முதியோருக்கான மனநல ஆலோசனை மையம் தொடக்கம்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி சார்பில், முதியோர்களின் மனநல வளர்ச்சிக்காகவும், அவர்களை மகிழ்விக்கும் நோக்கத்துடன், பூபாலராயபுரம் கருப்பட்டி சொசைட்டி சந்திப்பில் "ஆயிரம் பிறை" முதியோர் மகிழ்விடம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பூங்காவில், முதியோர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் பொருட்டு, மாநகராட்சியின் வழிகாட்டுதலில் ஒரு மனநல ஆலோசகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
முதியோரின் மன அழுத்தங்களை குறைக்கும் விதமாக, விளையாட்டுகள், உடற்பயிற்சிகள் மற்றும் நடத்தை மாற்றம் போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இந்த மனநல ஆலோசனை மற்றும் சீர்ப்படுத்தும் நடவடிக்கைகள் ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் மாலை 6.00 மணி முதல் நடைபெறும் என மாநகராட்சி அறிவித்துள்ளது. முதியோர், இந்த வாய்ப்பை பயன்படுத்தி மனநலத்தையும் உடல் நலத்தையும் மேம்படுத்திக் கொள்ளலாம் என மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக