செம்மரக் கடத்தலில் RMV International Traders மீது புகார்: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
சென்னை:2025 ஜனவரி 3
ஆவடி பூம்பொழில் நகரை மையமாக கொண்டு செயல்படும் RMV International Traders நிறுவனம், இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து செம்மரங்களை (செஞ்சந்தனம்) சட்டவிரோதமாக சேகரித்து அரேபிய நாடுகள், சீனா, நேபாளம், ஜப்பான் போன்ற வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வருகிறது என்ற புகார் எழுந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள விவசாய நிலங்களில் வளர்க்கப்பட்ட 190 செம்மரங்களில், கடந்த மாதம் சுமார் 20 மரங்கள் அனுமதியின்றி வெட்டப்பட்டுள்ளன.
விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இதற்கான கள ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை எனக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலப்பகுதிகள் தனியார் நிறுவனமான Amazo Solar-க்கு விற்பனை செய்யப்பட்ட பின்னரும், மரவெட்டுத் திட்டங்களுக்கு எந்த விதமான அனுமதிகளும் பெறப்படவில்லை. இதனால், சுமார் ₹3 கோடி மதிப்பிலான செம்மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் ரேவதி ராமன், விவகாரத்தை மையமாகக் கொண்டு, தடை உத்தரவை (ந.க.எண்: கு/7074/2024) பிறப்பித்துள்ளார்.
சுங்கத்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் உடனடியாக நடத்திய ஆய்வுகள் மூலம், RMV International Traders நிறுவனத்தின் சட்டவிரோத நடவடிக்கைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தொடர்ந்து அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்காக காத்திருக்கின்றனர்.
இவ்வகையான சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து, அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களை பாதுகாக்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலர்
அக்ரி பரமசிவன்,
தூத்துக்குடி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக