புதன், 1 ஜனவரி, 2025

தூத்துக்குடி முத்துநகர் பத்திரிக்கையாளர் சங்கம் 2025- ஆம் புத்தாண்டு காலண்டர் வழங்கல்

Tamil Nadu updates,

Photo news by Arunan journalist 

தூத்துக்குடி முத்துநகர் பத்திரிக்கையாளர் சங்கம் 2025- ஆம் புத்தாண்டு காலண்டர் வழங்கல் 

இது பற்றிய செய்தியாவது:- 

தூத்துக்குடி, ஜன. 2-


தூத்துக்குடி முத்துநகர் பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் 2025-ம் ஆண்டுக்கான காலண்டர் மற்றும் டைரிகள் அரசியல் கட்சித் தலைவர்கள், வியாபார பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.



அந்த வகையில், 

இன்று 2-1 - 2025  தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகிலுள்ள தூத்துக்குடியில் முதல் உயர்தர நட்சத்திர விடுதி கனி ரெசிடென்சியில்  இயங்கிவரும் கனி மெடிக்கல் உரிமையாளர் ஆர். பொன்வேந்தன் அவரிடம் தூத்துக்குடி பியர்ல் சிட்டி பிரஸ் கிளப் செய்தியாளர்கள் சந்தித்தனர்.


 இச்சந்திப்பின்போது, சங்கத்தின் மூத்த பத்திரிக்கையாளர் சத்யா லட்சுமணன் தலைமையில் 2025-ம் ஆண்டுக்கான சங்க காலண்டர் வழங்கப்பட்டது.


தொடர்ந்து, தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் முன்புறம் அமைந்துள்ள ஹோட்டல் & ஸ்ரீ அரசன் இண்டர்நெட் & ஜொராக்ஸ் உரிமையாளர் மாரியப்பன் அவரிடமும், தூத்துக்குடி பியர்ல் சிட்டி பிரஸ் கிளப் 2025 காலண்டர் வழங்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் மூத்த பத்திரிக்கையாளர்களான சத்யா இலட்சுமணன், ரோஜா அருணன், ரவிக்குமார், சேரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக