முதியோர் இல்லம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முதியோர் இல்லம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 21 பிப்ரவரி, 2025

பூங்காவில் முதியோருக்கான மனநல ஆலோசனை மையம் தொடக்கம்

முதியோருக்கான மனநல ஆலோசனை மையம் தொடக்கம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி சார்பில், முதியோர்களின் மனநல வளர்ச்சிக்காகவும், அவர்களை மகிழ்விக்கும் நோக்கத்துடன், பூபாலராயபுரம் கருப்பட்டி சொசைட்டி சந்திப்பில் "ஆயிரம் பிறை" முதியோர் மகிழ்விடம் அமைக்கப்பட்டுள்ளது.






இந்த பூங்காவில், முதியோர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் பொருட்டு, மாநகராட்சியின் வழிகாட்டுதலில் ஒரு மனநல ஆலோசகர் நியமிக்கப்பட்டுள்ளார்.


 முதியோரின் மன அழுத்தங்களை குறைக்கும் விதமாக, விளையாட்டுகள், உடற்பயிற்சிகள் மற்றும் நடத்தை மாற்றம் போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.



இந்த மனநல ஆலோசனை மற்றும் சீர்ப்படுத்தும் நடவடிக்கைகள் ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் மாலை 6.00 மணி முதல் நடைபெறும் என மாநகராட்சி அறிவித்துள்ளது. முதியோர், இந்த வாய்ப்பை பயன்படுத்தி மனநலத்தையும் உடல் நலத்தையும் மேம்படுத்திக் கொள்ளலாம் என மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.


சனி, 28 டிசம்பர், 2024

அன்பு உள்ளங்கள்" இல்லம் திறப்பு விழாவில் சிறப்புரை: கனிமொழி எம்பி

 "அன்பு உள்ளங்கள்" இல்லம் திறப்பு விழாவில் சிறப்புரை: 

 கனிமொழி எம்.பி




தூத்துக்குடி: 28/12/2024 அன்று, சனிக்கிழமை, தூத்துக்குடி மாவட்டம், கூட்டாம்புளியில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான "அன்பு உள்ளங்கள்" இல்லத்தை திறந்து வைக்கப்பட்டது.




 நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றியவர், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழு தலைவருமான  கனிமொழி கருணாநிதி எம்பி.



இந்த விழாவில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான  கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


புதன், 18 டிசம்பர், 2024

அசத்தல் அமைச்சர் கீதா ஜீவனுக்கு பொதுமக்கள் மனதார பாராட்டு

Tamil Nadu updates,

Photo news by

Arunan journalist 

தூத்துக்குடி, டிச. 19:

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் பாலூட்டும் தாய்மார் அறை அருகே அமர்ந்திருந்த 70 வயதான மூதாட்டி மெகருன்னிஷா, வழி தெரியாமல் புலம்பிக் அழுது கொண்டிருந்தார்.



மூதாட்டி அழுகை

 தல்லாகுளம் பெருமாள் கோயில் அருகே வீடு என கூறிய அவர், அடையாளம் தெரிந்தவர்கள் அழைத்து செல்லுமாறு கோரிக்கை விடுத்தார்.

அமைச்சர் கீதா ஜீவன் துரித உதவி 

இந்த தகவல் சமூக நலன் மற்றும் உரிமைத் துறை அமைச்சர் மாண்புமிகு கீதா ஜீவன் அவர்களிடம் வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்கப்பட்டது.



உடன் சம்பவ இடத்திற்கு.... அனுப்பி வைத்த அமைச்சர் கீதா ஜீவன் 

 தகவலை உடனடியாக கவனித்த அமைச்சர், தனது உதவியாளர் கல்யாணி அருண் ஆகியோரை சம்பவ இடத்திற்கு அனுப்பினார்.



அவர்கள் மூதாட்டியை ஆட்டோவில் ஏற்றி, பாதுகாப்பாக முதியோர் இல்லத்தில் சேர்த்தனர்.


 மனிதாபிமானத்துடன் செயல்பட்ட அமைச்சர் கீதா ஜீவன்  அவருடைய குழுவின் உதவி, பொதுமக்கள் மற்றும் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் பஸ் பயணிகளிடம் பெருமையான பாராட்டுகளை பெற்றது.


இந்த நிகழ்வு, அமைச்சரின் தன்னலமற்ற பணியினையும், சமூகத்தின் நலனுக்கு அவர் அளிக்கும் முக்கியத்துவத்தையும் காட்டுகிறது.


செவ்வாய், 1 அக்டோபர், 2024

புனித சூசையப்பர் முதியோர் இல்லத்தில் முதியோர் தின விழா


அக்டோபர் 1 உலக  முதியோர் தினம் முன்னிட்டு புனித சூசையப்பர் முதியோர் இல்லத்தில் முதியோர் தின விழா நடைபெற்றது.



இது பற்றிய செய்தியாவது:-

சிற்பி மக்கள் நல அறக்கட்டளை மற்றும் ஜே சி ஐ கன்னியாகுமரி பயோனியர் இணைந்து பிலாங்ககாலவிளை சமீபத்தில் உள்ள புனித சூசையப்பர் முதியோர் இல்லத்தில்  முதியோர் தின விழா கேக் வெட்டி கொண்டாடினர்.

வரவேற்பு 

சிற்பி அறக்கட்டளையின் தலைவர் ஜெயா ஸ்ரீதரன்  அனைவரையும் வரவேற்று பேசினார்.

சிறப்புரை!!!

 மூத்த அறிவிப்பாளர் விஜி பூரண சிங் மற்றும் ஜே சி ஐ கன்னியாகுமரி பயோனியர் கிளையின் தலைவர் முனைவர் சுபத்ரா செல்லத்துரை  முதியோர்களை வாழ்த்தி பேசினர்.

விழிப்புணர்வு பாடல்!!!

கலையூர் காதர்  முதியோர் தின சிறப்பு விழிப்புணர்வு பாடல் பாடி அசத்தினார்.

சிறப்பு வருகை !!!

 முதற்சங்கு பத்திரிக்கை ஆசிரியர் சிவனி சதீஷ் மற்றும் ஸ்ரீ ராகவேந்திரா நற்பணி மன்ற தலைவர் குமரேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.  

முதியோர் மகிழ்ச்சி 

அடுத்து முதியோர்களுக்கு பாட்டு போட்டி பேச்சு போட்டி என பல விதமான போட்டிகள் வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.



 முதியோர்களை மகிழ்விக்கும் விதமாக சிலம்பம் நடனம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. 

நினைவு பரிசு!!!

 முதியோர் இல்லத்தை சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கும் அருள் சகோதரிகளுக்கு நினைவு பரிசு கொடுத்து சிறப்பிக்கப்பட்டது.

திங்கள், 9 செப்டம்பர், 2024

மாவட்டத்தில் ஒன்றாவது?அரசு முதியோர் இல்லம் நடத்த வேண்டும்

▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

9-9-2024 photo news 

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது ஒரு முதியோர் இல்லத்தையாவது கட்டுவதற்கான பணிகளை 6 மாதத்திற்குள் தொடங்க அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

thoothukudi new bus stand 

பேருந்து நிலையம் 

மாநிலத்தின் பல கோயில் வளாகங்கள், பேருந்து நிலையங்களில் ஆதரவற்ற முதியவர்கள் தங்கியுள்ளனர். 

பொது நல வழக்கு!!!

மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின் படி மாவட்டம் தோறும் ஆதரவற்ற முதியோர் காப்பகம் அமைக்க உத்தரவிட வேண்டும் என பொதுநல வழக்கு


மாவட்ட த்தில் ஒன்றாவது முதியோர் இல்லம் அரசு அமைக்க வேண்டும் 

சட்டப்படி மாவட்டத்தில் ஒரு முதியோர் இல்லமாவது அரசால் நடத்தப்பட வேண்டும். 

தனியார் இல்லம் நடப்பது வீதி மீறல்!!!

தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களால் இத்தகைய இல்லங்கள் நடத்தப்படுவது விதிமீறும் செயல் என நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரிய கெளரி அமர்வு கருத்து தெரிவித்துள்ளார்.