தூத்துக்குடி செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தூத்துக்குடி செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 6 நவம்பர், 2024

கணவன் மனைவி இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதம் விதித்து தூத்துக்குடி சிவில் உரிமை பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் (PCR Court) தீர்ப்பு.

தூத்துக்குடி மாவட்டம் : 06.11.2024


குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நட ந்த இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதம் விதித்து தூத்துக்குடி சிவில் உரிமை பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் (PCR Court) தீர்ப்பு.

இது பற்றிய செய்தியாவது:- 

கடற்கரை பகுதியில் குடிசை

கேரள மாநிலம் மூணாறு கோதமங்களம் பகுதியைச் சேர்ந்த தேவ சிங் (எ) தேவசியா (எ) சாக்கோ (60/13) மற்றும் அவரது மனைவி மேரி (50/13) ஆகியோர் கடந்த 2013 ஆம் வருடம் தூத்துக்குடி குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவிற்கு வந்து கடற்கரை அருகில் உள்ள சிதம்பரேஸ்வரர் கோவில் அருகே குடிசை அமைத்து பழைய பேப்பர் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து விற்பனை செய்து வந்துள்ளனர்.

மனைவி இடம் தவறாக தொந்தரவு!!!

இந்நிலையில் கடந்த 17‌.10.2013 அன்று மேற்படி கணவன் மனைவி தங்கியிருந்த இடத்திற்கு வந்த குலசேகரன்பட்டினம் உடன்குடி பிள்ளையார் பெரியவன்தட்டு பகுதியைச் சேர்ந்த அமச்சியார் மகன் செல்வம் (43/24) என்பவர் மேற்படி மேரியிடம் தவறாக பேசி தொந்தரவு செய்துள்ளார். இதனை மேரியும் அவரது கணவரும் தட்டிக் கேட்டுள்ளனர். 

கணவன் மனைவி இருவருக்கும் அரிவாள் வெட்டு!!!

இதனால் ஆத்திரம் அடைந்த செல்வம் மேற்படி மேரி மற்றும் அவரது கணவர் தேவசிங் (எ) தேவசியா (எ) சாக்கோ ஆகிய இருவரையும் அரிவாளால் வெட்டியதில் மேரி சம்பவ இடத்திலும் மேரியின் கணவர் 19.10.2013 அன்று மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். 



கொலையாளி கைது!!!

இச்சம்பவம் குறித்து குலசேகரன்பட்டினம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து  செல்வத்தை கைது செய்தனர்.

தூத்துக்குடி நீதீ மன்றம் 

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி சிவில் உரிமை பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 


நீதி பதி தீர்ப்பு!!!

இவ்வழக்கை விசாரித்த மதிப்பிற்குரிய கனம் நீதிபதி  உதயவேலவன் இன்று (05.11.2024) குற்றவாளியான செல்வம் என்பவருக்கு ஒவ்வொரு கொலைக்கும் தனித்தனியாக ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதம் வித்து தீர்ப்பு வழங்கி மேற்படி தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.

பாராட்டு!!!

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்  கோவிந்தராஜ்  குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் பூங்குமார்  விசாரணைக்கு உதவியாக இருந்த  தலைமை காவலர்  முருகன் ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ‌‌.கா.ப  பாராட்டினார்.

வெள்ளி, 13 செப்டம்பர், 2024

2023 - 2024 தமிழக அரசின் கிரீன் சாம்பியன் விருது" சுற்றுச்சூழல் ஆர்வலர்தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த தாமோதரனுக்கு வழங்கப்பட்டது

  ▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃14-10-9- 2024 photo news 

by sunmugasunthram Reporter 

தமிழ்நாடு அரசின் சார்பில் "கிரீன் சாம்பியன் விருதும்" சான்றிதழும், ரூபாய் ஒரு லட்சத்துக்கான காசோலையும் அரசு தேர்வு பெற்ற வருக்கு வழங்கப்படும் 



கீரீன் சாம்பியன் விருது 

    இந்த 2023- 2024 ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரும், தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு நிறுவனத் தலைவருமான தாமோதரனுக்கு 2023 - 2024ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் கிரீன் சாம்பியன் விருது வழங்கப்பட்டது 

பசுமை நாயகன்!!!!

 தமிழ்நாடு  முதலமைச்சரின் பசுமை தமிழ்நாடு இயக்கத்திற்கு வலு சேர்க்கும் விதமாக தூத்துக்குடி மட்டுமல்லாது  தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பசுமை குறுங்காடுகளையும், பசுமை குறும்பூங்காவனங்களையும் உருவாக்கி நாட்டின் பசுமை போர்வையை மேம்படுத்த சிறப்பாக சேவையாற்றியுள்ளார். 

சிறந்த சேவைகள்

கன்னியாகுமரி,  தூத்துக்குடி மாவட்ட கடற்கரைகளில் 16 லட்சத்துக்கும் மேலான பனைவிதைகளை நடவு செய்து, தமிழகத்தின் தேசிய மரமான பனைமரங்களை மீட்டெடுக்கும் விதமாகவும், நிலத்தடி நீரை பாதுகாக்கவும் சிறப்பாக  பணியாற்றியுள்ளார். மேலும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் குறித்து தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி அமைச்சர்கள், சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். 


இவர் ஏற்கனவே பல்வேறு அமைப்புகள் மூலமாக பசுமை பாதுகாவலன், பசுமை தோழன்,  பசுமை நாயகன், பசுமை செந்துளிர் என பல விருதுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் பெற்றுள்ளார். 

இவரின் வழிகாட்டி காசி விஸ்வநாதன்!!!

    தற்போது தமிழக அரசின் சுற்றுச் சூழலுக்கான உயரிய விருதான "கிரீன் சாம்பியன் விருது" பெற்றுள்ள தாமோதரன் தன்னுடைய வழிகாட்டியாக விளங்கும் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவரும், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளருமான காசிவிஸ்வநாதனிடம் வாழ்த்துக்களையும், பாராட்டுதலையும்  பெற்றார். 

நன்றி 

யூனியன் துணைச்சேர்மன் காசிவிஸ்வநாதனுக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார். 


உடன் திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், பசுவந்தனை காவல் நிலையக்காவலர் மகாராஜன் ஆகியோர் உடன் இருந்தனர். 


சனி, 7 செப்டம்பர், 2024

தூத்துக்குடி பிரஸ் கிளப்-பில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்

 தூத்துக்குடி பிரஸ் கிளப்-பில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இது பற்றிய செய்தியாவது:-


இன்று 7-9-2024 விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோயில்களில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.. 




மேலும், தூத்துக்குடி மாநகரின் பல பகுதிகிளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது..


இந்நிலையில், தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.


…. தூத்துக்குடி மாநகர், தமிழ் சாலை ரோட்டில் உள்ள தூத்துக்குடி பிரஸ் கிளப்பில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது

தூத்துக்குடி பிரஸ் கிளப் நிர்வாகிகள் 

தேர்தலில்...

 புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்ட, பிரஸ் கிளப் தலைவர் A.T.சண்முக சுந்தரம், பொருளாளர் J.ராஜூ, துணைத் தலைவர் A.சிதம்பரம், இணைச் செயலாளர் P.சதீஷ்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற பூஜையில் மூத்த நிருபர்கள் ஆத்தி முத்து, லட்சுமணன் மற்றும் பிரஸ் கிளப்பின் உறுப்பினர்கள், மாரி ராஜா, கண்ணன், இருதயராஜ், மாணிக்கம், நீதி ராஜன், மணிகண்டன், சித்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்..

தூத்துக்குடி ஆரோக்கியபுரம் புனிதஆரோக்கியநாதா் ஆலயத்திருவிழா கொடியேற்றம்

 ▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

5-9-2024 photo news 

by தமிழன் ரவி reporter 

தூத்துக்குடி  ஆரோக்கியபுரம் புனிதஆரோக்கியநாதா் ஆலயத்திருவிழா கொடியேற்றத்துடன்  துவங்கியது 



               தூத்துக்குடி மறைமாவட்டம்  தாளமுத்துநகா் பங்கில் அமைந்துள்ள  ஆரோக்கியபுரம் புனித ஆரோக்கியநாதா் ஆலயத்திருவிழா  6.09.2024 வெள்ளிக்கிழமை  மாலை  6.30 மணிக்கு  செபமாலை  ஜெபத்துடன்  துவங்கியது .



 அருட்பணி  கிருபாகரன்  ( தூத்துக்குடி  இனிகோ தொழிற்பயிற்சி இயக்குனா்   )    தலைமையில்    திருக்கொடியேற்றம்  நடைபெற்றது 


  திருப்பலியில்  மறையுரையாற்றினாா் அருட்பணி  ஜோசப்ஸ்டாலின்  ( தூத்துக்குடி தென்மண்டல பள்ளிகளின் கண்காணிப்பாளா் )  தூத்துக்குடி  சவோியாா்புரம் பங்கு  தந்தை  குழந்தைராஜன்   அருட்தந்தை பாலன் ஆகியோர் கலந்து கொண்டு  சிறப்பித்தனா் .



  அடுத்து  திருவிழாவின்  முக்கிய நிகழ்வான   8  ஆம்  திருவிழாவான  13.09.2024  வெள்ளிக்கிழமை   மாலையில்  7  மணிக்கு  நற்கருணை பவணி நடைபெறுகிறது .



 தலைமை   அருட்பணி  சத்தியநேசன்  ( மறைமாவட்ட நீதி மன்ற நடுவா்  தூத்துக்குடி தென்மண்டலம்    )   மறையுரையாற்றுகிறாா்  அருட்பணி ஜஸ்டின் 

( பொத்தகாலன்விளை பங்குதந்தை  )     9  ஆம்  திருவிழா    

14.09.2024  சனிக்கிழமை   திருவிழா மாலை ஆராதனை  நடைபெற்றது 



 தலைமை  அருட்பணி ரவிபாலன்   மறை  மாவட்ட முதன்மை குரு  அவா்கள்   அருட்பணி  மணி    கள்ளிக்குளம்  ஸ்னோஸ் மெட்ரிக்  மேல்நிலைப்பள்ளி   தாளாளா்  மறையுரையாற்றுகிறாா்கள் . 


10 ஆம்  திருவிழா மாலையில்  திருவிழா திருப்பலி  க்கு  தலைமைதாங்குகிறாா்   அருட்பணி சகாயஜோசப்    ஆண்மீக தந்தை  சிறுமலா் குரு மடம்  தூத்துக்குடி  அவா்கள்   மறையுரையாற்றுகிறாா்   அருட்பணி  பெஞ்சமின் டி சூசா   சட்டப்பணிகள்  கிறிஸ்தவ வாழ்வுாிமை இயக்கம்  தூத்துக்குடி  


 தொடா்ந்து  காலை  9  மணிக்கு  மாதா  மற்றும்  ஆரோக்கியநாதா்  தோ் பவணி  நடைபெறும்  

நிகழ்ச்சிக்கான  ஏற்பாடுகளை  தாளமுத்துநகா்   பங்கு தந்தையா்கள் அருட்பணி  நெல்சன்ராஜ்  அருட்பணி  பாலன்   மற்றும்  ஆரோக்கியபுரம்  ஊா் நிா்வாகிகள்  ஊா் இறைமக்கள் மற்றும் அருட்சகோதாிகள்  அனைத்து சபைகளும்  அன்பியங்களும்  செய்திருந்தனா் .

ஞாயிறு, 1 செப்டம்பர், 2024

தமுமுகவின் முப்பதாவது ஆண்டு விழா தமுமுக,மமக வின் தலைவர்,முனைவர், பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் நெல்லை வருகை

▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

2-9-2024 photo news 

by Arunan journalist 

தமுமுகவின் முப்பதாவது ஆண்டு விழா விழா சிறப்பாக கொண்டாட இருக்கிறது.

இதையொட்டி... தமுமுக,மமக வின் தலைவர்,முனைவர், பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் நெல்லை வருகை தந்தார் .

இது பற்றிய செய்தியாவது:-

தமுமுகவின் முப்பதாவது ஆண்டை முன்னிட்டு நெல்லையில் தமுமுகவின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள (01/09/2014 ஞாயிறு) வருகை தந்தார். தமுமுக,மமக வின் தலைவர்,முனைவர், பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்  



நெல்லை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த  அவருக்கு 

தூத்துக்குடி விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது 




இந் நிகழ்வில் தூத்துக்குடி மாவட்டம் அகமது இக்பால்(மாவட்ட பொறுப்புகுழு)

மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் ஜனோபர் அலி, செய்யது ஐரோஸ், 


தமுமுக தூத்துக்குடி மாநகர செயலாளர் முத்தையாபுரம் அப்பாஸ்,மமக தூத்துக்குடி மாநகர செயலாளர் 

A.அப்பாஸ் 

முன்னாள் மாநகர பொறுப்புக்குழு சம்சுதீன், ப்ரவின், 


கிளை பொறுப்பாளர்கள்

சிக்கந்தர்,ஜெய்லானி,கமர்தீன், முத்தையாபுரம் அலி மற்றும் கிளை சகோதரர்கள் 


நெல்லை மாவட்ட தலைவர் ரசூல் மைதீன் மற்றும் நெல்லை பொறுப்பாளர்கள் 


தலைவர் அவர்களோடு ஊடகவியலாளர் செந்தில்வேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

அகமது இக்பால்

மாவட்ட பொறுப்புகுழு

தூத்துக்குடி மாவட்டம்

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2024

சங்கரலிங்கபுரம் நில மீட்பு அறவழி போராட்டத்தின் 38 ஆம் நாள் - ஹென்றி திபேன் நேரில் ஆதரவு

சங்கரலிங்கபுரம் நில மீட்பு அறவழி போராட்டத்தின் 38 ஆம் நாள் - ஹென்றி திபேன் நேரில் வந்து ஆதரவு தெரிவிப்பு.




 இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் தாலுகா, சங்கரலிங்கபுரம் ஊர் பொதுமக்களின் அறவழியிலான 

நில மீட்பு போராட்டத்தின் 38ஆம் நாளான 30.08.2024, 


இன்று  மாலை 7.00 மணியளவில் போராட்டக்களத்திற்கு மனித உரிமை செயல்பாட்டாளர் மூத்த வழக்கறிஞர் ஹென்றி திபேன் வழக்கறிஞர் மாடசாமி ஆகியோர் நேரில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவிக்கவுள்ளனர்.


தகவல்:-

செய்தி தொடர்பு பிரிவு,

மக்கள் கண்காணிப்பகம்

மேயர் ஜெகன் பொியசாமி வேண்டுகோள்

 ▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

30-8-2024 photo news 

by sunmugasunthram Reporter 

40 ஆண்டுகளாக போடாத சாலைகள் மாநகராட்சி பகுதியில் போடப்பட்டுள்ளன. வளர்ச்சி பணிகளுக்கு அனைவரும் ஓத்துழைக்க வேண்டும். மேயர் ஜெகன் பொியசாமி வேண்டுகோள்

     தூத்துக்குடி மாநகராட்சி மாதந்திர கூட்டம் மாநகராட்சி கூட்டரங்கில் மேயர் பொியசாமி தலைமையில் துணை ஆணையர் ராஜாராம், துணை மேயர் ஜெனிட்டா, ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. 



மேயர் ஜெகன் பொியசாமி தொடக்கவுரையில் பேசும் போது....

 தமிழகத்தில் சிறந்த மாநகராட்சிகளில் இரண்டாவது இடத்திற்கு நம்முடைய மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டு சுதந்திரதினத்தன்று தமிழக முதலமைச்சாிடம் விருதை பெற்றுள்ளோம்.

நன்றி தெரிவிப்பு!!!

 இதற்கு முழுமையாக வளர்ச்சி பணிகளுக்கு முழு ஓத்துழைப்பு வழங்கி ஊக்கமளித்த கனிமொழி எம்.பி அமைச்சர்கள் கீதாஜீவன், நேரு, ஆணையர் மதுபாலன், அரசுத்துறை அதிகாாிகள், மாமன்ற உறுப்பினர்கள் எங்களின் செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஊடகத்துறைக்கும் நன்றியை தொிவித்துக்கொள்கிறேன். 



நான்கு மண்டலங்கள் பகுதியிலும் பொதுமக்கள் நலன் கருதி மக்கள் குறைதீர்க்கும் முகாம், தொடர்ந்து நடைபெறுவதால் மக்களுக்கும் நன்மை கிடைக்கிறது. 


சில குறைகளை உடனடியாக தீர்த்து வைக்கப்படுவதின் மூலம் மகிழ்ச்சியும் கிடைக்கிறது. 


7 வார்டுகளில் முதல்கட்டமாக 24மணி நேரமும் குடிநீர் சேவைகள் பணியை தொடங்கவுள்ளோம்.

கோசாலை அமைப்பு!!

இதனை தொடர்ந்து 60 வார்டு பகுதிகளிலும் அப்பணிகள் விாிவுப்படுத்தப்படும் மாநகராட்சி பகுதிகளில் தேவையில்லாமல் சுற்றித்திாியும் கால்நடைகளை பிடித்து கோசாலையில் அடைக்கப்படும்.

வீடுகளில் வளர்க்கப்படும் நாய் கள் கணக்கெடுப்பு 

 அதற்கென்று முறைப்படுத்தி கணக்கெடுப்பின் மூலம் தீர்வு காணப்படும். மாநகராட்சி பகுதியில் 3806 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது.

இடம்:-தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் உள்பகுதியில்... 

இனி பிடிபடும் மாடுகள் அனைத்தும் கோசாலை யில் !!!!

 தொடர்ந்து மக்கள் பணியாற்றுவோம் என்று கூறினார். 

பின்னர் காங்கிரஸ் கவுன்சிலர் சந்திரபோஸ் பேசுகையில் கடந்த 18ம் தேதி ஆசிாியர் காலணி, பகுதியில் காண்கீரிட் மூலம் வேகத்தடை அமைத்திருந்ததால் அந்த சாலையில் இருசக்கரவாகனத்தில் வந்த நபர் விபத்துக்குள்ளாகி உயிாிழந்தார்.


 இதற்கு காரணமான அந்த உாிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று கேட்டுக்கொண்டார். 


அதிமுக எதிர்கட்சி தலைவர் வக்கீல் வீரபாகு, கொறடா வக்கீல் மந்திரமூர்த்தி, திமுக கவுன்சிலர்கள் கீதாமுருகேசன், பட்சிராஜன், முத்துவேல், ராமகிருஷ்ணன், இசக்கிராஜா, உள்ளிட்ட கவுன்சிலர்கள் தங்களது பகுதியில் நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்தும் நிறைவேற்றிய பணிகளுக்கு நன்றி தொிவித்தும் பேசினார்கள்.

பின்னர் மேயர் ஜெகன் பொியசாமி பேசுகையில்....


 அதிமுக கவுன்சிலர் வீரபாகு வார்டு பகுதியில் முழுமையாக சாலை பணிகள் நிறைவு பெற்றுள்ளன. சில பகுதிகளில் 80 சதவீதம் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு 2000க்கும் மேற்பட்ட சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. 

அதிமுக கவுன்சிலர் வீரபாகு


அதில் கல்லூாி, கோவில், மருத்துவமணை, மற்றும் முக்கிய இடங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து முன்னுாிமை வழங்கப்படுகிறது.


 தற்போது எல்லா பகுதிகளுக்கும் தங்களுக்கு தேவையான கோாிக்கைகளை முன் வைத்துள்ளீர்கள் அவை அனைத்தும் ஓன்றன்பின் ஓன்றாக நிறைவேற்றி தரப்படும். 


எல்லா வார்டு பகுதிகளிலும் சாலைகள் 3 . 5 , ஆண்டுகளுக்கிடையில் புதிய சாலைகள் அமைத்து தருவதற்கான வாய்ப்புகள் இருக்காது. 


மாமன்ற உறுப்பினர்களுக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.


 தங்களது பகுதியில் உள்ள நிறைகுறைகளை தாங்கள் தொிந்து கொண்டும் தேவையற்றவைகளை தவிர்த்து கொள்ள வேண்டும். மாநகர பகுதியில் 12 புதிய பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 


அதன் மூலம் சிறுவர்கள் முதல் பொியவர்கள் வரை தங்களது பகுதியில் இதன் மூலம் பலனடைந்து மகிழ்ச்சியாக இருக்கின்றன. 


பல ஆக்கிரமிப்பு இடங்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் இருக்கின்ற இடங்களை மீட்டு பூங்காக்கள் மற்றும் பல்வேறு விளையாட்டு திடலாகவும் அமைத்து கொடுக்கப்படும்.

மக்கள் ஆராக்கியம் முக்கியம் ..!

 எல்லோருடைய ஆரோக்கியம் எங்களுக்கு முக்கியம் கடந்த 40 ஆண்டுகாலாக மாநகராட்சிபகுதியில் சாலையை பார்க்காதவர்களுக்கு சாலைவசதியும் கால்வாய் வசதியும் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளன. 


100 ஆண்டுகளுக்கு பின் கொட்டி தீர்த்த கனமழையால் பாதித்த பகுதியில் முதலமைச்சா் உத்தரவிற்கிணங்க சாலைகள் அமைக்கப்பட்டு கால்வாய் வசதியும் செய்யப்பட்டுள்ளன. 


"இனி வரும் காலங்களில் எந்த மழை பெய்தாலும் பொிய அளவில் பாதிப்பு ஏதுவும் இருக்காது."


 தற்போது நடைபெற்று வரும் மாலை நேர மீன்கடைகளை முறைப்படுத்தி இருக்க வேண்டும் என அறிவுரை கூறியுள்ளோம்.


 அதை மீறினால் அதன் பின் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் புதிதாக வாங்கப்படும் மின்விளக்குகள் அனைத்து பகுதிகளுக்கும் பகிர்ந்தளித்து வழங்கப்படும்.

கொடி கம்பம்!!!

 மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள 100 அடி உயர கம்பத்தில் மின்விளக்குள் பொருத்தும் பணி நிறைவு பெற்ற பின் 24 மணிநேரமும் தேசிய கொடி பறக்கும் தற்போது இந்த மாநகராட்சி உள்பட 4 மண்டல அலுவலகங்களிலும் காலை 8 மணிக்கு தேசிய கொடியேற்றப்பட்டு மாலை 6 மணிக்கு வழக்கம் போல் இறக்கப்பட்டு வருகிறது 


எந்த குறைகள் இல்லாமல் மாநகராட்சி பணிகளை பல சிரமங்களோடும் மக்களுக்காக முழுமையாக பணியாற்றி வருகிறோம். என்று பேசினார். 



தூத்துக்குடி மாநகராட்சி பொதுசுகாதாரம் தூய்மை பாரத இயகத்தின் கீழ் திறந்த வௌி மலம் கழித்தல் இல்லாத நகரமாக தரம் உயர்த்துவதில் இம்மாநகராட்சி முணைப்புடன் செயல்பட்டதின் விளைவாக சமீபத்தில் நடத்தப்பட்ட தணிக்கையின் மூலம் இரண்டாம் கட்ட அந்தஸ்தான ஓடிஎப்பிளஸ் சான்று வழங்கி அங்கீகாிக்கப்பட்டுள்ளது. 


மேலும் மாநகராட்சியில் பொதுமற்றும் சமுதாய கழிப்பிடங்களில் பாராமாிப்பு மற்றும் சேவைகளின் தரத்தை உயர்த்த வேண்டியது குப்பையில்லாத நகரங்களின் நட்சத்திர அந்தஸ்திற்கு விண்ணப்பிக்க அடுத்த அடுத்த நிலையான வாட்டா் பிளஸ் அந்தஸ்தினை அடையவேண்டியது அவசியமானதாகவும், உள்ளதாலும் இதன் மூலம் தூய்மை பாரத இயக்கம் மூலம் பெற வேண்டிய பலன்களை முழுமையாக அடையவும் பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தும் இடங்களில் அமைந்துள்ள கழிப்பறைகளின் தரம் உயா்த்தி பொதுமக்களை சுகாதார கேடிலிருந்து பாதுகாத்திடவும் 24 மணிநேரமும் தூய்மையாக சுகாதாரமான முறையில் தொண்டு நிறுவனம் மூலம் இயக்குதல் மற்றும் பராமாிப்பு பணிக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

தூத்துக்குடி பேருந்து நிலையம் கழிப்பறை பாராமரிப்பு மூன்று சமுக சேவை நிறுவனங்களிடம்

இனி ஒப்படைப்பு!!!


.. தொற்று நோய் பரவாமல் பொது மக்களின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தின் அவசியத்தினை கருத்தில் கொண்டு அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள பொது கழிப்பறைகளை இயக்குதல் மற்றும் பராமாிப்பு பணி மேற்கொள்ள 3 

சமூக சேவை நிறுவனங்களிடமிருருந்து விலைப்புள்ளிகள் வரப்பெற்றுள்ளது.


 அதற்கு அனுமதி வேண்டப்படுகிறது. உள்ளிட்ட 20 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

     கூட்டத்தில் உதவி ஆணையர்கள் சுரேஷ்குமாா், கல்யாணசுந்தரம், சொர்ணலதா, நகரஅமைப்பு திட்ட செயற்பொறியாளர் ரெங்கநாதன், துணை பொறியாளர் முனீர் அகமது, நகர் நல அலுவலர் வினோத் ராஜா, சுகாதார ஆய்வாளர்கள் ஸ்டாலின் பாக்கியநாதன், ராஜபாண்டி, மண்டலத்தலைவர்கள்வக்கீல்பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, கலைச்செல்வி, கவுன்சிலர்கள் கண்ணன், சரன்யா, வைதேகி, சரவணக்குமார், அதிஷ்டமணி, சோமசுந்தாி, ாிக்டா, மெட்டில்டா, நாகேஸ்வாி, ஜெயசீலி, ரெங்கசாமி, பேபி ஏஞ்சலின், சுப்புலட்சுமி, காந்திமதி, விஜயலட்சுமி, காங்கிரஸ் கவுன்சிலர்கள் எடின்டா, கற்பககனி, கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் தனலட்சுமி, முத்துமாாி, மதிமுக கவுன்சிலர்கள் ராமும்மாள், இந்தியயூனியன் முஸ்ஸீம் லீக் கவுன்சிலர் மும்தாஜ், அதிமுக கவுன்சிலா்கள் வெற்றிசெல்வன், பத்மாவதி, ஆணையாின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயாின் நோ்முகஉதவியாளர் ரமேஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வியாழன், 15 ஆகஸ்ட், 2024

சுதந்திர தின விழா மதுரை கோட்ஸ் தொழிலாளர் கூட்டுறவு பண்டகசாலைமயில் தேசிய கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கல்

 தூத்துக்குடியில் மதுரை கோட்ஸ் கூட்டுறவு பண்டகசாலையில் சுதந்திர தின விழா கொண்டாடினர் .



இது பற்றிய செய்தியாவது:-

இன்று ஆகஸ்ட் 15 இந்தியாவின் 78- வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது 

இதையொட்டி தூத்துக்குடியில் இன்று 

மதுரை கோட்ஸ் தொழிலாளர் கூட்டுறவு பண்டகசாலை மற்றும் தூத்துக்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் தேசிய கொடி ஏற்றி சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது.


 தூத்துக்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் முதல்வர் (பொறுப்பு )  என்.எஸ்.மணி,  தேசியக் கொடி ஏற்றினார். 

இந்நிகழ்ச்சியில்...

 முத்துசாமி, துணைப்பதிவாளர் (ஓய்வு), பாலசுப்பிரமணியன் துணைப்பதிவாளர் (ஓய்வு), மதுரை கோட்ஸ் பண்டகசாலை மேலாளர் ஜாண் சுந்தர்சிங்,

தொகுப்பாளர்.சி.எஸ்.மணி, பண்டகசாலை அலுவலர்கள்,  பணியாளர்கள், மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

திங்கள், 12 ஆகஸ்ட், 2024

தூத்துக்குடியில் பூப்பந்தாட்டம் போட்டி !!!

 ▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

13-8-2024

தூத்துக்குடி Zonal அளவிலான பூப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது .

இதுபற்றி செய்தியாவது:-

தூத்துக்குடி Zonal அளவிலான பூப்பந்தாட்ட போட்டியை ஹோலிகிராஸ் அங்கிலோ இந்தியன் மேல்நிலை பள்ளி நடத்திட பொறுப்பேற்று நேற்று 12.08.2024  பாரத் ரத்னா காமராஜர் பள்ளியில் வைத்து  நடைபெற்றது. 



 போட்டிகளை மாவட்ட விளையாட்டு ஆய்வாளர் முனைவர் கண்ணதாசன் துவக்கி வைத்தார்கள்.


தூத்துக்குடி S. A. V. பள்ளி உடல்கல்வி ஆசிரியர்  குப்புசாமி நடுவராக செயல்பட்டு விளையாட்டு போட்டிகளை நடத்தினார்கள்.

வியாழன், 8 ஆகஸ்ட், 2024

ஏர் பஸ் விமானம் தூத்துக்குடியில் பயணிகள் மகிழ்ச்சி

 தூத்துக்குடி விமான நிலையத்தில் ஏர் பஸ் விமானம் வந்து செல்லும் என்ற அறிவிப்பு பயணிகளை ரொம்ப மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது .



இதுபற்றி செய்தியாவது:-

தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து ஏர் பஸ் விமானம் வந்து செல்லும் வசதி வருவதால் விமான பயணிகள் ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளார்கள்.

 

இப் போது...

 தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு தினமும் ஐந்து முறை விமானமும், பெங்களூருக்கு இருமுறை விமானமும் இயக்கப்பட்டு வருகிறது.


வெளிநாடு மற்றும் வெளி மாநில மக்கள் வசதிக்காக தூத்துக்குடி விமான நிலையம் தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. 



தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ.227.33 கோடி மதிப்பீட்டில் புதிய முனையம் அமைத்தல் உள்ளிட்ட விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. 


இந்த புதிய பயணிகள் முனையம் 17 ஆயிரத்து 341 சதுரமீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வருகிறது. 


மேலும், விமானப் போக்குவரத்துக் கண்காணிப்பு, கட்டுப்பாட்டு கோபுரம் மற்றும் அதைச்சார்ந்த அலுவலகக் கட்டிடங்கள், தீயணைப்புத்துறை கட்டிடங்கள் உள்ளிட்ட கட்டிடங்களும் கட்டப்பட்டு வருகிறது.



 தூத்துக்குடி - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து விமானநிலைய புதியமுனையத்துக்கு செல்லும் வகையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு இணைப்புச்சாலை புனரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.


புதிய முனையத்தில் புறப்பாடு பகுதியில் 4 வாயில்களும், 21 பயணியர் செக் இன் கவுண்டர்களும், 3 ஏரோப்ரிட்ஜ்களும், 2 வருகைக்கான கன்வேயர் பெல்ட்களும், ஒரே நேரத்தில் 5 விமானங்கள் நிறுத்தும் வகையிலான வசதிகள், 500 பயணிகள் வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதிகள், 2 வி.ஐ.பி. அறைகள், லிப்ட் வசதிகள், பயணிகள் அதிகமாக வருகை தரும் நேரங்களில் 1 மணி நேரத்துக்கு1440 பயணிகளை கையாளக்கூடிய வகையிலான வசதிகள், பயணிகள் வருகை, புறப்பாடு, பயணிகள் காத்திருப்புஅறைகள் போன்ற பகுதிகளில் புதிய அதிநவீனவசதிகளுடன் உட்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது.


இந்த புதிய முனையம் 4 நட்சத்திர அந்தஸ்து பெற்ற பசுமை கட்டிடமாக அமைக்கப்பட்டு வருகிறது. 


முனைய கட்டிடங்கள் முழுவதும் சோலார் பொறுத்தப்பட்டு உள்ளது. 

2024 அக்டோபர் மாதத்திலிருந்து....

தற்போது வரை 76 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டு மீதமுள்ள பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு வருகிற 2024 அக்டோபர் மாதத்துக்குள் செயல்பாட்டுக்கு வர உள்ளது. 


இதே போன்று ரூ.113.63 கோடி மதிப்பீட்டில் 3115 மீட்டர் நீளத்திற்கு விமான ஓடுதளம் அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது. 


தற்போது வரை 93 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டு மீதமுள்ள பணிகள் இந்தமாதம் இறுதிக்குள் முடிவடைய உள்ளது.




தமிழகத்தில் நான்கு வழிப்பாதைகளையும் கொண்ட ஓரே மாவட்டம் தூத்துக்குடி தான். வான்வழி, தரைவழி, ரயில் வழி, கப்பல் வழியென நான்கு தடங்களையும் உள்ளடக்கிய தூத்துக்குடி மாவட்டத்தில் விரைவில் ஐந்தாவது தடமாக விண்வெளி தடமும் அமைய உள்ளது.


தூத்துக்குடியில் ஹைட்ரஜன் தொழிற்சாலை!!!!


ஏற்கனவே... துறைமுகம் தொழிற்சாலை கள் இயங்கும் 

துாத்துக்குடியில்   பர்னிச்சர் பார்க், வின் பாஸ்ட் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை, குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் என அடுத்தடுத்து புதிய திட்டங்கள்,

சிங்கப்பூரை சேர்ந்த, 'செம்ப்

கார்ப்' நிறுவனம்,

துாத்துக்குடி மாவட்

டத்தில், சூரியசக்தி,

காற்றாலை மின்சா

ரத்தை பயன்படுத்தி,

36,238 கோடி ரூபாய்

முதலீட்டில் பசுமை

ஹைட்ரஜன் உற்பத்தி

செய்யும் தொழிற்சா

லையை அமைக்க

உள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் இம்மாதம் ஆகஸ்ட் 21 ம் நடைபெறுகிறது.

 துாத்துக்குடி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது


திங்கள், 5 ஆகஸ்ட், 2024

நீங்க போலீஸ் ஸ்டேஷன் செல்ல வேண்டாம்! இனிமேல் ஆன்லைனில் புகார் தரலாம்!

▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

5-8-2024  arunan journalist 

நீங்க.... இனிமேல் போலீஸ் ஸ்டேஷன் போக வேண்டாம்! ஆன்லைனில் புகார் தரலாம்! புதிய குற்றவியல் சட்டத்தின் சிறப்பம்சங்கள்

2024 ஜூலை 1 முதல் மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. 



இந்த புதிய குற்றவியல் சட்டத்தில் ஜீரோ எப்ஐஆர், ஆன்லைன் போலீஸ் புகார்களைப் பதிவு செய்தல், மின்னணு முறையில் சம்மன் அனுப்புதல் மற்றும் கொடூரமான குற்றங்கள் நடந்த இடங்களைக் கட்டாயமாக வீடியோ பதிவு செய்வது உள்ளிட்ட விதிகள் உள்ளன. 



இப்போது.... நடைமுறைக்கு வந்துள்ள பாரதீய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023 மற்றும் பாரதிய சாக்ஷ்ய ஆதினியம் 2023 ஆகியவை எளிய இந்திய மக்களுக்கும் கூட அதிகாரம் அளிக்கும் வகையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.


கடந்த ஆண்டு இந்த மூன்று சட்டங்களும் கொண்டு வரப்பட்டன. 


இவை ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்ட பிரிட்டிஷ் கால இந்தியத் தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்தியச் சாட்சியச் சட்டம் ஆகியவற்றுக்குப் பதிலாக அமைக்கப்பட்டுள்ளன.


ஆன்லைனில் புகார்!!!

இதில் புதிய சட்டங்களின் கீழ் ஒருவர் ஆன்லைன் மூலமாகவே புகார் அளிக்க முடியும். பழைய சட்டத்தின் கீழ் ஒருவர் புகார் அளிக்க நேரடியாக போலீஸ் நிலையத்திற்குச் செல்ல வேண்டும்.


 ஆனால், புதிய சட்டத்தின் கீழ் போலீஸ் நிலையத்திற்குச் செல்லாமல் ஆன்லைனிலேயே புகார் அளிக்கலாம்.


 இது பொதுமக்கள் எளிதாகவும் விரைவாகும் புகாரளிக்க வழிவகை செய்கிறது. 


இதன் மூலம் போலீசாரால் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடிகிறது.



ஜீரோ எஃப்ஐஆர்!!!


 அதேபோல ஜீரோ எஃப்ஐஆர் என்ற நடைமுறையும் அமலுக்கு வந்துள்ளது. அதாவது பழைய சட்டங்களின் கீழ் குற்றம் நடந்த இடம் எந்த போலீஸ் நிலைய வரம்பிற்குள் வருகிறதோ..? அந்த குறிப்பிட்ட போலீஸ் நிலையத்தில் தான் புகார் அளிக்க வேண்டும். 


இதனால் பல நேரங்களில் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு இருக்கிறது. 


இந்த பிரச்சினையும் புது சட்டத்தில் இருக்காது.


குற்றம் நடந்து இடம் எதுவாக இருந்தாலும் எந்த போலீஸ் நிலையத்தில் வேண்டும் என்றாலும் புகார் அளிப்பதை இந்த ஜீரோ எஃப்ஐஆர் வழிவகை செய்கிறது. 


இது சட்ட நடவடிக்கைகளைத் தொடங்குவதில் உள்ள தாமதங்களை நீக்குகிறது. 


புதிய சட்டங்களின் கீழ், பாதிக்கப்பட்டவர்கள் எஃப்ஐஆர் காப்பி இலவசமாக வழங்கப்படும்.


கைது விவரம் ???

 அதேபோல ஒருவர் கைது செய்யப்பட்டால் அவர் கூறும் நபருக்குக் கைது குறித்து போலீசார் கூற வேண்டும் எனச் சட்டம் சொல்கிறது.


 இதன் மூலம் கைது செய்யப்பட்ட நபரின் குடும்பத்தினருக்குக் கைது குறித்து உடனடியாக தெரிய வரும்.


 இது கைது செய்யப்பட்ட நபருக்கும் கிடைக்க வேண்டிய நியாயத்தைப் பெற்றுத் தரும்.


 மேலும், கைது விவரங்கள் இப்போது காவல் நிலையங்கள் மற்றும் கலெக்டர் அலுவலகங்களில் வைக்கப்படும்.


இதுவும் கைது குறித்த தகவல்கள் குடும்பத்தினர் தெரிந்து கொள்ள உதவும்.


வீடியோ எடுப்பது !!! 

அடுத்து.... விசாரணையை வலுப்படுத்த முக்கியமான விதி கொண்டு வரப்பட்டுள்ளது.


 அதாவது கடுமையான குற்றங்கள் நடந்த இடங்களுக்கு தடயவியல் நிபுணர்கள் நேரில் சென்று சாட்சியங்களைச் சேகரிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 



மேலும், குற்றம் நடந்த இடத்தை கட்டாயமாக வீடியோ படம் எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


இந்த இரண்டு விதிகளும் வலிமையான விசாரணையை உறுதி செய்யும்.


பெண்களுக்கு எதிரான குற்றங்கள்???


 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான விசாரணைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த புதிய சட்டங்கள் இருக்கிறது. 


மேலும் புகார் அளித்து இரண்டு மாதங்களுக்குள் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து வாக்குமூலம் பெற வேண்டும்..


 90 நாட்களுக்குள் வழக்கில் நடத்தப்பட்ட விசாரணை குறித்த தகவல்களைப் பாதிக்கப்பட்ட நபருக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதையும் புதிய சட்டங்கள் கட்டாயமாக்குகிறது.



பெண்களுக்கு எதிரான சில குற்றங்களுக்குப் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலங்கள் முடிந்தவரை ஒரு பெண் மாஜிஸ்திரேட் முன்னிலையில் பதிவு செய்ய வேண்டும். 


பெண் மாஜிஸ்திரேட் இல்லாதபட்சத்தில் ஒரு ஆண் மாஜிஸ்திரேட் முன்பு வாக்குமூலம் அளிக்கலாம்.


 இருப்பினும், பாதிக்கப்பட்டவருக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்க அருகே மற்றொரு பெண் இருப்பதைச் சட்டம் அனுமதிக்கிறது.


மேலும், புதிய சட்டங்களின் கீழ் நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச முதலுதவி அல்லது மருத்துவச் சிகிச்சைக்கு அளிக்கப்படுவதை உறுதி செய்கிறது.


டிஜிட்டல் சம்மன்!!!


 சம்மன்கள் இப்போது டிஜிட்டல் முறையில் அனுப்புவதையும் சட்டம் அனுமதிக்கிறது.


 இது சட்ட செயல்முறைகளை விரைவுபடுத்தவும், தேவையில்லாத பேப்பர் பயன்பாட்டைக் குறைக்கவும் உதவும்.



14 நாட்கள்!!!

 குற்றஞ்சாட்டப்பட்டவர் மற்றும் பாதிக்கப்பட்ட நபர்கள் என இரு தரப்பினருக்கும் 14 நாட்களுக்குள் எப்ஐஆர், போலீஸ் அறிக்கை, குற்றப்பத்திரிகை, அறிக்கைகள், வாக்குமூலங்கள் மற்றும் பிற ஆவணங்களின் நகல்களைப் பெற உரிமை உள்ளது.


 வழக்கு விசாரணைகளில் தேவையற்ற காலதாமதத்தைத் தவிர்க்கவும், நீதி தக்க சமயத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்யவும் நீதிமன்றங்கள் அதிகபட்சமாக இரண்டு வாய்தாக்களை மட்டுமே வழங்கலாம் என்ற விதி இருக்கிறது.



 சாட்சியங்களையும் பாதுகாக்கத் தனித் திட்டங்களை உருவாக்கவும் அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

சனி, 20 ஜூலை, 2024

நிலா சீ புட் ஆலையால் வெளிமாநில இளம்பெண்கள் உட்பட 30 பேர் அவசர சிகிச்சை மூன்று தனியார் மருத்துவமனையில் அனுமதி இரவு நேரத்தில் நடந்த வீபரீதம்

 ▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

20-7-2024 photo news 

by Arunan journalist 

நிலா சீ புட் ஆலையால் வெளிமாநில இளம்பெண்கள் உட்பட 30 பேர் அவசர சிகிச்சை  மூன்று தனியார் மருத்துவமனையில்  அனுமதி 

இரவு நேரத்தில் 

அமோனியா கசிவு  புகை கிளம்பியது தான் காரணமா???



இது பற்றிய செய்தியாவது;-

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை கில்பன் பெயர் மாறி அதே இடத்தில் விவி டைட்டானியம், ஸ்பிக் போன்ற தொழிற்சாலை களில் அனு தினமும் கோடிக்கணக்கில் பணம் புரள்கிறது


ஆனால்? தூத்துக்குடியில் வாழும் இங்கு ள்ள மக்கள் உயிர் உடல் நலன் மண் நிலம் சுவாசிக்கும் காற்று சம்பந்தப்பட்ட விஷயங்களில் அக்கறை செலுத்தி வருகின்றார்களா ??  தெளிவு படுத்த வேண்டும்.


சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசு வீதிமீறல் குறித்து ஆய்வு செய்கிறார்களா ? 

நடவடிக்கை எடுக்கிறார்களா?? 

விபத்து பிரச்சினையின் போது மட்டுமே வெளி வருகிறார்கள்.


 ஏனெனில்?

மக்கள் நலன் காக்கும் அரசியல் வாதிகள் சமுக ஆர்வலர்கள் பொதுமக்கள் ஏன் அவ்வவ்போது கேள்வி எழுப்பி  வீதிக்கு வந்து போராடுகிறார்கள் பாதிப்பு ஏற்படாமல் ஏன் வரப் போகிறார்கள் ?



தூத்துக்குடி 

நிலா சீ புட் !!!

இது போன்று தான் (19-7-2024)நேற்று இரவு 11 மணியளவில் தூத்துக்குடி புதூர் பாண்டியா புரம் பகுதியில் இயங்கும் கடல் மீன்கள் உணவு பதனிடும் நிலா சீ புட்  

 வெளிநாட்டு ஏற்றுமதி செய்யும் ஆலையில் தீடீர் என அமோனியா வாயுக்கள் கசிவு ஏற்பட்ட தாம் 


அந்த ஆலையில் இரவு பணியில் இருந்த கும்பகோணம் பெண்கள் ஒரிசா மாநிலத்தில் இருந்து இங்கு வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் புகை நெடி தாங்க முடியாமல் முச்சு திணறலில் சுருண்டு மயக்கமாகி தொப் தொப் யென்று கீழே விழுந்தனர் 


உடனே ஆம்லன்ஸ முலம் தூத்துக்குடியில் உள்ள திலக் அருள்ராஜ் ஏவிஎம் என மூன்று தனியார் மருத்துவமனையில் அட்மிட் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளார்கள்..


ஆலை விளக்கம் 

மறுநாள் வழக்கமாக எல்லா ஆலை தரப்பு சொல்வது போல்?


இவங்களும் ஏசி மின்கசிவு புகை கிளம்பி யது என தன்னிலை விளக்கம் செய்தியாளர்கள் மத்தியில் பேசிவிட்டு சென்றுள்ளார்கள்

அதன் பின்னர் மாவட்ட அதிகாரி கள் அந்த ஆலையில் கவனமாக ஆய்வு செய்து உள்ளன


கனிமொழி எம்பி அதிர்ச்சி!!!

கடந்த காலங்களில்... தூத்துக்குடி சுற்றியுள்ள கழிவுநீர் நீரோடைகளில்

 மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட, கோமஸ்புரம் அருகில் பாயும் உப்பாறு ஓடையில்  கடல் மீன்கள் உணவு சுத்திகரிக்கும் நிறுவனம் வெளியேற்றினார் கள் 

ரசாயன கழிவுகளால் நீரின் தன்மை மாறி செந்நிறமாக காட்சியளித்தது.

 இதை நேரில் தூத்துக்குடி  கனிமொழி 

 (28/01/2023) அன்று அவ்வழியே சென்ற போது ?

பாலத்தின் மீது நின்று ரசாயனம் கழிவு செந்நீராக பெருக்கெடுத்து ஓடியது பாத்தார்.அதிர்ச்சியடைந்தார்



 அப்போதே உரிய நடவடிக்கை எடுக்க கேட்டு கொண்டார்.


உடன் வந்த தூத்துக்குடி மாவட்டம் கலெக்டர் செந்தில் ராஜ் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் இருந்தார் கள்.


அப்போது கனிமொழி எம்பி உடன் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான அனிதா இராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, உடனிருந்தனர் என்பது குறிப்பிட தக்கது

 ஆலை க்கு அருகில் பள்ளி க்கு கல்வி துறை அனுமதி யா??

ஆலை யில் பெரிய அளவில் உள்ள டேக் வெளிப்புறம் பாத்தால் கூட தெரியும் 

தற்போது... நச்சு கசிவு அமோனியோ கசிவு ஆலைகள் இருக்கும் அருகாமையில்  பள்ளி கூடங்கள் இருக்காலாமா?

தனியார் பள்ளியான வேலவன் சிறுவர் சிறுமியர் படிக்கும் ஆங்கில பள்ளி இருக்கிறது 


பகல் நேரத்தில் ஏதாவது வீபரீதம் சம்பவம் நடைபெறாது என சொல்ல நிச்சயமில்லை 

 அருகாமையில் இருக்கும் பள்ளி குழந்தைகள் நிலை ?

ஆலை அருகில் சிறுவர் சிறுமியர் படிக்கும் ஆங்கில பள்ளி யா

எதை ஆய்வு செய்து 

எப்படி கல்வி துறை அனுமதி வழங்கப்பட்டது 

என்று கேள்வியையும் எழுப்பி வருகின்றார்கள்.

செவ்வாய், 16 ஜூலை, 2024

தூத்துக்குடி நிருபர் இல்ல திருமணம் நேரில் சென்று மணமக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த தூத்துக்குடி கனிமொழி எம்பி

▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

16- 7-2024 

தூத்துக்குடி நிருபர் இல்ல திருமணம் நேரில் சென்று மணமக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த தூத்துக்குடி கனிமொழி எம்பி 

இதுபற்றிய செய்தியாவது:-

குமுதம் ரிப்போர்ட்டர் வாரமிருமுறை இதழின் தூத்துக்குடி மாவட்ட நிருபர் S.அண்ணாதுரை இவரது மகள் A.ஆர்த்தி மற்றும் V.பிரசாந்த் இணையரின் திருமணம் கடந்த வாரம் கோவையில் நடைபெற்றது. 

மணமக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த கனிமொழி எம்பி 


இதனை தொடர்ந்து ...

இன்று (16/07/2024) தூத்துக்குடி கணேஷ் நகரில் உள்ள நிருபர் அண்ணாதுரை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி மணமக்களை சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில்..

தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் உடனிருந்தனர்.


தூத்துக்குடி நிருபர் இல்ல திருமணம் நேரில் சென்று மணமக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து நெகிழ்ச்சி அடைய செய்துள்ளார் தூத்துக்குடி மாவட்ட கனிமொழி எம்பி

செய்தியாளர்கள் மத்தியில் மகிழ்ச்சி!

தூத்துக்குடி செய்தி யாளர் கள் தற்போது தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர்.


ஞாயிறு, 14 ஜூலை, 2024

தூத்துக்குடியில் டேக்வாண்டோ சேம்பியன்ஷிப் போட்டி 265 மாணவ மாணவிகள் பங்கேற்பு

 ▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

14-7-2024 photo news 

by Arunan journalist 

தூத்துக்குடியில் டேக்வாண்டோ சேம்பியன் சிப் போட்டி இதில் 265 மாணவ மாணவிகள் பங்கேற்றார்கள் 



இது பற்றிய செய்தியாவது:-


தமிழ் நாடு சேம்பியன் ஷிப் அசோசியேஷன் சார்பில் தூத்துக்குடி மாவட்ட அளவிலான 11- வது டேக்வாண்டோ மாணவ மாணவிகளுக்காக போட்டி 

இன்று (14-7-2024 )தூத்துக்குடி தருவை மைதானம் உள்ளரங்கில் நடைபெற்றது.



தூத்துக்குடி மாவட்டம் விளையாட்டு அலுவலர் அந்தோனி அதிசயராஜ் டேக்வாண்டோ மாவட்ட தலைவர் குமாரவேலு செயலாளர் ஜெரோம் பொருளாளர் பார்வதி வேல் மாநில செயற்குழு உறுப்பினர் கென்னடி மணி ராஜ் மற்றும் ஜோசப் ஜெப்ரி ராஜா மற்றும் திமுக வட்ட பிரதிநிதி செல்வராஜ் டி கே எஸ் துரை ஆகியோர் கலந்து கொண்டனர் 




டேக்வாண்டோ சேம்பியன் ஷிப் போட்டி காலை 10 மணியளவில் துவங்கி மாலை 6 மணிவரை நடைபெற்றது 



போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார் கள்.

திங்கள், 1 ஜூலை, 2024

படிக்கட்டில் தொற்றியபடி பஸ் கண்டக்டர்? அரசு செவி சாய்க்குமா!!

தூத்துக்குடி சாயர்புரம் அருகே பேருந்தில் இடம் இல்லாததால் படிக்கட்டில் பயணம் செய்யும் கண்டக்டர் புகைப்படம் வைரல்!



தூத்துக்குடியில் இருந்து சாயர்புரம், நாலுமாவடி வழியாக நாசரேத் வரை காலையில் தனியார் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. 


இந்த வழித்தடத்தில் பல பள்ளிகள் உள்ளதால் பேருந்தில் தினமும் அளவுக்கு அதிகமான பயணிகளின் கூட்டம் உள்ளது. 


 மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி உயிருக்கு ஆபத்தான நிலையில் பயணம் செய்து வருகின்றனர்.


 கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்ததால் நேற்று( 30-6-2024)கண்டக்டர் பேருந்தில் பின்னால் உள்ள கம்பியை பிடித்துச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.


இந்த பேருந்தை தவற விட்டு அடுத்த பேரூந்தில் சென்றால் ஆசிரியர்கள் பிரம்படியுடன் முழங்காலில் நிற்க வேண்டும் என்பதால் மாணவர்கள் அடுத்த பேருந்தில் செல்லாமல் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர்.


 மாணவர்கள் பேருந்தில் இடமில்லாமலே படிக்கட்டில் தொத்தி செல்கின்றனர் என்பதற்கு கண்டக்டர் பயணமே சாட்சியாக உள்ளது. 


இந்த வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் அதிகமான மாணவர்கள் வரும் பகுதிகளுக்கு பள்ளி நிர்வாகம் வேன் வசதி செய்து தர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

அரசு செவி சாய்க்குமா!!!

▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 1-7-2024 

புதன், 26 ஜூன், 2024

தூத்துக்குடியில் போதைப் பொருளுக்கு எதிராக கையெழுத்திடும் முகாம் முதல் கையெழுத்து இட்ட தூத்துக்குடி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்

▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂  26.06.2024

photo news 

by arunan journalist  


சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் தூத்துக்குடி  பழைய பேருந்து நிலைய வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன்  தலைமையில் போதைப் பொருளுக்கு எதிராக கையெழுத்திடும் முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் இடம் பாராட்டு பெறும் சில்ட்ரன்ஸ் பாரடைஸ் டிரஸ்டின் திட்ட இயக்குனர் நந்தினி


இன்று (26.06.2024) போதைப் பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மற்றும் தூத்துக்குடி சில்ட்ரன்ஸ் பாரடைஸ் டிரஸ்ட் - குடிபோதை நோயாளிகள் மறுவாழ்வு மையம் சார்பாக ...

இன்று 26-6-2024 தூத்துக்குடி பழைய பேருந்து நிலைய வளாகத்தில் வைத்து போதைப் பொருளுக்கு எதிராக கையெழுத்திடும் முகாம் நடைபெற்றது. 

தூத்துக்குடி காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அருகில் மனநல மருத்துவர் சிவசைலம்,


இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன்  கையெழுத்திட்டு போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். 


அவரை தொடர்ந்து தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு)  பொன்னரசு, தூத்துக்குடி மனநல மருத்துவர்  சிவசைலம் மற்றும் காவல் ஆளிநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கையெழுத்திட்டனர்.


 தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பேசுகையில்...

 

இன்று உலக போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பொதுமக்களிடம் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.



 மேலும் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் மூலம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக பேரணி, கையெழுத்திடும் முகாம் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.


 போதைப் பொருள் இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.


கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் போன்றவற்றில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் .

குண்டர் சட்டம் அல்லாமலேயே ஒரு வருடம் ஜாமீன் வழங்காமல் சிறையிலடைக்க சட்டத்தில் வழிவகை உண்டு. 


அவ்வாறு ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது.


மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை போன்ற போதைப்பொருளை முற்றிலும் ஒழிப்பதற்காக பொதுமக்கள் தகவல் தருவதற்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.


 தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் செல்போன் 83000 14567 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் 


 தகவல் தருபவர்கள் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.


 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.



இந்நிகழ்வின்போது தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு)  பொன்னரசு, மனநல மருத்துவர்  சிவசைலம், சில்ட்ரன்ஸ் பாரடைஸ் டிரஸ்டின் திட்ட இயக்குனர் நந்தினி மற்றும் மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர்  அலெக்ஸ்ராஜ், உதவி ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையினர் பலர் உடனிருந்தனர்.