தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி
photo news by Arunan journalist
தூத்துக்குடி:நவ1
தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறை சார்பில், தாயுமானவர் திட்டத்தின் கீழ் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு குடியமைப் பொருட்கள் வழங்கும் விழா நடைபெற உள்ளது.
தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு துறை அலுவலகத்தின் அறிவிப்பின்படி, நவம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் மாவட்டம் முழுவதும் உள்ள நியாயவிலை கடைகள் வாயிலாக 65 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அடையாள அட்டையுடைய பயனாளிகளுக்கு வீடுகளுக்குச் சென்று குடியமைப் பொருட்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் நோக்கத்தின்படி, சமூக நலனில் பங்காற்றும் வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இந்த இரண்டு நாட்களிலும் (03.11.2025 மற்றும் 04.11.2025) மாவட்டம் முழுவதும் பயனாளிகளுக்கு தேவையான குடியமைப் பொருட்கள் வழங்கும் பணிகள் நடைபெறும் என கூட்டுறவு துறை அறிவித்துள்ளது.
– தூத்துக்குடி லீக்ஸ் 📰

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக