கூட்டுறவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கூட்டுறவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 1 நவம்பர், 2025

தூத்துக்குடியில் தாயுமானவர் திட்டம் – மூத்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு குடியமைப் பொருட்கள் வழங்கல்

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

photo news by Arunan journalist 

தூத்துக்குடி:நவ1

தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறை சார்பில், தாயுமானவர் திட்டத்தின் கீழ் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு குடியமைப் பொருட்கள் வழங்கும் விழா நடைபெற உள்ளது.

thoothukudileaks


தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு துறை அலுவலகத்தின் அறிவிப்பின்படி, நவம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் மாவட்டம் முழுவதும் உள்ள நியாயவிலை கடைகள் வாயிலாக 65 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அடையாள அட்டையுடைய பயனாளிகளுக்கு வீடுகளுக்குச் சென்று குடியமைப் பொருட்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் நோக்கத்தின்படி, சமூக நலனில் பங்காற்றும் வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இந்த இரண்டு நாட்களிலும் (03.11.2025 மற்றும் 04.11.2025) மாவட்டம் முழுவதும் பயனாளிகளுக்கு தேவையான குடியமைப் பொருட்கள் வழங்கும் பணிகள் நடைபெறும் என கூட்டுறவு துறை அறிவித்துள்ளது.

– தூத்துக்குடி லீக்ஸ் 📰

வியாழன், 15 ஆகஸ்ட், 2024

சுதந்திர தின விழா மதுரை கோட்ஸ் தொழிலாளர் கூட்டுறவு பண்டகசாலைமயில் தேசிய கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கல்

 தூத்துக்குடியில் மதுரை கோட்ஸ் கூட்டுறவு பண்டகசாலையில் சுதந்திர தின விழா கொண்டாடினர் .



இது பற்றிய செய்தியாவது:-

இன்று ஆகஸ்ட் 15 இந்தியாவின் 78- வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது 

இதையொட்டி தூத்துக்குடியில் இன்று 

மதுரை கோட்ஸ் தொழிலாளர் கூட்டுறவு பண்டகசாலை மற்றும் தூத்துக்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் தேசிய கொடி ஏற்றி சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது.


 தூத்துக்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் முதல்வர் (பொறுப்பு )  என்.எஸ்.மணி,  தேசியக் கொடி ஏற்றினார். 

இந்நிகழ்ச்சியில்...

 முத்துசாமி, துணைப்பதிவாளர் (ஓய்வு), பாலசுப்பிரமணியன் துணைப்பதிவாளர் (ஓய்வு), மதுரை கோட்ஸ் பண்டகசாலை மேலாளர் ஜாண் சுந்தர்சிங்,

தொகுப்பாளர்.சி.எஸ்.மணி, பண்டகசாலை அலுவலர்கள்,  பணியாளர்கள், மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.