தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி புகைப்படம் அருணன் செய்தியாளர்
உதயநிதி ஸ்டாலின் பேச்சை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் த.வெ.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்
முன்னாள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று (04.08.2026) தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரைமணி நேர ஆர்ப்பாட்டம்!!!
அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாநகரில் 12-வது வாசல் மையவாடி அருகிலுள்ள மைதானத்தில் இன்று காலை 11 மணியளவில் தொடங்கி சுமார் அரைமணி நேரம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் த.வெ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு, உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய நிர்வாகிகள், அரசியல் நாகரிகத்தை பின்பற்ற வேண்டும் என்றும், எதிர்க்கட்சியினரையும் மக்களின் கருத்துகளையும் மதிக்கும் வகையில் பொது வாழ்க்கையில் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தவெக கட்சியினர் வழக்கத்தை விட குறைந்த எண்ணிக்கையில் நூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக