நீதிமன்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீதிமன்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 18 ஜூன், 2026

ஜூலை 1 முதல் திருக்கோயில்களில் கைபேசி பயன்பாட்டிற்கு தடை திருச்செந்தூரில்..?

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

அருணன் செய்தியாளர் 


திருச்செந்தூர், ஜூன் 18:

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் கைபேசி பயன்படுத்துவதற்கு வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது பற்றிய செய்தியாவது ;-

மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய உத்தரவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தற்போது!!!

ஏற்கனவே கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் திருக்கோயில்களில் கைபேசி பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவை முழுமையாக அமல்படுத்தப்பட உள்ளன.

thoothukudileaks


சேவைகள்!!!

பக்தர்களின் அவசர பயன்பாட்டிற்காக கோயில் வளாகத்தில் பொதுஅறிவிப்பு (Public Addressing System) வசதி, ஒலிபெருக்கிகள், மின்கல ஊர்திகள் மற்றும் சக்கர நாற்காலி உள்ளிட்ட சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மொபைல் டெபாசிட் கவுண்டர்!!!

மேலும், கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது கைபேசிகளை பாதுகாப்பாக ஒப்படைத்து வைக்க கோயில் வளாகத்தில் சிறப்பு மொபைல் டெபாசிட் கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

மொபைல் வைக்க கட்டணம் ரசீது !!!

கைபேசி ஒப்படைப்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பக்தர்கள் தங்களது கைபேசிகளை பாதுகாப்பாக ஒப்படைத்து, சுவாமி தரிசனத்தை அமைதியான முறையில் மேற்கொள்ளுமாறு கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. 

புதிய நடைமுறை ஜூலை 1, 2026 முதல் முழுமையாக அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

thoothukudileaks
தூத்துக்குடி லீக்ஸ் க்காக

செய்தியாளர் அருணன் 

செவ்வாய், 11 நவம்பர், 2025

SIR திமுக வழக்கு தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி தூத்துக்குடி, நவம்பர் 11

 SIR திட்டத்திற்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கு: பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு


புதுடெல்லி:

 வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. அதன்படி தமிழ்நாட்டில் கடந்த 4-ம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.



இந்நிலையில், சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்திற்கு தடை விதிக்கக் கோரி திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யപட்டது.


 திமுக தரப்பு வாதம்!!!


இந்த வழக்கு இன்று நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. திமுக தரப்பில் வாதிடும்போது, "தமிழ்நாட்டில் தற்போது வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடங்கிவிட்டது. ஒரு மாதத்தில் முடிக்க உள்ளனர். இது பருவமழை காலம் என்பதால் SIR நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது. குறிப்பாக மாநில அதிகாரிகள் பருவமழை, வெள்ளம் உள்ளிட்ட பணிகளுக்காக ஈடுபடுத்தப்படுவார்கள். இவ்வாறான சூழ்நிலையில் மக்கள் முழுவதுமாக SIR நடவடிக்கையில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்படும்" என தெரிவிக்கப்பட்டது.


மேலும், "SIR நடத்துவதற்கு இது உகந்த காலம் அல்ல. லட்சக்கணக்கான படிவங்கள் பதிவேற்றம் செய்ய வேண்டியுள்ளது. ஆனால் அதற்குப் போதிய அவகாசம் இல்லை. தேர்தல் ஆணையம் போதிய அவகாசம் தராமல் அவசர அவசரமாக மேற்கொள்வது மக்களை பெருமளவுக்கு பாதிக்கும். தமிழ்நாட்டில் பல இடங்களில் இணையதள சேவை இல்லை. மலைக் கிராமங்களில் இணைய சேவை பிரச்சனை உள்ளது" என வாதிடப்பட்டது.


 நீதிமன்ற உத்தரவுகள்


இதையடுத்து தேர்தல் ஆணையம் தரப்பில், உயர்நீதிமன்றங்களில் SIR தொடர்பான மனுக்களை விசாரிக்கக் கூடாது என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதிமுக தரப்பில் இந்த வழக்கில் அதிமுகவையும் இணைத்துக் கொள்ளக் கோரி இடையிட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.


இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று, உயர்நீதிமன்றங்களில் SIR குறித்து விசாரணை நடத்தக் கூடாது எனவும், ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.


மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு தடை கோரப்பட்டது தொடர்பாக இரண்டு வாரத்தில் பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அளித்து உத்தரவு பிறப்பித்தனர். "குறைபாடுகளை தேர்தல் ஆணையம் சரி செய்யும் என நினைக்கிறோம்" என நீதிபதிகள் தெரிவித்தனர்.


இதையடுத்து, SIR-க்கு ஆதரவாக அதிமுக தாக்கல் செய்த இடையிட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், அம்மனுவை திரும்பப் பெற்று ரீட் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை நவம்பர் 26-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.


முக்கிய அம்சங்கள்:

- தேர்தல் ஆணையம் இரண்டு வாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும்

- உயர்நீதிமன்றங்களில் SIR தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்பட்டன

- அடுத்த விசாரணை நவம்பர் 26-ல் நடைபெறும்

செவ்வாய், 19 நவம்பர், 2024

இந்து கோவிலை திறக்க தூத்துக்குடி நீதி மன்றம் உத்தரவு

அரசு தரப்பு கருத்தினை ஏற்று 7 ½ ஆண்டுகளாக பூட்டப்பட்டிருந்த கோவிலை பொதுமக்கள் வழிபாட்டிற்கு திறந்திட தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு



      தூத்துக்குடி தாலுகா அல்லிகுளம் கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.


 இருதரப்பிற்கிடையே ஏற்பட்ட பிரச்சனையால் கோவில் வழிபடமுடியாமல் கடந்த 7 ½ ஆண்டுகளாக பூட்டப்பட்டிருந்து. 


இது தொடர்பான வழக்கு தூத்துக்குடி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

அரசுதரப்பில் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும் விதமாக கோவிலில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி வழிபாடு செய்ய அனுமதிக்கலாம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.


 அரசு தரப்பு கருத்தினை ஏற்ற நீதிமன்றம் 7 ½ ஆண்டுகளாக வழிபாடு பூஜை இல்லாமல் இருந்த கோவிலை திறக்கவும் பூஜை மற்றும் வழிபாடு மேற்கொள்ளவும் உரிமையியல் நீதிபதி சுமிதா உத்தரவிட்டார். 


இதற்கு அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் சுபேந்திரன் ஆஜரானார்.

திங்கள், 30 செப்டம்பர், 2024

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்களுக்கு இ-பாஸ் தமிழக அரசு நடைமுறை கொண்டு வர வேண்டும் தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத் அறிக்கை விடுத்துள்ளார்

▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

1-10- 2024 

photo news 

Arunan journalist 

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்களுக்கு இ-பாஸ் நடைமுறையை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.



ஆன்லைன்!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகளுக்காக வரக்கூடிய பொதுமக்களுக்கு 

ஆன்லைன் இ-பாஸ் முறையை 

வழங்குவதற்கான நடைமுறையை

உருவாக்க மாநில சட்ட அமைச்சர் ஆவன செய்ய வேண்டும்.


சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகளுக்காக வரக்கூடிய பொதுமக்கள் 

தற்போது உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள நுழைவுச்சீட்டு 

வழங்கும் அலுவலகத்தில் 

வழக்கு விசாரணைக்கு  வரக்கூடிய பொதுமக்கள் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து உயர்நீதிமன்ற வளாகம் மற்றும் 

உரிமையியல் நீதிமன்றங்கள் மற்றும் குடும்ப நல நீதிமன்றங்களில்

நடைபெறும்  வழக்கு விசாரணையில் பங்கு கொள்கின்றனர்.


நுழைவு சீட்டுகள்??

சிறிது காலத்திற்கு முன்பு உயர்நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்ட  நுழைவு சீட்டு வழங்கும் அலுவலகம் தற்போது மாற்றப்பட்டு அருகில் ஒரு சிறிய அலுவலகத்தில் 

தற்போது நுழைவு சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. 



நுழைவு சீட்டுகள் இன்றி சிரமம்!!!

உயர்நீதிமன்ற உலகத்தில் உள்ள உயர் நீதிமன்றம் மற்றும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகளுக்காக சென்னை மற்றும் வெளி மாவட்டங்கள் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பொது மக்கள் 

உரிய நேரத்தில் 

நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு செல்லும் நுழைவு சீட்டு பெற முடியாமல் மிகுந்த சிரமப்படுகின்றனர். 




குறிப்பாக ...

உடல் ஊனமுற்றோர், மாற்றுத்திறனாளிகள், கை குழந்தைகளோடு வரக்கூடிய பெண்கள், முதியவர்கள் 

நுழைவு சீட்டு பெறுவதில் தற்போது உள்ள நடைமுறை சரியான முறையில் திட்டமிடப் படாததாலும்,

நுழைவு சீட்டு வழங்கக்கூடிய 

ஊழியர்கள் குறைவாக உள்ளதாலும்

நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு, 

உரிய நேரத்தில் தங்கள் வழக்குகளின் விசாரணையில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையை சந்தித்து வருகின்றனர்.


🌊 அலைக்கழிப்பு!!


மேலும் உயர் நீதிமன்ற வளாகத்திற்கு ஒரு அலுவலகமும், 

உரிமையில் நீதிமன்றங்கள் குடும்பநல நீதிமன்றங்கள் சிவில் நீதிமன்றங்களில் 

வழக்கு விசாரணைக்காக வருபவர்களுக்கு 

வேறு இடங்களிலும் 

நுழைவுச்சீட்டு சீட்டு வழங்கப்படுவதால் இது குறித்து உயர்நீதிமன்ற வளாகத்தில் சரியான முறையில் அறிவிப்பு பலகை அமைக்கப்படாததாலும் மக்கள் தங்கள் அறியாமையால் வெவ்வேறு இடங்களில் நீண்ட நேரம் நின்று, மறுபடியும் மற்றொரு இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு மீண்டும் மீண்டும் வரிசையில் நின்று

நீண்ட நேரம் காத்திருக்கும் வகையில் அலைக்கழிக்கப்

படுகின்றனர்.


குறிப்பாக தங்களுடைய நியாயத்திற்காகவும், தங்களுடைய உரிமைகளுக்காகவும் போராடும் கிராமப்புற ஏழை நடுத்தர குடும்ப மக்கள், கல்வி அறிவு இல்லாத அப்பாவி மக்கள் 

மிகவும் கஷ்டங்களையும் வேதனைகளையும் சந்தித்து வருகின்றனர். 


சென்னை உயர்நீதிமன்றம்!!!

தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க

தீர்ப்புகளை வழங்கி அனைத்து மக்களின் வாழ்க்கையிலும், 

உரிமையிலும் 

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து துணிவுடன்  தங்கள் உரிமையை நிலைநாட்டிக் உண்ணும் வகையில், சாமானிய மக்களின் உயிர் நாடியாக, ஒளிவிளக்காக மாட்சிமை பொருந்திய

சென்னை உயர்நீதிமன்றம் 

அரும் பங்காற்றி வருகிறது.


தமிழக சட்டத்துறை அமைச்சர்!!!

சென்னை உயர் நீதிமன்றத்தின் பெருமைக்கு பெருமை சேர்க்கும் வகையில் உயர்நீதிமன்ற வளாகத்துக்கு

பெரும் நம்பிக்கையுடன் வரும் மக்களின் துயர் துடைக்க 

வேண்டிய கடமை தமிழக அரசின் சட்டத்துறை அமைச்சருக்கு உள்ளது. 


எனவே தற்போது

உயர் நீதிமன்ற வளாகத்தில் வழங்கப்படக்கூடிய அனுமதி சீட்டு நடைமுறையை மாற்றி வழக்கு எண், ஆதார் கார்டு  உள்ளிட்ட அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற அடையாள அட்டைகளை இணைத்து ஆன்லைன் மூலம் 

நுழைவுச்சீட்டு

வழங்குவதற்கு உரிய நிதியை ஒதுக்கி, இ-பாஸ் முறையை கொண்டு வந்தால் மக்கள் வரிசையில் நின்று துன்பப்படாமல், குறித்த நேரத்தில் உயர்நீதிமன்றத்தில் தங்கள் வழக்குகளில் விசாரணைக்கு கலந்து கொள்வதற்கு வாய்ப்பாக இருக்கும். 


ஃபார் கோட் 


மேலும் தற்போது 

இந்தியா முழுவதுமே "பார் கோட் ஸ்கேனிங் சிஸ்டம்" அனைத்து அலுவலகங்களின் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 


தமிழக உயர்நீதிமன்ற வளாகத்திலும் மாநில சட்ட அமைச்சர்  திட்டமிட்டு, ஒரு சாஃப்ட்வேர் உருவாக்கி, வழக்கு தொடுத்துள்ள பொதுமக்களின் அடையாள அட்டையுடன், பார் கோட் சிஸ்டத்தையும் இணைத்து எளிய முறையில் மக்களுக்கு நீதிமன்றங்களில் தங்கள் வழக்குகளில் நீதிமன்றத்தில் குறிப்பிட்ட தேதிகளில்,

குறிப்பிட்ட நேரத்தில் கலந்து கொள்ள ஏதுவாக எளிய முறையில் நுழைவுச்சீட்டு 

வழங்கும் திட்டத்தை உடனடியாக உருவாக்க வேண்டும். 


மேலும் குடும்ப நல நீதிமன்றங்கள், உரிமையியல் நீதிமன்றங்கள், சிவில் நீதிமன்றங்களில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் வழக்குகளின் விசாரணைக்காக வரக்கூடிய பொதுமக்களுக்கு, அந்தந்த நீதிமன்றங்கள் வாயிலாக ஆறு மாதத்திற்கு அல்லது ஒரு வருடத்திற்கு தற்காலிக நுழைவு சீட்டு பாஸ்  வழங்குவது குறித்தும் ஆய்வு செய்து நடைமுறைப்படுத்தினால் இன்னும் எளிதாக இருக்கும். 


முக்கியமாக, கல்வி அறிவு பெறாத நீதிமன்ற வழக்குகளில் விசாரணைக்காக வரும் அப்பாவி மக்களுக்கு 

தங்களுடைய வழக்கு விவரம்,

நுழைவு சீட்டு உள்ளிட்ட, நீதிமன்ற அலுவல் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து விழிப்புணர்வு பெருவகையில் நம்பிக்கையுடன்

தங்களுடைய வழக்குகளை கையாளக்கூடிய சூழ்நிலையை உருவாக்கும் வகையில், ஒரு சிலருக்கு இருக்கும் தாழ்வு மனப்பான்மையை போக்கி, சட்டமும், சட்டத்தின் தூணாக விளங்கும் நீதிமன்றங்களும் நம்மை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் 

உயர் நீதிமன்ற வளாகத்தில் மக்களுக்கான தகவல் தொடர்பு மையம் ஏற்படுத்த வேண்டும். 


மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்கள் உடனடியாக தலையிட்டு நீதிமன்றங்களில் வரும் பொது மக்களின் குறைகளை   போக்க, போதிய நிதியை உடனடியாக ஒதுக்கி, இ-பாஸ்

நடைமுறை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஏ.என்.எஸ் பிரசாத் 

தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் 


திங்கள், 9 செப்டம்பர், 2024

மாவட்டத்தில் ஒன்றாவது?அரசு முதியோர் இல்லம் நடத்த வேண்டும்

▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

9-9-2024 photo news 

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது ஒரு முதியோர் இல்லத்தையாவது கட்டுவதற்கான பணிகளை 6 மாதத்திற்குள் தொடங்க அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

thoothukudi new bus stand 

பேருந்து நிலையம் 

மாநிலத்தின் பல கோயில் வளாகங்கள், பேருந்து நிலையங்களில் ஆதரவற்ற முதியவர்கள் தங்கியுள்ளனர். 

பொது நல வழக்கு!!!

மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின் படி மாவட்டம் தோறும் ஆதரவற்ற முதியோர் காப்பகம் அமைக்க உத்தரவிட வேண்டும் என பொதுநல வழக்கு


மாவட்ட த்தில் ஒன்றாவது முதியோர் இல்லம் அரசு அமைக்க வேண்டும் 

சட்டப்படி மாவட்டத்தில் ஒரு முதியோர் இல்லமாவது அரசால் நடத்தப்பட வேண்டும். 

தனியார் இல்லம் நடப்பது வீதி மீறல்!!!

தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களால் இத்தகைய இல்லங்கள் நடத்தப்படுவது விதிமீறும் செயல் என நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரிய கெளரி அமர்வு கருத்து தெரிவித்துள்ளார்.


திங்கள், 5 ஆகஸ்ட், 2024

நீங்க போலீஸ் ஸ்டேஷன் செல்ல வேண்டாம்! இனிமேல் ஆன்லைனில் புகார் தரலாம்!

▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

5-8-2024  arunan journalist 

நீங்க.... இனிமேல் போலீஸ் ஸ்டேஷன் போக வேண்டாம்! ஆன்லைனில் புகார் தரலாம்! புதிய குற்றவியல் சட்டத்தின் சிறப்பம்சங்கள்

2024 ஜூலை 1 முதல் மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. 



இந்த புதிய குற்றவியல் சட்டத்தில் ஜீரோ எப்ஐஆர், ஆன்லைன் போலீஸ் புகார்களைப் பதிவு செய்தல், மின்னணு முறையில் சம்மன் அனுப்புதல் மற்றும் கொடூரமான குற்றங்கள் நடந்த இடங்களைக் கட்டாயமாக வீடியோ பதிவு செய்வது உள்ளிட்ட விதிகள் உள்ளன. 



இப்போது.... நடைமுறைக்கு வந்துள்ள பாரதீய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023 மற்றும் பாரதிய சாக்ஷ்ய ஆதினியம் 2023 ஆகியவை எளிய இந்திய மக்களுக்கும் கூட அதிகாரம் அளிக்கும் வகையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.


கடந்த ஆண்டு இந்த மூன்று சட்டங்களும் கொண்டு வரப்பட்டன. 


இவை ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்ட பிரிட்டிஷ் கால இந்தியத் தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்தியச் சாட்சியச் சட்டம் ஆகியவற்றுக்குப் பதிலாக அமைக்கப்பட்டுள்ளன.


ஆன்லைனில் புகார்!!!

இதில் புதிய சட்டங்களின் கீழ் ஒருவர் ஆன்லைன் மூலமாகவே புகார் அளிக்க முடியும். பழைய சட்டத்தின் கீழ் ஒருவர் புகார் அளிக்க நேரடியாக போலீஸ் நிலையத்திற்குச் செல்ல வேண்டும்.


 ஆனால், புதிய சட்டத்தின் கீழ் போலீஸ் நிலையத்திற்குச் செல்லாமல் ஆன்லைனிலேயே புகார் அளிக்கலாம்.


 இது பொதுமக்கள் எளிதாகவும் விரைவாகும் புகாரளிக்க வழிவகை செய்கிறது. 


இதன் மூலம் போலீசாரால் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடிகிறது.



ஜீரோ எஃப்ஐஆர்!!!


 அதேபோல ஜீரோ எஃப்ஐஆர் என்ற நடைமுறையும் அமலுக்கு வந்துள்ளது. அதாவது பழைய சட்டங்களின் கீழ் குற்றம் நடந்த இடம் எந்த போலீஸ் நிலைய வரம்பிற்குள் வருகிறதோ..? அந்த குறிப்பிட்ட போலீஸ் நிலையத்தில் தான் புகார் அளிக்க வேண்டும். 


இதனால் பல நேரங்களில் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு இருக்கிறது. 


இந்த பிரச்சினையும் புது சட்டத்தில் இருக்காது.


குற்றம் நடந்து இடம் எதுவாக இருந்தாலும் எந்த போலீஸ் நிலையத்தில் வேண்டும் என்றாலும் புகார் அளிப்பதை இந்த ஜீரோ எஃப்ஐஆர் வழிவகை செய்கிறது. 


இது சட்ட நடவடிக்கைகளைத் தொடங்குவதில் உள்ள தாமதங்களை நீக்குகிறது. 


புதிய சட்டங்களின் கீழ், பாதிக்கப்பட்டவர்கள் எஃப்ஐஆர் காப்பி இலவசமாக வழங்கப்படும்.


கைது விவரம் ???

 அதேபோல ஒருவர் கைது செய்யப்பட்டால் அவர் கூறும் நபருக்குக் கைது குறித்து போலீசார் கூற வேண்டும் எனச் சட்டம் சொல்கிறது.


 இதன் மூலம் கைது செய்யப்பட்ட நபரின் குடும்பத்தினருக்குக் கைது குறித்து உடனடியாக தெரிய வரும்.


 இது கைது செய்யப்பட்ட நபருக்கும் கிடைக்க வேண்டிய நியாயத்தைப் பெற்றுத் தரும்.


 மேலும், கைது விவரங்கள் இப்போது காவல் நிலையங்கள் மற்றும் கலெக்டர் அலுவலகங்களில் வைக்கப்படும்.


இதுவும் கைது குறித்த தகவல்கள் குடும்பத்தினர் தெரிந்து கொள்ள உதவும்.


வீடியோ எடுப்பது !!! 

அடுத்து.... விசாரணையை வலுப்படுத்த முக்கியமான விதி கொண்டு வரப்பட்டுள்ளது.


 அதாவது கடுமையான குற்றங்கள் நடந்த இடங்களுக்கு தடயவியல் நிபுணர்கள் நேரில் சென்று சாட்சியங்களைச் சேகரிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 



மேலும், குற்றம் நடந்த இடத்தை கட்டாயமாக வீடியோ படம் எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


இந்த இரண்டு விதிகளும் வலிமையான விசாரணையை உறுதி செய்யும்.


பெண்களுக்கு எதிரான குற்றங்கள்???


 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான விசாரணைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த புதிய சட்டங்கள் இருக்கிறது. 


மேலும் புகார் அளித்து இரண்டு மாதங்களுக்குள் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து வாக்குமூலம் பெற வேண்டும்..


 90 நாட்களுக்குள் வழக்கில் நடத்தப்பட்ட விசாரணை குறித்த தகவல்களைப் பாதிக்கப்பட்ட நபருக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதையும் புதிய சட்டங்கள் கட்டாயமாக்குகிறது.



பெண்களுக்கு எதிரான சில குற்றங்களுக்குப் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலங்கள் முடிந்தவரை ஒரு பெண் மாஜிஸ்திரேட் முன்னிலையில் பதிவு செய்ய வேண்டும். 


பெண் மாஜிஸ்திரேட் இல்லாதபட்சத்தில் ஒரு ஆண் மாஜிஸ்திரேட் முன்பு வாக்குமூலம் அளிக்கலாம்.


 இருப்பினும், பாதிக்கப்பட்டவருக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்க அருகே மற்றொரு பெண் இருப்பதைச் சட்டம் அனுமதிக்கிறது.


மேலும், புதிய சட்டங்களின் கீழ் நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச முதலுதவி அல்லது மருத்துவச் சிகிச்சைக்கு அளிக்கப்படுவதை உறுதி செய்கிறது.


டிஜிட்டல் சம்மன்!!!


 சம்மன்கள் இப்போது டிஜிட்டல் முறையில் அனுப்புவதையும் சட்டம் அனுமதிக்கிறது.


 இது சட்ட செயல்முறைகளை விரைவுபடுத்தவும், தேவையில்லாத பேப்பர் பயன்பாட்டைக் குறைக்கவும் உதவும்.



14 நாட்கள்!!!

 குற்றஞ்சாட்டப்பட்டவர் மற்றும் பாதிக்கப்பட்ட நபர்கள் என இரு தரப்பினருக்கும் 14 நாட்களுக்குள் எப்ஐஆர், போலீஸ் அறிக்கை, குற்றப்பத்திரிகை, அறிக்கைகள், வாக்குமூலங்கள் மற்றும் பிற ஆவணங்களின் நகல்களைப் பெற உரிமை உள்ளது.


 வழக்கு விசாரணைகளில் தேவையற்ற காலதாமதத்தைத் தவிர்க்கவும், நீதி தக்க சமயத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்யவும் நீதிமன்றங்கள் அதிகபட்சமாக இரண்டு வாய்தாக்களை மட்டுமே வழங்கலாம் என்ற விதி இருக்கிறது.



 சாட்சியங்களையும் பாதுகாக்கத் தனித் திட்டங்களை உருவாக்கவும் அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஞாயிறு, 30 ஜூன், 2024

இந்தியாவில் புதிய குற்றவியல் சட்டங்கள் நாடு முழுவதும் இன்று 1-7-2024 முதல் அமல்!!இதை எதிர்த்து பல மாநிலங்களில் வழக்கறிஞர்கள் போராட்டம்!!!

▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 1-7- 2024 photo news 

by arunan journalist 

இந்தியா வில் புதிய  மூன்று குற்றவியல் சட்டங்கள் நாடு முழுவதும் இன்று 1-7-2024 முதல் அமல் செய்யப்படுகிறது.

இதை எதிர்த்து பல மாநிலங்களில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



இது பற்றிய செய்தியாவது:-


புதுடெல்லி:

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளையும் மீறி 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நாடு முழுவதும் இன்று அமலுக்கு வந்துள்ளன.


 இதை எதிர்த்து பல மாநிலங்களில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



🔲.  இந்திய தண்டனை சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகிய ஆங்கிலேயர் காலத்து சட்டங்களுக்கு பதிலாக, முறையே பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷய அதிநியாம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்களை கடந்த ஆண்டு டிசம்பரில் ஒன்றிய அரசு கொண்டு வந்தது.



🔲. இந்த 3 சட்டங்களுக்கான மசோதா நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட போது, நாடாளுமன்ற பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக அமளி செய்ததாக 146 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தனர். 

இதனால், அவையில் ஆளுங்கட்சி எம்பிக்கள் ஆதரவுடன் எந்த விவாதமும் இல்லாமல் 3 புதிய குற்றவியல் சட்டங்களும் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டன


இத்தகைய நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.



🔲. மேலும், புதிய குற்றவியல் சட்டங்களில் போலீசாருக்கு அதிக அதிகாரம் வழங்குவது, ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியில் சட்டங்களுக்கு பெயரிடுவது, விவாதமின்றியும், மாநில அரசுகளின் கருத்தை கேட்காமலும் சட்டங்களை கொண்டு வருவது போன்றவற்றை கண்டித்து எதிர்ப்பு தெரிவித்தன.


 ஆனாலும் இந்த சட்டங்கள் ஜூலை 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.


 சட்டத்தை அமல்படுத்துவதற்கான முன்னேற்பாடுகளையும் செய்தது.



🔲. இதற்கிடையே இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா உள்ளிட்டோர் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதினர்


3 குற்றவியல் சட்டங்கள் குறித்து நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விவாதம் நடத்தி பிறகு முடிவெடுக்க வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் அரசிடம் வலியுறுத்தின.


 ஆனால் அத்தனை எதிர்ப்பையும் மீறி, திட்டமிட்டபடி புதிய 3 குற்றவியல் சட்டங்களும் நாடு முழுவதும் இன்று அமலுக்கு வந்துள்ளன.



🔲. இதன் மூலம், காலனித்துவ கால சட்டங்களுக்கு முடிவு கட்டப்படும் என்றும், புதிய குற்றவியல் சட்டங்கள் இந்திய நெறிமுறையுடன் அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக நீதியை உறுதி செய்யும் என்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏற்கனவே கூறி இருந்தார். 


இதில், பெண்கள், குழந்தைகளுக்கான குற்றங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவது, குற்றச் செயல்களில் அவர்களை ஈடுபடுத்துவது தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டுள்ளது. 


சிறுவர், சிறுமியை விற்பது கொடிய குற்றமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.



🔲. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தால் அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க புதிய சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் அவரது உறவினர், பாதுகாவாலர் முன்னிலையில், பெண் போலீஸ் அதிகாரியால் வாக்குமூலம் பெறப்பட வேண்டும். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இனி காவல்நிலையத்திற்கு நேரில் சென்று புகார் தர வேண்டுமென்ற அவசியமில்லை. மின்னணு ஊடகம் மூலமாக புகார் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புகார் செய்தவர் 3 நாட்களுக்குள் காவல் நிலையத்திற்கு சென்று புகாரில் கையெழுத்திட வேண்டும்.



🔲. இதே போல, எந்த காவல் நிலையத்திலும் குற்றத்திற்கு எதிராக புகார் பதிவு செய்யவும் வகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் போலீசாரின் எல்லை பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. தவறான திருமண வாக்குறுதியின் கீழ் உடலுறவு கொள்வதும் கடுமையான குற்றமாக்கப்பட்டுள்ளது. பாலியல் விவகாரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் மின்னணு வாயிலாக வாக்குமூலம் தரவும் வசதி செய்யப்பட்டுள்ளது. சாட்சிகள், குற்றம்சாட்டப்பட்டவர்கள், நிபுணர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மின்னணு ஊடகம் மூலம் ஆஜராக முடியும்.



🔲. போலீஸ் விசாரணை முதல் நீதிமன்ற நடவடிக்கை வரை முழு செயல்முறையும் கணினிமயமாக்கப்பட்டுள்ளது. ஏழு ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட தண்டனை உள்ள வழக்குகளில் தடயவியல் விசாரணை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. போலீஸ் தேடுதல் செயல்முறை முற்றிலும் வீடியோ பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நவீன நடைமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக சமூகப் பணிகள் தண்டனையின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 6 வகையான சிறிய குற்றங்களில் ஈடுபடுவோரை சமூகப் பணிகளில் ஈடுபடுத்த வகை செய்யப்பட்டுள்ளது.



🔲. இவற்றை தவிர, தீவிரவாத செயல்களுக்கான வரையறை வழங்கப்பட்டுள்ளது. கும்பல் கொலை தனி பிரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. எப்ஐஆர் பதியாமலேயே விசாரணை நடத்த 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கும் அவகாசம் 15 நாட்களுக்கும் மேலாக நீட்டிக்கப்பட்டுள்ளது. உண்ணாவிரத போராட்டங்களை நடத்துபவர்களை தற்கொலைக்கான முயற்சியாக கருதி சிறையில் அடைக்கும் அம்சங்களும் புதிய குற்றவியல் சட்டங்களில் இடம் பெற்றுள்ளன.



🔲. இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் சட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்திய தண்டனை சட்டத்தில் இருந்து தொழில்நுட்ப ரீதியாக தேசத் துரோகம் நீக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட நிலையில், இந்த புதிய விதி சேர்க்கப்பட்டுள்ளது. இதில், என்ன மாதிரியான தண்டனை விதிக்கலாம் என்பது குறித்து விரிவான விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.



🔲. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் போன்ற சிறப்பு சட்டங்களின் ஒரு பகுதியாக இருந்த தீவிரவாத செயல்கள், இப்போது புதிய சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. மரண தண்டனை கைதிகள் மட்டுமே கருணை மனு தாக்கல் செய்ய முடியும் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.



🔲.  முன்னதாக, அரசு சாரா அமைப்புகள் அல்லது சிவில் சமூகக் குழுக்களும் குற்றவாளிகளின் சார்பாக கருணை மனுக்களை தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது. இதுபோன்ற மாற்றங்கள் போலீசாருக்கு கூடுதல் அதிகாரத்தை வழங்கும் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.



🔲. அதே சமயம், புதிய குற்றவியல் சட்டங்கள் நீதி வழங்குவதில் கவனம் செலுத்துவதாகவும் வெறுமனே தண்டனை வழங்குவதில் மட்டுமல்ல என ஒன்றிய அரசு தரப்பில் கூறப்படுகிறது. இதற்கிடையே, புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், இந்த சட்டங்களால் தங்களுக்கு கூடுதல் சுமை ஏற்படும் எனக் கூறி பல மாநிலங்களில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த புதிய சட்டங்கள் நீதித்துறை அமைப்பில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்த உள்ளது.


*✍️. எத்தனை பிரிவுகள்?*


🔲. புதிய 3 குற்றவியல் சட்டங்களில் உள்ள பிரிவுகள் பெரும்பாலும் முந்தைய சட்டத்தில் இருந்தவை என்றாலும், சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குற்றத்தின் தன்மை, அதற்கான தண்டனையை வரையறுக்கும் இந்திய தண்டனை சட்டத்தில் 511 பிரிவுகள் இருந்த நிலையில் அவை 358 பிரிவுகளாக பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தில் குறைக்கப்பட்டுள்ளது.



🔲. குற்றத்தை வரையறுத்த பிறகு அதற்கு நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுத் தரும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் 533 பிரிவுகள் இருந்த நிலையில் இவை பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா சட்டத்தில் 531 ஆக குறைக்கப்பட்டுள்ளது. தண்டனையை நிரூபிக்க சாட்சியத்தை கையாளும் வழிமுறைகளை வரையறுக்கும் இந்திய சாட்சியங்கள் சட்டத்தில் 167 பிரிவுகள் இருந்த நிலையில், புதிய பாரதிய சாக்ஷய அதிநியாம் சட்டத்தில் 170 பிரிவுகளாக அதிகரிக்கப்பட்டுளளது.


ஞாயிறு, 31 ஜூலை, 2022

நீர்நிலை ஆக்கிரமிப்பு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து

 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️

thoothukudileaks 30-07-2022


நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கூறியதாவது: 


மாற்று இடம் அளித்த பிறகு ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என கூறுவது ஆக்கிரமிப்பாளர்களை ஊக்கப்படுத்துவதாகவே அமையும். 



நீர்நிலைகள், வறண்ட நிலப்பரப்புகள் ஆக்கிரமிப்பால் தமிழகத்தின் சூழலியல் பாதிக்கப்படுகிறது. நீதிமன்ற உத்தரவுக்கு பின் எவ்வித மாற்று ஏற்பாடுமின்றி ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை தேவை. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அரசு பாரபட்சமின்றி செயல்பட வேண்டும்.


 நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் முழுமையாக அகற்றப்படாதது ஆச்சர்யமளிக்கிறது. 

நீர்நிலைகளின் ஆக்கிரமிப்பு அதிகாரிகளின் உதவி இல்லாமல் நடக்காது.

 இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார் கள்.

திங்கள், 21 பிப்ரவரி, 2022

மனித உரிமை மீறல்கள் தொடர்பான மாணவி சோபியா வழக்கு விசாரணை விரைவில் தீர்ப்பு.

மாணவி சோபியாவிற்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அவரது தந்தை டாக்டர் சாமி   மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பொன்ராம் , தூத்துக்குடி நகர காவல் துனை கண்காணிப்பாளர் பிரகாஷ், ஆய்வாளர்கள் திருமலை , பாஸ்கர் , அன்னத்தாய் , உதவி ஆய்வாளர்கள் லதா, நம்பிராஜன் ஆகியோர் மீது மாநில மனித உரிமை ஆனையத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கின் விசாரனை முடிவடைந்தது.



இன்று  21-02-2022 மனுதாரர் வழக்கறிஞர் பெ.சந்தனசேகர் சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வமான வாதுரையை தாக்கல் செய்துள்ளார்.


தீர்ப்பு விரைவில்  வரலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.

திங்கள், 27 செப்டம்பர், 2021

22 ஆண்டுகளாக போலீசுக்கு டிமிக்கி கொடுத்த குற்றவாளி கைது!!! தனிப்படை போலீசின் அதிரடி !!! தூத்துக்குடி எஸ்.பி.ஜெயக்குமார் பாராட்டு!!!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் பகுதி சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேம்பார் தருவை பாலத்திற்கு அருகே கடந்த 18.02.1995 அன்று வேம்பார் மேலத்தெருவைச் சேர்ந்த பொன்னுச்சாமி மகன் பழனிவேல் (40/95) என்பவர் கொலை செய்யப்பட்டார். 



இது சம்மந்தமாக சூரங்குடி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இவ்வழக்கின் எதிரிகளை 20.02.1995 அன்று கைது செய்து 14.05.1996ம் அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.


 இந்நிலையில் இவ்வழக்கின் எதிரிகளில் ஒருவரான தூத்துக்குடி பச்சையாபுரத்தைச் சேர்ந்த சிதம்பரம் மகன் சந்திரமோகன் (72) என்பவர் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார், 

கைதான குற்றவாளி சந்திரமோகன்


இதனால் 07.06.1999 அன்று நீதிமன்றம் இவருக்கு பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டது. இவரை போலீசார் தேடி வந்த நிலையில் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.


இந்நிலையில் பிடிவாரண்ட் பிறப்பித்து 22 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள மேற்படி எதிரி சந்திரமோகனை கைது செய்வதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார்  விளாத்திக்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ்  மேற்பார்வையில் விளாத்திக்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்  கங்கைநாதபாண்டியன் தலைமையில் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.


இந்நிலையில் மேற்படி தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு, தீவிர தேடுதல் வேட்டையில்  தலைமறைவாக இருந்து வந்த எதிரி சந்திரமோகனை கைது செய்தனர்.


கடந்த  22 ஆண்டுகளாக போலீஸ்-கண்ணில் மண் தூவி தலைமறைவாக இருந்த  சந்திரமோகனை இப்போது  அதிரடியாக கைது செய்துள்ளனர். 

வெள்ளி, 24 செப்டம்பர், 2021

சாதி ஆணவ படுகொலைகளை தடுப்பதற்கு தனிச்சட்டம் நிறைவேற்ற தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!! கடலூர் சாதி ஆணவக் கொலையாளிகளுக்கு தண்டனை நீதிமன்றத் தீர்ப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு!

 thoothukudileaks 24.9.2021

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்திற்கு அருகில் புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில் 2003ம் ஆண்டு நடைபெற்ற கொடூரமான சாதி ஆணவக் கொலை மற்றும் எஸ்.சி / எஸ்.டி வன்கொடுமை வழக்கில் கடலூர் எஸ்.சி., / எஸ்.டி. நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பையும், தீர்ப்பினை வழங்கிய நீதிபதி  உத்தமராஜ் அவருக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.



                பட்டியலின வகுப்பைச் சார்ந்த பொறியியல் பட்டதாரி முருகேசன் என்பவருக்கும், அதே கிராமத்தைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த கண்ணகி என்பவருக்கும் காதல் ஏற்பட்டு 05.05.2003 அன்று பதிவு திருமணம் செய்து கொண்டனர். கண்ணகியினுடைய உறவினர்கள் இவர்கள் இருவரையும் தேடிக் கண்டுபிடித்து 8.7.2003 அன்று  ஊருக்கு கொண்டு வந்து கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்துள்ளனர். இருவரையும் பட்டப்பகலில் சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்று இருவருடைய வாயிலும், காதுகளிலும் விஷத்தை ஊற்றி அதிகாலை 5.30 மணியளவில் படுகொலை செய்து பிணங்களை எரித்து விட்டனர்.


                இத்தகைய கொடுமைகளிலிருந்து தங்களை விடுவித்து விடுங்கள் என அவர்கள் கதறி அழுதது யார் காதிலும் விழவில்லை. எங்களை பிரித்து கண்ணகியை வேறு யாருக்காவது திருமணம் செய்து கொடுத்து விடுங்கள் என்ற முருகேசனின் கதறலையும் செவி மடுக்காமல், ஏராளமானோர் திரண்டு நிற்க, அவர்கள் முன்னிலையில் இளம் தம்பதியினரை கொடூரமாக கொலை செய்து தீ வைத்து கொளுத்திய கொடுமை அரங்கேற்றப்பட்டது.


                இவ்வளவையும் செய்ததோடு காவல்துறையினரின் உதவியை பயன்படுத்தி முருகேசனுடைய தந்தை சாமிக்கண்ணு உள்ளிட்ட நான்கு பேர் முருகேசனை விஷம் கொடுத்து கொன்றதாகவும், கண்ணகியினுடைய சகோதரர் மருதுபாண்டியன் உள்ளிட்ட நான்கு பேர் கண்ணகிக்கு விஷம் கொடுத்து கொன்றதாகவும் பொய் வழக்கு பதிவு செய்து எட்டு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


                இச்சம்பவத்தை கேள்விப்பட்டவுடன் இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனவும், உண்மையான குற்றவாளிகளை கைது செய்திடவும்,பொய் வழக்கினை ரத்து செய்திட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் விருத்தாசலம் நகரில் மாபெரும் ஆர்ப்பாட்டமும், சாலை மறியல் போராட்டமும் நடைபெற்றது. முருகேசனுடைய தந்தை சார்பில் வழக்கறிஞர்கள் ரத்தினம் மற்றும் மனித உரிமை அமைப்பைச் சார்ந்தவர்கள் மூலம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு இவ்வழக்கு 22.04.2004 அன்று சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.


                தொடர்ந்து வழக்கறிஞருடைய வற்புறுத்தலால் விசாரணையை மேற்கொண்ட சிபிஐ விசாரணை அதிகாரிகள் ஏற்கனவே பதிவு செய்த பொய் வழக்கை ரத்து செய்து கண்ணகியினுடைய உறவினர்கள் 11 பேர் மீதும், பொய் வழக்கு போட்டு வழக்கை திசைதிருப்பவும், சாட்சிகளை மறைக்கவும் உதவி செய்த உதவி ஆய்வாளர் தமிழ்மாறன் மற்றும் ஆய்வாளர் செல்லமுத்து ஆகிய இரண்டு போலீஸ் அதிகாரிகள் மீதும் கொலை வழக்கு, எஸ்.சி / எஸ்.டி வழக்கு பதிவு செய்து சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இதிலும் முருகேசனுடைய உறவினரான அய்யாசாமி, குணசேகரன் ஆகியோரை குற்றவாளிகளாக சேர்க்கக் கூடாது என்பதை சிபிஐ அதிகாரிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.


                இந்த வழக்கு கடந்த 18 ஆண்டுகளாக செங்கல்பட்டு சிபிஐ நீதிமன்றத்திலும், கடலூர் எஸ்.சி / எஸ்.டி நீதிமன்றத்திலும் நடைபெற்றது. குற்றவாளிகள் வழக்கை நடத்த விடாமல் தொடர்ந்து இழுத்தடிப்பு செய்து வந்தனர். சாட்சிகளை கலைப்பதற்கும் கடுமையாக முயற்சிகளை மேற்கொண்டனர். குற்றம் சுமத்தப்பட்ட இரண்டு போலீஸ் அதிகாரிகளும் தமது முழு அதிகாரங்களை பயன்படுத்தி சாட்சிகளை மிரட்டி கலைப்பதற்கு முயற்சித்தனர். இவர்களுக்கு அடிபணிந்து சிலர் பிரழ் சாட்சியாகவும் மாறினார்கள். திரு செல்வராஜ் என்ற நேரடி சாட்சி இவர்களின் மிரட்டலால் பணிந்து நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியை அளிப்பதற்கு முதல் நாள் 31.08.2017 அன்று தற்கொலை செய்து கொண்டார். குற்றம் சுமத்தப்பட்டவர்களின் மிரட்டலால் தனது கணவர் தற்கொலை செய்து கொண்டார் என செல்வராஜின் மனைவி அளித்த புகாரின் மீது விருத்தாசலம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு போதுமான ஆதாரங்கள் இல்லை என விருத்தாசலம் காவல்துறை வழக்கை முடித்து விட்டது.


                பல தடைகளை கடந்து இன்று (24.09.2021) கடலூர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பில் கண்ணகியினுடைய சகோதரர் மருதுபாண்டியனுக்கு மரண தண்டனையும், மற்ற 11 பேருக்கு கிரிமினல் சதி செய்தது, கொலை செய்தது, வன்கொடுமை இழைத்தது என்கிற அடிப்படையில் மூன்று  ஆயுள் தண்டனையும், உடந்தையாக இருந்து குற்றத்தை மூடி மறைக்க முயற்சித்த போலீசாருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. முருகேசனுடைய உறவினர் இரண்டு பேரையும் விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் அனைத்து குற்றவாளிகளுக்கும் தலா ஐம்பதாயிரம் அபராதம் விதித்ததோடு ஏற்கனவே காவல்துறையினரால் பொய் வழக்கு புனையப்பட்டு கைது செய்யப்பட்ட முருகேசனின் உறவினர்கள் 3 பேருக்கு தலா இரண்டு லட்சம் இழப்பீடு  வழங்க வேண்டுமெனவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.


                சாதிய வன்மத்தோடு நடத்தப்பட்ட ஆணவப்படுகொலை வழக்கு என்பதோடு எஸ்.சி / எஸ்.டி வன்கொடுமை சட்டத்தின் கீழும் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது பாராட்டுக்குரியதாகும். இவ்வழக்கில் தொடர்ந்து கண்காணித்து உதவிய வழக்கறிஞர்கள் பொ.இரத்தினம், கோ. சுகுமாறன் உள்ளிட்ட அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.


                தமிழகத்தில் தொடர்ந்து வரும் இத்தகைய ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்தவும், குற்றவாளிகள் உரிய தண்டனை பெறவும் தமிழக அரசு ஆணவப்படுகொலை தடுப்புக்கென தனி சட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென கோருகிறோம். உசிலம்பட்டி விமலாதேவி ஆணவக் கொலை வழக்கில் நீதியரசர் வி.ஆர். சுப்பிரமணியம் அவர்கள் வழங்கிய வழிகாட்டுதல்களை அமல்படுத்த வேண்டுமெனவும் முன்வைக்கிறோம். மேலும் அடித்தட்டு கிராமப்புற உழைப்பாளி மக்களான பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் சாதிய மோதல்களில் ஈடுபடாமல் தங்களது வாழ்வாதார பிரச்சனைகளுக்கு ஒன்றிணைந்து போராட முன்வர வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

(கே. பாலகிருஷ்ணன்)


மாநில செயலாளர்