தூத்துக்குடி பியர்ல் சிட்டி பத்திரிகையாளர்கள் சங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தூத்துக்குடி பியர்ல் சிட்டி பத்திரிகையாளர்கள் சங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 20 டிசம்பர், 2025

தூத்துக்குடியில் சாலை ஓரமாக உறங்கும் ஆதரவற்றோருக்கு போர்வை வழங்கல் மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

தூத்துக்குடி டிச20

தூத்துக்குடி பியர்ல்சிட்டி பத்திரிகையாளர் சங்கம் மற்றும் ஆல் கேன் டிரஸ்ட் சார்பில், இரவு நேரத்தில் சாலை ஓரங்களில் உறங்கும் ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் வீடு இல்லாத மக்களுக்கு போர்வை வழங்கும் மனிதநேய சேவை நிகழ்ச்சி தூத்துக்குடி மாநகர பகுதியில் நடைபெற்றது.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


இந்நிகழ்ச்சியை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்து, போர்வைகளை வழங்கினார். அவருடன் பியர்ல்சிட்டி பத்திரிகையாளர் சங்க செயலாளர் காட்சன், ஆல் கேன் டிரஸ்ட் நிறுவனரும் தூத்துக்குடி மாவட்ட அரசு வழக்கறிஞருமான மோகன் தாஸ் சாமுவேல் ஆகியோர் கலந்து கொண்டு ஆதரவற்றோருக்கு போர்வைகளை வழங்கினர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பணிச்சுமை அதிகம் இருப்பதாலும், வீடு இல்லாத முதியவர்கள் பலர் சாலை ஓரங்களில் உறங்க வேண்டிய சூழ்நிலை நிலவுவதாலும், தற்போது நிலவும் அதிகமான பனிப்பொழிவு காரணமாக அவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். 


இதனை கருத்தில் கொண்டு, மனிதநேய அடிப்படையில் இந்த போர்வை வழங்கும் சேவை முன்னெடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், வேம்படி இசக்கி அம்மன் கோவில், பனிமய மாதா கோவில், சிவன் கோவில் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் சாலை ஓரமாக உறங்கும் ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் வீடு இல்லாமல் தங்கிய மக்களுக்கு போர்வைகள் வழங்கப்பட்டன.

.

மனிதநேயத்தை வெளிப்படுத்தும் இச்சேவையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

வெள்ளி, 28 பிப்ரவரி, 2025

தூத்துக்குடி பியர்ஸ் சிட்டி பிரஸ் கிளப் பொதுக்குழுக் கூட்டம்

 

தூத்துக்குடி பியர்ல் சிட்டி பிரஸ் கிளப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது

தூத்துக்குடி: தூத்துக்குடி பியர்ஸ் சிட்டி பிரஸ் கிளப்பின் பொதுக்குழுக் கூட்டம் இன்று (01.03.2025) எஸ்.டி.ஆர். ஹாலில் (விவிடி சிக்னல் அருகே) நடைபெற்றது.



மதியம் 11 மணி முதல் 1 மணி வரை நடைபெற்ற கூட்டத்திற்கு சங்கத் தலைவர் ராஜா சிதம்பரம் தலைமை வகித்தார்.




கூட்டத்தில்..பொதுக்குழுவில் பத்திரிக்கையாளர்களின் கோரிக்கையான மானிய விலை வீட்டு மனை பட்டா குறித்து பேசப்பட்டது.

மேலும் போலி நிருபர்கள் நமது சங்கத்தில் இல்லை

போலிகளை நமது சங்கம் சேர்க்காது 

என உறுதியாக தெரிவித்தனர்.



. கூட்டத்திற்குப் பிறகு மதிய உணவுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.



புதன், 1 ஜனவரி, 2025

தூத்துக்குடி முத்துநகர் பத்திரிக்கையாளர் சங்கம் 2025- ஆம் புத்தாண்டு காலண்டர் வழங்கல்

Tamil Nadu updates,

Photo news by Arunan journalist 

தூத்துக்குடி முத்துநகர் பத்திரிக்கையாளர் சங்கம் 2025- ஆம் புத்தாண்டு காலண்டர் வழங்கல் 

இது பற்றிய செய்தியாவது:- 

தூத்துக்குடி, ஜன. 2-


தூத்துக்குடி முத்துநகர் பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் 2025-ம் ஆண்டுக்கான காலண்டர் மற்றும் டைரிகள் அரசியல் கட்சித் தலைவர்கள், வியாபார பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.



அந்த வகையில், 

இன்று 2-1 - 2025  தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகிலுள்ள தூத்துக்குடியில் முதல் உயர்தர நட்சத்திர விடுதி கனி ரெசிடென்சியில்  இயங்கிவரும் கனி மெடிக்கல் உரிமையாளர் ஆர். பொன்வேந்தன் அவரிடம் தூத்துக்குடி பியர்ல் சிட்டி பிரஸ் கிளப் செய்தியாளர்கள் சந்தித்தனர்.


 இச்சந்திப்பின்போது, சங்கத்தின் மூத்த பத்திரிக்கையாளர் சத்யா லட்சுமணன் தலைமையில் 2025-ம் ஆண்டுக்கான சங்க காலண்டர் வழங்கப்பட்டது.


தொடர்ந்து, தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் முன்புறம் அமைந்துள்ள ஹோட்டல் & ஸ்ரீ அரசன் இண்டர்நெட் & ஜொராக்ஸ் உரிமையாளர் மாரியப்பன் அவரிடமும், தூத்துக்குடி பியர்ல் சிட்டி பிரஸ் கிளப் 2025 காலண்டர் வழங்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் மூத்த பத்திரிக்கையாளர்களான சத்யா இலட்சுமணன், ரோஜா அருணன், ரவிக்குமார், சேரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

வியாழன், 4 ஜூலை, 2024

நிருபருக்கு கொலை மிரட்டல்தூத்துக்குடி பியர்ல்சிட்டி பத்திரிக்கையாளர் சங்கம் கண்டன அறிக்கை!!!

▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

4-6-2024 photo news 

by Arunan journalist 

நியூஸ் 18 நிருபருக்கு கொலை மிரட்டல் விடுத்த  அரசியல்வாதி& அதிகாரி களுக்கு தூத்துக்குடி பியர்ல்சிட்டி பத்திரிக்கையாளர் சங்கம் கண்டன அறிக்கை விடுத்துள்ளார் கள்!!! 




இதுபற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி பியர்ல்சிட்டி பத்திரிக்கையாளர் சங்கம்கண்டன அறிக்கை:-

தூத்துக்குடி மாவட்டம் 

கோவில்பட்டி நியூஸ்18  செய்தியாளர் மகேஸ்வரனுக்கு கொலை மிரட்டல் விடுத்த டீக்கடை உரிமையாளர்கள் மற்றும் துணை போன அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பியர்ல்சிட்டி பத்திரிக்கையாளர் சங்கம் வலியுறுத்துகிறது.


கடந்த புதன்கிழமை ஜுலை 3, அன்று 

அதிகாரிகள் முன்னிலையில் கோவில்பட்டி இளையரசனேந்தல்  சாலையில் உள்ள ரயில்வே பாலம் அருகில் சர்வீஸ் சாலை கட்டமைப்பிற்காக ஆக்கிரமிப்புகளை அகற்ற அளவீடு செய்த போது ஏ1 டீக்கடை உரிமையாளர் கணேசன் மற்றும் அவரது சகோதரர் சரவணன் ஆகியோர் செய்தியாளர் மகேஸ்வரனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்கள்.


 மேலும் கோவில்பட்டி நகராட்சி TPI கட்டுமான பிரிவு ஆய்வாளர் கிருஷ்ண குமார் காவல் சார்பு ஆய்வாளர் வேல்பாண்டியன் முன்னிலையில் பத்திரிகையாளர்களை பார்த்து...


 "யார் ரோட்டை ஆக்கிரமிப்பு செய்தால் பத்திரிக்கைகாரனுக்கு என்ன இவர்களை எல்லாம் ரோட்டில் நடமாட விடுவதே தப்பு என்று" தரை குறைவாக பேசியுள்ளார். சார்பு ஆய்வாளர் அவர்களும் தடுக்காமல் இதனை வேடிக்கை பார்த்துள்ளார்.???


இவ்வாறான.... பத்திரிகையாளர் விரோத போக்கை பியர்ல் சிட்டி பத்திரிக்கையாளர் சங்கம் கண்டிக்கிறது
.


 பத்திரிகையாளருக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்து தரக்குறைவாக பேசியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, பத்திரிக்கையாளர்கள் சுதந்திரமாக செய்திகள் சேகரிக்க பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறோம்

இவண்

பியர்ல்சிட்டி பத்திரிக்கையாளர் சங்கம்.

next...

வன்மையாக கண்டிக்கிறோம்!!!

கோவில்பட்டியில் தொடர்ச்சியாக பொது மக்களின் கோரிக்கைகளை அரசுக்கு வெளிப்படுத்தியும், சட்ட விரோத செயல்களை உரிய ஆதாரத்துடன் வெளிச்சம் போட்டுக் காட்டி வருகின்றனர் .


இதனால் நியூஸ் 18 கோவில்பட்டி பகுதி செய்தியாளர் மகேஸ்வரன் -ஜ

கோவில்பட்டி நகராட்சி நகரமைப்பு கட்டமைப்பு ஆய்வாளர்

கிருஷ்ணகுமார் என்பவரின் தூண்டுதலின் பேரில்.. திமுக நிர்வாகி கணேசன் சரவணன் மற்றும் அடையாளம் காட்டக்கூடிய 10 நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.


 இதுகுறித்து சம்பவ இடத்தில் காவல்துறையிடம் முறையிட்டது மட்டுமின்றி முறையாக புகார் அளிக்கப்பட்டது.

திமுக நிர்வாகிக்கு ஆதரவாக புகார் வாபஸ் பெறசொல்லி காவல்துறை அதிகாரிகள் !

 சம்பந்தப்பட்ட நபர்கள் காணவில்லை என்று காவல்துறை முதலில் கூறியது ..?

அவர்கள் வெளிப்படையாக சுற்றியதை புகைப்படத்துடன் செய்தியாளர்கள் காவல்துறைக்கு தெரிவித்தோம்.!!!


 அப்போதும் நடவடிக்கை எடுக்கவில்லை.?

 இப்போது வாபஸ் பெறவில்லை என்றால் கவுண்டர் பெட்டிஷன் போட்டு வழக்கு போடுவோம் என்று காவல்துறை வெளிப்படையாக மிரட்டி வருகிறது !!!

இதை வன்மையாக கண்டிக்கிறோம் 

இப்படிக்கு... 

பத்திரிக்கையாளர்கள் கோவில்பட்டி

next...

சென்னை பிரஸ் கிளப் கடும் கண்டனம்!!!

நியூஸ் 18  தொலைக்காட்சி செய்தியாளர் மகேஸ்வரனுக்கு கொலை மிரட்டல் - சென்னை பிரஸ் கிளப் கண்டனம் - கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார் கள்.




வெள்ளி, 30 டிசம்பர், 2022

தூத்துக்குடியில் பியர்ல் சிட்டி பத்திரிக்கையாளர் சங்கம் 2023 புது வருட காலண்டர் 2023 புது வருட டைரி ஸ்பெஷல் ஸ்வீட்' பாக்ஸ் இன்று வழங்கினார்கள்

 thoothukudileaks 30-12-2022

newsby :-Arunan

தூத்துக்குடியில் இன்று 30 - 12-2022 காலை 10 மணியளவில்  பியர்ல் சிட்டி பத்திரிக்கையாளர் சங்கம்   2023 புது வருட காலண்டர் 2023 புது வருட டைரி ஸ்பெஷல் ஸ்வீட்' பாக்ஸ் வழங்கினார்கள்



இது பற்றிய செய்தியாவது -


கடந்த இரு வருடங் களுக்கு (2020) முன்பு முன்னனி நாளிதழ் தொலைகாட்சி செய்தியாளர் போட்டோகிராபர் ஆகியோர் ஒன்றாக  இணைந்து தூத்துக்குடியில் பியர்ல் சிட்டி பத்திரிக்கையாளர் சங்கம் உருவாகியது.


அந்த வருடமே ... காலண்டர் டைரி அனைவருக்கும் வழங்கி அசத்தினார்கள்


ஒவ்வொரு வருடமும் குளிர் காலத்தில் சாலையோரம் தூங்கும் முதியோர் மன நிலை பாதிக்கப்பட்டோர் களுக்கு போர்வை வழங்குதல். மற்றும் பொதுமக்கள் நலத்திட்ட பணிகள் பியர்ல் சிட்டி சங்க பத்திரிக்கையாளர்கள் செய்து வருகிறார்கள்.


இந்த வருடம் 2022 டிசம்பர் 23 - தேதி அன்றிரவு வீடு அற்ற ஏழைகள் முதியோர் களுக்கு ஆல் கேன் டிரஸ்ட் மற்றும் பியர்ல் சிட்டி பத்திரிக்கையாளர் இனைந்து கம்ளி ேபார்வை வழங்க ..தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி சைக்கிள் மிதிவண்டியில் வந்து கலந்து கொண்டு வழங்கி பாராட்டு தெரிவித்தார் என்பது குறிப்பிட தக்கது.


சைக்கிள் வீடியோ 

தூத்துக்குடியில் இன்று 30 - 12-2022 காலை 10 மணியளவில்  பியர்ல் சிட்டி பத்திரிக்கையாளர் சங்கம்   2023 புது வருட காலண்டர் 2023 புது வருட டைரி ஸ்பெஷல் ஸ்வீட்' பாக்ஸ் 

 சங்க செயலாளர் காட்சன் தலைவர் ராஜா கெளரவ ஆலோசகர் தினகரன் சீனிவாசகன் ஆகியோர் வழங்கிட அனைவரும் பெற்று சென்றார்கள்..

புதன், 21 டிசம்பர், 2022

தூத்துக்குடி பியர்ல் சிட்டி பத்திரிகையாளர்கள் மன்ற பத்திரிகையாளர்களின் சமூக நலப் பணி தூத்துக்குடியில் 250 நபர்களுக்கு இந்த போர்வைகளை வழங்கல் பத்திரிக்கையாளர்களுடன் அதிகாலையில் சைக்கிளில் வந்த தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி .

thoothukudileaks 22--22--22

news by Arunan 

தூத்துக்குடி பியர்ல் சிட்டி பத்திரிகையாளர்கள்  மன்ற பத்திரிகையாளர்கள் நடத்திய சமூக நலப் பணி தூத்துக்குடியில்  250 நபர்களுக்கு இந்த போர்வைகளை வழங்கினார்கள். 

அப்போது தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அதிகாலை வேளை யில்  சைக்கிளில் பியர்ல் சிட்டி சங்க பத்திரிகையா ளர்களுடன் இனைந்து  ஏழை முதியோர் களுக்குபோர்வை போர்த்தினார். 




இதுபற்றிய செய்தியாவது:-

 தூத்துக்குடி பியர்ல்சிட்டி பத்திரிகையாளர் சங்கம் மற்றும் ஆல் கேன் டிரஸ்ட் இணைந்து ஆதரவற்ற, வீடு அற்ற  தெருவோரங்களில் தங்கும் மக்களுக்கு போர்வை வழங்கும் நிகழ்ச்சி 



நேற்று 21-12-2022 இரவு 10 மணி அளவில்  வேம்படி இசக்கி அம்மன் கோயில் அருகில் இருந்து தொடங்கினர். பியர்ஸ் சிட்டி சங்க தலைவர் அண்ணன் ராஜா சிதம்பரம் (தினகரன் புகைப்படக் கலைஞர்)  மற்றும் ஆல் கேன் ட்ரஸ்ட் நிறுவனர் மற்றும் அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல்  மற்றும் பியர்ல சிட்டி சங்க செயலாளர் காட்வின் மன்ற ஆலோசகர் சத்தியம் டிவி சாலமோன் ராஜா செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் மணிவண்ணன் மற்றும் தூத்துக்குடி வடபாகம் காவல் ஆய்வாளர் ஜோஸ் ரவி ஆகியோர் வழங்க தொடங்கி னர்

. இன்று அதிகாலை வேளையில்  சைக்கிள்களில் இவர் களுடன் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் வந்து போர்வைகளை ஏழை எளிய மக்களுக்கு வழங்கினார்கள். 

வீீடியோபாார்க்க  

தூத்துக்குடி பியர்ல் சிட்டி பத்திரிகையாளர்கள் மற்றும் ஆல் கேன் டிரஸ்ட் எனும் மரங்கள் நடும் சமூக சேவையாளர்கள் 


கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு கிறிஸ்மஸ் தாத்தா உடன் சென்று புதிய பழைய பேருந்து நிலையம், அண்ணா நகர் சாலை தூத்துக்குடி பாளை ரோடு கடற்கரை சாலை தூத்துக்குடி அரசு மருத்துவமனை மற்றும் முக்கிய சாலைகளில் வீடற்று தன்னந்தனியே குளிரிலும் மழையிலும் கடைகள் ஓரத்தில்  கொசுக்கடியிலும், கடும் குளிரிலும் படுத்து உறங்கி தங்களது வாழ்நாட்களை கழித்து வரும் எழை எளியவர்களை கருத்தில் கொண்டு அவர்களுக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்து கூறி அனைவருக்கு கடும் குளிரை தாங்கும் போர்வைகள் வழங்கப்பட்டது

அதிகாலையில் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி 

 22-22-22 அதிகாலை அப்போது அந்த வழியாக உடற்பயிற்சிக்காக சைக்கிள் ஓட்டி வந்த தூத்துக்குடி  மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியும் நிகழ்வில் கலந்துகொண்டு உற்சாகமாக ஏழை எளியவர்களுக்குபோர்வைகளை வழங்கினார் .


தூத்துக்குடியில்  சமூக நலப் பணியாக இந்த ஏழை எளியவர்களுக்கு போர்வை வழங்கும் நிகழ்ச்சியை பேர்ல் சிட்டி பத்திரிகையாளர்கள்  மன்ற பத்திரிகையாளர்கள் நடத்தியது தூத்துக்குடி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.