வெள்ளி, 30 ஆகஸ்ட், 2024

மேயர் ஜெகன் பொியசாமி வேண்டுகோள்

 ▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

30-8-2024 photo news 

by sunmugasunthram Reporter 

40 ஆண்டுகளாக போடாத சாலைகள் மாநகராட்சி பகுதியில் போடப்பட்டுள்ளன. வளர்ச்சி பணிகளுக்கு அனைவரும் ஓத்துழைக்க வேண்டும். மேயர் ஜெகன் பொியசாமி வேண்டுகோள்

     தூத்துக்குடி மாநகராட்சி மாதந்திர கூட்டம் மாநகராட்சி கூட்டரங்கில் மேயர் பொியசாமி தலைமையில் துணை ஆணையர் ராஜாராம், துணை மேயர் ஜெனிட்டா, ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. 



மேயர் ஜெகன் பொியசாமி தொடக்கவுரையில் பேசும் போது....

 தமிழகத்தில் சிறந்த மாநகராட்சிகளில் இரண்டாவது இடத்திற்கு நம்முடைய மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டு சுதந்திரதினத்தன்று தமிழக முதலமைச்சாிடம் விருதை பெற்றுள்ளோம்.

நன்றி தெரிவிப்பு!!!

 இதற்கு முழுமையாக வளர்ச்சி பணிகளுக்கு முழு ஓத்துழைப்பு வழங்கி ஊக்கமளித்த கனிமொழி எம்.பி அமைச்சர்கள் கீதாஜீவன், நேரு, ஆணையர் மதுபாலன், அரசுத்துறை அதிகாாிகள், மாமன்ற உறுப்பினர்கள் எங்களின் செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஊடகத்துறைக்கும் நன்றியை தொிவித்துக்கொள்கிறேன். 



நான்கு மண்டலங்கள் பகுதியிலும் பொதுமக்கள் நலன் கருதி மக்கள் குறைதீர்க்கும் முகாம், தொடர்ந்து நடைபெறுவதால் மக்களுக்கும் நன்மை கிடைக்கிறது. 


சில குறைகளை உடனடியாக தீர்த்து வைக்கப்படுவதின் மூலம் மகிழ்ச்சியும் கிடைக்கிறது. 


7 வார்டுகளில் முதல்கட்டமாக 24மணி நேரமும் குடிநீர் சேவைகள் பணியை தொடங்கவுள்ளோம்.

கோசாலை அமைப்பு!!

இதனை தொடர்ந்து 60 வார்டு பகுதிகளிலும் அப்பணிகள் விாிவுப்படுத்தப்படும் மாநகராட்சி பகுதிகளில் தேவையில்லாமல் சுற்றித்திாியும் கால்நடைகளை பிடித்து கோசாலையில் அடைக்கப்படும்.

வீடுகளில் வளர்க்கப்படும் நாய் கள் கணக்கெடுப்பு 

 அதற்கென்று முறைப்படுத்தி கணக்கெடுப்பின் மூலம் தீர்வு காணப்படும். மாநகராட்சி பகுதியில் 3806 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது.

இடம்:-தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் உள்பகுதியில்... 

இனி பிடிபடும் மாடுகள் அனைத்தும் கோசாலை யில் !!!!

 தொடர்ந்து மக்கள் பணியாற்றுவோம் என்று கூறினார். 

பின்னர் காங்கிரஸ் கவுன்சிலர் சந்திரபோஸ் பேசுகையில் கடந்த 18ம் தேதி ஆசிாியர் காலணி, பகுதியில் காண்கீரிட் மூலம் வேகத்தடை அமைத்திருந்ததால் அந்த சாலையில் இருசக்கரவாகனத்தில் வந்த நபர் விபத்துக்குள்ளாகி உயிாிழந்தார்.


 இதற்கு காரணமான அந்த உாிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று கேட்டுக்கொண்டார். 


அதிமுக எதிர்கட்சி தலைவர் வக்கீல் வீரபாகு, கொறடா வக்கீல் மந்திரமூர்த்தி, திமுக கவுன்சிலர்கள் கீதாமுருகேசன், பட்சிராஜன், முத்துவேல், ராமகிருஷ்ணன், இசக்கிராஜா, உள்ளிட்ட கவுன்சிலர்கள் தங்களது பகுதியில் நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்தும் நிறைவேற்றிய பணிகளுக்கு நன்றி தொிவித்தும் பேசினார்கள்.

பின்னர் மேயர் ஜெகன் பொியசாமி பேசுகையில்....


 அதிமுக கவுன்சிலர் வீரபாகு வார்டு பகுதியில் முழுமையாக சாலை பணிகள் நிறைவு பெற்றுள்ளன. சில பகுதிகளில் 80 சதவீதம் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு 2000க்கும் மேற்பட்ட சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. 

அதிமுக கவுன்சிலர் வீரபாகு


அதில் கல்லூாி, கோவில், மருத்துவமணை, மற்றும் முக்கிய இடங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து முன்னுாிமை வழங்கப்படுகிறது.


 தற்போது எல்லா பகுதிகளுக்கும் தங்களுக்கு தேவையான கோாிக்கைகளை முன் வைத்துள்ளீர்கள் அவை அனைத்தும் ஓன்றன்பின் ஓன்றாக நிறைவேற்றி தரப்படும். 


எல்லா வார்டு பகுதிகளிலும் சாலைகள் 3 . 5 , ஆண்டுகளுக்கிடையில் புதிய சாலைகள் அமைத்து தருவதற்கான வாய்ப்புகள் இருக்காது. 


மாமன்ற உறுப்பினர்களுக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.


 தங்களது பகுதியில் உள்ள நிறைகுறைகளை தாங்கள் தொிந்து கொண்டும் தேவையற்றவைகளை தவிர்த்து கொள்ள வேண்டும். மாநகர பகுதியில் 12 புதிய பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 


அதன் மூலம் சிறுவர்கள் முதல் பொியவர்கள் வரை தங்களது பகுதியில் இதன் மூலம் பலனடைந்து மகிழ்ச்சியாக இருக்கின்றன. 


பல ஆக்கிரமிப்பு இடங்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் இருக்கின்ற இடங்களை மீட்டு பூங்காக்கள் மற்றும் பல்வேறு விளையாட்டு திடலாகவும் அமைத்து கொடுக்கப்படும்.

மக்கள் ஆராக்கியம் முக்கியம் ..!

 எல்லோருடைய ஆரோக்கியம் எங்களுக்கு முக்கியம் கடந்த 40 ஆண்டுகாலாக மாநகராட்சிபகுதியில் சாலையை பார்க்காதவர்களுக்கு சாலைவசதியும் கால்வாய் வசதியும் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளன. 


100 ஆண்டுகளுக்கு பின் கொட்டி தீர்த்த கனமழையால் பாதித்த பகுதியில் முதலமைச்சா் உத்தரவிற்கிணங்க சாலைகள் அமைக்கப்பட்டு கால்வாய் வசதியும் செய்யப்பட்டுள்ளன. 


"இனி வரும் காலங்களில் எந்த மழை பெய்தாலும் பொிய அளவில் பாதிப்பு ஏதுவும் இருக்காது."


 தற்போது நடைபெற்று வரும் மாலை நேர மீன்கடைகளை முறைப்படுத்தி இருக்க வேண்டும் என அறிவுரை கூறியுள்ளோம்.


 அதை மீறினால் அதன் பின் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் புதிதாக வாங்கப்படும் மின்விளக்குகள் அனைத்து பகுதிகளுக்கும் பகிர்ந்தளித்து வழங்கப்படும்.

கொடி கம்பம்!!!

 மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள 100 அடி உயர கம்பத்தில் மின்விளக்குள் பொருத்தும் பணி நிறைவு பெற்ற பின் 24 மணிநேரமும் தேசிய கொடி பறக்கும் தற்போது இந்த மாநகராட்சி உள்பட 4 மண்டல அலுவலகங்களிலும் காலை 8 மணிக்கு தேசிய கொடியேற்றப்பட்டு மாலை 6 மணிக்கு வழக்கம் போல் இறக்கப்பட்டு வருகிறது 


எந்த குறைகள் இல்லாமல் மாநகராட்சி பணிகளை பல சிரமங்களோடும் மக்களுக்காக முழுமையாக பணியாற்றி வருகிறோம். என்று பேசினார். 



தூத்துக்குடி மாநகராட்சி பொதுசுகாதாரம் தூய்மை பாரத இயகத்தின் கீழ் திறந்த வௌி மலம் கழித்தல் இல்லாத நகரமாக தரம் உயர்த்துவதில் இம்மாநகராட்சி முணைப்புடன் செயல்பட்டதின் விளைவாக சமீபத்தில் நடத்தப்பட்ட தணிக்கையின் மூலம் இரண்டாம் கட்ட அந்தஸ்தான ஓடிஎப்பிளஸ் சான்று வழங்கி அங்கீகாிக்கப்பட்டுள்ளது. 


மேலும் மாநகராட்சியில் பொதுமற்றும் சமுதாய கழிப்பிடங்களில் பாராமாிப்பு மற்றும் சேவைகளின் தரத்தை உயர்த்த வேண்டியது குப்பையில்லாத நகரங்களின் நட்சத்திர அந்தஸ்திற்கு விண்ணப்பிக்க அடுத்த அடுத்த நிலையான வாட்டா் பிளஸ் அந்தஸ்தினை அடையவேண்டியது அவசியமானதாகவும், உள்ளதாலும் இதன் மூலம் தூய்மை பாரத இயக்கம் மூலம் பெற வேண்டிய பலன்களை முழுமையாக அடையவும் பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தும் இடங்களில் அமைந்துள்ள கழிப்பறைகளின் தரம் உயா்த்தி பொதுமக்களை சுகாதார கேடிலிருந்து பாதுகாத்திடவும் 24 மணிநேரமும் தூய்மையாக சுகாதாரமான முறையில் தொண்டு நிறுவனம் மூலம் இயக்குதல் மற்றும் பராமாிப்பு பணிக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

தூத்துக்குடி பேருந்து நிலையம் கழிப்பறை பாராமரிப்பு மூன்று சமுக சேவை நிறுவனங்களிடம்

இனி ஒப்படைப்பு!!!


.. தொற்று நோய் பரவாமல் பொது மக்களின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தின் அவசியத்தினை கருத்தில் கொண்டு அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள பொது கழிப்பறைகளை இயக்குதல் மற்றும் பராமாிப்பு பணி மேற்கொள்ள 3 

சமூக சேவை நிறுவனங்களிடமிருருந்து விலைப்புள்ளிகள் வரப்பெற்றுள்ளது.


 அதற்கு அனுமதி வேண்டப்படுகிறது. உள்ளிட்ட 20 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

     கூட்டத்தில் உதவி ஆணையர்கள் சுரேஷ்குமாா், கல்யாணசுந்தரம், சொர்ணலதா, நகரஅமைப்பு திட்ட செயற்பொறியாளர் ரெங்கநாதன், துணை பொறியாளர் முனீர் அகமது, நகர் நல அலுவலர் வினோத் ராஜா, சுகாதார ஆய்வாளர்கள் ஸ்டாலின் பாக்கியநாதன், ராஜபாண்டி, மண்டலத்தலைவர்கள்வக்கீல்பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, கலைச்செல்வி, கவுன்சிலர்கள் கண்ணன், சரன்யா, வைதேகி, சரவணக்குமார், அதிஷ்டமணி, சோமசுந்தாி, ாிக்டா, மெட்டில்டா, நாகேஸ்வாி, ஜெயசீலி, ரெங்கசாமி, பேபி ஏஞ்சலின், சுப்புலட்சுமி, காந்திமதி, விஜயலட்சுமி, காங்கிரஸ் கவுன்சிலர்கள் எடின்டா, கற்பககனி, கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் தனலட்சுமி, முத்துமாாி, மதிமுக கவுன்சிலர்கள் ராமும்மாள், இந்தியயூனியன் முஸ்ஸீம் லீக் கவுன்சிலர் மும்தாஜ், அதிமுக கவுன்சிலா்கள் வெற்றிசெல்வன், பத்மாவதி, ஆணையாின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயாின் நோ்முகஉதவியாளர் ரமேஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக