Tamil Nadu updates
சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் திருத்தேர் திருவிழா!
அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மாபெரும் அன்னதானம் — ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
சேலம்: ஆகஸ்ட் 9
சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் திருத்தேர் திருவிழா பக்தர்களின் பக்திப் பரவசத்துடன் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் மாபெரும் அன்னதான விழா சிறப்பாக நடைபெற்றது.
பழமை வாய்ந்ததும், பக்தர்களால் மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் திருத்தலமாக போற்றப்படுவதுமான சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற திருத்தேர் திருவிழாவில், சேலம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து அம்மனை வழிபட்டனர்.
திருத்தேர் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் அன்னதான விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் கலந்து கொண்டு அன்னம் பெற்று சென்றனர்.
இந்நிகழ்ச்சியில் அகில பாரதீய சந்நியாசிகள் சங்கத்தின் நிறுவனர், வாழும் கலியுக சித்தர் தவத்திரு சுவாமி இராமானந்தா, சொர்க்கபுரம் ஆதீனம் 22-வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ தண்டாயுதபாணி தேசிகர் மற்றும் அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் தேசிய தலைவர் அருள்வேலன் ஜி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு அன்னதான விழாவை தொடங்கி வைத்தனர்.
சங்கத்தின் தேசிய தலைவர் அருள்வேலன் ஜி ஆலோசனையின்படி நடைபெற்ற இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சங்கத்தின் மாநில பொறுப்பாளர்கள் சர்மிளா சரவணன், ரவிச்சந்திரன் ஜி, வழக்கறிஞர் சுதன், ஸ்ரீதர், பிரபு, கீர்த்தி ஜெயகாந்த், ரமேஷ், சண்முகவேல், மாவட்ட செயலாளர் சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
மேலும் கவிதா, நேதாஜி, சுந்தரம், பேபி ரமணி, கவிதா, அன்னபூரணா, பத்மா, விக்னேஷ், ரவி, அருண் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழா ஏற்பாடுகளில் சிறப்பாக பணியாற்றினர்.
பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உணவு வழங்கி நடைபெற்ற இம்மாபெரும் அன்னதான விழா, ஆன்மிகம் மற்றும் சேவை உணர்வை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.
புகைப்படக் குறிப்பு:
சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் திருத்தேர் திருவிழாவையொட்டி நடைபெற்ற மாபெரும் அன்னதான விழாவை சிறப்பு அழைப்பாளர்கள் தொடங்கி வைத்த காட்சி.




















