தேர்தல்2024 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேர்தல்2024 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 10 நவம்பர், 2024

தேர்தல் ரிசல்ட் தூத்துக்குடி நாடார்கள் மகமை சங்க தேர்தல்

 thoothukudileaks 11-11-2024

Photo news by

Arunan journalist 

தூத்துக்குடி நாடார்கள் மகமை சங்க தேர்தல் நேற்று 10-11-2024 காலையில் 10 மணியளவில் KSPS திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது



போட்டியில் யார் யார் விவரம்


இதில்..

சீனிவாசன்

 சந்திர சேகர் 

செல்வராஜ் 

அணியும்


 சண்முகசுந்தரம் 

செல்வகுமார் 

சங்கரேஸ்வரன் 

அணி என இரண்டு அணிகளாக தேர்தலில் போட்டியிட்டார் கள்.

பொதுக்குழு உறுப்பினர்களான வாக்காளர்களின் ஆதரவு திரட்டுவதில் கடந்த சில நாட்களாக  இரண்டு அணிகளுமே முட்டி மோதியது.



வாக்கு பதிவு


தொடக்கத்தில் இருந்தே விறுவிறுப்பாக இருந்தது.

ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள் 



மாலை 4 மணியளவில் ஒட்டு எண்ணிக்கை எண்ண தொடங்கினர்




ஒட்டுபதிவு 410


மாலை 6 மணியளவில் தேர்தல் முடிவுகள் தெரிவிக்கப் பட்டது


வெற்றி!!!


 இதில்.. மொத்த ஒட்டுபதிவு 410-ல்

சீனிவாசன்

 சந்திர சேகர் செல்வராஜ் அணியினர்

 350 ஒட்டு பெற்று மெகா வெற்றி பெற்றது


தோல்வி!!!

எதிர்த்து போட்டியிட்ட சண்முகசுந்தரம் செல்வகுமார் சங்கரேஸ்வரன் அணியினர் 60 ஒட்டுபதிவு மட்டுமே பெற்று தோல்வியை தழுவியது


வெற்றி பெற்றவர்கள் விவரம் 

தலைவர்

.K.A.P. சீனிவாசன்

 உப தலைவர்கள் 

M.S.P. தேன்ராஜ்

.S.K.S.C.N. தர்மராஜ் 

செயலாளர் 

ப.சந்திரசேகர்

துணை செயலாளர்கள் 

.V.கணேசன்.

 P ராஜேஸ்

பொருளாளர்

K. செல்வராஜ்




 

வெள்ளி, 8 நவம்பர், 2024

பரபரப்பு தூத்துக்குடி நாடார்கள் மகமை தேர்தல் இரண்டு அணிகள் கடும் மோதல்!!!

thoothukudi leaks

News by Arunan journalist 

தூத்துக்குடி நாடார்கள் மகமை

தேர்தல்  10-11-2024 ஞாயிறு அன்று இரண்டு அணிகள் மோது கின்றனர் பரபரப்பாக நடைபெறுகிறது.



கடந்த 18 வருடங்களாக வெற்றியடைந்து வந்தவர்களுக்கு சவாலாக இப்போது.... இளைய தலைமுறை அணி இந்த தடவை போட்டி களத்தில் இறங்குகிறார்கள்

இதனால் பரபரப்பு ஏற்பட்டது

   KSPS திருமண மண்டபம் 

நாள்: 10.11.2024

நேரம் : காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை

இடம் : K.S.P.S. திருமண மண்டபம், தூத்துக்குடி.

ஜனநாயகத்தை மீட்போம்

நாடார்கள் சமுதாய நலன் காப்போம்

என்று தேர்தலில் நிற்கும் போட்டி வேட்பாளர்கள் தங்கள் ஆதரவை தெரிவிக்கும் படி களமாடி வருகின்றனர்.


தேர்தலில் மோதும் இரண்டு அணிகள் தலைவர் செயலாளர் பொருளாளர் பெயர் விவரம் 

அணி 1

வேட்பாளர்கள் 

தேர்தல் வாக்குப்பதிவு 

வேட்பாளர் பெயர்

தலைவர்

.K.A.P. சீனிவாசன்


 உப தலைவர்கள் 

M.S.P. தேன்ராஜ்

.S.K.S.C.N. தர்மராஜ் 

செயலாளர் 

ப.சந்திரசேகர்

துணை செயலாளர்கள் 

.V.கணேசன்.

 P ராஜேஸ்


பொருளாளர்

 K. செல்வராஜ்


 அணி 2

தலைவர்

: A.T. சண்முகசுந்தரம்

உபதலைவர்கள்

A. மோகன்

G. செல்வராஜ்


செயலாளர்

S. செல்வக்குமார்

இணைச்செயலாளர்கள்

T. சந்தணராஜ். : 

T. லிங்கராஜ்

பொருளாளர்

T. சங்கரேஸ்வரன் 


பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்களிக்க வரும்போது ஆதார்

கார்டு, அல்லது ஏதேனும்

ஒரு அடையாள அட்டை கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


திங்கள், 4 நவம்பர், 2024

பரபரப்பாக நடைபெற்ற தூத்துக்குடியில் வியாபாரிகள் சங்கம் தேர்தல் பொது செயலாளராக தெர்மல்நகர் ஐக்கிய வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் தெர்மல் ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார்

தூத்துக்குடி லீக்ஸ்

5-11-2024 

 photo news by

Arunan journalist 

தூத்துக்குடியில் உள்ள 60  வியாபாரிகள் சங்கங்கள் கொண்ட ஒருங்கிணைத்த சங்கமான தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்க நிர்வாகிகள் தேர்தல் நடத்திட நேற்று 04.11.24 காலை 10 மணிமுதல் மதியம் வரை சட்ட ஆலோசகர் . M. சொக்கலிங்கம்  அறிவிப்பு கொடுத்திருந்தார்.




பரபரப்பு!!!

தூத்துக்குடியில் வியாபாரிகள் நிர்வாகிகள் அப் பகுதியில் வர தொடங்கியதும் ...

காலை 9.30 மணிமுதல் மணி நகரில் உள்ள தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கம் பரபரப்பு ஏற்பட்டது.



இரு அணிகளும் மோதல்!!!

இரண்டு அணிகளாக வந்து தேர்தல் போட்டியில் களம் இறங்கினார் கள் இரு நாட்களாக முன்பாக வியாபாரிகள் மத்தியில்  ஆதரவு கேட்டு ஒரு வித பரபரப்பு உருவாகியது.

 

 இதில் தெர்மல் ராஜா  அணியான  வெற்றி அணியின் தலைவராக . ஜவஹர் , பொது செயலாளராக தெர்மல் ராஜா பொருளாளராக விக்னேஷ் 

தூத்துக்குடியில் 48 கிளை சங்கங்கள் வேட்பு மனு தாக்கல்!!!

தெர்மல் ராஜா  அணி இவர்களுக்கு ஆதரவான  48 கிளை சங்க நிர்வாகிகளும் பெரும் திரளாக வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார்கள்.

அமைதியாக வாபஸ் 

 ஏற்கனவே பொறுப்பில் இருக்கும் விநாயகமூர்த்தி  அணி அதனை பார்த்ததும் அமைதியாக மனு தாக்கல் செய்யாமல் அங்கிருந்து சென்றனர்.   


வேட்பு மனு தாக்கல் செய்யும் நாளான நேற்று வேறு யாரும் மனு தாக்கல் செய்யாத காரணத்தால்...

தலைவர் 


தலைவர் ஜவஹர் 

 புதிய தலைவராக பாளை ரோடு முனிசிபல் காம்ப்ளெக்ஸ் 

சங்க செயலாளர் ஜவஹர் 


செயலாளர் தெர்மல் ராஜா 


செயலாளர் 

தெர்மல் ராஜா 

 பொது செயலாளராக  தெர்மல்நகர் ஐக்கிய வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் தெர்மல் ராஜா 

பொருளாளர் விக்னேஷ் 



பொருளாளர் விக்னேஷ் 

  பொருளாளராக அண்ணா பேருந்து நிலைய வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் விக்னேஷ்  போட்டியின்றி தேர்ந்தெடுக்க பட்டார்கள். 



இவர்களுக்கு அனைத்து கிளை சங்க நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்தார்கள். 

தேர்தல் சட்ட ஆலோசகர் சொக்கலிங்கம் 


தேர்வு பெற்ற நிர்வாகிகள் அனைவருக்கும்  தூத்துக்குடி லீக்ஸ் சார்பில் அவர்களின் மக்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்!!! 



செவ்வாய், 16 ஜூலை, 2024

தமிழ்நாடு அமெச்சூர் பளுதூக்குதல் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் 2024 - 2027 நிர்வாகிகள் தேர்வு

▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

16- 7-2024 photo news 

by Arunan journalist 

தமிழ்நாடு அமெச்சூர்  பளுதூக்குதல் சங்க மாநில  பொதுக்குழு கூட்டம்  2024 - 2027 ஆண்டுக்கான சங்க நிர்வாகிகள் தேர்தல்



இது பற்றிய செய்தியாவது:-


தூத்துக்குடியில்...  தமிழ்நாடு அமெச்சூர் பளு தூக்குதல் சங்க பொதுக்குழு கூட்டம் மற்றும் 2024-2027 ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்தல்

14-7-2024 அன்று தூத்துக்குடி சுகம் ஹோட்டல் கூட்டரங்கில் 

 நடைபெற்றது.




 புதிய நிர்வாகிகள் தேர்வு !!!

பொதுக்கூட்ட..

தேர்தலில் மாநில தலைவராக மீண்டும் ராஜேஷ்ரவிசந்தர் தேர்வுசெய்யப்பட்டார்.



 தமிழ்நாடு ஒலிம்பிக் வீரர் சங்க நிர்வாகி

தமிழ்ச்செல்வன் தேர்தல் பார்வையாளராகவும் 

தேர்தல் அதிகாரியாக வக்கீல் சுப்ரமணியஆதித்தன் வந்திருந்தார்கள்.


தமிழ்நாடு

அமெச்சூர், பளுதூக்குதல் சங்கம் மாநில தலைவர்

ராஜேஷ் ரவிசந்தர்,

 செயலாளர் 

வக்கீல் அசோக்,

பொருளாளராக விஜய் 

ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.



துணைத்தலைவர்கள்

 நவராஜ் பால்

கனி டேனியல், தேவதாஸ்,

ஜெயசந்திரன், நாகவடி

வேல், அன்பு, நெல்சன்

பொன்ராஜ், நந்தகோபால்,

அன்வர்தீன், சேதுராமலிங்கம், காஞ்சனா  

இணைச் செயலாளர்கள்

பாக்கியராஜ், கிசார்,

சிவலிங்கம், காந்திமதி,

விக்னேஷ், விஸ்வநாதன்

ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.




அமெச்சூர், பளுதூக்குதல் புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை வாழ்த்துக்கள் தெரிவித்து சால்வை அணிவித்தனர்.



பிரஸ் மீட் !!!

அதன் பின்னர் புதிதாக தேர்வுசெய்யப்பட்ட 

மாநிலத் தலைவர் ராஜேஷ்ரவிசந்தர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்,

அவர் தெரிவித்தாவது :-

'

தமிழகத்தில் கிராமப்

புற இளைஞர்களுக்கு பளுதூக்கும் பயிற்சி அளித்துஅவர்களை ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ஊக்குவிப்போம். 

இதற்கு,தமிழக அரசு மாவட்டம் தோறும் சிறந்த பழு தூக்கும் வீரர்களைஉருவாக்கும் நடவடிக்கைகளை

மேற்கொள்ளஅமைச்சர் உதயநிதியிடம்

வலியுறுத்துவோம்' என்றார். 



 தமிழகத்தில் உள்ள பல்வேறுமாவட்டங்களைச் சேர்ந்த சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


ஞாயிறு, 30 ஜூன், 2024

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அமைச்சர் கீதாஜீவன் ஆலோசனை

▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 1-7-2024 photo news by sunmugasunthram Reporter 

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அமைச்சர் கீதாஜீவன் தேர்தல் பணி குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.




இது பற்றிய செய்தியாவது:-

 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு..


 முண்டியம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட 212, 213, 214, 215 ஆகிய பாகங்களின் தேர்தல் பொறுப்பாளர் என்ற முறையில்....


 தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான  கீதாஜீவன் நிர்வாகிகளுடன்  தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

    உடன் விக்கிரவாண்டி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் ஜெயபால், ஒன்றியக் கவுன்சிலர் இளவரசி ஜெயபால், முண்டியம்பாக்கம் கிளைச் செயலாளர் விஜயவேலன், தூத்துக்குடி மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன், பகுதிச் செயலாளர்கள் ரவீந்திரன்,  ஜெயக்குமார், நிர்மல்ராஜ், மேகநாதன், கோவில்பட்டி நகர திமுக செயலாளரும் நகர்மன்ற தலைவருமான கருணாநிதி, கோவில்பட்டி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் பீக்கிலிப்பட்டி முருகேசன், இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், மாவட்ட தகவல் தொழில்நுட்ப  அணி துணைஅமைப்பாளர் பிரபு, வட்டச்செயலாளர் பாலகுருசாமி, வட்டப்பிரதிநிதி பாஸ்கா், உள்ளிட்ட நிா்வாகிகள் மூத்த முன்னோடிகள் பலா் கலந்து ெகாண்டனர்.

வெள்ளி, 19 ஏப்ரல், 2024

தமிழகம் புதுவையில் இன்று வாக்குப்பதிவு: அனைவரும் தவறாமல் வாக்களியுங்கள்

தமிழகம் புதுவையில் இன்று 19-4-2024 வாக்குப்பதிவு: அனைவரும் தவறாமல் வாக்களியுங்கள்...


உங்கள் வாக்கு உங்கள் குரல்! இவர்கள்தான் உங்கள் தொகுதியின் வேட்பாளர்கள்...



01) கன்னியாகுமரி

காங்கிரஸ் - விஜய் வசந்த்

பாஜக - பொன் ராதாகிருஷ்ணன்

அதிமுக - பசிலியான் நசரேத்

நாம் தமிழர் - மரிய ஜெனிபர்


02) திருநெல்வேலி

காங்கிரஸ் - ராபர்ட் ப்ரூஸ்

பாஜக - நயினார் நாகேந்திரன்

அதிமுக - ஜான்சி ராணி

நாம் தமிழர் - பா.சத்யா


03) தென்காசி

திமுக - ராணி ஸ்ரீகுமார்

தமமுக - ஜான் பாண்டியன்

புதிய தமிழகம் - கிருஷ்ணசாமி

நாம் தமிழர் - இசை மதிவாணன்


04) தூத்துக்குடி

திமுக - கனிமொழி

தமாகா - SDR.விஜயசீலன்

அதிமுக - சிவசாமி வேலுமணி

நாம் தமிழர் - ரொவினா ருத்ஜேன்


05) இராமநாதபுரம்

ஐயுஎம்எல் - நவாஸ்கனி

ஓபிஎஸ் அணி - ஓ.பன்னீர்செல்வம்

அதிமுக - ஜெயபெருமாள்

நாம் தமிழர் - சந்திரபிரபா ஜெயபால்


06) விருதுநகர்

காங்கிரஸ் - மாணிக்கம் தாக்கூர்

பாஜக - ராதிகா சரத்குமார்

தேமுதிக - விஜய பிரபாகர்

நாம் தமிழர் - கெளசிக்


07) தேனி

திமுக - தங்க தமிழ்செல்வன்

அமமுக - TTV.தினகரன்

அதிமுக - நாராயணசாமி

நாம் தமிழர் - மதன் ஜெயபால்


08) மதுரை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - வெங்கடேசன்

பாஜக - ராம சீனிவாசன்

அதிமுக - சரவணன்

நாம் தமிழர் - சத்யா தேவி


09) சிவகங்கை

காங்கிரஸ் - கார்த்தி சிதம்பரம்

இ.ம.க.மு.க - தேவநாதன் யாதவ்

அதிமுக - சேவியர் தாஸ்

நாம் தமிழர் - எழிலரசி


10) தஞ்சாவூர்

திமுக - முரசொலி

பாஜக - முருகானந்தம்

தேமுதிக - சிவநேசன்

நாம் தமிழர் - ஹூமாயின் கபீர்


11) நாகப்பட்டினம்

இந்திய கம்யூனினிஸ்ட் - செல்வராஜ்

பாஜக - ரமேஷ்

அதிமுக - சுர்ஜித் சங்கர்

நாம் தமிழர் - கார்த்திகா


12) மயிலாடுதுறை

காங்கிரஸ் - வழக்கறிஞர் ஆர்.சுதா

பாமக - ஸ்டாலின்

அதிமுக - பாபு

நாம் தமிழர் - காளியம்மாள்


13) சிதம்பரம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி - தொல் திருமாவளவன்

பாஜக - கார்த்தியாயினி

அதிமுக - சந்திரஹாசன்

நாம் தமிழர் - ஜான்சிராணி


14) கடலூர்

காங்கிரஸ் - விஷ்னு பிரசாத்

பாமக - தங்கர் பச்சான்

தேமுதிக - சிவக்கொழுந்து

நாம் தமிழர் - மணி வாசகன்


15) பெரம்பலூர்

திமுக - அருண் நேரு

ஐ.ஜே.கே - பாரிவேந்தர்

அதிமுக - சந்திரமோகன்

நாம் தமிழர் - தேன்மொழி


16) திருச்சிராப்பள்ளி

மதிமுக - துரை வைகோ

அமமுக - செந்தில்நாதன்

அதிமுக - கருப்பையா

நாம் தமிழர் - ஜல்லிக்கட்டு ராஜேஷ்


17) கரூர்

காங்கிரஸ் - ஜோதிமணி

பாஜக - செந்தில்நாதன்

அதிமுக - தங்கவேல்

நாம் தமிழர் - கருப்பையா



18) திண்டுக்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - சச்சிதானந்தம்

பாமக - திலகபாமா

எஸ்.டி.பி.ஐ - முபாரக்

நாம் தமிழர் - கைலைராஜன் துரைராஜன்


19) பொள்ளாச்சி

திமுக - ஈஸ்வரசாமி

பாஜக - வசந்தராஜன்

அதிமுக - அப்புசாமி கார்த்திகேயன்

நாம் தமிழர் - சுரேஷ்குமார்


20) கோயம்புத்தூர்

திமுக - கணபதி ராஜ்குமார்

பாஜக - K.அண்ணாமலை

அதிமுக - சிங்கை ராமச்சந்திரன்

நாம் தமிழர் - கலாமணி ஜெகநாதன்


21) நீலகிரி

திமுக - ஆ.ராசா

பாஜக - எல்.முருகன்

அதிமுக - லோகேஷ்

நாம் தமிழர் - ஜெயக்குமார்


22) திருப்பூர்

இந்திய கம்யூனிஸ்ட் - சுப்பராயன்

பாஜக - முருகானந்தம்

அதிமுக - அருணாச்சலம்

நாம் தமிழர் - சீதாலட்சுமி


23) ஈரோடு

திமுக - பிரகாஷ்

தமாகா - விஜயகுமார்

அதிமுக - ஆற்றல் அசோக்குமார்

நாம் தமிழர் - கார்மேகன்


24) நாமக்கல்

கொமதேக - மாதேஷ்வரன்

பாஜக - கே.பி.ராமலிங்கம்

அதிமுக - தமிழ்மணி

நாம் தமிழர் - கனிமொழி


25) சேலம்

திமுக - செல்வகணபதி

பாமக - அண்ணாத்துரை

அதிமுக - விக்னேஷ்

நாம் தமிழர் - மனோஜ்குமார்


26) கள்ளக்குறிச்சி

திமுக - மலையரசன்

பாமக - தேவதாஸ் உடையார்

அதிமுக - குமரகுரு

நாம் தமிழர் - இயக்குனர் ஜெகதீசன்


27) விழுப்புரம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி - ரவிக்குமார்

பாமக - முரளி சங்கர்

அதிமுக - பாக்கியராஜ்

நாம் தமிழர் - இயக்குனர் களஞ்சியம்


28) ஆரணி

திமுக - தரணி வேந்தன்

பாமக - கணேஷ்குமார்

அதிமுக - கஜேந்திரன்

நாம் தமிழர் - பாக்கியலட்சுமி


29) திருவண்ணாமலை

திமுக - அண்ணாத்துரை

பாஜக - அஸ்வத்தாமன்

அதிமுக - கலியபெருமாள்

நாம் தமிழர் - ரமேஷ் பாபு


30) தருமபுரி

திமுக - ஆ.மணி

பாமக - செளமியா அன்புமணி

அதிமுக - அசோகன்

நாம் தமிழர் - அபிநயா


31) கிருஷ்ணகிரி

காங்கிரஸ் - கோபிநாத்

பாஜக - நரசிம்மன்

அதிமுக - ஜெயப்பிரகாஷ்

நாம் தமிழர் - வித்யா வீரப்பன்


32) வேலூர்

திமுக - கதிர் ஆனந்த்

புதிய நீதிக் கட்சி - ஏ.சி.சண்முகம்

அதிமுக - பசுபதி

நாம் தமிழர் - மகேஷ் ஆனந்த்


33) அரக்கோணம்

திமுக - ஜெகத்ரட்சகன்

பாமக - கே.பாலு

அதிமுக - விஜயன்

நாம் தமிழர் - அப்சியா நஸ்ரின்


34) காஞ்சிபுரம்

திமுக - செல்வம்

பாமக - ஜோதி வெங்கடேஷ்

அதிமுக - ராஜசேகர்

நாம் தமிழர் - சந்தோஷ்குமார்


35) ஸ்ரீபெரும்புதூர்

திமுக - டி.ஆர்.பாலு

தமாகா - வேணு கோபால்

அதிமுக - பிரேம்குமார்

நாம் தமிழர் - ரவிச்சந்திரன்


36) மத்திய சென்னை

திமுக - தயாநிதி மாறன்

பாஜக - வினோஜ் செல்வம்

தேமுதிக - பார்த்தசாரதி

நாம் தமிழர் - கார்த்திகேயன்


37) தென் சென்னை

திமுக - தமிழச்சி தங்கப்பாண்டியன்

பாஜக - தமிழிசை செளந்தரராஜன்

அதிமுக - ஜெயவர்தன்

நாம் தமிழர் - தமிழ்செல்வி


38) வட சென்னை

திமுக - கலாநிதி வீராச்சாமி

பாஜக - பால் கனகராஜ்

அதிமுக - இராயபுரம் மனோ

நாம் தமிழர் - அமுதினி


39) திருவள்ளூர்

காங்கிரஸ் - சசிகாந்த் செந்தில்

பாஜக - பாலகணபதி

தேமுதிக - நல்லதம்பி

நாம் தமிழர் - ஜெகதீஸ் சந்தர்


40) புதுச்சேரி

காங்கிரஸ் - வி.வைத்திலிங்கம்

பாஜக - நமச்சிவாயம்

அதிமுக - தமிழ்வேந்தன்

நாம் தமிழர் - மேனகா.


01) விளவங்கோடு (சட்டப்பேரவை இடைத்தேர்தல்)


காங்கிரஸ் - தாரகை கத்பட்

பாஜக - வி.எஸ் நந்தினி

அதிமுக - ராணி

நாம் தமிழர் கட்சி - இரா.ஜெமினி

புதன், 17 ஏப்ரல், 2024

ஜனநாயக ஆட்சி மலர இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். தூத்துக்குடி பிரச்சாரத்தில் கனிமொழி பேச்சு

ஜனநாயக ஆட்சி மலர இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். தூத்துக்குடி பிரச்சாரத்தில் கனிமொழி பேச்சு



      தூத்துக்குடி இந்தியாவின் 17வது மக்களவை தேர்தல் இந்தியாவில் 7 கட்டமாக நடைபெறுகிறது.

 தமிழகத்தில் ஓரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி 39 தொகுதிகளுக்கும் வாக்குபதிவு நடைபெறுகிறது.


 17ம்தேதி மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவு பெற இருப்பதால் தமிழகத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் வேட்பாளர்களும் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தங்களுக்குாிய சின்னத்திற்கு வாக்கு சேகாித்து வருகின்றனா். 

இந்நிலையில் வடக்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட பாத்திமாநகர், தெற்கு காட்டன் ரோடு, 2ம் கேட், அழகேசபுரம், வட்டக்ேகாவில், மேட்டுப்பட்டி, ஆகிய இடங்களில் திமுக வேட்பாளராக போட்டியிடும்

 கனிமொழி தூத்துக்குடியில்

தனக்கு வாக்கு சேகாித்து பேசியதாவது:-

 தூத்துக்குடி எனக்கு இரண்டாம் தாய்வீடு உங்களை நம்பி நான் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறேன். கடந்த காலத்தில் கொரோனா காலக்கட்டம் இருந்தபோது பிரதமர்மோடி லைட்டை அனைத்து விட்டு கையை தட்டுங்கள்


 கொரோனா பறந்து விடும் என்று கூறினார். ஆனால் நம்முடைய முதலமைச்சர் எல்லோருக்கும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறி அதை தீர்த்து வைத்தார். 


இன்று நீங்கள் தட்டும் இந்த கைதட்டு தான் அவர்களுக்கு வைக்கும் வேட்டாக இருக்க வேண்டும்.

 ராமநாதபுரத்தில் நடைபெற்ற மீனவர்கள் மாநாட்டில் நீங்கள் வைத்த அனைத்து கோாிக்கைகளும் முதலமைச்சரால் நிறைவேற்றப்பட்டு மீன்பிடி தடைகாலத்தில் வழங்கப்பட்ட உதவித்தொகை 5 ஆயிரத்தில் இருந்து 8 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. கல்லூாியில் படிப்பதற்கு 5 சதவீத இடஓதுக்கீடு திமுக ஆட்சியில் வழங்கப்பட்டது. இந்தியாவில் நடைபெறும் சா்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து இந்த நாட்டை நாம் அனைவரும் பாதுகாக்க வேண்டும். ஜனநாயகம் மலர்ந்து அனைவரையும் மதித்து நடக்கும் அரசு அமைய வேண்டும். முதலமைச்சர் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றியுள்ளார். அதிலும் குறிப்பாக இலவச பேருந்து பயணம், ஓருகோடியே 15 லட்சம் பேருக்கு ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. விடுபட்டவர்களுக்கும் தோ்தல் முடிவுக்கு பின் முகாம் நடத்தி அவர்களுக்கும் வழங்கப்படும். இந்தியா கூட்டணி அரசு அமைந்ததும். கேஸ் விலை 500க்கும், பெட்ரோல் 75க்கும், டிசல் 65க்கும் வழங்கப்படும். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியதை போல் தகுதியுள்ள பெண்கள் அனைவருக்கும் ஆண்டுக்கு ஓரு லட்சம் வழங்கப்படும். என்று கூறியுள்ளது. அதுவும் நிறைவேற்றப்படும். ஏப்ரல் 19 தேர்தல் நாளன்று முதல் பெயருடன் கூடிய உதயசூரியன் சின்னம் பட்டணை அளுத்தி உங்களது வாக்குாிமையை செலுத்த வேண்டும். உங்களுக்காக பணியாற்ற மீண்டும் வாய்ப்பு தாருங்கள் என்று கேட்டுக்கொண்டார். 

     வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துைற அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பொியசாமி, சண்முகையா எம்.எல்.ஏ, துணை மேயர் ஜெனிட்டா, முன்னாள் எம்எல்ஏ டேவிட்செல்வின், மாநில காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் சண்முகம், மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட திமுக அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர் ராஜ்மோகன் செல்வின், மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், மீனவரணி அமைப்பாளர் அந்ேதாணிஸ்டாலின், மாவட்ட மருத்தவ அணி தலைவர் அருண்குமார், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் அந்தோணி கண்ணன், பிரபு, ஜான்சன், ஜேசையா, பார்வதி, மாவட்ட பிரதிநிதிகள் சோ்மபாண்டியன், நாராயணன், சக்திவேல்,மாநில பேச்சாளார்கள் சரத்பாலா, இருதயராஜ், மாநகர அணி அமைப்பாளர்கள் ஜீவன்ஜேக்கப், அருண்சுந்தா், கிறிஸ்டோபர் விஜயராஜ், முருகஇசக்கி, சாகுல்ஹமீது, டேனி, துணை அமைப்பாளர்கள் பால்ராஜ், மகேஸ்வரன்சிங், வினோத், பிரபாகர், கருப்பசாமி, செல்வி, நாராயணவடிவு, சந்தனமாாி, பழனி, சங்கர், ஆர்தர்மச்சாது, பெல்லா, தொழிற்சங்க செயலாளர் மாியதாஸ், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், மேகநாதன், கவுன்சிலர்கள் தெய்வேந்திரன், கற்பககனி, நாகேஸ்வாி, அந்தோணிபிரகாஷ் மார்ஷலின், ஜான்சிராணி, ரெக்ஸ்லின், ாிக்டா, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சுரேஷ்குமாா், அரசு வழக்கறிஞர்கள் சுபேந்திரன், மாலாதேவி, வட்டச்செயலாளர்கள் லியோஜான்சன், டென்சிங், சதீஷ்குமார், முனியசாமி, அசோக்குமாா், சக்கரைசாமி, தினகர், சந்தனமாாிமுத்து, பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூர்யா, வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கர், புஷ்பராஜ், பேச்சிமுத்து, மற்றும் மணி, அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனர். மக்கள் நீதிமய்யம் மாவட்ட செயலாளர் ஜவஹா், துணைச்செயலாளர் அக்பர், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், மாநகர மதிமுக செயலாளர் முருகபூபதி, இளைஞர் அணி செயலாளர் சரவணபெருமாள், முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் அருள், காங்கிரஸ் நிா்வாகிகள் சேகா், கோபால், நிர்மல்கிறிஸ்டோபர், விஜயராஜ், சூசை வியாகுலம், செல்வராஜ், விஜயராஜ், உள்பட இந்தியா கூட்டணியை சோ்ந்த பலர் கலந்து கொண்டனர். 


பிரச்சாரத்திற்கு சென்ற இடங்களில் 8 இடத்தில் 50 கிலோ எடை கொண்ட மாலைகளை வெற்றி திருமகளே வருக என்று கூறி மாலை அணிவித்தனர். 


சில இடங்களில் வெற்றி பெற்றுள்ள உங்களுக்கு நாங்கள் வாழ்த்து சொல்ல தான் வந்துள்ளோம் என்று மக்கள் கூறியதும். கனிமொழி பிரச்சாரம் செய்ய வேண்டமா என்று கேட்டார். அதற்கு நமது சாதனைகள் எல்லோருக்கும் தொியும் எதிர்கட்சிகளின் வேதனைகளை மட்டும் நாட்டு மக்களுக்கு எடுத்துச்சொல்லுங்கள் என்று உரக்க குரலிட்டனர். 

 பல இடங்களில் உற்சாகமான பொதுமக்கள் வரவேற்பையும் வழங்கினார்கள்.

போட்டோ தகவல் 

த.சண்முகசுந்தரம் 

முத்த பத்திரிகையாளர் 

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளர் கள் பற்றிய விவரங்கள்

▂▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒 𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

நேரம் 5-30

தேதி 17-4-2024

Photo news by arunan journalist 

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளர் கள் பற்றிய விவரங்கள்

சொத்து மதிப்பு கள்

மற்றும் குற்ற வழக்குகள் மற்றும் படிப்பு மற்றும் வயது தொழில் பற்றிய விவரங்கள் 

திமுக 

திமுக வேட்பாளர் கனிமொழி 

படிப்பு எம் ஏ 

சென்னை எத்திராஜ் உமன் காலேஜ் 

வயது 56

தொழில்:- பொது சேவைகள் 

குற்ற வழக்கு எண்ணிக்கை 2

சட்ட விரோத பரிவர்த்தனை வழக்கு மற்றும் 1 ஊழல் வழக்கில் இருந்து மற்றும் தேவையற்ற ஆதாயம் பெற்ற வழக்கில் இருந்து விடுவிக்க ப்பட்டுள்ளார்.

மேல் முறையீடு நிலுவையில் உள்ளது.

அதிமுக 



சிவசாமி வேலுமணி 
அதிமுக வேட்பாளர் 
படிப்பு:- எட்டாவது வகுப்பு பாதியில் நிறுத்தம் 🏫 பள்ளி செல்ல வில்லை.
வயது:- 42

தொழில்:- புத்தூர் கட்டுஎலும்பு முறிவு வைத்தியர் 
மற்றும் விவசாயி
குற்ற வழக்குகள் எண்ணிக்கை 1

தமாகா (பாஜக கூட்டணி)



தமாகா பாஜக கூட்டணி வேட்பாளர் 
எஸ்டிஆர் விஜய் சீலன் 

படிப்பு 12 பாஸ் ( பிளஸ் டூ)
தூத்துக்குடி கால்டுவெல் மேல் நிலை ப்பள்ளி 

வயது:-51
தொழில்:- விவசாயம் 
கல்வி வேலை 
உற்பத்தி வேலை 
இவர் மீது குற்ற வழக்குகள் இல்லை 

நாம் தமிழர் 
நாம் தமிழர் கட்சி 
வேட்பாளர் 
ரொவினா ரூத் ஜென் 
படிப்பு BDS
வயது 32
தொழில் பல் மருத்துவர் 
குற்ற வழக்குகள் இவர் மீது இல்லை 


 




செவ்வாய், 16 ஏப்ரல், 2024

தூத்துக்குடியில் பிஜேபி மகளிர் கள் கூண்டோடு விலகல் மாவட்ட மகளிர் செயலாளர் உட்பட திமுக வில் இணைந்தனர்

thoothukudileaks 17-4-2024

Photo news by sunmugasunthram Reporter 

தூத்துக்குடி பிஜேபி மகளிர் அணி கூண்டோடு விலகி மாவட்ட மகளிர் செயலாளர் உள்பட 100 பேர்  அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.



இது பற்றிய செய்தியாவது:-

      தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி மாவட்ட செயலாளர் பாணுப்பிாியா, உள்பட 100 பேர் திமுகவில் இணைந்தனர். 

      எட்டையாபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட திமுக சாா்பில் இந்தியா கூட்டணி தலைமை தேர்தல் காாியாலயத்தில் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி மாவட்ட செயலாளர் பாணுப்பிாியா, பாரதிய ஜனதாகட்சி விவசாய அணி மண்டலத்தலைவர் சரவணக்குமார் என்ற மாாிமுத்து உள்பட 100 பெண்கள் மாநகர சுற்றுச்சூழல் அணி தலைவர் வினோத் ஏற்பாட்டின் படி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.



 அனைவரையும் வரவேற்று அமைச்சர் கீதாஜீவன் கருப்பு சிவப்பு மப்லர் அணிவித்து கௌரவித்தார். வரும் தேர்தலில் அனைவரும் கனிமொழியின் வெற்றிக்கு பணியாற்ற வேண்டும் என்று ேகட்டுக்கொண்டார். 

      மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளா்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், மாணவரணி அமைப்பாளர் சீனிவாசன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமி நாதன், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் குபேர்இளம்பாிதி, பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், தலைவர் பழனி, மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் அந்தோணிகண்ணன், பிரபு, அருணாதேவி, மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, கலைச்செல்வி, மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், சாகுல்ஹமீது, அணி துணை அமைப்பாளர்கள் பால்ராஜ், ராஜேந்திரன், மகேஸ்வரன்சிங், ரவி, மாவட்ட பிரதிநிதிகள் நாராணயன், செல்வக்குமார், ேசா்மபாண்டியன், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், மேகநாதன், சுற்றுச்சூழல் அணி தலைவர் வினோத், நெசவாளர் அணி தலைவர் சீதாராமன், கவுன்சிலர்கள் ராஜேந்திரன், விஜயலட்சுமி, நாகேஸ்வாி, சுப்புலட்சுமி, சரவணக்குமார், தெய்வேந்திரன், அந்தோணி பிரகாஷ்மார்ஷலின், ஜெயசீலி, வட்டச்செயலாளர்கள் முக்கையா, சுப்பையா, முத்துராஜா, சிங்கராஜ், கருப்பசாமி, சதீஷ்குமார், செல்வராஜ், முனியசாமி, வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கர், புஷ்பராஜ், துரை, பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூர்யா, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மற்றும் கணேசன், கருணா, கன்னிமாியாள், அல்பட், உள்பட பலர் உடனிருந்தனர்.

தம்பியை தோற்கடிக்க தீயாய் களம் இறங்கிய அண்ணன்!

 தம்பியை தோற்கடிக்க களம் இறங்கிய அண்ணன்!

தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.



தூத்துக்குடியில் அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார். 


இவர் முன்னாள் தூத்துக்குடி திமுக எம்பி, ஜெயதுரையின் தம்பி ஆவார். 


இவரின் தம்பி சிவசாமி வேலுமணி அதிமுக சார்பில் போட்டியிடும் நிலையில் அண்ணன் ஜெயதுரை 


தம்பிக்கு எதிராக திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் 🔥 தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.



  தூத்துக்குடி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சனி, 13 ஏப்ரல், 2024

புழுவை போல் ஊர்ந்து சென்று சசிகலாவின் காலை பிடித்தவர் சசிகலாவுக்கு மட்டுமின்றி இந்த தமிழகத்திற்கும் துரோகம் செய்தாா் எடப்பாடி? பிஜேபி அதிமுக இரண்டும் கள்ள காதல் செய்கிறது?தூத்துக்குடியில் கனிமொழிக்கு வாக்கு சேகாித்து அமைச்சர் உதயநிதிஸ்டாலின் பேசினார் .

▂▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒 𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

Photo news by sunmugasunthram Reporter 

புழுவை போல் ஊர்ந்து சென்று சசிகலாவின் காலை பிடித்தவர் சசிகலாவுக்கு மட்டுமின்றி ..

இந்த தமிழகத்திற்கும் துரோகம் செய்தாா் எடப்பாடி?தூத்துக்குடியில் கனிமொழிக்கு வாக்கு சேகாித்து போது அமைச்சர் உதயநிதிஸ்டாலின் பேசினார் .

21ல் அடிமை ஆட்சிக்கு முடிவு கட்டினோம் 24ல் சா்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் 

நாம் வெற்றி பெற்றுவிட்டோம் நமக்கு இங்கு (தூத்துக்குடி) போட்டியில்லை!!!!!

என்றார். 



 இதுபற்றி செய்தியாவது:-

  இந்தியாவின் 17வது மக்களவை தேர்தல் இந்தியாவில் 7 கட்டமாக நடைபெறுகிறது.


 தமிழகத்தில் ஓரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி 39 தொகுதிகளுக்கும் வாக்குபதிவு நடைபெறுகிறது.

 17ம்தேதி மாலை 5 மணியுடன் பிரச்சாரம் நிறைவு பெற இருப்பதால் தமிழகத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் வேட்பாளர்களும் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தங்களுக்குாிய சின்னத்திற்கு வாக்கு சேகாித்து வருகின்றனா். 

     தூத்துக்குடி மக்களவை தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளராக திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி போட்டியிடுகிறார்.


 கனிமொழியை ஆதாித்து திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.

 உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி பிரச்சாரம் பரபரப்பு பேச்சு!!!

இன்று 13-4-2024 தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி அண்ணாநகர் 7 சந்திப்பில் ..



மாநில திமுக இளைஞர் அணி செயலாளரும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சிறப்பு திட்ட செயலாளக்க துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கனிமொழியை ஆதாித்து பேசியதாவது :-


உச்சி வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆரவாரத்துடன் வரவேற்ற உங்களுக்கு நன்றி 19ம் தேதி தான் தேர்தல் ஆனால் இங்கு இருக்கும் நிலையை பார்த்தால் தேர்தல் முடிந்து வெற்றி விழா கொண்டாடுவதை போல் இருக்கிறது.


 நாம் வெற்றி பெற்றுவிட்டோம் நமக்கு இங்கு (தூத்துக்குடி) போட்டியில்லை.


 இங்கு போட்டியிடுவது கலைஞாின் மறுஉருவம் தான். வாிசைப்பட்டியலில் முதல் பெயர் கனிமொழி கருணாநிதி என்று தான் உள்ளது .


அதில் உள்ள புளுகலர் பட்டணை அழுத்தி உதயசூாியனுக்கு வாக்களிப்பதன் மூலம் நாம் மோடிக்கு வைக்கும் வேட்டாக அமைய வேண்டும்.

ஆறு லட்சம் !!!

 6 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற இன்னும் நான்கு நாட்கள் கடுமையாக உழைக்க வேண்டும எதிர்த்து நிற்கும் வேட்பாளர்கள் டெபாசிட் இழக்க வேண்டும். 


இந்த தூத்துக்குடி பக்கமே அவர்கள் திரும்பி பார்க்க கூடாது. 2021ல் இங்கு கீதாஜீவனை ஆதாித்து பிரச்சாரம் மேற்கொண்டேன்.


 அவர் 51 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


 அவர் தொடர்ந்து மக்கள் பணி ஆற்றி வருவதற்கு நீங்கள் அங்கீகாரம் அளித்தீர்கள்.



தூத்துக்குடியில் கனிமொழி பற்றி....


 இந்த தொகுதியில் கனிமொழியும் கடந்த 5 ஆண்டுகாலம் ஆற்றிய பணிகள் ஏராளம் .


குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் 16ஆயிரம் கோடியில் கார் தொழிற்சாலை, மற்றும் பர்னிச்சா் பார்க் தொழிற்சாலை அமையவுள்ளது. 

440 கோடியில் மாநகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வந்துள்ளது. 


136 கோடியில் பல்வேறு சாலை பேவர்பிளாக் சாைல பணிகள் நடைபெற்றுள்ளது.


 தூத்துக்குடி திரேஸ்புரத்தில் 21 கோடியில் மீனவர்களுக்கான திட்டங்களும் மீன்பிடி துறை முகத்தில் 10 கோடியும் வளர்ச்சி பணி திட்டங்களும் நடைபெற்றுள்ளது.


 இதற்கெல்லாம் காரணம் கனிமொழிதான்.


 நெல்லை தூத்துக்குடி மழை வௌ்ள கால நிவாரண நிதியாக முதலமைச்சாிடம் பேசி இரண்டாயிரம் கோடி பெற்ற தந்தவர்தான் இந்த கனிமொழி. 


மழை வௌ்ள காலத்தின் போது சேலத்தில் இருந்த என்னை முதலமைச்சர் தொடர்பு கொண்டு தூத்துக்குடி திருநெல்வேலிக்கு செல்ல உத்தரவிட்டதும் உடனே இங்கு நான்குநாட்கள் நான் தங்கி பணியாற்றினேன்.


 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் அதிகாாிகள் முகாமிட்டு பணியாற்றியதின் காரணமாக 3 நாட்களில் மீட்பு பணியை செய்தோம்.


 கனிமொழி இரண்டு மாதமாக மாவட்டம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி பணியாற்றினார். 

தூத்துக்குடி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து அதை செயல்படுத்தியவர் முதலமைச்சர் ஸ்டாலின், நம்முடைய முதலமைச்சர் யார் காலிலும் விழவில்லை.


 மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்.

அதிமுக எடப்பாடியார் பற்றி...

 ஆனால் பாதம் தாங்கி பழனிச்சாமி புழுவை போல் ஊர்ந்து சென்று சசிகலாவின் காலை பிடித்து முதலமைச்சரான பின் சசிகலாவுக்கு மட்டுமின்றி இந்த தமிழகத்திற்கும் துரோகம் செய்தாா். 


2019ல் தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழகத்திற்கு வந்த மோடி அதன் பின் தமிழக மக்கள் கொரோனாவால் பாதிப்பு சென்னையில் மிக்ஜாம் புயல் பாதிப்பு தூத்துக்குடி நெல்லை மாவட்டங்கள் கடும் மழை வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட போது வந்து எட்டி பார்க்கவும் இல்லை. ஆறுதல் கூறவும் இல்லை. 


ஏன் தமிழகத்திற்கு இப்போது வரை ஓரு பைசா கூட நிதி வழங்கவில்லை.


 ஆனால் இப்போது தேர்தல் காலமாக இருப்பதால் அடிக்கடி தமிழத்திற்கு மோடி வருதெல்லாம் நம்மை ஏமாற்றுவதற்கு தான் உண்மையான தமிழர்கள் மீது அவர்க்கு பற்று இருக்குமேயானால் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதி எல்லாவற்றையும் முறையாக வழங்கி இருப்பார், 


இப்போது வேஷம் போடுவதற்காக தமிழகத்திற்கு வரும் மோடிக்கு நாம் ஓட்டு மொத்தமாக வேட்டு வைக்க வேண்டும்.


 நாம் சுயமாியாதை உள்ளவர்கள் மாியாதை கொடுத்தால் அதை திருப்பி கொடுப்போம் இல்லையல் விரட்டியடிப்போம். 


 தமிழகத்திற்கு எதிரான பல திட்டங்களும் சட்டங்களும் ஒன்றிய பிஜேபி அரசு கொண்டு வந்த போது அப்போது முதலமைச்சராக இருந்த பாதம்தாங்கி பழனிச்சாமி துைணயாக இருந்து தமிழக மக்களுக்கு துரோகம் செய்துவிட்டு எங்களுக்கு எந்த உறவும் பிஜேபியுடன் இல்லையென்று  கூறி நாடகமாடி இன்று வரை கள்ளக்காதல் தொடர்கின்றன.


 ஓன்றிய அரசுக்கு தமிழகத்திலிருந்து ஜிஎஸ்டி வாி மூலம் ஓருபாய் நாம் கொடுத்தால் தமிழகத்திற்கு 29 பைசா திருப்பி தருகிறார். 


ஆனால் உத்திரபிரதேச மாநிலத்திற்கு இதே போல் 1 ரூபாய் கொடுத்தால் 3 ரூபாயும், பீகார் மாநிலத்திற்கு 7 ரூபாயும், பிஜேபி ஆளும் மாநிலங்களுக்கு தமிழக வருவாயிலிருந்து வரக்கூடிய வருமானத்தில் அதிகமான நிதியை வழங்குகிறாா். இது போன்ற ஓரவஞ்சனையில் ஈடுபடும் ஓன்றிய அரசு நமக்கு தேவையில்லை. 2019ல் மதுரையில் அடிக்கல் நாட்டிய எய்ம்ஸ் மருத்துவமணை இன்னும் ெதாடங்கி முடியவில்லை. ஆனால் பிஜேபி ஆளும் 6 மாநிலங்களில் முழுமையாக கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. 2014ல் கேஸ் விலை 450 இப்போது பல மடங்கு உயர்வு பிஜேபி ஆட்சியில், தமிழகத்தையும் தமிழக மக்களையும் மதித்தும் தமிழக திட்டங்களுக்கு முறையாக நிதி வழங்கும் ஓன்றிய அரசு அமைய வேண்டும். அந்த ஓன்றிய அரசு இந்தியா கூட்டணி அரசாக இருக்க வேண்டும். நம்முடைய முதலமைச்சா் அடையாளம் காட்டுபவரே பிரதமராக வரவேண்டும். இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் கேஸ் விலை 500 பெட்ரோல் விலை 75 டிசல் விலை 65க்கும் வழங்கப்படும். கலைஞர் ஆட்சியில் இருந்த வரை தமிழகத்திற்குள் நீட் தேர்வு வரவில்லை.


 தொடர்ந்து ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலம் வரை நீட் தேர்வு தமிழகத்திற்குள் வரவில்லை. 


ஆனால் பாதம் தாங்கி பழனிச்சாமி முதலமைச்சராக வந்தபிறகு நீட் தேர்வை அனுமதித்தார்.


 அதன் மூலம் தமிழகத்தில் 22 பேர் நீட் தேர்வுக்கு எதிராக உயிாிழந்துள்ளனர்

ஸ்டெர்லைட் ஆலை பற்றி..!!!

 தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் கலவரத்தின் போது 13 பேர் சுட்டு படு கொலை செய்யப்பட்டனர்.


 இதை கூட அவர் டிவியில் பார்த்து தான் தொிந்து கொண்டேன். என்று கூறினார்.


 2021 தேர்தலின் போது தமிழக முதலமைச்சா் கலைஞர் வழியில் செய்வதை தான் சொல்வேன். சொல்வதை தான் செய்வேன் என்று அவர் கொடுத்த வாக்குறுதியான பெண்களுக்கு பால்விலை, குறைப்பேன் என்று கூறினார். 3 ரூபாய் குறைத்தாா். அதே போல் பெட்ரோல் விலை 3 குறைத்தாா். பெண்களுக்கு மாதம் தோறும் 1000 உதவித்தொகை தமிழகத்தில் 80 சதவீதம் பேருக்கு ஓரு கோடியே 18 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது. அதில் விடுபட்டவர்களுக்கு முதலமைச்சாிடம் கூறி அந்த துறைக்கு அமைச்சராகஇருக்கும் நானும் நிதியமைச்சரும் சேர்ந்து அதையும் உறுதியாக பெற்றுத்தருவோம்.


 ஏப்ரல் 19 தேர்தல் ஜீன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை ஜீன் 3ம்தேதி முத்தமிழ் அறிஞர் கலைஞாின் 101வது பிறந்தநாள் நாம் 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று அவரது காலடியில் சமர்ப்பிப்பது தான் சாதனை 

 ஓன்று முதல் ஐந்து வரை படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு முதலமைச்சா் வழங்கும் திட்டத்தை மற்ற மாநிலங்கள் பின்பற்றுவது மட்டுமின்றி கனடா நாட்டிலும் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளுக்கே திராவிட மாடல் ஆட்சி வழிகாட்டியாக இருக்கிறது.



 தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டபின் நான் கலந்து கொள்ளும் 19வது நாள் பிரச்சாரம் 35வது தொகுதி தூத்துக்குடி 102வது பிரச்சார கூட்டம் இங்கு உங்களை நம்பி தான் கனிமொழிக்காக அவரது மருமகனாக வந்துள்ளேன்.


 நான் ஏற்கனவே கேட்டுக்கொண்ட படி 6 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு நான் சென்னை செல்கிறேன்.


 வெற்றி விழாவிற்கு இங்கு வருவேன். 

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறிய நீட் விலக்கு உள்ளிட்டஅனைத்தும் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் தமிழகத்திற்கு பொற்காலமாக அமையும்.


 பாஜகவை சோ்ந்த யாரும் ஓட்டு கேட்க வந்தால் 29 பைசா பிரதமர் எப்படி இருக்கிறார் என்று கேட்க வேண்டும். 21ல் அடிமைகளின் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பினோம் 24ல் சா்வாதிகார ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று பேசினார்.  

   பிரச்சாரத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமாிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏக்கள் மாா்க்கன்டேயன், சண்முகையா, மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர்கள் ஜோயல், இன்பரகு, மேயா் ஜெகன் பொியசாமி, துணை மேயர் ஜெனிட்டா, மாநில வா்த்தக அணி இணைச்செயலாளர் உமாிசங்கர், மாநில மீனவரணி துணைச் செயலாளர் புளோரன்ஸ், மாநில நெசவாளர் அணி துணைச்செயலாளர் வசந்தம்ஜெயக்குமார், தொகுதி பொறுப்பாளா் பெருமாள், மாநகராட்சி மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, கலைச்செல்வி, தெற்கு மாவட்ட இளஞைர் அணி அமைப்பாளர் ராமஜெயம், வடக்கு மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், மாவட்ட அணி நிர்வாகிகள் மதியழகன், அன்பழகன், அந்தோணிஸ்டாலின், சீனிவாசன், அபிராமிநாதன், கவிதாதேவி, அருண்குமார், குபோ்இளம்பாிதி, அசோக், அந்தோணிகண்ணன், பிரதீப், பெனில்டஸ், பிரபு, அருணாதேவி, கோகுல்நாத், பார்வதி, தங்கம், ராமர், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூாிதங்கம், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ஜெயக்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாநகர அணி நிா்வாகிகள் ஜீவன்ஜேக்கப், அற்புதராஜ், அருண்சுந்தா், ஜெயக்கனி, கிறிஸ்டோபர் விஜயராஜ், முருகஇசக்கி, மகேஸ்வரன்சிங், சீதாராமன், செய்யது காசிம், ரவி, சங்கரநாராயணன், பால்ராஜ், பெல்லா, செந்தில்குமாா், தொழிற்சங்க நிர்வாகிகள் முருகன், மாியதாஸ், கருப்பசாமி, ஓன்றிய செயலாளர்கள் காசிவிஸ்வநாதன், ராதாகிருஷ்ணன், செல்வராஜ், ராமசுப்பு, மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், சோ்மபாண்டியன். நாராயணன், செல்வகுமார், மாநில பேச்சாளர்கள் சரத்பாலா, இருதயராஜ், கவுன்சிலர்கள் சோமசுந்தாி, அதிஷ்டமணி, சரவணக்குமார், ஜான்சிராணி, ஜாக்குலின்ஜெயா, ாிக்டா, பொன்னப்பன், இசக்கிராஜா, கண்ணன், ரெக்ஸின், தெய்வேந்திரன், மும்தாஜ், ராமுஅம்மாள், தனலட்சுமி, முத்துமாாி, வட்டச்செயலாளர்கள் டென்சிங், பத்மாதேவி, கதிரேசன், பாலகுருசாமி, முத்துராஜா, சுப்பையா, செந்தில்குமார், சுரேஷ், செல்வராஜ், ரவீந்திரன், முனியசாமி, சிங்கராஜ், பகுதி இளைஞர் அணி அமைப்பாளா் சூர்யா, செந்தூர்பாண்டி, பெருமாள்கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மற்றும் கருணா, மணி, அல்பட், பிரபாகர், ஜோஸ்பர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்திய யூனியன் முஸ்ஸீம்லீக் மாவட்ட தலைவர் மீராசா, மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், மக்கள் நீதிமய்யம் மாவட்ட செயலாளர் ஜவஹர், சிபிஐ மாவட்ட செயலாளர் கரும்பன், சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆறுமுகம், தமிழக வாழ்வுாிமை கட்சி மாவட்ட செயலாளர் கிதர்பிஸ்மி, விடுதலை சிறுத்தை கட்சி மாவட்டசெயலாளா் கணேசன், திராவிடர் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ஹேமா, மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அகமது இக்பால், மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி, இளைஞர் அணி செயலாளர் சரவணபெருமாள், சிபிஐ நகர செயலாளர் ஞானசேகா், சிபிஎம் நகர செயலாளர் முத்து, உள்பட இந்தியா கூட்டணியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். 

 பாக்ஸ்: முன்னதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து வரவேற்றார். பிரச்சார இடத்திற்கு வந்ததும் கருப்பு சிவப்பு வண்ண தாள்கள் வெடியின் மூலம் வரவேற்று 201 பெண்கள் கும்பத்துடன் மாியாதை வழங்கி மலர்தூவி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அண்ணாநகர் பகுதி திமுக செயலாளர் ரவீந்திரன், மாநகர இளைஞர் அணி அமைப்பாளா் அருண்சுந்தர் ஆகியோர் வீரவாள் வழங்கினார்கள். உதயநிதிஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் துரை, துணைத்தலைவர் டைகர் வினோத், ஆகியோர் ஆளுயர ரோஜாப்பூ மாலை அணிவித்தனர். வேட்பாளர் கனிமொழி ஆரம்பம் முதல் கடைசி வரை அனைவரையும் கும்பிட்டும் சிாித்த முகத்தோடு புன்னகையிட்டவாறு அனைவரையும் உதயசூாியன் சைகை மூலம் உற்சாகப்படுத்தி கொண்டிருந்தார். 

முன்னதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில் இங்கு போட்டியிடும் கனிமொழி கலைஞருக்கு மகளாகவும், முதலமைச்சருக்கு தங்கையாகவும் உள்ள எனது அத்தைக்கு மருமகனாக வாக்கு கேட்டு வந்துள்ளேன். அதே போல் இங்கு கூடியிருக்கிற அனைவரும் கலைஞாின் ரத்தங்கள் தான் மோடி திமுகவைபார்த்து இது குடும்பகட்சி என்கிறார். ஆமாம். தமிழகத்தில் உள்ள அனைவரையும் அரவனைத்து அவர்களது வாழ்வில் ஔியேற்றுவதால் அது எங்கள் குடும்பம் தான். திமுகவிற்கு தற்போது உறக்கம் வருவதில்லை என்று மோடி கூறுகிறார். நாங்கள் உறங்காமல் விழித்துக்கொண்டு பிரச்சாரம் மேற்கொள்வதன் மூலம் ஜீன் 4ம் தேதி இந்தியா முழுவதும் உங்களை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பி விட்டு நாங்கள் நிம்மதியாக உறங்க செல்வோம் அதுவரை உறக்கமின்றி பணியாற்றுவோம். என்றார்.

கனிமொழி பேசுகையில் நான்கு இடங்களில் உதயநிதி ஸ்டாலின் எனக்காக பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். எனக்கு இது இரண்டாவது தாய்வீடு திருச்செந்தூாில் அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று உதயநிதிஸ்டாலின் வாக்குறுதி கொடுத்துள்ளார். அதே போல் தூத்துக்குடியிலும் அமைக்கப்படும் கலைஞர் காலம் முதல்கொடுக்கப்படும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.


 முதலமைச்சர் கூறியது போல் இது இரண்டாவது சுதந்திரபோராட்டம் பிஜேபியிடம் இருந்து மீட்க வேண்டும் என்று பேசினார்.