர் ஊர் பொதுமக்களுடன் உணவு அருந்தினார்.



திங்கள், 26 டிசம்பர், 2022

தூத்துக்குடியில் போலீஸ் ஜீப் வண்டியால் பொதுமக்கள் அவதி

 தூத்துக்குடி லீக்ஸ் 26-12-2022

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே பாலவிநாயகர் கோவில் தெரு ...கனி ஹோட்டல் லாட்ஜ் முன்பு போலீஸ் ஜீப் நடு ரோட்டில் விட்டு சென்ற ததால் அப் பகுதியில் டிராபிக் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் வழி இன்றிபொதுமக்கள் கடும் அவதி 

நடுரோட்டில் போலீஸ் ஜிப்


இன்று மதியம் 2 to 3 மணி வரை ...

கிட்டத்தட்ட ஒருமணி நேரமாகியும் இன்னும் அந்த . போலீஸ் ஜிப் வண்டி அங்கே நின்று கொண்டு இருக்கிறது 

இத்தனைக்கும் அந்த கனி ஹோட்டல் லாட்ஜ்.-ல கார் பார்க்கிங் வசதி உள்ளது.

வீடியோ பார்க்க

நடுரோட்டில் நிறுத்திவிட்டு ஒரு ஜீப் - னால்  மற்ற வண்டி செல்ல முடியாமல் அருகே அருகே கார்கள் நிறுத்திவிட பொதுமக்கள் அப்பகுதி வாகனங்கள் நகர முடியாமல் திட்டியவாறு சென்றனர்.