thoothukudi லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
thoothukudi லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 26 பிப்ரவரி, 2025

தூத்துக்குடி மாநகராட்சி 2025-26 நிதிநிலை அறிக்கை – மக்கள் நலத்திற்கான புதிய திட்டங்கள் அறிவிப்பு

Tamil Nadu updates,

Photo news by Arunan journalist 

தூத்துக்குடி மாநகராட்சி மாதாந்திர மாமன்ற கூட்டம் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாநகராட்சி ஆனையர் மதுபாலன் துனை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .



இன்று 27-2-2025 நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தூத்துக்குடி மாநகராட்சி 2025-26 நிதிநிலை அறிக்கை – மக்கள் நலத்திற்கான புதிய திட்டங்கள் அறிவிப்பு செய்தார்.


மாமன்ற கூட்டத்தில் 6 வது தீர்மானத்தில...

6) (அ) தூத்துக்குடி மாநகராட்சி கட்டிட அனுமதி வழங்க வசூலிக்கப்படும் கட்டண விலைப்பட்டியல் (Schedule of rate) மாமன்ற தீர்மான எண் 496 நாள் 31.07.2024ன்படி தற்போது குடியிருப்பு கட்டிடத்திற்கு 1 சமீக்கு ரூ.850/-ம், குடியிருப்பு அல்லாத கட்டிடத்திற்கு 1 செமீக்கு ரூ.1,100/-ம் வசூலிக்கப்பட்டு வருகிறது. 


வைப்புத் தொகை போன்ற இதர கட்டணங்கள் மாமன்ற தீர்மான 97 நாள் 07.03.2019ன்படி வசூலிக்கப்பட்டு வருகிறது.

 இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் கபசான்றளிப்பு வரையறைக்குட்படாத குடியிருப்பு () குடியிருப்பு அல்லாத கட்டுமானங்களுக்கு ஒற்றைச்சாளா இணைய முகப்பில் (SINGLE WINDOW PORTAL கட்டிட அனுமதி வழங்குவதற்கு செலுத்தவேண்டிய ஒருங்கிணைந்த கட்டணங்களை நிர்ணயம் செய்து

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கள் (குறி1) துறை அரசாணை (டம் எண் 72 நாள் 05.02.2025ல் உத்தரவிடப்பட்டுள்ளது. 


இஃது குறித்து தூத்துக்குடி மாநகராட்சி அதிமுக  கொராடா கவுன்சிலர் மந்திரமூர்த்தி  சொத்து வரி கூடுதல் குறித்து கேள்வி எழுப்பினார் 

இஃது குறித்து தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி விளக்கம் அளித்தார்

வாட்ஸ் அப் ல வரும் தேவையில்லாத பதிவுகளை பொது மக்கள் நம்ப வேண்டாம் என்றார்.



தூத்துக்குடி மாநகராட்சி 2025-26 நிதிநிலை அறிக்கை – மக்கள் நலத்திற்கான புதிய திட்டங்கள் அறிவிப்பு


தூத்துக்குடி மாநகராட்சி 2025-26ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டார். இதில் பொது பயன்பாட்டு திட்டங்கள், குடிநீர் விநியோகம், சுகாதாரம், கல்வி, வருவாய், நகரமுறைத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.


பொதுமக்கள் வசதிக்கான புதிய திட்டங்கள்


மகளிர் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த வடக்கு மண்டலத்தில் புதிய மகளிர் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இளைஞர்களுக்காக நகரின் 5 இடங்களில் சிறிய விளையாட்டு மைதானங்கள் உருவாக்கப்படும். தனசேகர் நகர் பகுதியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மைய நூலகம் கட்ட திட்டம் தயார் நிலையில் உள்ளது.


நகரில் பாரம்பரிய உணவுகளை ஊக்குவிக்க Food Street அமைக்கப்படும். மேலும், 1.2 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட சூரிய ஒளி தகடுகள் நிறுவப்பட்டு, மாநகரத்திற்கு தேவையான மின்சாரத்தை சுயமாக உற்பத்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.


மழை நீரை சேமிக்க நகரின் முக்கிய 4 குளங்கள் மறுசீரமைக்கப்படுவதுடன், நடைபாதைகளும் அமைக்கப்படும். போதைப்பொருள் அடிமையிலிருந்து மீட்பதற்காக போதை மறுவாழ்வு மையம் தொடங்கப்பட உள்ளது.


 தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 20 இடங்களில் நகர்ப்புற குறுங்காடுகள் வளர்க்கப்படும்.


குடிநீர் விநியோகம் & சுகாதாரம்


மாநகரின் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்த புதிதாக கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர் தொட்டிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளன. மேலும், 9 வார்டுகளில் 24 மணி நேர குடிநீர் விநியோகம் செயல்படுத்தப்படும்.


மக்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த, 2023-ஆம் ஆண்டு பிறந்த குழந்தைகளுக்கு செவித் திறன் பரிசோதனை வழங்கப்படும். 


நகரின் நிதி ஆதாரத்தில் பின்தங்கிய பகுதிகளில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் லூர்தம்மாள்புரம் நகர்ப்புற சுகாதார நிலையம் மேம்படுத்தப்படும்.


மாநகரத்தில் தூய்மையை உறுதி செய்ய மூன்று நுண் உர செயலாக்க மையங்கள் (MCC) மற்றும் ஒரு மறுசுழற்சி மையம் (RRC) அமைக்கப்படும். தெரு நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த உரிய அறுவை சிகிச்சை செய்யும் வசதிகள் மேம்படுத்தப்படும்.


வசதி கட்டமைப்பு & வருவாய் சேகரிப்பு


நகரின் வருவாய் சேகரிப்பை அதிகரிக்க, நான்கு புதிய வரி வசூல் மையங்கள் திறக்கப்பட உள்ளன. குடிநீர் கட்டணம் மற்றும் சொத்து வரி தொடர்பான பெயர் மாற்றங்களை ஒரே விண்ணப்பத்தின் மூலம் எளிதாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


மாநகராட்சி வாகன நிறுத்தங்களின் கட்டண வசதி முழுமையாக மின்னணு முறையில் செயல்படுத்தப்படும்.


கல்வி மற்றும் விளையாட்டு மேம்பாடு


மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆங்கிலம் பேசும் திறனை வளர்க்க சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். மேலும், நகரின் மூன்று பள்ளிகளில் கூடுதல் கழிப்பறைகள் கட்ட திட்டம் உள்ளது.


இளம் குழந்தைகளின் வளர்ச்சியை மேம்படுத்த, 9 புதிய அங்கன்வாடி மையங்கள் அமைக்கப்படும். இளைஞர்களின் உடல்நலத்தை மேம்படுத்த சிறிய அளவிலான செயற்கை புல் கால்பந்து மைதானம் (Turf) அமைக்கப்பட உள்ளது.


மற்ற முக்கிய அறிவிப்புகள்


மாநகரில் அரசுப் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வழங்க புதிய பயிற்சி மையம் தொடங்கப்படும்.


 தூத்துக்குடி அரசு மருத்துவமனை அருகே, நோயாளிகளை உறவினர்கள் பார்வையிடும் வசதிக்காக காத்திருப்பு அறைகள் உருவாக்கப்படும்.


தொழில் முனைவோருக்கு தமிழக அரசின் Start-up Agency மூலம் தொழில் பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தூத்துக்குடி மாநகராட்சி 2025-26 நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்கள் நகரின் பொது வசதிகளை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. மக்கள் பயன்பெறும் வகையில் விரைவில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.


புதன், 1 பிப்ரவரி, 2023

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம்! இந்திய ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை சனாதன நோக்கம் கொண்ட மக்கள் விரோத அறிக்கையாகும்! :

 இந்திய ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை சனாதன நோக்கம் கொண்ட மக்கள் விரோத அறிக்கையாகும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம்! தெரிவித்துக் உள்ளது.

 இதுபற்றிய செய்தியாவது:-


இந்திய ஒன்றிய அரசு இன்று தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களை ஏமாற்றுகிற அறிக்கையாகும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, சிறுபான்மை சமூகத்தவருக்கான திட்டங்கள் பலவற்றுக்கு நிதியைக் குறைத்து அவர்களுக்குத் துரோகமிழைக்கும் இந்த பட்ஜெட், நாட்டில் பாகுபாடுகளை அதிகரிக்கச் செய்யவேண்டும் என்ற சனாதன நோக்கத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. பாஜக அரசின் இந்த மக்கள்விரோத பட்ஜெட்டை விசிக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.



மோடி அரசால் வஞ்சிக்கப்படும் மக்கள் அடுத்து வரும் மாநிலத் தேர்தல்களிலும், பொதுத் தேர்தலிலும் சரியான பாடத்தை அவர்களுக்குப் புகட்டுவார்கள்.

குடியரசுத் தலைவர் உரையிலும், பொருளாதார ஆய்வு அறிக்கையிலும், இந்திய பொருளாதாரம் சிறப்பாக இருக்கிறது என்ற தோற்றத்தை உருவாக்கிய பாஜக அரசு, இன்று தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையிலும் அதே ஏமாற்று வேலையைத் தொடர்ந்துள்ளது. நடுத்தர வர்க்க மக்களுக்கு வருமான வரி விதிப்பில் மிகப்பெரிய சலுகை அளித்து விட்டது போல் நிதி அமைச்சர் தனது பட்ஜெட் உரையில் ஆரவாரமாக அறிவித்தார். ஆனால் அவரது அறிவிப்பால் 2 கோடி ரூபாய்க்கு மேல் வருட வருமானம் ஈட்டுகிறவர்களே பயனடைவார்கள், மாத சம்பளம் வாங்கும் மற்ற நடுத்தர வர்க்கப் பிரிவினர் எவருக்கும் இந்த அறிவிப்பால் எந்தவொரு பயனும் கிடையாது.


பாஜக அரசு மக்களுக்கு அடிப்படைத் தேவையான கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டைத் தொடர்ந்து குறைத்து வருகிறது. தேசியக் கல்விக் கொள்கையில் கல்விக்காக உள்நாட்டு உற்பத்தியில் ( ஜிடிபி) 6 % ஒதுக்குவோம் என்று அறிவித்தது பாஜக அரசு. ஆனால் கல்விக்கான ஒதுக்கீடு கடந்த ஆண்டு 2.64% ஆக இருந்தது. அதை இந்த ஆண்டு 2.5% ஆகக் குறைத்து விட்டது. அதுபோலவே சுகாதாரத்துக்கான ஒதுக்கீடு கடந்த ஆண்டு ஜிடிபியில் 2.2% ஆக இருந்தது. அது இப்போது 1.97% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.


கிராமப்புறங்களைச் சார்ந்த மக்கள் பயனடைவதற்கென உருவாக்கப்பட்ட தேசிய வேலை உறுதித் திட்டத்துக்கான நிதியை மோடி அரசு வெகுவாகக் குறைத்து இருக்கிறது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அந்தத் திட்டத்துக்கென 73 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஆண்டோ அது 60 ஆயிரம் கோடியாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.


பட்டியலினத்தவர் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கான வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு என்பது குறைவாகவே உள்ளது. சிறுபான்மையினர் நலத்துறைக்கு கடந்த ஆண்டு 5020.50 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் சுமார் 2000 கோடி ரூபாய் இந்தாண்டு குறைக்கப்பட்டு வெறும் 3097.60 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளில் படிக்கும் சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கொடுக்கப்படும் ப்ரி மெட்ரிக் ஸ்காலர்ஷிப்புக்கான தொகையில் 1000 கோடி ரூபாயைக் குறைத்து இருக்கிறார்கள். அதுபோல சிறுபான்மையினருக்கான திறன் மேம்பாட்டு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி 400 கோடி ரூபாய்க்கு மேல் குறைக்கப்பட்டு இருக்கிறது. சிறுபான்மையினர் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் பகுதிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் பிரதம மந்திரி ஜன் விகாஸ் காரிய கரம் என்ற திட்டத்திற்கு கடந்த ஆண்டு 1650 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் 1050 கோடி குறைக்கப்பட்டு இந்த பட்ஜெட்டில் வெறும் 600 கோடி ரூபாய் மட்டும் தான் ஒதுக்கப்பட்டது இருக்கிறது. சிறுபான்மை மதத்தினரைக் கட்டமைப்பு ரீதியாக திட்டமிட்டு அழிக்கும் நடவடிக்கையாகவே இதை நாம் பார்க்க வேண்டியுள்ளது.


இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கான புதிய திட்டங்களைப்பற்றியோ, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு பற்றியோ ஒரு வார்த்தையும் சொல்லப்படவில்லை. 


பட்ஜெட்டில் ஒவ்வொரு முறையும் திருக்குறளை மேற்கோள் காட்டும் நிதி அமைச்சர் இந்த பட்ஜெட்டில் அதையும் நிறுத்திவிட்டார். திருக்குறளைச் சொல்வதுகூட தமிழ்நாட்டுக்கு அளிக்கும் சலுகை என அவர் நினைத்துவிட்டார்போலும்.


ஒட்டுமொத்தத்தில் இந்த பட்ஜெட் வெகு மக்களுக்கு எதிரான பட்ஜெட். வேலை வாய்ப்புகளை உருவாக்காத பட்ஜெட். விலைவாசியைக் குறைக்க உதவாத பட்ஜெட். இந்தியப் பொருளாதாரத்தை வீழ்ச்சியிலிருந்து மீட்பதற்கு எந்தவிதத்திலும் உதவாத பட்ஜெட்.


வாய் ஜாலம் மூலம் மக்களை ஏய்த்துவிடலாம் என நினைக்கும் மோடி அரசின் இந்த மக்கள் விரோத பட்ஜெட்டுக்கு எமது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.


இவண்:

தொல்.திருமாவளவன்,

நிறுவனர் – தலைவர்,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை: 

---------------------------------------------------------

சனாதன நோக்கம் கொண்ட மக்கள் விரோத அறிக்கையாகும்! 

-----------------------------------------------------------

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம்! 

 --------------------------------------------------------

இந்திய ஒன்றிய அரசு இன்று தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களை ஏமாற்றுகிற அறிக்கையாகும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, சிறுபான்மை சமூகத்தவருக்கான திட்டங்கள் பலவற்றுக்கு நிதியைக் குறைத்து அவர்களுக்குத் துரோகமிழைக்கும் இந்த பட்ஜெட், நாட்டில் பாகுபாடுகளை அதிகரிக்கச் செய்யவேண்டும் என்ற சனாதன நோக்கத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. பாஜக அரசின் இந்த மக்கள்விரோத பட்ஜெட்டை விசிக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.


மோடி அரசால் வஞ்சிக்கப்படும் மக்கள் அடுத்து வரும் மாநிலத் தேர்தல்களிலும், பொதுத் தேர்தலிலும் சரியான பாடத்தை அவர்களுக்குப் புகட்டுவார்கள்.

குடியரசுத் தலைவர் உரையிலும், பொருளாதார ஆய்வு அறிக்கையிலும், இந்திய பொருளாதாரம் சிறப்பாக இருக்கிறது என்ற தோற்றத்தை உருவாக்கிய பாஜக அரசு,  இன்று தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையிலும் அதே ஏமாற்று வேலையைத் தொடர்ந்துள்ளது. நடுத்தர வர்க்க மக்களுக்கு வருமான வரி விதிப்பில்  மிகப்பெரிய சலுகை அளித்து விட்டது போல் நிதி அமைச்சர் தனது பட்ஜெட் உரையில் ஆரவாரமாக அறிவித்தார். ஆனால் அவரது அறிவிப்பால் 2 கோடி ரூபாய்க்கு மேல் வருட வருமானம் ஈட்டுகிறவர்களே பயனடைவார்கள், மாத சம்பளம் வாங்கும் மற்ற நடுத்தர வர்க்கப் பிரிவினர் எவருக்கும் இந்த அறிவிப்பால் எந்தவொரு பயனும் கிடையாது.


பாஜக அரசு மக்களுக்கு அடிப்படைத் தேவையான கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டைத் தொடர்ந்து குறைத்து வருகிறது. தேசியக் கல்விக் கொள்கையில் கல்விக்காக உள்நாட்டு உற்பத்தியில் ( ஜிடிபி) 6 % ஒதுக்குவோம் என்று அறிவித்தது பாஜக அரசு. ஆனால் கல்விக்கான ஒதுக்கீடு கடந்த ஆண்டு 2.64% ஆக இருந்தது. அதை இந்த ஆண்டு 2.5% ஆகக் குறைத்து விட்டது. அதுபோலவே சுகாதாரத்துக்கான ஒதுக்கீடு கடந்த ஆண்டு ஜிடிபியில் 2.2% ஆக இருந்தது. அது இப்போது 1.97% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.


கிராமப்புறங்களைச் சார்ந்த மக்கள் பயனடைவதற்கென உருவாக்கப்பட்ட தேசிய வேலை உறுதித் திட்டத்துக்கான நிதியை மோடி அரசு வெகுவாகக் குறைத்து இருக்கிறது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அந்தத் திட்டத்துக்கென 73 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஆண்டோ அது 60 ஆயிரம் கோடியாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.


பட்டியலினத்தவர் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கான வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு என்பது குறைவாகவே உள்ளது. சிறுபான்மையினர் நலத்துறைக்கு கடந்த ஆண்டு 5020.50 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் சுமார் 2000 கோடி ரூபாய் இந்தாண்டு குறைக்கப்பட்டு வெறும் 3097.60 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளில் படிக்கும் சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கொடுக்கப்படும் ப்ரி மெட்ரிக் ஸ்காலர்ஷிப்புக்கான தொகையில் 1000 கோடி ரூபாயைக் குறைத்து இருக்கிறார்கள். அதுபோல சிறுபான்மையினருக்கான திறன் மேம்பாட்டு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி 400 கோடி ரூபாய்க்கு மேல் குறைக்கப்பட்டு இருக்கிறது. சிறுபான்மையினர் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் பகுதிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் பிரதம மந்திரி ஜன் விகாஸ் காரிய கரம் என்ற திட்டத்திற்கு கடந்த ஆண்டு 1650 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் 1050 கோடி குறைக்கப்பட்டு இந்த பட்ஜெட்டில் வெறும் 600 கோடி ரூபாய் மட்டும் தான் ஒதுக்கப்பட்டது இருக்கிறது. சிறுபான்மை மதத்தினரைக் கட்டமைப்பு ரீதியாக திட்டமிட்டு அழிக்கும் நடவடிக்கையாகவே இதை நாம் பார்க்க வேண்டியுள்ளது.


இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கான புதிய திட்டங்களைப்பற்றியோ, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு பற்றியோ ஒரு வார்த்தையும் சொல்லப்படவில்லை. 


பட்ஜெட்டில் ஒவ்வொரு முறையும் திருக்குறளை மேற்கோள் காட்டும் நிதி அமைச்சர் இந்த பட்ஜெட்டில் அதையும் நிறுத்திவிட்டார். திருக்குறளைச் சொல்வதுகூட தமிழ்நாட்டுக்கு அளிக்கும் சலுகை என அவர் நினைத்துவிட்டார்போலும்.


ஒட்டுமொத்தத்தில் இந்த பட்ஜெட் வெகு மக்களுக்கு எதிரான பட்ஜெட். வேலை வாய்ப்புகளை உருவாக்காத பட்ஜெட். விலைவாசியைக் குறைக்க உதவாத பட்ஜெட். இந்தியப் பொருளாதாரத்தை வீழ்ச்சியிலிருந்து மீட்பதற்கு எந்தவிதத்திலும் உதவாத பட்ஜெட்.


வாய் ஜாலம் மூலம் மக்களை ஏய்த்துவிடலாம் என நினைக்கும் மோடி அரசின் இந்த மக்கள் விரோத பட்ஜெட்டுக்கு எமது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.


இவண்:

தொல்.திருமாவளவன்,

நிறுவனர் – தலைவர்,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

இவ்வாறு தெரிவித்துள்ளார்..

ஞாயிறு, 22 மே, 2022

தூத்துக்குடியில் கிஞ்சித்தும் குறையாத ஸ்டெர்லைட் எதிர்ப்பு மனநிலை துப்பாக்கி சூட்டில் உயிர் நீத்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் 4 ம் ஆண்டு நினைவு அஞ்சலி ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் அகற்றபட வேண்டும் தூத்துக்குடி அக்கா போராசிரியை பாத்திமா பாபு பரப்பரப்பு

 தூத்துக்குடி லீக்ஸ் சிறப்பு பதிவு 22-05-2022

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் துப்பாக்கி சூட்டில் உயிர் துறந்த 16 போராளிகள்

இன்று 4ம் ஆண்டு நினைவு அஞ்சலி  தூத்துக்குடி மாநகர மக்கள் அனைவரிடம் இன்னும் கிஞ்சித்தும் குறையாத ஸ்டெர்லைட் எதிர்ப்பு மனநிலை அதிர்வுகள் தூத்துக்குடி மாநகரில் பல இடங்களில் நினைவுவேந்தல் வைக்கப்பட்டிருந்தது.





 ஸ்டெர்லைட் என்ற ஒரு தனியார் ஆலை வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்த தூத்துக்குடி மக்கள் மீது அப்போதைய அதிமுக ஆட்சியில்  தமிழக அரசு காவல்துறை 

கடந்த 2018 மே - 22 -ல் அன்று  மிக கொடூரமாக வாய் பகுதி முளை சிதறிட தலைப் பகுதி துப்பாக்கி சூடு எண்ணற்ற இளைஞர்கள் அடித்தும் சித்ரவதை செய்தார்கள் என்கிறார்கள்.

இத்தனைக்கும் ஸ்டெர்லைட் ஆலை முன்பு யாரும் எந்த போராட்டம் நடத்த செல்லவில்லை. பொதுமக்கள் பெண்கள் சிறு குழந்தைகள் உட்பட தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனுக்களோடு போனார்கள். அங்கு சென்றவர் களுக்கெல்லாம் ஒரு விதத்தில் பாதிப்பு இன்னும் தொடர்கதை தான் என்கிறார்கள்.

அன்று தமிழக காவல்துறைநடத்திய  துப்பாக்கி சூடு இதில் 13 பேர் அன்றைய தினமும் பின்பு 3 பேரும் மொத்தம் 16 பேர்  உயிர் துறந்தனர்.

இவர்களின் உயிர் தியாகத்தால்.. 

தமிழக அரசு ஸ்டெர்லைட் எனும் தனியார் ஆலையை முடி சீல் வைக்க உத்தரவிட்டது.

இன்று 2022 மே - 22 நான்காம் ஆண்டு நினைவு நாள்

 துப்பாக்கி சூட்டில் இறந்த போன ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகளின் திருவுருவங்களுக்கு மலர் மாலை ரோஜா மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.



 தூத்துக்குடியில் பலர் கண்ணீர் மல்க  மரியாதை செலுத்தியதை காண முடிந்தது.



தூத்துக்குடி மாநகர் பல இடங்களில் போராளிகள் நினைவு வேந்தல் 

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பாக தூத்துக்குடி அக்கா பேராசிரியை பாத்திமா பாபு தலைமையில் வியாபார வணிகர் சங்கம் மற்றும் மீனவர் சங்கம் மற்றும்  அதிலுள்ள முக்கிய பிரதிநிதிகளுடன் ... ஸ்டெர்லைட் எதிர்ப்பு தெரிவித்து வரும் அரசியல் கட்சி மா.செ மற்றும் முக்கிய நிர்வாகிகள் விராங்கனை இயக்கம் சேர்ந்தவர்கள் நகரில் ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று அங்கு காத்திருந்த ஏராளமான பொதுமக்கள் உடன் உயிர் நீத்த போராளிகளின் திருவுருவம் முன்பு மெழகுவர்த்தி ஏற்றியும் ரோஜா மலர் தூவி அப் பகுதிகளில் மரியாதை செலுத்தினார்கள்.



இதனால் எங்கெங்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது என கண்காணிக்க தூத்துக்குடி அக்கா போராசிரியை பாத்திமா பாபு கார் செல்லும் வழி எல்லாம் முன்னே போலீஸ் ஜிப் ஜந்து டூவிலர் பைக் உளவு போலீசார் துரத்தி கொண்டே இருந்தார்கள்.

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் தூத்துக்குடி அக்கா. பேராசிரியை பாத்திமா பாபு பேசியதாவது:-

திமுக ஆட்சி அவர்கள் மீது இன்னும் நம்பிக்கை இருக்கிறது.

இத்தனை பேர் தங்கள் உயிரை தியாகம் செய்து போராடி உள்ளார்கள் அவர்கள் ஆத்மா பார்த்து கொண்டு தான் இருக்கின்றது

எக்காரணத்திற்கும் ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம்

இனி 

தூத்துக்குடியில்

ஸ்டெர்லைட் ஆலை  அகற்றபட வேண்டும் அதை அடியோடு தமிழக அரசு அகற்றிட வேண்டும் என்பதே இங்கு அனைவரின் வேண்டுதலாக இருக்கின்றது. என்றார்.

ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை ?நினைவு நாள் முன்னிட்டு தூத்துக்குடியில் இன்று 2500-க்கும் மேற்பட்ட போலீசார் பல மாவட்ட எஸ்.பி.க்கள் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள். 

அங்கு என்னென்ன பொதுமக்கள் யாரெல்லாம் என அனைவரையும் போலீசார் வீடியோ போட்டோ எடுத்து ஆவணப்படுத்தி கொண்டிருந்தார்கள்.


வியாழன், 12 மே, 2022

பனை தொழிலாளர்களுக்கு 3 நாட்கள் நவீன முறையில் இயந்திரங்கள் மூலம் மதிப்புக்கூட்டப்பட்ட பனைபொருட்கள் தயாரிக்கும் பயிற்சி



தூத்துக்குடி லீக்ஸ் :- 12-05.2022

நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தரமான பனைவெல்லம் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பனைபொருட்கள் தயாரிப்பது தொடர்பான பயிற்சி கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி

நிலையத்தின் வேளாண் வணிக தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய
கட்டிடத்தில் வைத்து 11.05.2022 முதல் 13.05.2022 முடிய மூன்று தினங்கள்
நடைபெறுகிறது.



இது பற்றிய செய்தியாவது:-

தமிழ்நாடு பனை பொருள் வளர்ச்சி வாரியத்தின் கட்டுப்பாட்டின்

கீழ் செயல்படும் திருநெல்வேலி மாவட்ட பனை பொருட்கள் கூட்டுறவு
சம்மேளனம் தூத்துக்குடி திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மூன்று
மாவட்டங்களை உள்ளடக்கிய கூட்டுறவு நிறுவனமாகும். 


இதில் 95 ஆரம்ப
பனைவெல்ல கூட்டுறவு சங்கங்கள் உறுப்பினர்களாக உள்ளது. இதில்
தூத்துக்குடி மாவட்டத்தில் 46 பனைவெல்ல கூட்டுறவு சங்கங்கள் உள்ளது.


அதில் 14304 தனிநபர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். சம்மேளனத்தால்
ஆண்டு ஒன்றிற்கு மூன்று கோடியே அறுபத்து ஒன்பது லட்சம் வணிகம்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2021-2022 ஆண்டு வேளாண்மை மற்றும்
உழவர் நலத்துறையின் பனை மேம்பாட்டு இயக்கம் என்ற அறிவிப்பில் ஒரு
கூறான பனைவெல்லம் உற்பத்தி தொடர்பான நவீன தொழில் நுட்பத்தை
பயன்படுத்தி தரமான பனைவெல்லம் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட
பனைபொருட்கள் தயாரிப்பது தொடர்பான பயிற்சியின் ஒரு பகுதியாக
பட்டறிவு பயண பயிற்சி கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி
நிலையத்தின் வேளாண் வணிக தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய
கட்டிடத்தில் வைத்து 11.05.2022 முதல் 13.05.2022 முடிய மூன்று தினங்கள்
நடைபெற உள்ளது. 


முதல் நாளான 11.05.2022 அன்று பயிற்சியானது
கிள்ளிக்குளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின்
முதல்வர் முனைவர் க.இறைவன் அருட்கனி அய்யநாதன் 
துவக்கி வைக்கப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.



கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின்
வேளாண் வணிக தொழில் முனைவோர் மேம்பாட்டு மையமானது பதநீர்
வடிகட்டி தொழில் நுட்பம் மூலம் பதநீரின் ஆயுள் காலத்தை 30 நாட்கள்
வரை நீடிக்க வைக்கும் இயந்திரத்தை கொண்டுள்ளது. 


மேலும் பதநீரில்
இருந்து சுகாதாரமான சுத்தமான பனைவெல்லம்  தயார் செய்தல்,
பனங்கற்கண்டு தயார் செய்தல், பனம் பாகு தயார் செய்தல்,
பனங்கிழங்கிலிருந்து மாவு தயார் செய்தல், பனம் பழத்திலிருந்து பனம்
பழச்சாறு தயார் செய்தல், ஆகியவற்றிற்கான நவீன இயந்திரங்களையும்,
தயார் செய்யப்பட்ட பொருட்களை பாதுகாத்திட குளிர்சாதன
நிலையத்தினையும் கொண்டுள்ளது. மிகச்சிறந்த உட்கட்டமைப்பு
வசதிகளை கொண்டுள்ளது.


 இம்மையத்தில் 50 பனைத் தொழிலாளர்கள்
நவீன முறையில் இயந்திரங்கள் மூலம் மதிப்புக்கூட்டப்பட்ட
பனைபொருட்கள் தயாரிக்கும் பயிற்சியினை பெற்றனர். 

இப்பயிற்சி மூலம்
பனைத் தொழில் மேம்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இந்நிகழ்ச்சியில் கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி
நிலையத்தை சார்ந்த பேராசிரியர்கள் முனைவர் ஏ.ப்பூலா,
முனைவர்.ரவீந்திரன', முனைவர். சபரிநாதன், கிள்ளிக்குளம் வேளாண்
தொழில் முனைவோர் மேம்பாட்டு மையத்தின் தலைமை செயல் அதிகாரி
ஜீவிதா மற்றும் தூத்துக்குடி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்
நிறுவனத்தின் உதவி இயக்குநர் ஜெரினா பப்பி. இப்பயிற்சிக்கு
திருநெல்வேலி மாவட்ட பனை பொருட்கள் கூட்டுறவு சம்மேளனம்
மேலாண்மை இயக்குநர் மு.பாலசுப்பிரமணியன்  ஏற்பாடு
செய்தார். 


இந்நிகழ்ச்சியில் முத்துக்குமார். கற்பகவிநாயகம்,
அரிகிருஷ்ணன், தங்க மாரியப்பன், பிரதீப், முத்துக்கிருஷ்ணன்.
அருண்குமார். செல்வராஜ் பாலகிருஷ்ணன், ஆகியோர் கலந்து
கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தூத்துக்குடி.

வியாழன், 5 மே, 2022

ரேசன் அரிசி கடத்தி விற்பதில் கோஷ்டி தகராறு ஒருவர் கொலை 5 பேர் கைது தூத்துக்குடி மாவட்டத்தில் ரேசன் கடை முன் நிற்கும் சமூக விரோதிகளை களையெடுப்பார்களா?

திருட்டுதனமாக ரேசன் அரிசி கடத்தி விற்கும் கும்பலில் கோஷ்டி தகராறு  ஏற்பட்டது இதில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக காவல்துறை 5 பேர்  கைது செய்துள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பு 



தமிழக அரசு மக்களுக்கு இலவசமாக பொதுமக்களுக்கு அரசி ரேசன் கடைகளில் வழங்கி வருகிறது. கடைகள் முன்பு சமூக விரோத கும்பல் இருந்து வருவதும் இதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஒழுங்கான நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் தமிழக முழுவதும் ரேசன் அரிசி கடத்தப்பட்டு காவல்துறையினரிடம் அகப்படுகிறது.


தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ரேஷன் அரிசி களை திருட்டுதனமாக  கடத்தி கடைகளில்  வாங்கி விற்பது சில கும்பல்கள் ஈடுபட்டு வருகிறது. 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செக்கடி தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் துரைபாண்டி (35) 

கோவில்பட்டியை சேர்ந்த மாணிக்கராஜா  கயத்தாறு காப்புலிங்கம்பட்டியை சேர்ந்தவர்களான வெயில்காளை மகன் மகராஜன் (40), ராமகிருஷ்ணன் மகன் ராஜாராம் (40) என்பவர்களுக்கும் இடையே ரேஷன் அரிசி வாங்கி விற்பது சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

 

இந்த முன்விரோதம் காரணமாக துரைபாண்டி கடந்த 03.05.2022 அன்று கயத்தாறு தளவாய்புரம் பகுதிக்கு சென்ற போது அங்கு வந்த மகாராஜன், ராஜாராம் மற்றும் அவரது நண்பர்களான காப்புலிங்கம்பட்டியை சேர்ந்த சுயம்புலிங்கம் மகன் மனோரஞ்சின்குமார் (எ) மனோஜ் (23), சவலாப்பேரியை சேர்ந்த பாலசுப்ரமணியன் மகன் ஜானகிராமன் (30) மற்றும் கோவில்பட்டி காந்தி நகரைச் சேர்ந்த நடராஜன் மகன் சின்னதுரை (35) ஆகியோர் சேர்ந்து துரைபாண்டியை கம்பால் தாக்கியுள்ளனர். 

இச்சம்பவத்தால் துரைபாண்டி (35) கடந்த 03.05.2022 அன்று  கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (04.05.2022) அதிகாலை உயிரிழந்தார்.


இதுகுறித்து தகவலறிந்த கயத்தாறு காவல் நிலைய போலீசார் துரைபாண்டி என்பவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.


இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன்கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சங்கர் விரைந்து கைது செய்ய உத்தரவிட்டார்.


அவரது உத்தரவின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர்  மேற்பார்வையில் கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் முத்து தலைமையில் உதவி ஆய்வாளர்கள் அந்தோணி திலீப் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், மேற்படி கொலையுண்ட துரைப்பாண்டி என்பவர் கோவில்பட்டியை சேர்ந்த மாணிக்கராஜா என்பவருக்கு விற்பனைக்காக ரேஷன் அரிசியை வாங்கி கொடுத்து வந்துள்ளார். 

இதனால் படுகாயமடைந்த துரைப்பாண்டி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அதிகாலை உயிரிழந்தது தெரியவந்தது.


உடனடியாக போலீசார் மேற்படி எதிரிகள் மகாராஜன், ராஜாராம், மனோரஞ்சின்குமார் (எ) மனோஜ், ஜானகிராம், மற்றும் சின்னத்துரை ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து கயத்தாறு காவல் நிலைய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதன், 4 மே, 2022

தூத்துக்குடியில்தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை இளைஞர் அணி சார்பில் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் கண் சிகிச்சை முகாம்

 


தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை இளைஞர் அணி சார்பில் 39வது வணிகர் தினவிழாவை‌ முன்னிட்டு இன்று ( 04.05.2022) காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கத்தில் வைத்து  மருத்துவ முகாம் மற்றும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

இதுபற்றிய செய்தியாவது:-
39-வது வணிகர் தின விழாவை
முன்னிட்டு
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை
இளைஞர் அணி சார்பில்
அகர்வால் கண் மருத்துவமனை மற்றும்
Dr. Mohan's Diabetes Specialities Centre
இணைந்து நடத்தும்
மருத்துவ முகாம் மற்றும் கண் சிகிச்சை முகாம்
நாள் : 04-05-2022 புதன்கிழமை
நேரம் : காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை
இடம் : தூத்துக்குடி நகர வர்த்தர்களின் மத்திய சங்கம்
J.N. பட்டு மஹால் எதிரில், மணிநகர், தூத்துக்குடி
தொடங்கி வைப்பவர் : பழரசம் பா.விநாயகமூர்த்தி 
மாவட்ட தலைவர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைை மற்றும் மாநிலஇளைஞர் அணி தெர்மல் ராஜா .


தூத்துக்குடி புதிய பேருந்து நிலைய வியாபாரி கள் கண்சிகழ்ச்சை முகாமில் கலந்து கொண்டனர்.

இன்று நடைபெற்ற கண்சிகழ்ச்சை முகாமில் தூத்துக்குடி மாநகர வியாபாரி கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆர்வத்துடன் ஏராளமானோர் வந்து கலந்து கொண்டார்கள்.



புதன், 23 மார்ச், 2022

தூத்துக்குடி காவல் துறை நம்பருக்கு வெடிகுண்டு மிரட்டல்? அண்ணா நகர் வாலிபர் கைது பரபரப்பு .

தூத்துக்குடி மாவட்ட காவல் கட்டுபாட்டு அறை வாட்ஸ்அப் எண்ணிற்கு காவல்துறையினரை ஆபாசமாக திட்டியும், தமிழ்நாடு காவல்துறை சின்னத்தில் உள்ள தேசியகொடியில் ஆபாசமான படங்களை சித்திரித்தும், காவல் அலுவலகத்தில் குண்டு வெடிக்கும் என்று மிரட்டியும் தொடர்ந்து செய்தி அனுப்பியவர் கைது செய்யப்பட்டார்.

  

கைது செய்யப்பட்ட மணிகண்டன்

தூத்துக்குடி மாவட்ட காவல் கட்டுபாட்டு அறை வாட்ஸ்அப் எண்ணாண 9514144100 ஹலோ போலீஸ் எண்ணிற்கு கடந்த 06.03.2022 அன்று 48729759460 மற்றும் 4859086761 ஆகிய எண்களிலிருந்து காவல்துறையினரை ஆபாசமாக திட்டியும், தமிழ்நாடு காவல்துறை சின்னத்தில் உள்ள தேசியகொடி மற்றும் அசோக சக்கரத்தில் ஆபாச படத்தை வைத்து சித்தரித்தும், காவல் அலுவலகத்தில் குண்டு வெடிக்கும் என்று மிரட்டியும் தொடர்ந்து செய்தி வருவதாக  மாவட்ட கட்டுபாட்டு அறையில் பணிபுரியும் முதல் நிலை காவலர் ராஜலிங்கம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்   புகார் அளித்தார்.


அவரது புகாரின்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.


அவரது உத்தரவின்பேரில் சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் சைபர் குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.


மேற்படி மாவட்ட காவல் கட்டுபாட்டு அறை வாட்ஸ்அப் எண்ணிற்கு ஆபாசமாக செய்தி அனுப்பியது தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த இளங்கோவன் மகன் மணிகண்டன் (31) என்பதை கண்டு பிடித்தனர்.. 


மேலும் விசாரணையில் மணிகண்டன் இதே போன்று கோயம்புத்தூர் மற்றும் மதுரை உட்பட 4 மாவட்ட கட்டுபாட்டு அறை வாட்ஸ்அப் எண்களுக்கு காவல்துறையினரை ஆபாசமாக திட்டி செய்தி அனுப்பியுள்ளதும் தெரியவந்தது. 

உடனே மேற்படி சைபர் குற்ற பிரிவு போலீசார் மணிகண்டனை கைது செய்து எதற்காக இப்படி செய்தார் என விசாரித்து வருகின்றனர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


புதன், 16 பிப்ரவரி, 2022

பீஹாரிலிருந்து கையில் ஒரு டிபன் பாக்ஸ், ஒரு படுக்கையோடு வந்தேன் .தூத்துக்குடி ஸ்டெர்லைட் வேதாந்தா அனில் அகர்வால் டுவிட்டரில்

 வணிகத்தில் பெரும் வெற்றியை அடைந்த சிலர், எப்போதாவது தங்களது ஆரம்பகால வாழ்க்கை நிலையை பொது வெளியில் பகிர்ந்து கொள்வதுண்டு. அந்த வரிசையில் ...

 இப்போது,

தூத்துக்குடி ஸ்டெர்லைட்'வேதாந்தா' குழுமத்தின் தலைவர் அனில் அகர்வாலும் சேர்ந்துள்ளார்.



இன்று, அனில் அகர்வால் உலகறிந்த 

ஒரு பெரும் தொழிலதிபர்.

ஆனால், அவர் மும்பைக்கு, கையில் ஒரு படுக்கை, ஒரு டிபன்பாக்ஸ் உடன் மட்டுமே வந்து இறங்கியவர்.


அண்மையில் டுவிட்டரில், அவர் முதன்மும்பைக்கு  முதலாக அனில் அகர்வால் வந்த சம்பவத்தை  நினைவு கூர்ந்துள்ளார்.


தூத்துக்குடி ஸ்டெர்லைட் வேதாந்தா அனில் அகர்வால் டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:


லட்சக்கணக்கான மக்கள் தங்கள் அதிர்ஷ்டத்தை சோதித்து பார்க்க 

மும்பைக்கு வருகின்றனர். அப்படி வந்தவர் களில் நானும் ஒருவன்.


கையில் ஒரு டிபன் 4 பாக்ஸ், ஒரு படுக்கை, கண்களில் கனவு...

இவற்றுடன் நான் பீஹாரிலிருந்து கிளம்பிய நாள் எனக்கு நினைவிருக்கிறது. 

நான் 'விக்டோரியா டெர்மினஸ்' ரயில் நிலையத்திற்கு வந்தேன். அங்கே தான் முதல் முறையாக கறுப்பு மஞ்சள் வண்ணத்திலான டாக்சி, மாடி பஸ் போன்றவற்றை பார்த்தேன்.

இனவ எல்லாமே இதற்கு முன் நான் சினிமாவில் தான் பார்த்திருந்தேன்.


நான்இளைஞர்களை கடினமாக உழைக்கவும், இலக்குகளை எட்டவும் ஊக்குவிக்கிறேன்.

இவ்வாறு அவர்கூறியுள்ளார்.

தூத்துக்குடியில். வேதாந்தா அனில் அகர்வால் ஸ்டோரி

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் வேதாந்தா -வின்  ஸ்டெர்லைட் ஆலை இயங்கிவந்ததது.

தூத்துக்குடி பொது மக்கள் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதில் துப்பாக்கி சூடு  13பேர் பின்பு 2 பேர் துப்பாக்கி சூட்டில் இறந்து போனார்கள் தூத்துக்குடியில் அனைத்து இடங்களிலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடும் கொந்தளிப்பு  இதனால் தமிழக அரசு 2018 மே 28-ல் ஸ்டெர்லைட் ஆலையை பூட்டி சீல் வைத்து விட்டது.

தூத்துக்குடியில்  2018-ல் மூடிய ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கடந்த 4 வருடமாக வேதாந்தா ஸ்டெர்லைட் அணில் அகர்வால் முயற்சித்து வருகிறார்.

அனில் அகர்வால்,

'வேதாந்தா ரிசோசர்ஸ்'நிறுவனத்தை 1970ல்துவக்கினார். இது இப்போது லண்டனைதலைமையிடமாக கொண்ட உலகளாவிய நிறுவனமாக உயர்ந்துள்ளது.


இதன் ஆண்டு வருவாய், மட்டும் 2021

நிலவரப்படி, கிட்டத்தட்ட ரூபாய்88 ஆயிரம் கோடியாம்? அப்படியானால் ஒவ்வொரு வருடமும் அடேங்கப்பா தலை சுற்றுகிறது.

தூத்துக்குடியில் வேதாந்தா ஸ்டெர்லைட் அனில் அகர்வால் ஆலை மூடியதால் கஷ்டப்படுவதாகவும் ... திறந்தா தான் சாப்பாடு என தூத்துக்குடியில் ரீல் விட்டு  சிலர் புலம்பி வருவது தான் சிரிப்பை வரவழைக்கிறது. என்கிறார்கள்.


சனி, 27 நவம்பர், 2021

அதிமுக முன்னாள் அமைச்சர் மகன் கைது!!! 1,10,00,000/- மதிப்பிலான முந்திரி பருப்பை ஏற்றி கொண்டு வந்த கண்டெய்னர் லாரிகடத்தல்? தூத்துக்குடி போலீஸ் அதிரடி நடவடிக்கை!! தூத்துக்குடி அ திமுகவினர் அதிர்ச்சி!!!

தூத்துக்குடி அதிமுக வினர் அதிர்ச்சி தூத்துக்குடி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் மகன் ஞான்ராஜ் ஜெயசிங் மற்றும்  ஏழு பேர் கள்  ரூபாய்  1,10,00,000/- மதிப்பிலான முந்திரி பருப்பை ஏற்றி கொண்டு வந்த கண்டெய்னர் லாரியை கடத்தி சென்றனர்.  தூத்துக்குடி மாவட்ட போலீசார் சினிமா பாணியில் விரட்டி சென்று டோல்கேட் சிசிடிவி கேமரா பதிவுகளை பின்பற்றி வளைத்துப் பிடித்து கைது செய்தனர்.




தூத்துக்குடி அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன் மகன் ஜெயசிங் காரில் சென்று ஒரு கோடியே 10 லட்சம் முந்திரிப்பருப்பு ஏற்றி வந்த கண்டெய்னர் லாரியை கடத்தியதாக தூத்துக்குடி போலீசார் கைது நடவடிக்கை எடுத்து ள்ளது தெரியவந்ததும் தூத்துக்குடி மாவட்டத்தில் அதிமுகவினர் மத்தியில் பரபரப்பும்  அதிர்வலையும் ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் நிலையில் அதிமுக கட்சி இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.



இதுபற்றி போலீஸ் தரப்பு செய்தியாவது;-

தூத்துக்குடி பிச்சையா லாரி புக்கிங் அலுவலகம் மூலமாக Tata Benz Lorry TN 04 AK 4710 என்ற கண்டெய்னர் லாரி கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் பகுதியிலுள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் இருந்து நேற்று (26.11.2021) ரூபாய் 1,10,00,000/- மதிப்பிலான 16 டன் முந்திரி பருப்பை ஏற்றி கொண்டு தூத்துக்குடிக்கு வரும்போது தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொட்டலூரணி விலக்கு பகுதியில் வைத்து மேற்படி லாரியை Renault Triber TN 69 BL 5555  என்ற காரில் வந்த மர்ம நபர்கள் வழிமறித்து லாரி ஓட்டுநரான ஹரி (40) த/பெ. வைகுண்டம், ஆலங்குளம், திருநெல்வேலி மாவட்டம்  என்பவரை தாக்கி, அவரையும் லாரியையும் கடத்தி சென்றுள்ளனர். 


இதுகுறித்து மேற்படி லாரி புக்கிங் அலுவலக கணக்கர் முத்துகுமார் (43) த/பெ. சுப்பிரமணியன், ராஜீவ்நகர், தூத்துக்குடி என்பவர் அளித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

கடத்தப்பட்ட கன்டெய்னர் லாரி


உடனடியாக இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ஊரக காவல்துறை உதவி கண்காணிப்பாளர் சந்தீஸ் இ.கா.ப அவருக்கு லாரியை சென்ற மர்மநபர்களை கைது செய்து லாரியை மீட்க உத்தரவிட்டுள்ளார். 




 தூத்துக்குடி ஊரக காவல்துறை உதவி கண்காணிப்பாளர்  தலைமையில் புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ், சிப்காட் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பிராங்க் ஸ்டீபன், புதுக்கோட்டை காவல் நிலைய தலைமை காவலர்கள் சக்திவேல், லெட்சுமணன், முறப்பநாடு காவல் நிலைய தலைமை காவலர் சுந்தராஜ், தட்டப்பாறை காவல் நிலைய முதல் நிலை காவலர் கணேசன், புதுக்கோட்டை காவல் நிலைய முதல் நிலைய கார்த்திகேயன், காவலர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர்கள் அடங்கிய தனிப்படையினர் லாரி மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட காரின் பதிவு எண்களை கொண்டு அங்காங்கே உள்ளே சிசிடிவி கேமரா பதிவுகளின் மூலம் தொழில்நுட்ப உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு, வாகனங்களை பின்தொடர்ந்து விரட்டி சென்றார்கள்.


 நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகா, காக்கநேரி என்ற இடத்தில் வைத்து கடத்தி சென்ற கண்டெய்னர் லாரி மற்றும் கடத்தலில் ஈடுபட்ட காரையும் கைப்பற்றினர்.



,காரில் வந்தவர்களை விசாரணை செய்ததில், அவர்கள்  1) ஞானராஜ் ஜெபசிங் (39) த/பெ. செல்லப்பாண்டியன், அன்னை தெரசா நகர், தூத்துக்குடி,  2) விஷ்ணுபெருமாள் (26) த/பெ. சக்திவேல், பிரையண்ட்நகர், தூத்துக்குடி,  3) பாண்டி (21), த/பெ. முனியசாமி, நேசமணி நகர், முள்ளக்காடு, 4) மாரிமுத்து (30), த/பெ. கணபதி, எம்.ஜி.ஆர் நகர் பாலம், தூத்துக்குடி, 5) செந்தில்முருகன் (35), த/பெ. வேலு, முத்துவிநாயகர் கோவில் தெரு, முறப்பநாடு, 6) ராஜ்குமார் (26), த/பெ. துரைகிருஷ்ணன், மிலிட்டரி லைன் தெரு, பாளையங்கோட்டை, 7) மனோகரன் (36) த/பெ. சேகர், பிள்ளையார் கோவில்தெரு, மட்டக்கடை, தூத்துக்குடி  ஆகிய 7 பேர் என்பதும், இவர்கள் மேற்படி சம்பவ இடத்தில் லாரி ஓட்டுநரை தாக்கி  அவரை காரில் ஏற்றியும், எதிரிகளில் விஷ்ணுபெருமாள் மற்றும் பாண்டி ஆகிய இருவரும் லாரியை ஒட்டி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. 


இதனையடுத்து மேற்படி தனிப்படை போலீசார் உடனடியாக எதிரிகளை கைது செய்து,  ரூபாய். 1,10,00,000/- மதிப்பிலான 16 டன் முந்திரி பருப்பை ஏற்றி கொண்டு வந்த ரூபாய் 10,00,000/- மதிப்பிலான கடத்தப்பட்ட லாரியையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.



மேற்படி கடத்தப்பட்ட லாரியை துரிதமாக செயல்பட்டு சம்பவம் நடைபெற்ற சில மணி நேரங்களில் லாரியை பின்தொடர்ந்து விரட்டி சென்று கைப்பற்றியுள்ளனர்.

முன்னாள்அதிமுக அமைச்சர் செல்லபாண்டியன் மகன் ஞான்ராஜ் ஜெயசிங் என்ன காரணத்திற்காக கடத்தலில் ஈடுபட்டார் என்ற மர்மம் இன்னும் தெரியவர வில்லை என்கிறார் கள்.

திங்கள், 8 நவம்பர், 2021

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் தூண்டுதல் ? தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்-எஸ்.பி. நேரடியாக தலையீட்டு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பாக குற்றசாட்டு மனு வழங்கி வலியுறுத்தல்!!

 ஸ்டெர்லைட் ஆலை செய்த பல்வேறு விதிமுறைகள் காரணமாக தமிழக அரசு மூடி சீல் வைத்துள்ளது. 


இதனை தொடர்ந்து ஒரு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 

இச் சூழலில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் தூண்டுதலின் பேரில் சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து அரங்கேறி கொண்டிருக்கிறது.



சமீபத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்  கெபிஸ்டன் வீடு தேடி சென்று இரவில் அவர் மீதான தாக்குதலும் இதற்கு சான்றாகும்.


 மேலும் மக்களை பிளவு படுத்தும் நோக்கில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும்-தூத்துக்குடி காவல்துறை கண்காணிப்பாளரும் இதில் நேரடியாக தலையீட்டு சட்டரீதியாக உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டுகிறோம்

இவ்வாறு   ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் இன்று 08 - 11 - 2021 வழங்கிய மனுவில்


 தெரிவித்து இருந்தார்கள்.

ஞாயிறு, 17 அக்டோபர், 2021

அதிமுக 50 வது ஆண்டு பொன்விழா மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் அதிமுக வினர் தூத்துக்குடியில் கோலாகலம் கொண்டாட்டம் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்!!!



தூத்துக்குடியில் அதிமுக  50 வது ஆண்டு பொன்விழா நிகழ்ச்சிகள் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளிலும், இன்று ( 17.10.2021 ) தூத்துக்குடிதெற்கு   மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் அதிமுக வினர் திரளாக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கோலாகலமாக கொண்டாடினார்கள்.




தூத்துக்குடி  தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் கட்சி நிறுவனர் எம்.ஜி.ஆர்.மற்றும் ஜெயலலிதா  ஆகியோரின் பிரம்மாண்டமான  ஆளுவுயர  திருவுருவ படம் மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது . மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் ரோஜா மலர் தூவி  மாலை அணிவித்து வணங்கினார் .அப்போது திரண்டு வந்திருந்த அதிமுக வினர். எம்.ஜி.ஆர் - செயலலிதா வாழ்த்தி உற்சாக கரகோஷம் எழுப்பினர்கள்

பின்பு இவ்வருடம் முழுவதும் பொன்விழா ஆண்டு நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாடுவோம் என மா.செ. சண்முகநாதன் தெரிவித்தார்




தூத்துக்குடி பழைய நகராட்சி  அலுவலகம் முன்பு அமைக்கப்பட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அடுத்து தூத்துக் குடி நகராட்சி முன்பு

மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர்

எஸ்.பி. சண்முநாதன்  தலைமையில் பெண்களுக்கு கிரையண்டர், சில்வர் குடம் மற்றும் மாணவர்களுக்கு கிரிக்ட் மட்டை  போன்ற பொருட்கள் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.



அதன்பின் தூத்துக்குடி பழைய முனிசிபல் அலுவலகம் முன்புள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சிலைக்கு முன்பாக  மா.செ எஸ்.பி. சண்முகநாதன்  இனிப்பு மற்றும் கே க் வெட்டி பொதுமக்களுக்கு அதிமுகவினர்  வழங்கினார்கள்.



.அதன்பின் பகுதி தூத்துக்குடி  தெற்கு மாவட்ட அதிமுக  சார்பில் மாநகர் மாவட்டம் முழுவதும் கழக பொன் விழா சிறப்பாக  கொண்டாடப்பட்டது.



வெள்ளி, 15 அக்டோபர், 2021

தூத்துக்குடி கடற்கரை பகுதியில் துப்பாக்கி சூடு போலீஸ் என்கவுண்டரில் பிரபல ரவுடி பலி!!! கூட்டாளிகள் தப்பியோட்டம்?

 பிரபல ரவுடி துரைமுருகன் தனது கூட்டாளியுடன் தூத்துக்குடி கோவளம் கடற்கரை பகுதியில் பதுங்கி  இருப்பது தெரிந்து   போலீஸ் பிடிக்கச் சென்றனர்.



துரைமுருகன்

அப்போது துரைமுருகன்    போலீசாரை அரிவாளால்  இருவரை வெட்டி  கொல்ல   தாக்கியுள்ளான்.

 இதனால்  போலீசார் துப்பாக்கிசூடு என்கெவுன்டரில்  மேற்படி பிரபல ரவுடி துரைமுருகன்  சுட்டு கொல்லப்பட்டார். அவனுடன் பதுங்கி  இருந்த கூட்டாளிகள் இருவர் தப்பி ஓடிவிட்டார்கள்.



இது பற்றிய  செய்தியாவது:-


தூத்துக்குடி  மாவட்டம் கூட்டாம்புளியைச் சேர்ந்த வெற்றிவேல் மகன் துரைமுருகன் (40)  கடந்த 06.10.2021 அன்று பாவூர்சத்திரத்தில் ஜெகதீஸ் என்பவரை கொலை செய்துள்ளார்.

 இது தொடர்பாக பாவூர்சத்திரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து  இவரை கைது செய்வதற்கு போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.


 இந்நிலையில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  தனிப்படை உதவி ஆய்வாளர்  ராஜபிரபு, காவலர்கள் சக்திமாரிமுத்து, டேவிட்ராஜன், சண்முகையா, சுடலைமணி மற்றும் மகேஷ் ஆகியோர் ராஜீவ் நகர் அருகே கோவலம் கடற்கரைப் பகுதியில் ரோந்து சென்றபோது, அங்கு தலைமறைவாக பதுங்கியிருந்த மேற்படி துரைமுருகன் மற்றம் அவரது இரு கூட்டாளிகள் தப்பி ஓட முயன்றனர், அப்போது அவர்களை பிடிக்க முற்பட்டபோது, இரு கூட்டாளிகள் தப்பி ஓடிவிட்டனர். 


ரவுடி  துரைமுருகன் முதலில் காவலர் டேவிட்ராஜனை அரிவாளால் தாக்கியுள்ளார், இதில் டேவிட்ராஜன் காயமடைந்தவுடன் எஸ்.ஐ. ராஜபிரபு துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு, உன் மீது கொலை வழக்கு உள்ளது சரணடைந்து விடு என்று எச்சரித்துள்ளார். 


இருப்பினும் மீண்டும் துரைமுருகன் எஸ்.ஐ ராஜபிரபுவையும் அரிவாளால் தாக்கியுள்ளார். 

அதனால் எஸ்.ஐ ராஜபிரபு தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டதில் மேற்படி துரைமுருகன் பலியானார்.

காயம்பட்ட போலீசார் இருவரை எஸ்.பி மருத்துவ மனையில் நேரில் சென்று பார்த்த போது


இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். 




அவருடன் தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ்,  ஊரக உதவி காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ், இ.கா.ப மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.


போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட துரைமுருகன் தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தில் கடந்த 06.10.2021 அன்று ஜெகதீஸ் (24) என்பவரை கொலை செய்த வழக்கில் போலீசாரால் தீவிரமாக தேடப்பட்டு வரும் பிரபல ரவுடிகள் பட்டியலில் இருந்தான்.

கடந்த 2011ம் ஆண்டு மதுரை மாவட்டம், ஒத்தக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொடிக்குளம் குமார் என்பவரின் மகன் மணிமொழி (44) என்பவரை கடத்திச் சென்று கொலை செய்து, பிரேதத்தை யாருக்கும் தெரியாமல் புதைத்த வழக்கிலும்


2003ம் ஆண்டு தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தங்கம் மகன் செல்வம் என்பவரை கடத்திச் சென்று கொலை செய்து, பிரேதத்தை புதைத்த வழக்கிலும்


அதே போன்று 2003ம் ஆண்டு தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஸ்டாலின் என்பவரை கடத்திச் சென்று கொலை செய்து, பிரேதத்தை புதைத்த வழக்கிலும்


கடந்த 2003ம் ஆண்டு தட்டப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரஜினி என்ற ரஜினிகாந்த என்பவரை பணத்திற்காக கடத்திச் சென்று கொலை செய்து, பிரேதத்தை புதைத்த வழக்கிலும்


கடந்த 2001ம் ஆண்டு முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சீனி என்ற சீனவாசகம் என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கிலும்


2010ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம் வனப்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பாலமுருகன் என்பவரை கொலை செய்த வழக்கிலும்  ஆக மொத்தம் 7 கொலை வழக்குகளிலும் ஈடுபட்டுள்ளார்.


என்கவுன்டரில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட துரைமுருகனுக்கு தூத்துக்குடி மாவட்டம் உட்பட மதுரை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, நாகப்பட்டினர், திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் மேற்படி 7 கொலை வழக்கு உட்பட 21 கொள்ளை வழக்குகளிலும், 6 திருட்டு வழக்கு மற்றும் ஒருவரை அரிவாளால் வெட்டிய வழக்கு என மொத்தம் 35 வழக்குகள் உள்ளது.

தூத்துக்குடி லீக்ஸ் : 15.10.2021


வியாழன், 14 அக்டோபர், 2021

குலசேகரப்பட்டடினம் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் தசரா பத்தாம் திருவிழா!! பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் கோவிலுக்கு வர அனுமதி இல்லை!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முழுவதும் தளர்வுகளுடன் கூடிய 144 தடைஉத்தரவு  31.10.2021 வரை நீட்டிப்பு செய்யப்பட்டு அமலில் உள்ளதால் மாவட்ட ஆட்சியர்  உத்தரவுப்படி ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் தசரா பத்தாம் திருவிழா நாளான 15.10.2021 முதல் 17.10.2021 ஆகிய 3 நாட்கள் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் கோவிலுக்கு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆகவே  மேற்படி 3 நாட்களும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் யாரும் கோவிலுக்கு வர வேண்டாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார்  தெரிவித்துள்ளார்.




மேலும் நாளை (15.10.2021) நடைபெற உள்ள பத்தாம் திருவிழா சூரசம்ஹாரம் சென்ற ஆண்டு போல குலசேகரப்பட்டினம் ஸ்ரீமுத்தாரம்மன் கோவில் வளாகத்திலேயே நடைபெறவுள்ளது, 


கடற்கரையில் நடைபெறாது எனவே பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கடற்கரை பகுதிகளில் யாருக்கும் அனுமதி கிடையாது,



மேலும் குலசை தசரா திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் உள்ளூர் தொலைக்காட்சி  மற்றும் பிரபல தொலைக்காட்சி மற்றும்  YouTube லும் நேரடியாக ஒளிப்பரப்பபடும்.


இதனை மீறி வரும் பக்தர்கள் சோதனை சாவடிகள் மூலம் கண்காணிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுவார்கள். 



ஆகவே பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு தந்து 15.10.2021 முதல் 17.10.2021 ஆகிய 3 நாட்கள் கோவிலுக்கு வராமல் தங்கள் ஊரிலேயே பக்தர்கள் காப்பை கழட்டி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தூத்துக்குடி லீக்ஸ் 14.10.2021



புதன், 6 அக்டோபர், 2021

இறந்தபின்பும் பணம் பிடுங்கும்? தூத்துக்குடி மாநகராட்சியின் மின் தகனம் சுடுகாட்டு அவலம்!!!!

தூத்துக்குடி, 3 ஆம் மைல், இந்திரா நகர், 3A/389 (1) என்ற முகவரியில் வாழ்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் 04.10.2021 அன்று இறந்தார்

இதனை  தொடர்ந்து,  05.10.2021 அன்று தூத்துக்குடி, மாநகராட்சி மின் தகன மையத்தில் பிற்பகலில் தகனம் செய்யும் பொருட்டு அன்று காலையில் அங்குள்ள அலுவலகத்தில் அனுகி முன்தகவல் கொடுக்கச் சென்றனர்.

அப்போது, குலசை தசரா விழாவிற்குப் பணியாளர்கள் சென்றுவிட்டதால் இன்று விடுமுறை என்று கூறியுள்ளனர்.???



 இதனையடுத்து, மீண்டும் தெரிந்தவர் மூலமாகப் பேசியபோது சரி என்று ஒப்புக்கொண்டனர்.  அதைத் தொடர்ந்து பிற்பகல் 3.45 மணி அளவில் தகனப் பகுதிக்குக் இறந்தவர் உடலை கொண்டு செல்லப்பட்டது.  


அங்குள்ள பணியாளர்கள், ஆயிரம் ரூபா கேட்டுள்ளனர். அதற்கு உறவினர் கஷ்டப்பட்ட குடும்பம் எனவே 400 ரூபா தருகிறோம் என்று கூறியுள்ளார்கள். அதற்குப்பின் அவர்கள்,  ஏற்கெனவே ஓர் உடல் எரியூட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே, 7 மணிக்குத் தான் உங்கள் உறவினர் உடலை உள்ளே வைப்போம்.

 எரிந்து  முடிவதற்கு ஒன்பது மணி ஆகும், இயல்பாக எங்களுக்கு ஆறு மணிக்குப் பணி முடிந்துவிடும்; நாளைக்குத்தான் சாம்பல் தருவோம் என்று கூறினர்.


 அதற்கு உறவினர் இன்றைக்குப் பால் வைத்துள்ளோம்; சாப்பாடு எல்லாம் சொல்லியாச்சி என்று கூறியுள்ளார். அதற்குப் பணியாளர், உங்களுக்காகத்தான் வேலை செய்ய வேண்டும்; எனவே ஆயிரம் ரூபா தர வேண்டும், 5.30 மணிக்கு உள்ளே வைத்து விடலாம் என்று கூறினர்.  வேறு வழியின்றி, அவர்கள் கேட்ட பணம் கொடுத்தனர். விடுமுறை என்றும் 7 மணிக்குத்தான் வைப்போம், மறு நாள்தான் சாம்பல் தருவோம் என்றும் பிறகு 5.30 மணிக்கு என்றும் கூறியவர்கள் 4.20 மணிக்கு உள்ளே வைத்து 5.30 மணிக்குச் சாம்பல் தந்துவிட்டனர். ஏற்கெனவே உயிரை இழந்து வேதனையில் இருப்பவர்களின் மன நிலையையும், இந்த இடத்தில் ஒன்றும் பேசக்கூடாது என்ற மனநிலையையும் பயன்படுத்திக் கொண்டு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகின்றனர். பணமென்றால் பினமும் வாயைப் பிளக்கும் என்பார்கள்  

இறந்தபின்பும் பணம் பிடுங்கும்? கொடுமை? தூத்துக்குடி மாநகராட்சியின் மின் தகனம் சுடுகாட்டு அவலத்தை என்னவென்று சொல்வது ?

 தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி இங்கே நடைபெறும் அவலத்தை உடனே களைந்துயெறிய வேண்டும் என்பதே பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

திங்கள், 4 அக்டோபர், 2021

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் வக்கீல் vs பஸ் டிரைவர் தீடீர் மோதல்!!!நடந்தது என்ன?? இரவில் தூத்துக்குடி நெல்லை பஸ்நிறுத்தம் பயணிகள் தவிப்பு!!!

 thoothukudileaks 04-10-2021


இன்று இரவு 7 மணி அளவில் புறநகர் பஸ் புதுக்கோட்டை வழியாக தூத்துக்குடி வந்து  கொண்டிருந்ததாம்  அப்போது பஸ் முன்பு கார் ஒன்று பஸ்-க்கு வழி விடாமல் பல தடவை  பயணிகளுடன் வந்த பஸ் தடுமாறும் விதத்தில் தொடர்ந்து சென்று கொண்டிருந்தது எனவும்  டிரைவர் கனி அரசன் உடன் இருந்த நடத்துநர் மாரியப்பன் உடனே டிப் போ P M மற்றும் பஸ் நிலைய டிராபிக் இன்ஸ் பெக்டர் ஆகியவர்களுக்கு  பஸ்ஸாடாண்டுக்கு பஸ் வந்து கொண்டு இருந்த  போதே செல்போன் முலம் தகவல் கூறினார்கள்.
பஸ் மற்றும் ஸ்கார்பியா காரும் தொடர்ந்து தூத்துக்குடி பஸ் நிலையத்தை வந்தடைந்தது.

 இதனை தொடர்ந்து இறங்கியவுடன்
  தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் வழக்கறிஞர் மற்றும் பஸ் டிரைவர் மோதல்?  தகராறு ஏற்பட்டது.

அரசு போக்குவரத்து கழக டிரை வருக்கு தூத்துக்குடி பழைய பேருந்துநிலை யத்தில் அடிஉதை

இதனையொட்டி தூத்துக்குடி நகரில் பல மணி நேரம் பஸ்கள் சாலையில் ஸ்தமித்தது.


தூத்துக்குடி நகர டி.எஸ்.பி கணேஷ் விரைந்து வந்து. வக்கீல்கள் மற்றும் தொழிற்சங்க  நிர்வாகிகள் பேச்சுவார்த்தை



சம்பவம் தொடர்பாக தொழிற்சங்க நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் எங்களது டிரைவர் கனி அரசன் - ஐ அடித்தார்கள் தட்டிகேட்ட பஸ்நிலைய டிராபிக் இன்ஸ் பெக்டர் ஆறுமுகம் மற்றும் கிளை மேலாளர் மாடசாமி ஆகியவர் களை இழுத்து  தாக்கியதாகியதாகவும் இவர்கள் மீது புகார் தெரிவித்தார்கள்

இதையொட்டி இரவில் தூத்துக்குடி நெல்லை பஸ் நிலையங்களில் பஸ்கள் இயங்கவில்லை

தூத்துக்குடி மில் தொடர்ந்து நீண்ட தூரம் பஸ்கள் நிறுத்துபட்டு கிடந்தது.