காமராஜர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காமராஜர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 30 நவம்பர், 2024

தூத்துக்குடியில் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் பொதுமக்களுக்குநிலவேம்பு குடிநீர் வழங்கல்

தூத்துக்குடி மாவட்டம்  ஒட்டப்பிடாரம்  தாலுகாவில்  அமைந்துள்ள  தருவைக்குளம் கிராமத்தில்    காமராஜர் நற்பணி மன்றத்தின் செயல்பாடு பாராட்டத்தக்கது.


 தொடர்ச்சியாக 7 ஆண்டுகள் வழங்கப்பட்டு, இம்முறை 8வது ஆண்டாக நிலவேம்பு குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 

தூயமிக்கேல் அதிதூதர் ஆலய கொடிமரம் முன்பாக பொது மக்கள் 


மழைக்கால நோய்களை தடுக்கும் இந்த முயற்சி பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சிறந்த சேவையாகும். 


நிகழ்வில் பொதுமக்கள் சேர்ந்து கொண்டு பயன்பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.



ஞாயிறு, 22 ஜனவரி, 2023

தூத்துக்குடியில் நாடார் திருமண சுயம்வரம் மகா திருவிழா

 thoothukudileaks 22-1-2023

Photo news by Roja arunan 

தூத்துக்குடியில் அன்னை சிவகாமி மைந்தன் நற்பணி இயக்கம் சார்பாக நாடார் திருமண சுயவரம் மகா திருவிழா இன்று 22--1-2023 நடைபெற்றது.






இது பற்றிய செய்தியாவது:-

 தூத்துக்குடியில் அன்னை சிவகாமி மைந்தன் நற்பணி இயக்கம் சார்பாக நாடார் திருமண சுயவரம் மகா திருவிழா இன்று 22--1--2023 காலை 9மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்று கொண்டிருக்கிறது.




தூத்துக்குடியில் பிரையன்ட் நகர் 5-வது பெருந்தலைவர் காமராஜர் மண்டபம் நடைபெறுகின்ற வரன் பார்க்கும் நிகழ்ச்சி யில்  மணமகன் மணமகள் தேடும் பெற்றோர் தங்கள் மகன் மகள் ஜாதக பொருத்தம் படிப்பு தொழில் போட்டோ மற்றும் பிற விவரங்கள் அடங்கிய பயோடேட்டா இவர்களிடம் வழங்கி வருகிறார்கள் .




இந்நிகழ்ச்சியில் பதிவு செய்தவர்களுக்கு தொடர்ந்து மணமகள் மணமகன் விவரம் அனுப்பி திருமணம் இனிதே நடைபெற உதவி புரிவார்கள்.


மேலும் மறுமணம் பதிவும் உண்டு .இன்று நடைபெற்ற அன்னை சிவகாமி மைந்தன் நற்பணிஇயக்கம் சார்பாக நாடார் திருமண சுயம்வரம் நிகழ்ச்சி யில்   இந்து நாடார் RC Nadar,csi Nadar ஆகியோர் தங்கள் குடும்பத்துடன் வந்து பெரும் அளவில் பதிவு செய்து வருகிறார்கள்.


பதிவு கட்டணம் மணமகள், மணமகன் (Rs.100/-),

Middle Class பெண் (Rs.200/-), ஆண் (Rs.300/-),

VIP நபர்கள் (Rs.500/-), ஊனமுற்றோருக்கு இலவசம்

மறுமணபதிவும் உண்டு கட்டணம் Rs.500/-

இந்நிகழ்ச்சி ஏற்பாடு...

தொடர்புக்கு

98947 41179

ஜெ.மைக்கேல்

80720 01616

பொ. ஜெனார்த்தனன் 8973636291

98943 16741

T.A.பவுன்ராஜ்

93812 55318

இவண்:

செல்வஜோதி 99408 85886

சுந்தரம்

அன்னை சிவகாமி மைந்தன் நற்பணி இயக்கம்

தூத்துக்குடி - 628 003




ஞாயிறு, 18 டிசம்பர், 2022

பனை தொழிலாளர் கருத்தரங்கம் தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தில் நடைபெற்றது

 தூத்துக்குடி மாவட்டம் தருவைக் குளம் பகுதியில் உள்ள மைக்கேல் ஹோட்டலில்  இன்று 18-12-2022 காலை 10மணியளவில் பனை  தொழிலாளர் கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது .



பனைத் தொழிலாளா்கள் கருத்தரங்கம் நிகழ்ச்சியில் ராயப்பன் ( தமிழ்நாடு பனைத்தொழிலாளா் சங்க பொதுச்செயலாளா் ) கலந்து கொண்டு பேசுகையில்... 

தற்போது பனை தொழிலாளர் கள் 

வங்கியின் உதவியையும் தமிழக  அரசின் உதவியையும் எப்படி பயன்படுத்திக்கொள்ள வேண்டும்  என  சிறப்புரையாற்றினார். .

அடுத்து பனைவாாிய உறுப்பினா் எடிசன் 

      தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு பனைத் தொழிலாளா்கள் சங்க தலைவா் அாிபாகரன்  மற்றும் ராஜபாளையம் பனை தொழிலாளர் ஜெயராஜ்   தருவை குளம் பிச்சையா குளத்தூர்    சுப்பிரமணியம் ஆகியோர் பனை வரலாறு பற்றி பேசினார் கள்.      

   


                       

வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு களை தூத்துக்குடி மாவட்டம் காமராஜர் நற்பணி மன்றம் உடன் செய்திருந்தனர்.