கர்ப்பிணி பெண்களின் குழந்தை மகிழ்ச்சி: கொலுசு, வளையல் சத்தம் அவசியம்
Tamil Nadu updates,
Photo news by sunmugasuthram Reporter
தூத்துக்குடி – ஊரக வளர்ச்சி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில், தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற “சமுதாய வளைகாப்பு விழா”வில், மாவட்ட திமுக செயலாளரும் சமூகநல மற்றும் மகளிர் உரிமை அமைச்சருமான கீதாஜீவன் தன் உரையில் தெரிவித்தார்.
205 கர்ப்பிணி தாய்மார்கள் “குத்துவிளக்கேற்றி” நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக 10 வகையான சீா்வாிசை பொருட்கள் வழங்கப்பட்டன. இதன் மூலம், கருவுற்ற நாளிலிருந்து குழந்தைகள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வளர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வெளிப்படுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, மாவட்டத்திற்குட்பட்ட தூத்துக்குடியில் இத்தகைய விழா நடத்தப்பட்டதை பெருமிதமாக எடுத்துரைத்தார்.
முக்கியமாக, தாய்மார்கள் கருவுற்ற நாளிலிருந்து குழந்தையின் வளர்ச்சி நிறைவடையும் வரை, வளையல் அணிவகுப்பின் ஓசைகளில் குழந்தை மகிழ்ச்சி பெறும் எண்ணத்தையும், சமூக நலத்திட்ட உதவிகளின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.
மேலும், கர்ப்பக்கால பெண்கள் ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகள், முட்டை, பால், பழங்கள், தானிய வகைகள் போன்றவற்றின் உணவுக் கூறுகளை பின்பற்ற வேண்டும்; இவற்றின் மூலம் தாயின் உடல் ஆரோக்கியம் மற்றும் பிறக்கும் குழந்தையின் வளர்ச்சி உறுதிப்படுத்தப்படுகிறது.
அமைச்சர் கீதாஜீவன் தனது உரையில், ...
கர்ப்பிணி பெண்கள் குழந்தை வளர்ச்சிக்கான ஒழுங்கான ஊட்டச்சத்து வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என தெரிவித்தார். 10 மாதம் கஷ்டப்படிப் பிறகு பெற்றெடுக்கப்படும் குழந்தை குறைந்தது 3 முதல் 3½ கிலோ எடையுடன் பிறக்க, தாயின் எடை 10 கிலோ அதிகமாவதோடு உடல் தகுதி ஏற்படும். குழந்தைக்கு ஆறு மாதம் தாய்ப்பால் மட்டும் கொடுக்கப்படும்; அதன் பின், இணை உணவுகளான கீரை, பருப்பு, கஞ்சி, பழங்கள் போன்ற எளிய உணவுகளை அளிக்க வேண்டும்.
அதேபோல், அங்கன்வாடி பணியாளர்கள் இளம் தாய்மார்களுக்கு குழந்தை வளர்ப்பு குறித்த அறிவுரைகள் வழங்கி, மாற்றுத்திறன் அறிகுறிகளை 2 வயதுக்குள் கண்டுபிடித்து சரிசெய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும், குழந்தை பிறந்த பிறகும் ஆரோக்கிய உணவு மற்றும் ஓய்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
இந்த விழாவில், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட சமூகநல அலுவலா் பிரேமலதா, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திலகா, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மண்டல தலைவர் நிர்மல்ராஜ், இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தா், துணை அமைப்பாளர் ரவி, பகுதி செயலாளர் ஜெயக்குமாா், கவுன்சிலா் ஜாக்குலின்ஜெயா, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், துணை அமைப்பாளர் அருணாதேவி, பகுதி மகளிர் அணி துணை அமைப்பாளர் ரேவதி, வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மாவட்ட பொறியாளா் அணி தலைவர் பழனி மற்றும் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
மாவட்ட குழந்தை வளர்ச்சி திட்ட ஓருங்கிணைப்பாளர் விவேக் ராஜாவும் நன்றியுரையிட்டு, சமூக வளைகாப்பு விழாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
கர்ப்பிணி தாய்மார்கள் குழந்தை வளர்ப்பில் மட்டும் அல்லாமல், ஒரு நல்ல சமூகத்தை உருவாக்கும் பெருமைப்பாடு பெற்றுள்ளனர்.
சமூக வளைகாப்பு விழா மூலம் அவர்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து, ஆரோக்கியம் மற்றும் பரிசோதனை உதவிகள், தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்பில், குழந்தை மற்றும் தாயின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் ஒரு முயற்சியாக விளங்குகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக