தூத்துக்குடி, ஜன. 3:
தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் அமைச்சர் கீதாஜீவனுக்கும் மேயர் ஜெகனுக்கும் புத்தாண்டு வாழ்த்து
2025ம் ஆண்டின் புத்தாண்டை முன்னிட்டு, தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் அமைச்சர் கீதாஜீவனுக்கும் மேயர் ஜெகன் பொியசாமிக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சருமான கீதாஜீவனை, போல்பேட்டையில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்த பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் ராஜு, துணைத் தலைவர் சிதம்பரம் உள்ளிட்டோர், புத்தாண்டு வாழ்த்துகளுடன் டைரி மற்றும் காலண்டரை வழங்கினர்.
அதேபோல், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமியையும், போல்பேட்டை முகாம் அலுவலகத்தில் சந்தித்து, பிரஸ் கிளப் சார்பில் டைரி மற்றும் காலண்டரை வழங்கினர்.
இதில் செயற்குழு உறுப்பினர்கள் டேவிட்ராஜா, முத்துராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வுகளில் பல முக்கிய பிரஸ் கிளப் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக