தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி
தூத்துக்குடி டிச 20
தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீசித்தர் பீடத்தில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. இங்கு ஆஞ்சநேயர் தியான ஆஞ்சநேயராக எழுந்தருளியுள்ளார்.
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தில் நல்ல மழை பெய்து விவசாயம் உள்ளிட்ட அனைத்து தொழில்களும் வளம்பெறவும், உலக மக்கள் நலமுடன் வாழவும் வேண்டி சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் தியான ஆஞ்சநேயருக்கு பால், பன்னீர், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்ட 27 வகையான சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு வடை, துளசி, வெற்றிலை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதனுடன் மஹாபிரத்தியங்கிரா தேவி மற்றும் காலபைரவருக்கும் சிறப்பு அலங்காரம், தீபாராதனை செய்து வழிபாடுகள் நடைபெற்றன.
விழாவின் நிறைவாக மஹா அன்னதானம் வழங்கப்பட்டு, இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக