Tamil Nadu updates லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Tamil Nadu updates லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2026

மக்களவை தொகுதி மறுசீராய்வு மசோதாவுக்கு எதிர்ப்பு தூத்துக்குடியில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபயணம்

 Tamil Nadu updates, அருணன் செய்தியாளர் 

மக்களவை தொகுதி மறுசீராய்வு மசோதாவுக்கு எதிர்ப்பு

தூத்துக்குடியில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபயணம்

தூத்துக்குடி:
மக்களவை தொகுதி மறுசீராய்வு (Delimitation) மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபயணம் நடைபெற்றது.

thoothukudileaks


தூத்துக்குடி பழைய நகராட்சி அலுவலகம் அருகில் தொடங்கிய இந்த நடைபயணம், ஒன்றாம் கேட் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி சிலை வரை நடைபெற்றது.

நடைபயணத்திற்கு மாவட்ட மாநகர காங்கிரஸ் தலைவர் சகாயராஜ் தலைமை வகித்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டேனியல் ராஜ், சுடலையாண்டி, மாமன்ற உறுப்பினர் கற்பகவள்ளி சேகர், மாநில பேச்சாளர் அப்துல் மஜீத், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் மைதீன், மாநகர கிழக்கு மண்டல தலைவர் ஜசைஸ் செல்வா, எஸ்.சி./எஸ்.டி. மாவட்ட தலைவர் பிரபாகர், மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி சுரேஷ் பர்ணாரந்து உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

“மக்களவை தொகுதி மறுசீராய்வு மூலம் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும்”

நடைபயணத்தின் போது காங்கிரஸ் நிர்வாகிகள் பேசுகையில், “மோடி-லிமிட்டேஷன் (MODI-LIMITATION) என்பது இந்தியாவின் இறையாண்மையையும் கூட்டாட்சி முறையையும் சீர்குலைக்கும் அரசியல் முயற்சி” என குற்றம்சாட்டினர்.

மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை மக்கள் தொகை அடிப்படையில் மறுசீராய்வு செய்வதற்கான முயற்சியால், மக்கள் தொகையை கட்டுப்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்த தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் அரசியல் பிரதிநிதித்துவத்தில் பாதிக்கப்படும் என்றும், மக்கள் தொகை கட்டுப்பாட்டில் பின்தங்கிய மாநிலங்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் கிடைக்கும் சூழல் உருவாகும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.




மேலும், தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் வரை உயர்த்தும் வகையில் மறுசீராய்வு செய்யப்பட்டால், உத்தரப்பிரதேசத்தின் மக்களவை தொகுதிகள் 80-ல் இருந்து 120 ஆகவும், தமிழ்நாட்டின் தொகுதிகள் 39-ல் இருந்து 59 ஆகவும் அதிகரிக்கக்கூடும் எனக் குறிப்பிட்ட அவர்கள், இதன் மூலம் இரு மாநிலங்களுக்கிடையேயான தொகுதி எண்ணிக்கை இடைவெளி மேலும் அதிகரிக்கும் என தெரிவித்தனர்.

“தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரம் பறிபோகும்”

நாடாளுமன்றத்தில் எண்களின் பலமே முக்கிய முடிவுகளை தீர்மானிக்கும் நிலையில், தென் மாநிலங்களின் மக்களவை பிரதிநிதித்துவம் குறையும் வகையில் தொகுதி மறுசீராய்வு மேற்கொள்ளப்பட்டால், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் அரசியல் அதிகாரம் நிரந்தரமாக பாதிக்கப்படும் என்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கூறினர்.

மக்கள் தொகை கட்டுப்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் கடந்த காலங்களில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை முடக்கப்பட்டதாகவும், அந்த பாதுகாப்பை அகற்றும் முயற்சியே தற்போது நடைபெறுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

“சாதிவாரி கணக்கெடுப்புக்குப் பிறகே தொகுதி மறுசீராய்வு”

சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட தேவையான தரவுகள் முழுமையாகப் பெறப்படுவதற்கு முன்பாக தொகுதி மறுசீராய்வு மேற்கொள்ளப்பட்டால், பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு தொகுதிகளை முறையாக நிர்ணயிப்பதில் சிக்கல் ஏற்படும் என்றும் காங்கிரஸ் தரப்பினர் தெரிவித்தனர்.

“தமிழ்நாட்டின் சுயமரியாதை, அரசியல் உரிமை மற்றும் ஜனநாயக பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கவே இந்த நடைபயணம் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டின் அரசியல் உரிமைகளை எவராலும் பறிக்க முடியாது. மாநிலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு தொகுதி மறுசீராய்வு நடவடிக்கையையும் எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுப்போம்” என அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், “தமிழ்நாட்டின் நலனுக்கும், தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தொகுதி மறுசீராய்வு செய்யக்கூடாது. தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைக்கும் வகையிலான எந்த முயற்சியையும் முறியடிக்க வேண்டும்” என நடைபயணத்தில் வலியுறுத்தப்பட்டது.

வெள்ளையனே வெளியேறு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நடைபயணம், ‘QUIT UNFAIR DELIMITATION MARCH’ என்ற பெயரில் நடைபெற்றதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கலெக்டர் அலுவலகம் எதிரே சர்ச்சைக்குரிய பேனர்! ஒருதரப்புக்கு அனுமதி மறுப்பு... மற்றொரு தரப்புக்கு மட்டும் அனுமதியா? காவல்துறை மாவட்ட நிர்வாகத்துக்கு சமூகத்தினர் கேள்வி

 Tamil Nadu updates,

கலெக்டர் அலுவலகம் எதிரே சர்ச்சைக்குரிய பேனர்!

ஒருதரப்புக்கு அனுமதி மறுப்பு... மற்றொரு தரப்புக்கு மட்டும் அனுமதியா? காவல்துறை மாவட்ட நிர்வாகத்துக்கு சமூகத்தினர் கேள்வி ???

தூத்துக்குடி: ஆகஸ்ட் 11 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பிரதான சாலையில் வைக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பேனர் சமூக வலைதளங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி பிரையன்ட் நகர் பத்திரகாளி அம்மன் கோவில் கொடை விழாவையொட்டி, வெங்கடேஷ் பண்ணையார் மற்றும் கராத்தே செல்வின் நாடார் ஆகியோரின் புகைப்படங்களுடன் பேனர் வைக்க முயன்றபோது, காவல்துறையினர் அனுமதி மறுத்ததாகவும், வைக்கப்பட்ட பேனர்களை அப்புறப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.


ஆனால், இதற்கு மாறாக க.பெரியநாயகபுரம் மற்றும் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் வசிக்கும் பகுதிக்கு அருகாமையிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பிரதான சாலையிலும், பசுபதி பாண்டியன் உள்ளிட்ட பலரது புகைப்படங்களுடன் கூடிய பெரிய பேனர் வைக்கப்பட்டுள்ளதாக சமூகத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

thoothukudileaks


குறிப்பாக, அந்த பேனரில்   ....

” போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருப்பது சமூக நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் உள்ளதா? என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்புகின்றனர்.

thoothukudileaks


ஒரு தரப்பினரின் பேனர்களுக்கு உடனடியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் நிலையில், மற்றொரு தரப்பினர் வைத்துள்ள பேனர்களுக்கு மட்டும் எவ்வாறு அனுமதி வழங்கப்படுகிறது?

.

மேலும், பேனர் வைப்பதில் தூத்துக்குடி மாவட்டத்தில் அனைவருக்கும் ஒரே சட்டம், ஒரே விதிமுறை பின்பற்றப்படுகிறதா? அல்லது சமூக அடிப்படையில் வேறுபட்ட அணுகுமுறை கடைப்பிடிக்கப்படுகிறதா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.


சமூகங்களுக்கு இடையே தேவையற்ற பதற்றம் ஏற்படாத வகையில், சர்ச்சைக்குரிய வாசகங்கள் மற்றும் தனிநபர்களின் புகைப்படங்களுடன் வைக்கப்படும் பேனர்கள் தொடர்பாக காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஒரே மாதிரியான விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


— தூத்துக்குடி லீக்ஸ்

தொழிலதிபர்களின் தயவில் இயங்குகிறதா காவல்துறை? 'அன்பளிப்பு' கலாச்சாரமும்... ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு கசப்பான வரலாறும்!

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி 

செய்தி புகைப்படம் ரோஜா அருணன் செய்தியாளர் 

தொழிலதிபர்களின் தயவில் இயங்குகிறதா  காவல்துறை? 'அன்பளிப்பு' கலாச்சாரமும்... ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு கசப்பான வரலாறும்!

தூத்துக்குடி: ஆகஸ்ட் 11

தூத்துக்குடி குருஸ் பர்ணாந்து சிலை அருகே, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட புதிய காவல்துறை கட்டுப்பாட்டு மைய பூத் (Police Control Booth) நேற்று (10-8-2026 )திறக்கப்பட்டது. 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) சிவ பிரசாத் பங்கேற்று இந்த பூத்தை திறந்து வைத்தார். 


உடன் காவல் துணை கண்காணிப்பாளர் (DSP) சுனில், போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுனை முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து பணியில் இருந்த டிராபிக் ஆண் -பெண் போலீஸ் பலருக்கு தலைக்கவசம் ஹெல் மேட் வழங்கினர் 

சிக்னலில் (Helmet) அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு பரிசாகக்  கண்ணாடிகளும் வழங்கப்பட்டன.

அன்பளிப்பு பற்றி...

இருப்பினும், இந்த நிகழ்ச்சி பொதுமக்களிடையே பல்வேறு கேள்விகளையும் அதிருப்தியையும் எழுப்பியுள்ளது.

thoothukudileaks


 தனியார் நிறுவன நன்கொடை:

 புதிதாகத் திறக்கப்பட்ட காவல் கட்டுப்பாட்டு மைய பூத் பெட்டி, 'வேலவன் ஹைப்பர் குரூப்' நிறுவனத்தின் அன்பளிப்பு என அந்தப் பெட்டியிலேயே குறிப்பிடப்பட்டிருந்தது.


 பரிசுகள் வழங்கிய நகைக்கடை குரூப்: நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட ஹெல்மெட் மற்றும் கண்ணாடி பரிசுகளை மற்றொரு பிரபல நகைக்கடை நிறுவனம் அன்பளிப்பாக வழங்கியிருந்தது என்கிறார்கள்.

 அதிகாரிகள் உடன் தொழிலதிபர் போட்டோஷூட் ...!!!


அன்பளிப்பு வழங்கிய தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள், உயர் காவல் துறை அதிகாரிகளுடன் மிக அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர் 

thoothukudileaks


பொதுமக்களின் கேள்வி:


ஆனால் அரசு துறை அதிகாரிகள் பெறுவது அவசியமா ??


 "காவல்துறைக்கான உள்கட்டமைப்பு மற்றும் விழிப்புணர்வுச் செலவுகளைச் செய்ய தமிழக அரசிடம் நிதி இல்லையா? அரசுத் துறை ஏன் தனியார் தொழிலதிபர்களிடம் கையேந்த வேண்டும்?"


 தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் கசப்பான வரலாறு நினைவிருக்கிறதா?

"தூத்துக்குடி மக்களுக்கு இந்த 'அன்பளிப்பு கலாச்சாரம்' ஒரு கசப்பான வரலாற்றை நினைவூட்டுகிறது." 

கடந்த காலங்களில், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தூத்துக்குடி காவல்துறைக்குத் தேவையான அனைத்து உபகரணங்களையும் அன்பளிப்பாக வாரி வழங்கியது. இதன் காரணமாக, உயர் அதிகாரிகள் முதல் கீழ்நிலை போலீசார் வரை ஸ்டெர்லைட் ஆலைக்கு விசுவாசிகளாக மாறியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

அதன் உச்சக்கட்டமாகவே, 

2018-ல் நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது.  பொதுமக்கள் பக்கமாக நிற்க வேண்டிய காவல்துறை, ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டு, ஈவு இரக்கமின்றி 13 அப்பாவிப் பொதுமக்களைச் சுட்டு வீழ்த்திய கருப்பு வரலாறு அரங்கேறியது.


அரசு கவனிக்குமா?

தொழிலதிபர்களும், பெரு நிறுவனங்களும் காவல்துறையினருக்கு இதுபோன்று அன்பளிப்புகளை வழங்குவது, மறைமுகமாகச் சலுகைகளைப் பெறுவதற்கான "ஒரு வகை லஞ்சமே" என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.


துறை சார்ந்த தேவைகளுக்கு அரசாங்க நிதி ஒதுக்கீடு இருக்கும் போது, காவல்துறை தனியார் தொழிலதிபர்களின் தயவை எதிர்பார்ப்பது ஏன்?

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்!!!

தமிழக காவல்துறையைக் கையில் வைத்திருக்கும்  மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். அரசுத் துறைகளில் ஊடுருவும் இந்தத் தனியார் 'அன்பளிப்பு/நன்கொடை' கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பாரா? தொழிலதிபர்கள் சலுகை பெற வழிவகுக்கும் இதுபோன்ற நிகழ்வுகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பாரா? என்பதே தூத்துக்குடி மக்களின் தற்போதைய எதிர்பார்ப்பும் கேள்வியும் ஆகும்!

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2026

தூத்துக்குடி குருஸ் பர்ணாந்து சிலை அருகே நிரந்தர போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு மையம்!

Tamil Nadu updates, 

photo news by Arunan journalist 

தூத்துக்குடி குருஸ் பர்ணாந்து சிலை அருகே நிரந்தர போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு மையம்!

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் திறந்து வைத்தார் — போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், ஹெல்மெட் சோதனையை தீவிரப்படுத்தவும் நடவடிக்கை

தூத்துக்குடி, ஆக.10:

தூத்துக்குடி மாநகரின் முக்கிய போக்குவரத்து பகுதிகளில் ஒன்றான குருஸ் பர்ணாந்து சிலை அருகே உள்ள சிக்னல் பகுதியில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் நிரந்தர போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

thoothukudileaks


thoothukudileaks


குருஸ் பர்ணாந்து சிலை சிக்னல் பகுதியில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருவதால், குறிப்பிட்ட நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்தை சீரமைக்க நிரந்தர போக்குவரத்து காவல் மையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இதனையடுத்து, அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு மையத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் இன்று காலை 11 மணியளவில் திறந்து வைத்தார்.

இந்த மையத்தின் மூலம் அப்பகுதியில் செல்லும் வாகன போக்குவரத்தை காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து, போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் வாகனங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர்.


video 

மேலும், போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்கிறார்களா என்பது குறித்த சோதனைகளும் நடத்தப்படும். போக்குவரத்து விதிமீறல்களை கண்காணித்து, விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி நகர துணை காவல் கண்காணிப்பாளர் சுனில் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியின் முடிவில் தூத்துக்குடி போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் சுனை முருகன் நன்றி கூறினார்.

குருஸ் பர்ணாந்து சிலை அருகே நிரந்தர போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைந்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சீரான போக்குவரத்து ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓட்டப்பிடாரம் தொகுதியில் ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் மதன் ராஜா தலைமையில் நடைபெற்றது

Tamil Nadu updates 

photo news by Arunan journalist 

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி 

ஓட்டப்பிடாரம் தொகுதியில் ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

அமைச்சர் மதன் ராஜா தலைமையில் நடைபெற்றது

தூத்துக்குடி: ஆகஸ்ட் 9
தூத்துக்குடி புறநகர் மாவட்ட கழகச் செயலாளரும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான மாண்புமிகு மதன் ராஜா, BE., MLA தலைமையில், ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட தூத்துக்குடி மத்திய ஒன்றியம் மற்றும் கருங்குளம் வடக்கு ஒன்றிய நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று (9-8-2026)மாலை 5 மணியளவில் நடைபெற்றது.

thoothukudileaks
அமைச்சர் மதன் ராஜா -வுக்கு அலுவலகம் முன்பு ஒன்றிய செயலாளர்கள் சால்வை அணிவித்து வரவேற்பு 


முதற்கட்டமாக நடைபெற்ற தூத்துக்குடி மத்திய ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், தூத்துக்குடி மத்திய ஒன்றிய செயலாளர்  ஜெபஸ்துராஜ், இணைச் செயலாளர் திருவடி  தினேஷ், செயற்குழு உறுப்பினர்கள் ஆனந்த், சதீஷ்குமார், செல்வராஜ், முத்து ஜெயகலா, பொருளாளர் சதீஷ்குமார், துணைச் செயலாளர் ராஜேஷ் உள்ளிட்ட ஒன்றிய நிர்வாகிகள், கிளைச் செயலாளர்கள் மற்றும் பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

thoothukudileaks


thoothukudileaks

thoothukudileaks

தொடர்ந்து கருங்குளம் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர்   முத்துகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

thoothukudileaks


thoothukudileaks
ஆலோசனை கூட்டத்தில்.. அமைச்சர் மதன் ராஜா பேசுகையில் 

மகளிரணியினருடன் கேக் வெட்டி கொண்டாட்டம்

முன்னதாக, புறநகர் மாவட்ட மகளிரணி செயலாளர் வனிதா  ஏற்பாடு செய்திருந்த கேக்கை அமைச்சர் மதன் ராஜா தனது கையால் வெட்டி, மகளிரணி நிர்வாகிகளுக்கு கேக் துண்டுகளை ஊட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


இந்நிகழ்வில் புறநகர் மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் வனிதா கந்தசாமி, ராமகிருஷ்ணன், காளிஸ்வரி, சுகன்யா, பிரியதர்ஷினி, சண்முகப்ரியா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


வீடியோ பார்க்க 

கூட்டத்தில் ஒன்றிய மற்றும் கிளை அளவிலான கட்சி பணிகள், நிர்வாக செயல்பாடுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.


பக்தி பரவசத்தில் சேலம் கோட்டை மாரியம்மன் திருத்தேர் திருவிழா! ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் சிறப்பான அன்னதானம்

Tamil Nadu updates

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் திருத்தேர் திருவிழா!

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மாபெரும் அன்னதானம் — ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

சேலம்: ஆகஸ்ட் 9 

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் திருத்தேர் திருவிழா பக்தர்களின் பக்திப் பரவசத்துடன் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் மாபெரும் அன்னதான விழா சிறப்பாக நடைபெற்றது.

thoothukudileaks


பழமை வாய்ந்ததும், பக்தர்களால் மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் திருத்தலமாக போற்றப்படுவதுமான சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற திருத்தேர் திருவிழாவில், சேலம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து அம்மனை வழிபட்டனர்.


திருத்தேர் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் அன்னதான விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் கலந்து கொண்டு அன்னம் பெற்று சென்றனர்.


இந்நிகழ்ச்சியில் அகில பாரதீய சந்நியாசிகள் சங்கத்தின் நிறுவனர், வாழும் கலியுக சித்தர் தவத்திரு சுவாமி இராமானந்தா, சொர்க்கபுரம் ஆதீனம் 22-வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ தண்டாயுதபாணி தேசிகர் மற்றும் அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் தேசிய தலைவர் அருள்வேலன் ஜி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு அன்னதான விழாவை தொடங்கி வைத்தனர்.

thoothukudileaks


சங்கத்தின் தேசிய தலைவர் அருள்வேலன் ஜி  ஆலோசனையின்படி நடைபெற்ற இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சங்கத்தின் மாநில பொறுப்பாளர்கள் சர்மிளா சரவணன், ரவிச்சந்திரன் ஜி, வழக்கறிஞர் சுதன், ஸ்ரீதர், பிரபு, கீர்த்தி ஜெயகாந்த், ரமேஷ், சண்முகவேல், மாவட்ட செயலாளர் சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


மேலும் கவிதா, நேதாஜி, சுந்தரம், பேபி ரமணி, கவிதா, அன்னபூரணா, பத்மா, விக்னேஷ், ரவி, அருண் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழா ஏற்பாடுகளில் சிறப்பாக பணியாற்றினர்.


பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உணவு வழங்கி நடைபெற்ற இம்மாபெரும் அன்னதான விழா, ஆன்மிகம் மற்றும் சேவை உணர்வை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.


புகைப்படக் குறிப்பு:
சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் திருத்தேர் திருவிழாவையொட்டி நடைபெற்ற மாபெரும் அன்னதான விழாவை சிறப்பு அழைப்பாளர்கள் தொடங்கி வைத்த காட்சி.


வெள்ளி, 7 ஆகஸ்ட், 2026

அதிமுக வின் காவல் தெய்வம் யார் தெரியுமா ?தூத்துக்குடி வடக்கு தெற்கு ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் ஆன பிறகு முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் பேச்சு அதிமுக இப்போது தூய சக்தி யாக மாறிவிட்டது???

 Tamil Nadu updates photo news by Arunan journalist 

தூத்துக்குடியில் அ.தி.மு.க. அம்மா பேரவை சார்பில் எழுச்சிமிகு ஆலோசனைக் கூட்டம்!

அதிமுக வின் காவல் தெய்வம் யார் தெரியுமா ? கெட்டதெல்லாம் திமுக -தவெக விற்கு போயிற்று? இப்போது அதிமுக தூய சக்தியாக மாறிவிட்டது!!!
தூத்துக்குடி வடக்கு தெற்கு ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் ஆன பிறகு முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் பேசினார் வீடியோ இச் செய்தியின் கடைசியில் உள்ளது
.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், எஸ்.பி.சண்முகநாதன், சித.செல்லப்பாண்டியன் பங்கேற்பு 

thoothukudileaks




thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

தூத்துக்குடி, ஆக.8:

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி  ஆணைக்கிணங்க, தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் எழுச்சிமிகு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

thoothukudileaks


தூத்துக்குடி நீதிமன்றம் எதிரே உள்ள கனி பேலஸ் திருமண மண்டபத்தில் இன்று (08.08.2026) சனிக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.

மேலும், கழக அமைப்புச் செயலாளரும், தூத்துக்குடி மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன், முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. மூத்த நிர்வாகியுமான சித.செல்லப்பாண்டியன் ஆகியோரும் கலந்து கொண்டு, கட்சி நிர்வாகிகள் மற்றும் அம்மா பேரவை நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

thoothukudileaks
முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேசிய போது 


thoothukudileaks
முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் பேசிய போது...
thoothukudileaks
 முன்னாள் அமைச்சர் சித செல்லப்பாண்டியன் பேசிய போது...




கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களைச் சேர்ந்த அம்மா பேரவை நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

thoothukudileaks


வரவிருக்கும் அரசியல் நடவடிக்கைகள், கட்சியின் அமைப்பு பணிகள், மக்கள் நலப் பணிகள் மற்றும் கழகத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அதிமுக வின் காவல் தெய்வம் யார் தெரியுமா ? கெட்டதெல்லாம் திமுக -தவெக விற்கு போயிற்று? இப்போது அதிமுக தூய சக்தியாக மாறிவிட்டது!!!
தூத்துக்குடி வடக்கு தெற்கு ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் ஆன பிறகு முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் பேசிய வீடியோ 

கூட்டம் முழுவதும் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றதால், நிகழ்ச்சி எழுச்சிமிகு முறையில் நடைபெற்றது.

திங்கள், 3 ஆகஸ்ட், 2026

பரபரப்பு முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தூத்துக்குடியில் சாலை மறியல்

முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தூத்துக்குடியில் சாலை மறியல்

முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் போராட்டம்  நூற்றுக்கணக்கான திமுகவினர் கைது

தூத்துக்குடி, ஆக. 4:

தமிழக முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து, தூத்துக்குடி மாநகர் மாவட்ட திமுக சார்பில் செவ்வாய்க்கிழமை அண்ணா பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

thoothukudileaks


முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் திமுக நிர்வாகிகள், மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, இளைஞரணி, மகளிரணி உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு கைது நடவடிக்கையை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் அண்ணா பேருந்து நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பின்னர் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான திமுகவினரை கைது செய்து காவல் வாகனங்களில் அழைத்துச் சென்றனர்.

இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக அண்ணா பேருந்து நிலையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

thoothukudileaks


புகைப்பட விளக்கம்:
முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து, தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையம் முன்பு முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் அமர்ந்து முழக்கமிட்ட திமுகவினர்.

உதயநிதி ஸ்டாலின் பேச்சை கண்டித்து தூத்துக்குடியில் தவெக கட்சி ஆர்ப்பாட்டம்

 தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி  புகைப்படம் அருணன் செய்தியாளர் 

உதயநிதி ஸ்டாலின் பேச்சை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் த.வெ.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்

முன்னாள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று (04.08.2026) தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

thoothukudileaks

அரைமணி நேர ஆர்ப்பாட்டம்!!!

அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாநகரில் 12-வது வாசல் மையவாடி அருகிலுள்ள மைதானத்தில் இன்று காலை 11 மணியளவில் தொடங்கி சுமார் அரைமணி நேரம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் த.வெ.க. நிர்வாகிகள், தொண்டர்கள்  கலந்து கொண்டு, உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

thoothukudileaks

thoothukudileaks


ஆர்ப்பாட்டத்தில் பேசிய நிர்வாகிகள், அரசியல் நாகரிகத்தை பின்பற்ற வேண்டும் என்றும், எதிர்க்கட்சியினரையும் மக்களின் கருத்துகளையும் மதிக்கும் வகையில் பொது வாழ்க்கையில் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் தவெக கட்சியினர் வழக்கத்தை விட குறைந்த எண்ணிக்கையில் நூறுக்கும் மேற்பட்டோர்   கலந்து கொண்டனர் 

காவிரி நீர் வரத்து குறைவு: கர்நாடக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர வழக்கு தாக்கல்!

தூத்துக்குடி லீக்ஸ் (Thoothukudi Leaks) – நாளிதழ் செய்தி 

நாள்: 03 ஆகஸ்ட் 2026

செய்தி வெளியீடு எண்: 486

பிரிவு: தமிழக அரசு / காவிரி நீர் விவகாரம்

காவிரி நீர் வரத்து குறைவு: கர்நாடக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர வழக்கு தாக்கல்!

சென்னை /ஆக 3

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு (CWRC) ஆகியவற்றின் உத்தரவுகளின்படி கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரைத் திறந்து விடாத நிலையில், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் . ச. ஜோசப் விஜய் அவரின் அறிவுறுத்தலின்படி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று மனுத் தாக்கல் செய்து வழக்கு தொடர்ந்துள்ளது.

thoothukudileaks


முக்கிய பின்னணி விவரங்கள்:

 CWRC உத்தரவு:** கடந்த 28.07.2026 அன்று நடைபெற்ற 139-வது கூட்டத்தில், 29.07.2026 முதல் 12.08.2026 வரை பிலிகுண்டுலுவில் வினாடிக்கு 3,500 கன அடி (cusecs) நீர் கிடைப்பதை உறுதி செய்யுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. 


இதனைத் தொடர்ந்து 30.07.2026 அன்று நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 54-வது அவசரக் கூட்டத்திலும் இம்முடிவு உறுதி செய்யப்பட்டது.


 உண்மை நிலவரம்:


ஆனால், 29.07.2026 முதல் 02.08.2026 வரை பிலிகுண்டுலுவில் தமிழ்நாட்டிற்கு வரப்பெற்ற நீரின் அளவு வினாடிக்கு வெறும் 158 முதல் 550 கன அடி மட்டுமே ஆகும்.


கர்நாடக அணைகளின் தற்போதைய நீர் இருப்பு (03.08.2026 நிலவரப்படி):**

 கே.ஆர்.எஸ் (KRS) அணை: 23.078 டி.எம்.சி

 கபினி அணை: 18.610 டி.எம்.சி

 ஹேமாவதி அணை: 28.022 டி.எம்.சி

 ஹாரங்கி அணை: 7.827 டி.எம்.சி

 மொத்த நீர் இருப்பு: 77.537 டி.எம்.சி (பயன்பாட்டு நீர் இருப்பு: 67.517 டி.எம்.சி)


தமிழகத்தின் கோரிக்கை & சட்ட நடவடிக்கை:

கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அதிக மழை பெய்து நீர்வருத்து அதிகரித்துள்ளதால், விகிதாச்சார அடிப்படையில் பிலிகுண்டுலுவில் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய நீரின் அளவு 26.954 டி.எம்.சி ஆகும். 


ஆனால், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அளித்த உத்தரவான 4.536 டி.எம்.சி என்பது மிகவும் குறைவாகும்.


கர்நாடக அணைகளில் போதிய நீர் இருப்பு இருந்தும், விகிதாச்சார அடிப்படையில் தண்ணீரைத் திறந்து விட கர்நாடக அரசு தவறியுள்ளது. எனவே, மூத்த வழக்கறிஞர்களின் ஆலோசனையின்படி, இப்பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காணவும், தமிழ்நாட்டிற்கு உரிய நீரை உரிய காலத்தில் பெறவும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி உச்சநீதிமன்றத்தில் இன்று (03.08.2026) மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

thoothukudileaks

thoothukudileaks


வெளியீடு:இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9


விவசாயிகளை வஞ்சிக்கும் அரசுக்கு எதிராக தஞ்சையில் தி.மு.க. மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

 தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

news by Arunan 3-8-2026

தஞ்சை மாநகரில் விவசாயிகள் பிரச்சினைகளை முன்னிறுத்தி தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கழக நிர்வாகிகள், தோழமை இயக்கத்தினர், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் துணை முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின்,.....

 "அலட்சியத்துடனும் ஆணவத்துடனும் செயல்படும் அரசால் விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆடிப்பெருக்கு நாளன்று கூட அகண்ட காவிரி வறண்ட நிலையில் காட்சியளிப்பதற்கு தற்போதைய அரசின் செயல்பாடுகளே காரணம்" என்று குற்றம்சாட்டினார்.


மேலும், "விவசாயிகள் துயரத்தில் தவிக்கும் நேரத்தில், முதலமைச்சர் மக்கள் பிரச்சினைகளைப் புறக்கணித்து செயல்படுகிறார். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

thoothukudileaks

thoothukudileaks


இந்த ஆர்ப்பாட்டத்தில், விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் மேகதாது அணை கட்டும் முயற்சியைத் தடுக்க வேண்டும், டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


இறுதியாக, "சட்டமன்றம், நீதிமன்றம், மக்கள் மன்றம் என அனைத்து தளங்களிலும் விவசாயிகளின் உரிமைகளுக்காக தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுக்கும்" என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

சனி, 1 ஆகஸ்ட், 2026

ஒன்றிய அரசை கண்டித்து. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) சார்பில் தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்

மேகதாது அணை திட்டத்தை கைவிட வேண்டும்: சிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம 

தமிழ்நாட்டின் நதிநீர் உரிமையில் சமரசம் கூடாது – டெல்டா விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கவும் வலியுறுத்தல்

தூத்துக்குடி, ஆக. 2:

கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கக்கூடாது, காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இறுதித் தீர்ப்பை கர்நாடக அரசு முழுமையாக மதித்து அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) சார்பில் தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

thoothukudileaks


தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே நேற்று (01.08.2026) காலை 10.30 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ மாநகர செயலாளர் தோழர் ஜி. தனலெட்சுமி தலைமை வகித்தார்.


ஆர்ப்பாட்டத்தில், மேகதாது அணை கட்டும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும், தமிழ்நாட்டின் நதிநீர் உரிமையில் எந்தவித சமரசமும் செய்யக்கூடாது, காவிரி நதிநீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பை கர்நாடக அரசு முழுமையாக மதித்து செயல்படுத்த வேண்டும், டெல்டா பாசனப் பகுதிகளில் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

thoothukudileaks


ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் என். பெரியசாமி கண்டன உரையாற்றினார். 


மேலும், சிபிஐ மாவட்ட செயலாளர் தோழர் பி. கரும்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள், விவசாயிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

thoothukudileaks



புகைப்பட விளக்கம்: தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே, மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சிக் கொடிகளை ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

வெள்ளி, 31 ஜூலை, 2026

தோட்டக் கிணற்று மண் எடுத்த விவகாரம்: எட்டு பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி ஆட்சியரிடம் மேலஈரால் கிராம மக்கள் மனு நடந்தது என்ன விளக்கம்

Tamil Nadu updates தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி அருணன் செய்தியாளர் 

தவறான வழக்குகளை ரத்து செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மேலஈரால் கிராம மக்கள் மனு

தூத்துக்குடி, ஜூலை 31:

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் வட்டத்திற்குட்பட்ட மேலஈரால் கிராமத்தைச் சேர்ந்த எட்டு பொதுமக்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் வழக்குகளை ரத்து செய்யக் கோரி,

அக்கிராம பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் குருசந்திரன் அவர்களிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர். 

thoothukudileaks


அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

கடந்த 24.06.2026 அன்று மேலஈரால் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட நான்கு கோவில்களின் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதற்கு முன்னதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்த கண்மாய் மற்றும் குடிநீர் கிணறு சீரமைக்கப்படாமல் இருந்ததாகவும், இதுகுறித்து பலமுறை அரசுத் துறையினரிடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதையடுத்து, கோவிலுக்கு எதிரே அமைந்திருந்த சேதமடைந்த கிணறு மற்றும் கண்மாயால் விபத்து ஏற்படக்கூடாது என்ற நோக்கில், ஊர் மக்கள் தங்களது சொந்த செலவில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்ததாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இதற்காக கிராமத்தைச் சேர்ந்தவர்களின் தோட்டக் கிணற்றில் தோண்டப்பட்ட சரள்மண்ணை டிராக்டர் மூலம் கண்மாய் மற்றும் கோவில் பகுதிக்கு கொண்டு வந்தபோது, எட்டயபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்வேல்முருகன் வாகனத்தை நிறுத்தி விசாரணை நடத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.



அப்போது, மேலிடத்திலிருந்து புகார் வந்திருப்பதால் காவல் நிலையத்திற்கு வந்து மனு அளிக்குமாறு போலீசார் கூறியதாகவும், பின்னர் வாகனம் மற்றும் ஓட்டுநரை நீதிமன்றத்தின் மூலம் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.


இதையடுத்து, காவல் ஆய்வாளர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, கோவில் பணிக்காகவே மண் எடுத்துச் செல்லப்பட்டதால் வழக்குப் பதிவு செய்யாமல் வாகனத்தையும் ஓட்டுநரையும் விடுவிப்பதாகவும், இனி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் உறுதியளித்ததால் போராட்டத்தை கைவிட்டதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.


ஆனால், 21.07.2026 அன்று மேலஈரால் கிராமத்தைச் சேர்ந்த எட்டு பேருக்கு சம்மன் வழங்கப்பட்டு, 22.07.2026 அன்று காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டதாகவும், அப்போது 12.06.2026 தேதியிட்ட குற்ற எண்கள் 240/2026 மற்றும் 241/2026-இல் ஏற்கனவே வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்ததாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எனவே, மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி, பொதுமக்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள தவறான வழக்குகளை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேலஈரால் கிராம மக்கள் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.



thoothukudileaks


படவிளக்கம்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் குருசந்திரன் அவரிடம் மனு அளித்த பின்னர் மேலஈரால் கிராம பொதுமக்கள் குழுவாக நின்ற காட்சி.

தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டம் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றம் மீண்டும் இருக்கை விவகாரத்தில் அதிமுகவில் இருந்து தவெக தாவிய கவுன்சிலர் வெளிநடப்பு

 "தூத்துக்குடி லீக்ஸ்" நாளிதழ

தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டம் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றம் மீண்டும் இருக்கை விவகாரத்தில் அதிமுகவில் இருந்து தவெக தாவிய கவுன்சிலர் வெளிநடப்பு 

தூத்துக்குடி, ஜூலை 31: தூத்துக்குடி மாநகராட்சியின் மாதாந்திர சாதாரண மாமன்றக் கூட்டம் இன்று காலை 11 மணியளவில் மாநகராட்சி மன்ற அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

thoothukudileaks


கூட்டம் தொடங்கியதும், அண்மையில் அதிமுகவில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த கவுன்சிலர் மந்திரமூர்த்தி, கடந்த மாமன்றக் கூட்டத்தில் எழுப்பிய இருக்கை தொடர்பான விவகாரத்தை மீண்டும் வலியுறுத்தும் வகையில் எந்த இடத்திலும் அமராமல் எழுந்து நின்றபடி இருந்தார்.

அப்போது மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில், "மாநகராட்சியில் நீங்கள் இன்னும் அதிமுக கவுன்சிலராகவே உள்ளீர்கள். கடந்த ஐந்து ஆண்டுகளாக மாமன்றக் கூட்டங்களில் தொடர்ந்து வெளிநடப்பு செய்து, பின்னர் வெளியே சென்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறீர்கள். தயவுசெய்து அமர்ந்து கூட்டத்தில் பங்கேற்கவும். இல்லையெனில், வழக்கம்போல் நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள்," என்று தெரிவித்தார்.

thoothukudileaks


இதனைத் தொடர்ந்து கவுன்சிலர் மந்திரமூர்த்தி மாமன்றக் கூட்ட அரங்கில் இருந்து வெளிநடப்பு செய்தார். 


அதன்பிறகு மாநகராட்சி நிர்வாகம் கொண்டு வந்த அனைத்து தீர்மானங்களும் மாமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டன. கூட்டம் தொடர்ந்து பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நிர்வாக விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு நிறைவடைந்தது. :::


திங்கள், 27 ஜூலை, 2026

பாளையங்கோட்டை சிறையில் மார்க்கண்டேயனை சந்தித்தார் உதயநிதி ஸ்டாலின் !!! விடுதலைக்கான சட்ட நடவடிக்கைகள் தீவிரம் தவெக ஆட்சியை கடுமையாக விமர்சித்த பேச்சு

Tamil Nadu updates

 photo news by Arunan journalist 

பாளையங்கோட்டை சிறையில் மார்க்கண்டேயனை சந்தித்தார் உதயநிதி ஸ்டாலின் !!! விடுதலைக்கான சட்ட நடவடிக்கைகள் தீவிரம்  தவெக ஆட்சியை கடுமையாக விமர்சித்த பேச்சு...


திருநெல்வேலி: ஜுலை 27


தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு துணை முதலமைச்சரும் தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று சிறைக்குச் சென்று அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

thoothukudileaks


அப்போது, சிறையில் இருந்தாலும் முன்பைவிட அதிக உற்சாகத்துடனும், கழகப் பணியிலும் மக்கள் சேவையிலும் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்ற மன உறுதியுடனும் மார்க்கண்டேயன் இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

ஆறுதல்!!!

மேலும், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, மார்க்கண்டேயனின் விடுதலைக்காக கழகத்தின் வழக்கறிஞர்கள் சட்ட ரீதியான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும், அதுகுறித்து விளக்கி அவருக்கு ஆறுதல் தெரிவித்ததாகவும் கூறினார்.


தூத்துக்குடி விமான நிலையத்தில்..

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ...உதயநிதி ஸ்டாலின்,

 "பழிவாங்கும் நோக்கத்தில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மிசா மற்றும் அவசரநிலை காலத்தையே எதிர்கொண்ட இயக்கம் தி.மு.க. ஆகும். இதுபோன்ற கைது நடவடிக்கைகளுக்கு கழகத் தொண்டர்கள் ஒருபோதும் அஞ்சமாட்டார்கள். 

thoothukudileaks


விமர்சனங்களை அடக்குவதற்காக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு கைது நடவடிக்கையும் நீதிமன்றத்தில் தோல்வியடைகிறது. இதேபோல் மக்கள் மன்றத்திலும் இந்த ஆட்சி தோல்வியை சந்திப்பது உறுதி" என்று கடுமையாக விமர்சித்தார்.


இந்த சந்திப்பின் போது ...

முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப், தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, மேயர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.